Devotee Experiences

Navarathri Special – Day 9 – வாக்குவன்மை அருள்வது

இந்த [ஆனந்தலஹரி] ச்லோகங்களுக்கு நடுவே சிலதில் லலிதாம்பாள் ரூபத்திலில்லாமல், ஆனாலும் ஸ்ரீவித்யாதந்த்ரத்திற்கு ஸம்பந்தமான வேறு தேவதா ரூபங்களில் அம்பாள் அநுக்ரஹம் செய்வதைச் சொல்லியிருக்கிறது. அப்படிஒன்று [ச்லோ.15] சொல்கிறேன்: शरज्ज्योत्स्नाशुद्धां शशियुतजटाजूटमकुटांवरत्रासत्राणस्फटिकघटिकापुस्तककराम् |सकृन्न त्वा नत्वा कथमिव सतां संन्निदधतेमधुक्षीरद्राक्षामधुरिमधुरीणाः भणितयः ॥ சரஜ்-ஜ்யோத்ஸ்நா-சுத்தாம் சசியுத ஜடாஜூட-மகுடாம்வரத்-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் |ஸக்ருந்-ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததேமது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: | | [ (சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்) சரத்கால நிலவு போல் தூயவளும், (சசியுத ஜடாஜூட மகுடாம்) சந்திரனுடன் கூடியஜடாமுடியை மகுடமாயுடையவளும், (வர) வர முத்திரை, (த்ராஸ-த்ராண) பயத்திலிருந்து காப்பதான அபய முத்திரை, (ஸ்படிக-குடிகா) ஸ்படிக அக்ஷமாலை, (புஸ்தக கராம்) புஸ்தகம் ஆகியவற்றைக் கரத்திற் கொண்டவளுமாகிய (த்வா)உன்னை (ஸக்ருத்) ஒருமுறை (நத்வா) வணங்கினாலே (ஸதாம்) ஸத்துக்களான மேன்மக்களுக்கு (மது க்ஷீர த்ராக்ஷா)தேன், பால், திராக்ஷை ஆகியவற்றின் (மதுரிம துரீணா:) இனிமையை வகிக்கும் சிறப்புப் பொருந்தியவையான(பணிதய:) வாக்குகள் (கதமிவ) எவ்வாறு (ந ஸந்நிதததே) கைகூடாமற் போகும்? (எவ்வாறு வாக்குத்திறன்ஸித்தியாமலிருக்கும்?) ] வீணை இல்லாத ஒருவித வாக்தேவி ஸ்வரூபமாக அம்பாளை [இங்கே] சொல்லியிருக்கிறது. வாக்தேவி என்றால்ஸரஸ்வதிதான். அம்பாள் விஷ்ணுவுக்கு ஸஹோதரி என்கிற மாதிரியே இன்னும் இரண்டு – ரொம்பப் பேருக்குத் தெரியாதது: லக்ஷ்மிப்ரம்மாவுக்கு ஸஹோதரி, ஸரஸ்வதி பரமசிவனுக்கு ஸஹோதரி1. அண்ணா – தங்கை என்றால் ஒரே ஜாடை, ஒரேமாதிரி மனோபாவம், ஒரே மாதிரிக் கார்யம் பண்ணுவது என்றுதானே இருப்பார்கள்? அப்படி ஸரஸ்வதி பரமசிவன்மாதிரியே வெள்ளை வெளேரென்று இருக்கிறாள். ”சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்” என்றால் சரத் கால சந்திரிகை மாதிரிசுப்ரமாக, வெள்ளை வெளேரென்று இருப்பவள். சரத் காலத்தில்தான் அவளுக்கு ஸரஸ்வதி பூஜையும் பண்ணுகிறோம். ‘சரத்’தை வைத்துத்தான் அவளுக்கே ‘சாரதா’ என்று பேர் இருக்கிறது. ஆசார்யாளுக்கு சாரதா நாமத்தில் விசேஷமான பிடிப்பு உண்டு. வித்வத்திலே சிகரத்துக்குப் போய் பாஷ்யம், ஸ்தோத்ரம், வாதம் என்று ஏராளமாகப் பண்ணியவராதலால் அவருக்கு ஸரஸ்வதி ரொம்பவும் முக்யம். அந்தஸரஸ்வதிக்கு உள்ள அநேகம் பெயர்களில் சாரதா நாமத்தில் அவருக்குத் தனியான ஈடுபாடு! வெள்ளை வெளேர் என்றுபரம பரிசுத்தத்தையும், ஹித சீதமாக இருப்பதில் அருளின் குளிர்ச்சியையும் காட்டுகிற பெயராக இருப்பதால்இருக்கலாம்! ‘ச’வும் ‘ஸ’வும் ஒன்றுக்கொன்று மாறி வருவதுண்டு. அப்படிப் பார்க்கும்போது ‘சாரதா’ என்பது ‘ஸாரதா’என்றாகும். வடக்கே அப்படியும் சொல்கிற வழக்கமிருக்கிறது. ‘ஸார-தா’ என்றால் ‘ஸாரமான தத்வத்தைஅநுக்ரஹிப்பவள்’ என்று அர்த்தம். ஞானந்தான் ஸார தத்வம். அதனாலும் ஆசார்யாளுக்கு அந்தப் பேரில் தனியானபிடிமானம் இருந்திருக்கலாம். ச்ருங்கேரியில் சாரதாம்பாள் என்றே அம்பாளை ப்ரதிஷ்டித்திருக்கிறார். அது சாரதாபீடம். த்வாரகையிலுள்ள ஆச்சார்யாளின் மடத்திலும் சாரதா பீடம் என்றே சொல்கிறது. நம் [காஞ்சி] மடத்துக்கும்சாரதா மடம் என்றே பேர். காமகோடி பீடம்; சாரதா மடம். அந்தப் பேரில் அவருக்குத் தனிப் பிடிப்பு இருந்தாலும், நம்முடைய ஸ்தோத்ரத்தில் ஒரு இடத்தில்கூட லலிதாம்பாள், த்ரிபுரஸுந்தரி முதலான பெயர்களையே சொல்லாததால்இந்தப் பெயரையும் சொல்லவில்லை போலிருக்கிறது! ஆனலும் ‘சரத்-ஜ்யோத்ஸ்நா’ என்று ஆரம்பத்திலேயேசாரதாவை ஞாபகப்படுத்திவிடுகிறார்! ஈச்வரன் மாதிரியே அவள் சுத்த வெளுப்பு. அவர் மாதிரியே ஜடாமகுடம் தரித்துக் கொண்டிருப்பவள். அதோடு அதில்அவர் மாதிரியே சந்திர கலையையும் வைத்துக் கொண்டிருப்பவள். தானே சந்த்ரிகை மாதிரியான தாவள்யத்தோடுஇருப்பவள் ஜடா மகுடத்திலும் சந்த்ரகலை வைத்துக்கொண்டிருக்கிறாள்: ”சசியுத ஜடாஜூட மகுடாம்”. சதுர்புஜையாக இருக்கிறாள். இரண்டு ஹஸ்தங்களில் வராபய முத்ரை – ”வர த்ராஸ த்ராண” என்றுசொல்லியிருக்கிறது. ‘அபயம்’ என்பதற்குப் பதில் ‘த்ராஸ த்ராணம்’ என்று மோனையழகோடு போட்டிருக்கிறார். ‘த்ராஸம்’ என்றால் பயம்தான். ‘த்ராணம்’ ரக்ஷிப்பது பயத்த்லிருந்து ரக்ஷிப்பதென்றால் அபயந்தானே? ”உன்னைத் தவிர எல்லா தேவதைகளும் அபய