vinayagar agaval

விநாயகர் அகவல் – பாகம் 7

Thanks to Sri Srinivasan for this share…. ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம். 9. நான்ற வாயும் நாலிரு புயமும் பதவுரை: நான்ற வாயும் – தொங்குகின்ற திருவாயும் நால் இருபுயமும் – நான்காகிய பெரிய திருத் தோள்களும் நான்ற வாய்: தொங்குகின்ற வாய். பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே பல சூக்ஷ்ம மந்திரங்களை… Read More ›

விநாயகர் அகவல் – பாகம் 6

  ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம். 8. நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் பதவுரை: நெஞ்சிற் குடிகொண்ட – பக்தர்கள் உள்ளத்தில் எப்பொழுதும் தங்கி இருக்கின்ற நீல மேனியும்- நீலத் திருமேனியும். ஜிலு ஜிலு என்று மின்னுகிறது நீலத் திருமேனி.  கண்களுக்கு குளிர்ச்சி தரும் நிறம் நீலம். காண்பவர் உள்ளதைக் கவரும் நிறம்… Read More ›

விநாயகர் அகவல் – பாகம் 5

Thanks to Sri B.Srinivasan for the article.     ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம். 7.  அஞ்சு கரமும் அங்குச பாசமும் பதவுரை: அஞ்சு கரமும் – ஐந்து திருக்கைகளும் அங்குச பாசமும் – அவைகளில் இரு கரங்களில் இருக்கும் அங்குசம், பாசம் என்ற இரு கருவிகளும் விளக்கம்: அங்குசம் ஒரு கரத்தில்; பாசம் மற்றொரு கரத்தில் – என்று வெளிப்படையாக சொன்னவர், ஒரு கரத்தில் மோதகம், ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் – என்பவைகளை வெளிப்படையாக கூறாமல் குறிப்பால் காட்டுகின்றார். ஐந்து கரங்களைக் கொண்டு, ஐந்து தொழில்களை ஆனந்தமாக, அனாயாசமாக செய்கிறார் கணபதி. ஐந்து தொழில்கள் என்பவை:  1) படைத்தல், 2) காத்தல் 3) அழித்தல் 4) மறைத்தல், 5) அருள் புரிதல். 1) கணபதியின் எழுத்தாணி இருக்கும் திருக்கரம் – படைத்தல் தொழில் (சிருஷ்டி) 2) மோதகம் ஏந்திய திருக்கரம் – காத்தல் தொழில் (ஸ்திதி) 3) அங்குசம் ஏந்திய திருக்கரம் – அழித்தல் (சம்ஹாரம்) 4) பாசம் ஏந்திய திருக்கரம் – மறைத்தல் (திரோதனம்) 5) அமுத கலசம் ஏந்திய திருக்கரம் – அருள் புரிதல் (அனுக்ரஹம்) ஆஹா: நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறதே! இதனால், இவர் முழுமையாக சிவஸ்வரூபி என்றல்லவா விளங்குகிறது. கஜமுகனை அழிக்க தன் தந்தத்தை ஒடித்தார்.  அதையே எழுத்தாணியாக் கொண்டு மஹாமேரு பர்வதத்தில் மகாபாரதத்தை எழுதினார் ஹேரம்பர். உலகம் முழுவதும் அழியும் பிரளய காலம் ஒன்று வரும்.  அப்பொழுது அழிந்த உலகை மீண்டும் உருவாக்க முன்கூட்டியே உலகப்படத்தை எழுதிவைக்கவும் உதவுகிறது அந்த எழுத்தாணி. மீண்டும் ஒரு கஜ முகன் தோன்றி தேவர்களுக்கு தொல்லை கொடுக்காதபடி அச்சுறுத்தி க்கொண்டே இருக்கிறது அந்த எழுத்தாணி. ஏன்.  நம்மையும் பல இடர்பாடுகளிலிருந்து ரக்ஷிப்பதும், அந்த எழுத்தாணிதான். ஐங்கரன் செய்யும் ஐந்தொழில்களை இன்னும் கொஞ்சம் விளக்கலாம்: 1) 36 கருவிகளுடன் உடல் போகங்களை அனுபவிப்பது – ஜாக்ரத அவஸ்தை – (சிருஷ்டி) 2) ஜாக்ரதத்தில் அனுபவித்ததை கனவில் காண்பது – ஸ்வப்ன அவஸ்தை – (ஸ்திதி)… Read More ›

விநாயகர் அகவல் – பாகம் 3 & 4

  ஸ்ரீ மகா பெரியவா சரணம், கணேச சரணம் அநுபூதி பெற்ற அவ்வைப்பாட்டி கரிமுக வரதனின் பாதாதி கேசாந்த வர்ணனையை தொடர்கிறாள். இதுவரை பார்த்தது:குளிர்ச்சியும் நறுமணமும் கூடிய செந்தாமரைப் பூ போன்ற பாதத்தில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசைகளைப் பாட, தங்க அரை ஞாணும்வெண்பட்டு ஆடையும் அழகிய இடையில் நன்கு பொருந்தி அழகை வீசிக் கொண்டிருக்க…….. இனி அடுத்த வரிகளை பார்க்கலாம்: 5.   பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் பதவுரை: பேழை வயிறும் – மிகவும் பெருத்த வயிறும் பெரும்பாரக் கோடும் – மிகவும் கனமான, உறுதிமிக்க ஒற்றை தந்தமும் பேழை:  அருமையான தமிழ்ச்சொல்.  பேழை வயிற்றின் பெருமையை யார் விளக்கினால் நன்றாக இருக்கும்?  ஸ்ரீமஹாபெரியவா விளக்கினால் தான் நன்றாக இருக்கும்.  கணேசரின் ஷோடஸ நாமாக்களின் பெருமையை விளக்கிக்கொண்டு வரும் ஸ்ரீ மஹாபெரியவா, ‘லம்போதர’ (பேழை வயிறு) என்ற நாமாவுக்கு தரும் விளக்கம்: தெய்வத்தின்குரல் – 6ம் பகுதி) லம்போதரர். அடுத்த பேர் லம்போதரர் தொங்குகிற வயிற்றுக்காரர் என்று அர்த்தம். லம்பம்-தொடங்குகிறது. உதரம்-வயிறு. அதாவது தொந்தியுள்ளவர். பிள்ளையார் என்றாலேவெள்ளைக்காரர்கள் potbellied என்று அவருடைய பானை வயிற்றைத்தான் சொல்கிறார்கள். பேழை வயிறும் என்று அகவலில் வருகிறது. கையில் பூர்ணமுள்ள மோதகத்தைவைத்திருப்பவர், தாமே பூர்ணவஸ்து என்று காட்டத்தான் பானை வயிற்றோடு இருக்கிறார். நல்ல நிறைவைக் காட்டுவது அது. அண்டாம்டங்கள் அதற்குள்ளே இருப்பதால்அதுவும் அண்ட ரூபத்தில் உருண்டையாயிருக்கிறது. மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை மா (வு) மூடியிருக்கிறது. மோதகம் என்றால் ஆனந்தம். ஆனந்தம் தருவது. விக்நேச்வரரே அப்படிப்பட்ட ஒரு மோதகம்தான்.ஆனந்தமாயிருப்பவர். அன்பு என்ற தித்திப்பான வஸ்துவை (ப்ரேமையை மதுரம் என்று சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட மதுரமான ப்ரேமையை) மற்றவர்களுக்கும் வழங்கிஆனந்தமூட்டும் மோதகம் அவர். மா என்றால் ஆணை யானை என்று அர்த்தம். மோதகத்தில் மதுரமான வெல்லப் பூர்ணத்தை மூடிக்கொண்டு மா (வு) ச் சொப்பு இருக்கிற மாதிரிப்ரேம ரஸம் நிறைந்த பூர்ண வஸ்துவான ப்ரம்மத்தின் மேல் ஆனை என்ற மாவின் ரூபத்தை வைத்து மூடிக்கொண்டு ஆனந்த ஸ்வரூபியான விக்நேச்வரர் உருவமெடுத்துக்கொண்டிருக்கிறார். உள்ளே பரம மதுரமான அன்புப் பூர்ணத்தை வைத்துக் கொண்ருப்பதைக் காட்டவே உருண்டைக் கொழுக்கட்டை உருவத்தில் வயிற்றை லம்போதகராகவைத்துக் கொண்டிருக்கிறார். உருண்டைக்கு ஆரம்பம், முடிவு சொல்ல முடியாது. அதனால் அது ப்ரம்மத்துக்கு ரூபகம் (உருவகம்) அதைக் காட்ட உருண்டையான தொப்பைவயிற்றோடு லம்போதரர் என்று விளங்குகிறார். தொப்பையும் தொந்தியுமாக உள்ள ஒருத்தைப் பார்த்தாலே நமக்கு ஒரு புஷ்டி, ஸந்துஷ்டி உண்டாகிறது. அதிலும் ஒரு குழந்தை அப்படி இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.எலும்பும் தோலுமாக நோஞ்சானாக உள்ள ஒருவரைப் பார்த்தால் நமக்கு இப்படி ஸந்தோஷம் உண்டாவதில்லை. ஸ்தூல சரீரம், க்ருசமான (ஒல்லியான) சரீரம் ஆகியவற்றைகுணங்கள் ஸம்பந்தப்படுத்தியும் சொல்கிறோம். தொந்தியும் தொப்பையுமாக இருப்பவரைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. சிரிப்பாக வருகிறது. ஸுமுகரானபிள்ளையார் நாமெல்லாமும் சிரித்துக்கொண்டு ஸுமுகமாக இருக்க வேண்டுமென்றே தொப்பையப்பராக இருக்கிறார். எத்தனையோ தினுஸுக் கஷ்டங்களில் மாட்டிக் கொண்டுஜனங்கள் தின்டாடுகிறதுகளே! அவர்களுக்கு ஃபிலாஸஃபி, கிலாஸஃபி சொல்லிக் கொடுத்தால் ஏறும், ஏறாதிருக்கும். அதனால் பார்த்த மாத்திரத்தில் ஒரு வேடிக்கை விநோதமாகஅவர்கள் சிரித்து மகிழும்படி நாம் இருப்போம் என்றும் பிள்ளையார் லம்போதரராக இருக்கிறார். அதிலும் குழந்தைகளுக்குத்தான் பஹுஸந்தோஷம். தொப்பைக் கணபதியைப் பார்ப்பதில், அதற்கேற்றாற்போல் (புரந்தர) தாஸர் ஸங்கீதத்தில் பால பாடம் ஆரம்பிக்கும் போதுபிள்ளையார் கீதத்தை லம்போதர லகுமிகரா என்றே ஆரம்பித்திருக்கிறார். லகுமிகரா என்றால் ‘லக்ஷ்மிகரா’;ஸெளபாக்கியங்களை உண்டாக்குபவர். அடுத்து வருவது வதன தந்தம்:  ஒடிந்த தந்தம் ஒரு கையில் இருக்க, மற்றொரு தந்தம் திருமுகத்தில் இருக்க அதிலிருந்து பல அதிசயங்கள் வெளியாகின்றன. ‘ஒற்றைக் கொம்பன் விநாயகனை தோழ துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே’ ஸ்ரீ மஹா பெரியவாளின் விளக்கம்: (தெய்வத்தின் குரல் – 6ம் பகுதி) (பெரும் பாரக் கோடு – ஒற்றை கொம்பர்) ஏகதந்தர்: ‘ என்பும் பிறர்க்குரியர்’ அடுத்தாற்போல், ஏகதந்தர் ஸுமுகச்சைகதந்தச்ச. இரண்டாவது பேர் ஏகதந்தர். அப்படியென்றால் ஒரே தந்தமுடையவரென்று அர்த்தம். ஒற்றைக் கொம்பன். பொதுவாக ஆண்யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்குக் கொம்பே கிடையாது. இவருக்கோ ஒரே கொம்பு. முதலிலே இவருக்கும் இரண்டு (கொம்பு) இருந்து, அப்புறம் வலது பக்கம் இருப்பதை இவரே ஒடித்துக் கொண்டு விட்டார். அதை விக்ரஹங்களில் வலது பக்கக் கீழ்க் கையில்வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ஏன் ஒடித்துக்கொண்டார்? புராண ரீதியில் இரண்டு கதை சொல்கிறார்கள். வியாஸர் பாரதம் சொல்லுகிறபோது அதை உடனே விக்நேச்வரர் அவஸரமாக ஹிமாசலப் பாறைகளில் எழுத வேண்டியிருக்கிறதென்றும், அப்போது எழுத்தாணிக்காகத்தேடிக்கொண்டு ஒடாமல் தந்தங்களில் ஒன்றையே முறித்து அதனால் எழுதினாரென்றும் ஒரு கதை. அறிவு வளர்ச்சிக்காகத் தம்முடைய பஹு அழகான அங்கத்தை யானையின்அங்களுக்குள்ளேயே இறந்தாலும் ஆயிரம் பொன் என்று ரொம்பவும் மதிப்புள்ளதாயிருப்பதை – உயிரோடு இருக்கும்போதே தியாகம் செய்த உத்தம குணத்தைக் காட்டும் கதை. இன்னொரு கதை, மற்ற எந்த அஸ்திரத்தாலும் வதம் பண்ண முடியாத கஜமுகாஸுரனைத் தம்முடைய ஒரு தந்தத்தையே முறித்து ஆயுதமாக்கிப் ப்ரயோகித்து வதம்பண்ணினாரென்பது. லோக ரக்ஷணத்துக்காக என்பும் உரியர் பிறர்க்கு என்று காட்டிய கதை. ஸாதாரணமாக அந்தக் குறளுக்கு ததீசியைத்தான் த்ருஷ்டாந்தம் காட்டுவார்கள்.தந்தமும் யானையின் எலும்புதான். அதனால் பிள்ளையாரும் என்பும் பிறர்க்கு உரிய’ரான அன்புடையார் தான்! பெண்ணாகவும் இருப்பவர் அவர் ஏகதந்தராக இருப்பதற்குத் தத்வார்த்தமும் உண்டு. ஆண் யானைக்குத்தான் தந்தம் உண்டு. பெண் யானைக்குக் கிடையாது. தாம் ஆண், பெண் இரண்டும்தான். அதாவதுஈச்வர தத்வம் என்பது ஆண்தான், பெண்தான் என்று ஒன்றாக மாத்திரம் வரையறுக்க முடியாமல் இரண்டுமாக ஆகியிருக்கும் ஒன்று என்று காட்டவே முகத்திலே ஒரு பக்கம்யானை (களிறு என்றும்) மாதிரி தந்தத்துடனும், மறு பக்கம் பெண் யானை (பிடி என்பது) மாதிரி தந்தமில்லாமலும் இருக்கிறார். மாதா பிதாக்கள் பப்பாதி (பாதிப் பாதி) ஸ்திரீபுருஷர்களாக அர்த்த நாரீஸ்வர ரூபத்தில் இருக்கிற மாதிரியே புத்ரரும் கொஞ்சம் இருந்து காட்டுகிறார். அப்படியே காப்பி பண்ணினதாக இருக்க வேண்டாமென்று அங்கே வலதுபக்கம் புருஷ ரூபம், இடது ஸ்த்ரீ என்றிருந்தால் இவரோ வலது பக்கம் தந்தமில்லாமல் பெண் யானையாகவும் இடது பக்கம் தந்தமுள்ள ஆண் யானையாவுமிருக்கிறார்! விக்நேச்வர காயத்ரீ ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரியதாக ஒரு காயத்ரீ மந்த்ரமுண்டு. உபநயனம் பண்ணி, ப்ரஹ்மோபதேசம் என்று செய்கிற காயத்ரீ மந்த்ரம் சூர்ய ஜ்யோதிஸ்ஸில் இருக்கப்பட்டபரமாத்ம சக்தியான ஸவிதா என்கிற தெய்வத்திற்கான காயத்ரீ. காயத்ரீ என்பது 24 எழுத்துக் கொண்ட ஒர் மந்த்ரம். அந்த எண்ணிக்கையில் எல்லா தேவதைகளுக்கும் மந்த்ரங்கள்இருக்கின்றன. இந்த மந்த்ரங்கள் எட்டெட்டு எழுத்துள்ள மூன்று பதங்களாகப் பிரியும். ஒவ்வொரு பாதத்திலும் அந்த மந்த்ரம் எந்த தேவதைகளுக்கானதோ அந்த தேவதையின்ஒவ்வொரு பெயரைச் சொல்லியிருக்கும். முதல் பாதத்தில் ஒரு பெயரைச் சொல்லி, அப்படிப்பட்டவரை அறிவோம் என்று வரும். இரண்டாம் பாதத்தில் அந்த தெய்வத்திற்கேஇன்னொரு பெயரைச் சொல்லி, அப்படிப்பட்டவரை தியானிப்போம் என்று வரும். மூன்றாம் பாதத்தில் மூன்றாவதாக இன்னொரு பெயரைச்சொல்லி, அப்படிப்பட்டவர் நம்மைநல்ல வழியில் தூண்டி விடட்டும் என்று ப்ரார்த்தனை வரும். மஹா நாராயணோபநிஷத்தில் உள்ளபடி, லோக வழக்கில் பிரஸித்தமாகியுள்ள இந்த காயத்ரி மந்த்ரங்களில்பரமசிவன், விக்நேச்வரர், ஸுப்ரமண்யர், நந்திகேஷ்வரர் ஆகிய நாலு பேரின் காயத்ரிகளிலும் முதல் பெயராக தத்புருஷ என்பதைத்தான் சொல்லியிருக்கிறது. ஆனால்,விக்நேச்வரரைக் குறித்ததாகவே அதர்வ வேதத்தில் ஒரு உபநிஷத் இருக்கிறது. கணபத்யதர்வசீர்ஷம் என்று அதற்குப் பெயர். அதில் ஒரு கணபதி காயத்ரீ கொடுத்திருக்கிறது. இந்தகாயத்ரீயில் முதல் பெயராக ஏகதந்த என்பதைத்தான் சொல்லியிருக்கிறது. விநாயகரின் திருமுகத்தையும் அதில் கம்பீரமாக மெருகு ஏற்றிகொண்டிருக்கும் சிந்தூரத்தையும் அடுத்த வரியில் விளக்குகிறார் ஔவையார்: வேழ முகமும் விளங்குசிந் தூரமும்  (6) பதவுரை:… Read More ›

விநாயகர் அகவல் – பாகம் 2

ஸ்ரீ மகாபெரியவா சரணம் ஸ்ரீ கணேச சரணம் விநாயகர் அகவல் என்ற தலைப்பின் பெருமையை பார்த்த பின், ஸ்ரீ மஹா பெரியவாளையும், விநாயகரையும் வேண்டிக்கொண்டு, பாடல் வரிகளில் நுழைவோம். சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பதவுரை: சீதம் – தாபத்தை தணிக்கக் கூடிய, குளிர்ச்சியான களபம் – களப மணம்… Read More ›

Vinayagar Agaval – Part 1

Thanks to Sri Srinivasan for the article. விநாயகர் அகவல் – பாகம் 1 நமஸ்காரம் ஸ்ரீ மஹாபெரியவா சொன்னதை ஒட்டி, விநாயகர் அகவல் – என்ற ஸ்துதி பாடலின் அர்த்தத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். முதலில், பாடல் தலைப்பின் பொருளின் மகத்துவத்தைப் பார்ப்போம். விநாயகர் என்ற நாமாவைப் பற்றி ஸ்ரீ மஹாபெரியவா சொல்லுவதை பார்க்கலாம். [தெய்வத்தின்… Read More ›