76.1 Sri Sankara Charitham by Maha Periyava – Divine Service to the three tools (Mind, Speech, & Body)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The greatness of Patanjali Maharishi and the immense anugraham  he has provided us w.r.t to the three tools in our body (Mano, Vak, and Kayam). In this part Sri Periyava explains about the first two.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another valuable drawing and audio. Rama Rama

திரிகரணத்திற்கும் திருத்தொண்டு

அவருடைய லோகோபகாரத் தொண்டு அதோடு முடிந்துவிடவில்லை. மனோ – வாக் – காயம் என்று மூன்று சொல்கிறோமல்லவா? மூன்றுக்குமே பரமோபகாரம் பண்ணுவதான மூன்று ஆதார சாஸ்த்ரங்களை இயற்றிக் கொடுத்த ஒருவர் உண்டென்றால் அது பதஞ்ஜலிதான்! இது அவருடைய தனிப் பெருமை! இப்படி த்ரிகரண சுத்திக்கும் அவர் பெரிய உதவி செய்திருப்பதைச் சொல்லி, அவருக்கு நமஸ்காரம் தெரிவிக்கும் ச்லோகம் இருக்கிறது.

யோகேந சித்தஸ்ய, பதேந வாசாம்,

மலம் சரீரஸ்ய வைத்யகேந |

யோ (அ)பாகரோத் தம் ப்ரவரம் முநீநாம்

பதஞ்ஜ லிம் ப்ராஞ்ஜலி – ராநதோஸ்மி ||

‘மும்மலம் அறுப்பது’ என்று சைவர்கள் ஒரு அர்த்தத்தில் சொல்கிறார்கள். பதஞ்ஜலியும் இன்னொரு அர்த்தத்தில் ‘மும்மலம் அறுப்ப’தற்கே மூன்று துறைகளில் புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார்.

மலம் என்றால் அழுக்கு. அது மனஸ், வாக்கு, காயம் மூன்றுக்கும் ஏற்படக்கூடியது. அழுக்கு இருப்பது இந்த மூன்றுக்கும் ரோகம். அது போனால்தான் ஆரோக்யம். டாக்டர் கேட்கிற முதல் கேள்வி மல விஸர்ஜமாயிற்றா என்பதுதானே?

மனஸுக்கு ஏற்படுகிற மலம் தப்பான சிந்தனைகள். அது போனால்தான் ஈஸ்வராநுபவம் கிடைக்கும்.

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி

என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.

தப்பான சிந்தனை மட்டுமே மலம், நல்ல சிந்தனை என்பது அமலமான ஸத்வஸ்து என்று ஆரம்ப நிலைகளில் இருக்கும். அப்புறம், ‘தப்பானது, நல்லது என்ற பேதமில்லாமல் சிந்தனை என்றும், சித்தம் என்றும், மனஸ் என்றும் ஒன்று இருப்பதே மலம்தான். மாயையால் ஆத்மாவுக்கு ஏற்பட்ட அழுக்குதான் மனஸ். அதனால் எதையுமே சிந்திக்காதபடி மனஸை அழித்துப் போட்டால்தான் ஆத்மாநுபவம் ஏற்படும்’ என்று தெரியும். ‘சித்த மலம்’ என்று மாணிக்கவாசகர் சொல்லும்போது இப்படித்தான். சித்தத்துக்கு ஏற்படும் தப்புச் சிந்தனையான மலத்தைச் சொல்லாமல், சித்தத்தையே ஆத்மாவுக்கு ஏற்பட்ட மலமாகச் சொல்லியிருக்கிறார். அந்த மலம் ஈஸ்வராநுக்ரஹத்தில் அகன்று சிவமாவதுதான் ஆத்ம ஸ்வரூபமாக நிற்பது.

சித்த மலம் போக நன்றாக அலம்புவதற்கு ஏற்பட்டதே யோகம். ‘யோகேந சித்தஸ்ய’ என்று ஆரம்பித்திருப்பது இதைத்தான்.

யோக ஸாதனைக்கு ஆதார நூலாக உள்ள ‘யோக ஸூத்ர’த்தை எழுதியதே பதஞ்ஜலிதான். அதனால் ‘பாதஞ்ஜல யோக ஸூத்ரம்’ அல்லது வெறுமனே ‘பாதஞ்ஜலம்’ என்று மட்டுமே அது சொல்லப்படுகிறது.

மனஸை அடக்கிப் பரமாத்மாவோடு சேர்க்கை ஏற்படுத்தித் தருவதாலேயே அதற்கு யோகம் என்று பெயர்.