வரத முத்ரை காட்டுகின்றன” என்று முன்னாடி சொன்னாரல்லவா? அதனால்தான் அப்புறம் லலிதாம்பாளுக்கு வேறான ஒரு ரூப பேதத்தை இங்கே சொல்லும்போது வராபயம் காட்டும்ஸாரஸ்வத [ஸரஸ்வதியின் தொடர்புள்ள] ரூபமாக வர்ணித்திருக்கிறார். வீணை, கிளி என்றிப்படி அந்த ஹஸ்தங்களில்வைத்துக் கொள்ளாமல் வரம், அபயம் காட்டும் ரூபமாகச் சொல்லியிருக்கிறார். அப்புறம் ஸரஸ்வதிக்கே உரிய அக்ஷமாலை, புஸ்தகம் இரண்டையும் சொல்லியிருக்கிறார்…. ”ஸரஸ்வதிக்கே உரிய”என்றதற்கு ஒரு ‘அமென்ட்மென்ட்’ [திருத்தம்] – அவளுடைய ஸஹோதரரான ஈச்வரன் தக்ஷிணாமூர்த்தியாகஉள்ளபோது அவருக்கும் இந்த இரண்டும் உண்டு, ”ஸ்படிக குடிகாம், புஸ்தக கராம்” என்பதில் ‘ஸ்படிக குடிகா’ என்பதுஸ்படிக அக்ஷமாலையைக் குறிப்பிடுவது. அக்ஷமாலை என்பது அக்ஷர மாலைதான். ‘அ’விலிருந்து ‘க்ஷ’வரையிலான 51 அக்ஷரங்களில் அக்ஷரத்திற்கு ஒன்றாக 51 மணிகளைக் கோத்துப் பண்ணியதே ‘அக்ஷ’ மாலை. சாக்த சாஸ்திரத்தில் ஒரு முக்யமான ஜீவ நாடியாக இருக்கிற ஒரு விஷயம் சொல்லவேண்டும். அதுதான்அக்ஷரங்களுக்கு அதிலுள்ள முக்யத்வம்; அந்த அக்ஷரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான சப்தம் என்றதத்வத்துக்கு உள்ள முக்யத்வம். வைப்ரேஷனால்தான் ஸ்ருஷ்டி என்று பார்த்தோம். ஆகாச தத்வத்தில் அந்தவைப்ரேஷன் ஸூக்ஷ்மமான சப்தங்களாக இருந்து, அவற்றிலிருந்தே ஸ்ருஷ்டி, அவற்றிலிருந்தே மந்த்ரங்களும், மந்த்ரமயமான வேதமும் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆகாசத்திற்கான ஸூக்ஷ்ம சக்தியான தன்மாத்ரையேசப்தந்தான் என்றும் சொன்னேன். ஆனபடியால், ஸ்ருஷ்டி லீலையும், ஸ்ருஷ்டி மறுபடி மூலத்தில் லயிப்பதும் ஆனஇவல்யூஷன்-இன்வல்யூஷன்களே சாக்த சாஸ்திரத்தின் முதுகெலும்பாக இருப்பதால், அதில் ஓடுகிற ப்ராண நாடிமாதிரியான முக்யத்வத்தை சப்த தத்வம் பெற்றிருக்கிறது. சாக்தத்தில் ஒரு பக்கம் அர்த்த ப்ரபஞ்சம், அல்லது வஸ்துப்ரபஞ்சம் சொல்லி அதில் சிவ தத்வம், சக்தி தத்வம், ஸதாசிவ தத்வம், ஈச்வர தத்வம், சுத்த வித்யா தத்வம் என்றுஐந்தை வைத்து பரப்ரஹ்மத்திலிருந்து ஸ்தூல பூத ஸ்ருஷ்டி வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது. அதே மாதிரி, அதற்கு ஏர்வையாகவே சப்த ப்ரபஞ்சம் என்றும் வைத்து அதில் சப்தத்தின் அதி ஸூக்ஷ்மமான ