இன்னிக்கு மஹாப்ரதோஷம். சிவானந்தலஹரியில் ஆசார்யாள் கைலாசக் காட்சியை வர்ணிக்கும் இரண்டு ஸ்லோகங்களை படிக்கலாம், வாருங்கள். -> சிவானந்தலஹரி 24, 25 ஸ்லோகங்கள் பொருளுரை
Shivananda lahari meaning
மயிலையே கயிலை
सन्ध्याघर्मदिनात्ययो हरिकराघातप्रभूतानक- ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला । भक्तानां परितोषबाष्पविततिर्वृष्टिर्मयूरी शिवा यस्मिन्नुज्ज्वलताण्डवं विजयते तं नीलकण्ठं भजे ॥ ५४ ॥ ஸந்த்⁴யாக⁴ர்மதி³னாத்யயோ ஹரிகராகா⁴தப்ரபூ⁴தானக- த்⁴வானோ வாரித³க³ர்ஜிதம்ʼ தி³விஷதா³ம்ʼ த்³ருʼஷ்டிச்ச²டா சஞ்சலா . ப⁴க்தானாம்ʼ பரிதோஷபா³ஷ்பவிததிர்வ்ருʼஷ்டிர்மயூரீ ஶிவா யஸ்மின்னுஜ்ஜ்வலதாண்ட³வம்ʼ விஜயதே தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே .. 54.. இன்று கிருத்திகா ஸோமவாரம்…. Read More ›
இன்று கார்த்திகை ஸோமவாரம்
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு சிறப்பான நாள். குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை, விரதம் இருந்து, பூஜை செய்து சிவ தியானம் செய்ய உகந்ததாக போற்றப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம் அல்லது 1008 சங்கால் அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதால் நம் துன்பங்கள்… Read More ›
உள்ளம் கவர் கள்வன்
இன்று ஐப்பசி பௌர்ணமி. எல்லா சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் செய்வார்கள். பௌர்ணமி அம்பாளுக்கும் விசேஷம். இந்த ஒரு சிவானந்த லஹரி ஸ்லோகத்தின் விளக்கத்தில் பல மூக பஞ்சசதீ ஸ்லோகங்களின் விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இன்று இந்த ஸ்லோகங்களின் மூலமாக பார்வதீ பரமேச்வராளை மனதில் த்யானிப்போம் -> சிவானந்தலஹரி 22வது ஸ்லோகம் பொருளுரை
மனத்திற்கு எட்டாத மஹாபெரியவா மஹிமை
சிவன் சார் ஒரு முறை என்னிடம் – “பெரியவா, நீ நினைக்கறதை எல்லாம் காட்டிலும் பெரியவா” என்று சொன்னார். அதாவது மஹாபெரியவா மஹிமையை முழுமையாக மனத்தால் எண்ணி விடவோ, வாக்கால் பேசி விடவோ முடியாது என்று பொருள். ஆனால், நம் மனத்தை அலம்பிக் கொள்ள, நமக்கு பெரியவா பக்தி ஏற்பட, அவருடைய மஹிமையை பேசுவதே சிறந்த… Read More ›
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
குரு சொல்லும் ஒரு வார்த்தை எப்படி வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடும் என்பதை வள்ளிமலை ஸ்வாமிகள், நாக் மஹாஷய, வெங்கடேச சாஸ்த்ரி, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆகியோரின் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறேன் –> சிவானந்தலஹரி 30வது ஸ்லோகம் பொருளுரை
ப்ரமராதிபோ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு:
சிவானந்தலஹரில 51வது ஸ்லோகம், ஸம்ஸ்ருத கவிதையோட ஒரு உச்சமா இருக்கு. ஒரே பதத்திற்கு இரு பொருள் தரும் வார்த்தைகளை வைத்து விளையாடி “ஶ்ரீசைலவாஸியான மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கும், வண்டுக்கும்” ஸ்லேஷை பண்றார். ஒருவிதத்தில பார்த்தால் எல்லா பதங்களும் வண்டை குறிக்கிறது. இன்னொரு விதத்தில ஸ்வாமியை குறிக்கிறது. பொருளுரை இந்த இணைப்பில் –> சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை
படிப்பையும் பணத்தையும் கொண்டு பகவானை அடைய முடியாது
சங்கர பகவத்பாதாள் ‘எனக்கு உன் பூஜைக்கு பலனா விஷ்ணுத்வம், ப்ரம்மத்வம் எல்லாம் கொடுத்து விடாதே’ என்று சொல்கிறார். ஏன்? இந்த இணைப்பில் கேட்கலாம் –> சிவானந்தலஹரி 23வது ஸ்லோகம் பொருளுரை
பக்தி பண்ண என்ன தகுதி வேண்டும்?
ஈச்வர பக்தி பண்ண க்ருஹஸ்தனாக இருக்க வேண்டுமா? சந்யாசி ஆக வேண்டுமா? யோகம், யாகம், ஜபம் எல்லாம் பண்ணத் தெரிய வேண்டுமா? ஏதாவது ஆஸ்ரமத்திலோ, காட்டிலோ போய் தங்க வேண்டுமா? ஆசார்யாள் என்ன சொல்கிறார்? –> சிவானந்தலஹரி 11, 12வது ஸ்லோகங்கள் பொருளுரை
சிவபெருமானுக்கு எதைத் தரவேண்டும்? அவரிடமிருந்து என்ன கிடைக்கும்?
பரமேஸ்வரனுக்கு நாம் எதைக் கொடுத்தால் அவர் மகிழ்வார்? அவரிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும்? சிவானந்த லஹரியில் ஆச்சார்யாள் இந்த கேள்விகளுக்கு விடை சொல்கிறார்–> சிவானந்தலஹரி 27, 28வது ஸ்லோகங்கள் பொருளுரை
நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா
“ஆனித் திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகம். நடராஜருக்கான ஆறு அபிஷேகங்களில் ஒன்று. எனவே, சிவாலயங்களில் இன்று தொடங்கி நாளை உத்திர நட்சத்திரம் முடியும் காலம் வரை ஏதேனும் ஒரு நேரத்தில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம். ஆனால், சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை வேளையில் இந்த அபிஷேகத்தைச் செய்வது… Read More ›
பரமன் திருவடிகள் பயத்தை போக்கும்
இன்று ஆனித்திருமஞ்சனம். சிதம்பரத்தில் நடராஜாவின் அபிஷேகத்தை இன்று காண்பது விசேஷம். குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே! என்று அப்பர் பெருமான் நடராஜாவின் தூக்கிய திருவடியை கண்டதால்… Read More ›
பக்தி என்கிற அம்மா; பக்தன் என்கிற குழந்தை
சிவானந்த லஹரியில் பக்தியின் மூன்று பரிணாமங்களை பல உதாரணங்கள் மூலம் விவரித்து, பக்தி என்றால் என்ன என்று வரையறுத்து கூறிய ஆச்சார்யாள், அடுத்த ஸ்லோகத்தில் பக்தி எப்படி வளரும் என்று இன்னொரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். ஒரு அம்மா தன் குழந்தையை வளர்க்கும் போது செய்யும் உணவு ஊட்டுதல், குளிப்பாட்டுதல், ஆடை அணிவித்தல், தாலாட்டி தூங்கப்… Read More ›
கண்ணப்ப நாயனார் கதை
ஆச்சார்யாள் பக்தி என்றால் என்ன என்று விளக்கிய பின், கண்ணப்பருடைய சரித்திரத்திலிருந்து சில நிகழ்ச்சிகளை கூறி, ‘இப்படி ஒரு அன்பை பார்க்க முடியுமா? ஒரு வேடன் பக்தர்களில் தலைசிறந்தவனாக ஆகிவிட்டானே’ என்று வியக்கிறார். மாணிக்கவாசகரும் ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை “வா” என்ற வான் கருணை சுண்ணப்பொன்னீற்றற்கே… Read More ›
பக்தி என்றால் என்ன?
தன்னுடைய வேதாந்த புத்தகங்கள் மூலம், உலகின் தன்னிகரற்ற ஞானச் சிகரமாக கொண்டாடப்படும் நம் ஆசார்யாள், தம்முடைய பக்தி கிரந்தங்களில், பலவித யுக்திகளை உபயோகப்படுத்தி , பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விஷயங்களை விளக்குகிறார். சிவானந்த லஹரியில் உபமா அலங்காரம் எனப்படும் உவமைகளைக் கொண்டு கருத்துக்களை தெளிவுபடுத்தும் யுக்தி நிறைய காணப்படுகிறது. பக்தி என்றால் என்ன என்ற… Read More ›
பக்தி பண்ணுவதில் புத்தியின் பங்கு என்ன?
பக்தி செய்வதற்கு புத்தி ஒரு தடையல்ல. ‘புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டிக் அன்பால் முக்தியை வாங்க அறிகின்றிலேன்’ என்று அருணகிரிநாதர் பாடுகிறார். பக்தி மார்க்கத்தில் புத்தியை எப்படி, எது வரையில் உபயோகப்படுத்த வேண்டும் என்று கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கையிலிருந்து நான் அறிந்து கொண்டதை இந்த சிவானந்தலஹரி பொருளுரை மூலமாக பகிர்கிறேன். சிவானந்தலஹரி 40வது… Read More ›
தேஹமாகிற ஆலயத்திற்கு புண்ணியாஹவாசனம்
ஆதிஆச்சார்யாள் அருளிய சிவானந்தலஹரி சிவ ஸ்தோத்திரங்களில் தலைசிறந்தது. பக்தி சாஸ்திரத்திற்கு இது ஒரு லக்ஷண கிரந்தமாக அமைந்துள்ளது. இந்த ஸ்தோத்திரத்தில் இருந்து சில ஸ்லோகங்களின் பொருளை பகிர்ந்து கொள்கிறேன். கேட்டு சிவானந்தலஹரியில் மூழ்கி மகிழுங்கள். சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை – தேஹமாகிற ஆலயத்திற்கு புண்ணியாஹவாசனம்