இன்றைக்கும் மேல்நாட்டினர் உள்படப் பலர் சாஞ்சல்யமயமான ஸம்ஸார வாழ்க்கையிலிருந்து சாந்தியைத் தேடிக் கொண்டு போய், “Yoga” தான் இதற்கு ஸரியான வழி என்று பின்பற்றுவதைப் பார்க்கிறோம். அதற்கான கார்ய க்ரமத்தை ரொம்பவும் நுணுக்கமாக, scientific-ஆகப் பதஞ்ஜலியின் ஸூத்ரத்தில் விளக்கியிருக்கிறது என்று கொண்டாடவும் கேட்கிறோம்.

பலவிதமான யோகங்கள் இருந்தாலும் பதஞ்ஜலி ஏற்படுத்தியதற்கே “ராஜ யோகம்” என்று பட்டம் கொடுத்திருக்கிறது.

இது அவர் பண்ணிய தலையான பணி. ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு சேர்த்து வைக்கிற பணி. த்ரிகரணங்களில் இது மனஸ் என்பதற்குப் பண்ணியது: “யோகேன சித்தஸ்ய”.

அடுத்தது வாக்(கு).

அதற்காகத்தான் வ்யாகரண மஹாபாஷ்யம். முன்னேயே சொன்ன விஷயம்.

பதேந வாசாம்” என்று சொல்லியிருப்பது இதைத்தான்.

‘சித்த மலத்தை யோக ஸூத்ரத்தாலும் (யோகேந சித்தஸ்ய), வாக்கின் மலத்தை மஹாபாஷ்யத்தாலும் (பதேந வாசாம்) போக்கினார் (அபாகரோத்)’ என்று சொல்லியிருக்கிறது.

‘யோகேந’ என்று (யோகத்தைச்) சொன்னதுபோல ‘வ்யாகரணேந’ என்று (வ்யாகரணத்தைச்) சொல்லவில்லையே – என்று தோன்றலாம், ‘பதேந’ என்று சொல்லியிருக்கிறதோல்லியோ? ‘பதம்’ என்றாலே வ்யாகரணம், இலக்கண சாஸ்த்ரம் என்று அர்த்தம். ‘பதாநுசாஸனம்’ என்றும் நீட்டியும் சொல்வார்கள். பதம் என்றாலே போதும். “பதம் வ்யாகரணம் ப்ரோக்தம்”: இலக்கண நூல் ‘பதம்’ என்று கூறப்படுகிறது. இலக்கணம் எதற்கு? பாஷையை ஒழுங்குபடுத்தி விதிகளைத் தருவதற்குத்தான். பாஷை என்பது சொற்களைத்தானே தாய்ச்சரக்காகக் கொண்டது? சொல்தானே பதம்? அதனால் பதம் என்றாலே இலக்கணந்தான்.

ஸம்ஸ்க்ருதப் புஸ்தகங்கள், சாஸனங்கள் முதலானவற்றில் பெரியவர்களாக இருப்பவர்களைக் குறிப்பிடும்போது அவர்களுடைய குடும்பம் பெரியவர்கள், வம்சம், ஆசார்யர், அவர்கள் இருந்த இடம் ஆகியவற்றின் பேரையும் (எல்லாவற்றையுமோ, சிலவற்றையோ) சொல்லி, அந்தப் பெரியவரைக் குறிப்பிடும்போது, “இதி ஸ்ரீமத் பத-வாக்ய-ப்ரமாண – பாராவார – பாரீண” என்று நீளமாக ஒரு அடைமொழி கொடுத்திருக்கும். நிஜமாக ஒருவர் வித்வத்தில் பெரியவராக இருந்தால் அவர் இந்த அடைமொழிக்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும்; பெற்றும் இருப்பார்.

‘பத-வாக்ய-ப்ரமாண’ என்பதில் ‘பதம்’ என்றால் வ்யாகரணம்தான். ‘வாக்யம்’ என்றால் மீமாம்ஸை, அதாவது பூர்வ மீமாம்ஸை. மீமாம்ஸா சாஸ்திரம் வேத வாக்யங்களை எடுத்துக் கொண்டு அலசி அலசி அர்த்தம் விசாரிப்பதால் ‘வாக்யம்’ என்று அதற்கே பேர். ‘ப்ரமாணம்’ என்பது ந்யாயம். அதாவது தர்க்க சாஸ்திரம். இதனால் இது இப்படி என்று ப்ரமாணங்களைக் காட்டிக் காட்டியே அது விதிகளை வகுப்பதால் ‘ப்ரமாண சாஸ்த்ரம்’ என்று பேர் பெறுகிறது – “பத-வாக்ய-ப்ரமாண…”

“பாராவார – பாரீண”: ‘பாராவாரம்’ என்றால் ஸமுத்ரம். ‘பாரீண’ என்றால் கரை கடந்தவர்.

சேர்த்துப் பார்த்தால் “பத வாக்ய ப்ரமாண பாராவார பாரீண” என்பதற்கு, “வ்யாகரணம், மீமாம்ஸை, தர்க்கம் என்ற கடல்களின் கரை கடந்த புத்திமான்’ என்று அர்த்தம்.

சதுச் – சாஸ்த்ரங்கள் என்று தர்க்கம், வ்யாகரணம், மீமாம்ஸை, வேதாந்தம் ஆகிய நான்கைச் சொல்வார்கள். அதில் முதல் மூன்றைத்தான் கொஞ்சம் வரிசை மாற்றி ‘பத-வாக்ய-ப்ரமாணம்’ என்று, ஒரு வித்வத் ச்ரேஷ்டருக்கு அவச்யம் பாண்டித்யம் இருக்க வேண்டிய மூன்று சாஸ்த்ரங்களாகச் சொல்லியிருக்கிறது.

‘பதேந வாசாம் (மலம் அபாகரோத்)’: ‘பதத்தினால் பதஞ்ஜலி வாக்கின் மலத்தை அகற்றினார்’ என்கிற இடத்தில் பதம் என்பது அவர் எழுதிய வ்யாகரண புஸ்தகத்தைக் குறிக்கிறது என்பதற்காகச் சொன்னேன்.

ஸம்ஸ்க்ருத பாஷா விசேஷங்களை ரொம்பவும் நுணுக்கமாகப் புரிய வைத்து அவர் இலக்கண நூல் செய்திருப்பதற்கு விசேஷமான சிறப்பு உண்டு. ஸம்ஸ்க்ருதம் தேவ பாஷை என்றால் தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிற பாஷை என்று அர்த்தம். இங்க்லாண்டில் இருக்கும் இங்கிலீஷ்காரர்கள் பேசுவதை இங்கிலீஷ் என்கிறோம். ப்ரான்ஸிஸ், ஜெர்மனியில், ஜப்பானில், இங்கே பெங்காலில், மஹாராஷ்ட்ராவில், மலையாளத்தில் உள்ள ப்ரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பெங்காலிகள், மராட்டியர்கள், மலையாளத்தார்கள் பேசுகிற பாஷைகளை அந்தந்த தேசம், அந்தந்த ஜனக் கூட்டம் ஆகியவற்றின் பெயரை வைத்தே ப்ரெஞ்ச், ஜெர்மன், ஜப்பானீஸ், பெங்காலி, மராட்டி, மலையாளம் என்றெல்லாம் சொல்கிறோம். ஹிந்தியில் வ்ரஜபாஷா, மைதிலீ என்றெல்லாம் பிரிவுகள் இருக்கின்றனவென்றால் அவையும் வ்ரஜம், மிதிலா என்ற இடங்களை வைத்து ஏற்பட்ட பேர்கள்தான். அம்மாதிரி தேவ பாஷை என்றால் தேவலோகத்தில் தேவர்கள் பேசுவது என்று அர்த்தம். இங்கிலீஷ்காரன் நம்மை ஆண்டால் அவனோடு பேசுவதற்காக நாம் இங்கிலீஷ் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா? அப்படியே லோகம் முழுவதையும் ஸூக்ஷ்மமாக இன்ன துறைக்கு இன்னார் என்று ஆள்வது தேவர்களேயாகையால் அவர்களுடைய பாஷையையும் நாம் ஸரியாக, முறையாகத் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்? கர்மாநுஷ்டானங்களில் வரும் மந்த்ரங்களையும், ச்லோகம் முதலானவற்றையும் நாம் ஸரியாகத் தெரிந்து கொண்டு சொல்வது தேவர்களோடையே நாம் பேசுவதுதான்! இதற்கு வ்யாகரண ஞானம் அத்யாவச்யம் அல்லவா?

ஞானம் மொழி கடந்தது. பக்தியை, அதாவது அன்பை, எந்த மொழியிலும் வெளிப்படுத்தலாம். ஆனால் நாம் சாஸ்திர கர்மாவும் நிறையச் செய்தேயாக வேண்டிய நிலையில்தானே இருக்கிறோம்? அதனால் சாஸ்திரங்கள் அமைந்துள்ள ஸம்ஸ்க்ருதத்தை ஸரிவரத் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்?

தவிரவும், பழுதேயில்லாத அக்ஷரங்களைக் கொண்ட ஸம்ஸ்க்ருதத்தை வ்யாகரண விதியறிந்து உச்சரிப்பதே ஒரு மந்த்ர யோகமாகி நமக்கு நாடி சுத்தியையும், அதன் வழியாகச் சித்த சுத்தியையும் தரும்.

இவற்றோடு, நவீன ஸயன்ஸுக்கு ஆங்கில ஞானம் அவச்யம் என்பது போலவே ஆத்ம சாஸ்த்ரங்களை அறியவும், பாரத கலாசாரத்தின் ஸகல அம்சங்களையுமே அறியவும் ஸம்ஸ்க்ருத ஞானம் அவச்யமாகிறது. இதனாலெல்லாந்தான் ‘மஹாபாஷ்ய’த்திற்கு உயர்வு.

____________________________________________________________________________________________________­­­

Divine Service to the three tools (Mind, Speech, & Body)

His service for the welfare of the world did not end with that. Do we not talk about the three things that we have – mano-vak-kayam [मनो-वाक्-कायम्] [mind, speech and body]? If there is one person who has done the highest benevolent service by composing and giving the basic Sastras for all these three, it is only Patanjali!  This is his unique greatness. There is a verse, mentioning the great service rendered by him for the purification of the three tools (Trikaranasuddhi – त्रिकरणशुद्धि) and offers respects to him.

योगेन चित्तस्य पदेन वाचां ।
मलं शरीरस्य च वैद्यकेन ॥
योऽपाकरोत्तमं प्रवरं मुनीनां ।
पतञ्जलिं प्राञ्जलिरानतोऽस्मि ॥

yogena chittasya padena vaachaam |
malam sareerasya ca vaidyakena ||
yo[a]paakarottam pravaram muneenaam |
patanjalim praanjaliraanatosmi ||

Saivaites mention, ‘cutting off the three impurities’ (mummalam aruppadhu), in one particular sense.  Patanjali has also, in another sense, written books on the three branches of knowledge, to only remove the three impurities, (‘mummalam aruppadharke’).

Malam means, dirt.  It can affect all three – the mind, speech, and action. The presence of dirt is disease for all these three.  Health is present only if dirt is eliminated.  Doesn’t a doctor first ask this question ‘Have you passed stool?’

The impurities that affect the mind are the bad thoughts. One can get to experience Eswara only when they are removed.

Manikkavasagar says as, ‘chittamalam aruvithu sivamaakki’.

In the initial stages, it would appear that wrong thoughts are impure and good thoughts are pure. Later, it will be clear that ‘presence of thoughts, without distinction of good or bad, even the presence of the mind, are themselves impurities.  Mind is the dirt present on the atma [आत्मा], because of maya [माया] – illusion.  Therefore, realisation of God will happen only when the mind is reduced to nothing’.  When Manikkavasakar says as ‘chitta malam’, it is a reference to this. Instead of mentioning that the impure thoughts are the dirt for the mind, he has stated that the mind itself is the dirt for the atma.  The impurities getting destroyed by the grace of Eswara and one attaining the state of ‘sivam’, is termed as attaining ‘atma swaroopam’.

Yoga has been created to only cleanse the dirt in the mind.  This is why it begins as ‘yogena chittasya’ (योगेन चित्तस्य).

It is Patanjali who wrote the ‘Yogasutra’ which is the base book for the practice of Yoga.  That is why it is called, ‘Patanjala Yoga Sutram’ [पतञ्जल योग सूत्रम्] or plainly, ‘Paatanjalam’ [पातञ्जलम्].

It is called ‘yogam’ because it helps in controlling the mind and enables one unite with Paramatma.

Even today, we hear many people including westerners, who are in search of peace from this material life which is full of turbulence, pursue the path of “Yoga”. We also hear them showering praises that is the best way for achieving peace of mind, and that the process has been very minutely and scientifically described in Patanjali Sutra.

Although there are several types of yoga(s), only the one created by Patanjali is given the title “Raja Yogam”.

This is the foremost service he has done – the task of uniting the Jeevatma with Paramatma.  Among the three instruments, this has been done for the mind: “yogena chittasya” (योगेन चित्तस्य).

Next is Vak(ku) [वाक्].

For that, he has written the Vyakarana Bhashyam [व्याकरण भाष्यम्].  This is something I have already mentioned.

This is denoted by “padena vaachaam” [पदेन वाचाम्].

It is mentioned that he ‘removed’ [apaakaroth-अपाकरोत्] the impurities of the mind with Yoga Sutra (yogena chittasya) and the impurities of speech with the Maha Bhashyam (padena vaachaam).

It may occur that similar to the word ‘yogena’ (for yoga), it is not stated as ‘vyakaranena’ (for vyakarana). Isn’t it mentioned as ‘padena’?  ‘padam’ [पदम्] itself means vyakaranam.  It means the rules of grammar. In an elongated form it is also called ‘padaanusaasanam’ (पदानुशासनम्). It is enough to just say ‘padam’.  “padam vyakaranam proktam”: (पदम् व्याकरणं प्रोक्तम्)  – the book on grammar is called  ‘padam’.  Why is grammar necessary?  It is for regulating the language by prescribing the rules of usage.  Is not language dependent on words?  Is word not padam?  So, ‘padam’ itself means grammar.

Wherever books of Sanskrit and royal edicts refer to great people, after mentioning their family, renowned elders, their lineage, their Acharya, the names of the places they have lived (either all or some of them) etc., there will be a long title as, “iti srimad pada-vaakya-pramaana-paaraavaara-paareena” [इति श्रीमद पद- वाक्य- प्रमाण- पारावार- पारीण].  If a person really excelled in knowledge and wisdom, he deserved to get this title and would have got it for sure.

In the phrase ‘pada-vaakya-pramaana’, padam invariably refers to grammar. ‘Vaakyam’ refers to Meemamsa that is Poorva Meemamsa.  Since the Meemamsa Sastra takes up each and every sentence of the Veda, repeatedly enquiring into its meaning, it is known by the name ‘Vaakyam’.  ‘Pramaanam’ is Nyayam.  That is ‘Tarka Sastra’ [तर्क शास्त्र]. Since it establishes the rules through logic and reasoning, it gets the name ‘Pramaana Sastra’ – “pada-vaakya-pramaana….”.

“Paaraavaara-Paareena”: ‘Paaraavaaram’ means ocean.  ‘Paareena’, means, one who has crossed the shores of the ocean.

Looking at it together, “pada vaakya pramaana paaraavaara paareena”, it means, “A scholar who has crossed the shores of the oceans of vyakarana, meemamsa, and tarka”.

The four, Tarkam, Vyakaranam, Meemamsa and Vedanta are generally called chatus-sastras.  Of these, the first three are rearranged as, ‘pada-vaakya-pramaana’ and given as the three Sastras in which a scholar should necessarily have erudition.

In the context where it is mentioned ‘padena vaacham (malam apaakarot – मलम् अपाकरोत्)’ meaning ‘Patanjali removed the dirt in the word with padam’, I wanted to convey that padam here refers to the Vyakarana book.

There is special distinction about his writing the grammar book, making the special features of the Sanskrit language minutely comprehensible. When we say Sanskrit is Deva Bhasha, it means that it is the language that Devas use to converse with each other.  We call the language spoken by the Englishmen in England as English.  We call languages spoken by the French, Germans, Japanese, Bengalis, Marathis, Malayalis, as French, German, Japanese, Bengali, Marathi, and Malayalam respectively, based on the country or state and the people. The different dialects in Hindi such as Vrajabhasha, Mytili, etc., are also names based out of the corresponding places.  Similarly, Deva Bhasha means the language spoken by Devas in the Devaloka.  If English people are ruling us, does it not become necessary for us to know English to speak with them? Likewise, when the entire world is being subtly ruled by the Devas, each one being in charge of a particular task, should we not learn their language properly and systematically?  When we recite the Mantras and slokas that are part of the act of discharging one’s prescribed duties after knowing their meaning, it is actually conversing with the Devas!  Is not the knowledge of Vyakarana very necessary for this?

Spiritual knowledge transcends language. Bhakti, that is devotion, can be expressed in any language.  But are we not in a situation where we are also required to perform many Sastra Karmas?  Therefore, is it not necessary to know Sanskrit properly, the language of the Sastras?

This apart, the very act of pronouncing the flawless letters in Sanskrit, after knowing the rules of grammar, will by itself, become a Mantra and bring about  cleansing of the nervous system  (नाडी शुद्धि) and through that, purity of mind.

Further, just as knowledge of English is necessary for modern science, to learn the Sastras of spirituality and understand all aspects of the culture of Bharat, knowledge of Sanskrit becomes essential.  ‘Maha Bhashyam’ gets pre-eminence only for these.

__________________________________________________________________________________________________________
Audio

 



Categories: Devotee Experiences

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading