Upanyasam

தண்ணளியால் காமாக்ஷித் தாயார் போல்

இன்றைக்கு பௌர்ணமி. பூர்ண சந்திரனை தரிசனம் பண்ண காத்திருக்கிறோம். ஆனால் மேகம் மூடி விட்டால் சந்திர தரிசனம் கிடைப்பது அரிது. அப்படி இல்லாமல் என்றும் ஒளிவிடும் சந்திரன் உண்டா? உண்டு என்கிறார் ஆசார்யாள். சிவானந்த லஹரியில் ஒரு ஸ்லோகத்தில், மிகுந்த புண்ணியம் செய்த பக்தர்களின் மனதில் உதிக்கும் பூர்ண சந்திரனாக பரமேஸ்வரனை வர்ணிக்கிறார். ஒவ்வொரு வரியும்… Read More ›

மனஸி மம காமகோடி விஹரது

இன்று ஆடிப் பவுர்ணமி. ஆறு மாதங்களுக்கு முன்னால் தைப் பௌர்ணமி அன்று இந்த வலைதளத்தில் எழுத ஆரம்பித்தேன். இன்று ஆவணி அவிட்டம் கூட. புதுப் பூணல் போட்டுக் கொண்டு, ரிஷிகளை பூஜை, ஹோமம், தர்ப்பணம் முதலியவற்றால் திருப்தி செய்து, வேத அத்யாயனத்தை துவங்கி, இன்றிலிருந்து நல்ல பிராமணனாக இருப்பேன் என்று சங்கல்பம் செய்து கொள்ளும் நாள்…. Read More ›

கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை

இந்த வரலக்ஷ்மி வ்ரத நன்னாளில், நம் ஆசார்யாள் குழந்தையாக இருக்கும் போது அருளிய, கனகதாரா ஸ்லோகத்தின் பொருளை அறிந்து கொள்வோம் –> கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை

மனத்திற்கு எட்டாத மஹாபெரியவா மஹிமை

சிவன் சார் ஒரு முறை என்னிடம் – “பெரியவா, நீ நினைக்கறதை எல்லாம் காட்டிலும் பெரியவா” என்று சொன்னார். அதாவது மஹாபெரியவா மஹிமையை முழுமையாக மனத்தால் எண்ணி விடவோ, வாக்கால் பேசி விடவோ முடியாது என்று பொருள். ஆனால், நம் மனத்தை அலம்பிக் கொள்ள, நமக்கு பெரியவா பக்தி ஏற்பட, அவருடைய மஹிமையை பேசுவதே சிறந்த… Read More ›

வெற்றியை அளிக்கும் வாக்குவன்மை

கச்சியப்ப சிவாச்சார்யார், அருணகிரிநாதர், கம்பர், காளிதாசர் போன்ற அருட்கவிகளுக்கு, அவர்களிடம் வாதம் செய்ய வந்தர்களை ஜெயிக்க தெய்வமே துணை வந்தது. வாதத்தில் பிறரை வெல்லக்கூடிய இனிய வாக்கை அருளும் ஒரு மூகபஞ்ச சதி ஸ்லோகத்தின் பொருளுரையில் அந்த நிகழ்ச்சிகளை விளக்கியுள்ளேன். கீழ்கண்ட இணைப்பில் கேட்கலாம் –> ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

குரு சொல்லும் ஒரு வார்த்தை எப்படி வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடும் என்பதை வள்ளிமலை ஸ்வாமிகள், நாக் மஹாஷய, வெங்கடேச சாஸ்த்ரி, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆகியோரின் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறேன் –> சிவானந்தலஹரி 30வது ஸ்லோகம் பொருளுரை

மஹாபெரியவா பண்ணும் சௌக்யோபதேசம்

ஆச்சார்யாள் சிவானந்த லஹரியில் “சம்போ லோககுரோ! மதீய மனஸ: சௌக்யோபதேசம் குரு” “பரமேஸ்வரா! என் மனத்துக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு உபதேசத்தை தந்தருளுங்கள்” என்கிறார். மஹாபெரியவா தெய்வத்தின் குரலில், ஏகாதசி விரதம், சஹஸ்ர காயத்ரி, சிகை, பஞ்சகச்சம், பெண்களுக்கு காலத்தில் விவாகம் முடித்தல், பரோபகாரம், என்று பல உபதேசங்களை செய்திருக்கிறார், அவற்றில் நம்மால் எவ்வளவு கடைப்பிடிக்க… Read More ›

குசேலோபாக்யானம்

My maiden attempt to tell a story from Srimad Bhagavatham using Narayaneeyam slokams. ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள குசேலர் கதையை, ஸ்வாமிகளிடம் கேட்ட விதத்தில், நாராயணீயம் ஸ்லோகங்களைக் கொண்டு சொல்லி இருக்கிறேன். இந்த இணைப்பில் கேட்கலாம் –> குசேலோபாக்யானம்

Bhanu saptami and Adithya hrudhayam

இன்று சப்தமி திதியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்துள்ளது. இது பானு சப்தமி என்று சூரியனை வழிபட உகந்த நாளாக போற்றப்படுகிறது. அகஸ்திய பகவான் ஸ்ரீ ராமருக்கு உபதேசம் செய்த ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தின் மகிமையை அறிந்து கொண்டு அதை பாராயணம் செய்வோம். (Today saptami thithi is falling on a Sunday. This is… Read More ›

ப்ரமராதிபோ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு:

சிவானந்தலஹரில 51வது ஸ்லோகம், ஸம்ஸ்ருத கவிதையோட ஒரு உச்சமா இருக்கு. ஒரே பதத்திற்கு இரு பொருள் தரும் வார்த்தைகளை வைத்து விளையாடி “ஶ்ரீசைலவாஸியான மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கும், வண்டுக்கும்” ஸ்லேஷை பண்றார். ஒருவிதத்தில பார்த்தால் எல்லா பதங்களும் வண்டை குறிக்கிறது. இன்னொரு விதத்தில ஸ்வாமியை குறிக்கிறது. பொருளுரை இந்த இணைப்பில் –> சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை

படிப்பையும் பணத்தையும் கொண்டு பகவானை அடைய முடியாது

சங்கர பகவத்பாதாள் ‘எனக்கு உன் பூஜைக்கு பலனா விஷ்ணுத்வம், ப்ரம்மத்வம் எல்லாம் கொடுத்து விடாதே’ என்று சொல்கிறார். ஏன்? இந்த இணைப்பில் கேட்கலாம் –> சிவானந்தலஹரி 23வது ஸ்லோகம் பொருளுரை

குரு பூர்ணிமா 2020

நாளை குரு பெளர்ணமி. வியாஸ பௌர்ணமி. இந்த நாளில் ஸந்யாசிகள், வேதத்தை தொகுத்து, தர்ம சாஸ்திரங்களையும் புராணங்களையும் அளித்த வியாஸ முனிவரையும், ரிஷி மண்டலத்தையும், குரு மண்டலத்தையும் தியானித்து, விஸ்தாரமாக பூஜை செய்வார்கள். ஒவ்வொருவரும் அப்படி வியாஸ பூஜை செய்யும் தம்முடைய சம்பிரதாயத்தை சேர்ந்த குரு பீடங்களை அலங்கரிக்கும் மகான்களை தரிசித்து, ஆசி பெறுவார்கள். மேலும்… Read More ›

பக்தி பண்ண என்ன தகுதி வேண்டும்?

ஈச்வர பக்தி பண்ண க்ருஹஸ்தனாக இருக்க வேண்டுமா? சந்யாசி ஆக வேண்டுமா? யோகம், யாகம், ஜபம் எல்லாம் பண்ணத் தெரிய வேண்டுமா? ஏதாவது ஆஸ்ரமத்திலோ, காட்டிலோ போய் தங்க வேண்டுமா? ஆசார்யாள் என்ன சொல்கிறார்? –> சிவானந்தலஹரி 11, 12வது ஸ்லோகங்கள் பொருளுரை

சிவபெருமானுக்கு எதைத் தரவேண்டும்? அவரிடமிருந்து என்ன கிடைக்கும்?

பரமேஸ்வரனுக்கு நாம் எதைக் கொடுத்தால் அவர் மகிழ்வார்? அவரிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும்? சிவானந்த லஹரியில் ஆச்சார்யாள் இந்த கேள்விகளுக்கு விடை சொல்கிறார்–> சிவானந்தலஹரி 27, 28வது ஸ்லோகங்கள் பொருளுரை

நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா

“ஆனித் திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகம். நடராஜருக்கான ஆறு அபிஷேகங்களில் ஒன்று. எனவே, சிவாலயங்களில் இன்று தொடங்கி நாளை உத்திர நட்சத்திரம் முடியும் காலம் வரை ஏதேனும் ஒரு நேரத்தில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம். ஆனால், சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை வேளையில் இந்த அபிஷேகத்தைச் செய்வது… Read More ›

பரமன் திருவடிகள் பயத்தை போக்கும்

இன்று ஆனித்திருமஞ்சனம். சிதம்பரத்தில் நடராஜாவின் அபிஷேகத்தை இன்று காண்பது விசேஷம். குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே! என்று அப்பர் பெருமான் நடராஜாவின் தூக்கிய திருவடியை கண்டதால்… Read More ›

பக்தி என்கிற அம்மா; பக்தன் என்கிற குழந்தை

சிவானந்த லஹரியில் பக்தியின் மூன்று பரிணாமங்களை பல உதாரணங்கள் மூலம் விவரித்து, பக்தி என்றால் என்ன என்று வரையறுத்து கூறிய ஆச்சார்யாள், அடுத்த ஸ்லோகத்தில் பக்தி எப்படி வளரும் என்று இன்னொரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். ஒரு அம்மா தன் குழந்தையை வளர்க்கும் போது செய்யும் உணவு ஊட்டுதல்,  குளிப்பாட்டுதல், ஆடை அணிவித்தல், தாலாட்டி தூங்கப்… Read More ›

ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு; Soundaraya lahari audio mp3

சங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்தோத்திர ரத்னமான சௌந்தர்ய லஹரியை கற்றுக் கொள்ள வசதியாக, தெளிவான உச்சரிப்பும், அர்த்தத்தை அனுசரித்தும் அமைந்துள்ள ஒரு ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம் –> ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு; Soundaraya lahari audio mp3 A good recording of Soundarya Lahari, (the sublime work of Adi Aacharya… Read More ›

கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள்

ராமாயணத்தில் விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களுக்கு, பகீரதன் பெருந்தவம் செய்து, ஆகாச கங்கையை, பூமிக்கும், பின்னர் பாதாள லோகத்திற்கும் கொண்டு சென்றதைச் விரிவாகச் சொல்கிறார். வால்மீகி ராமாயணம் பால காண்டத்தில் 35வது ஸர்ககத்திலிருந்து 44வது ஸர்கம் வரையிலான இந்த பகுதியை கங்காவதரணம் என்று சொல்வார்கள். அமாவாசை மற்றும் சிராத்த தினங்களில் இந்த கங்காவதரணம் பாராயணம் செய்தால். கேட்டால்… Read More ›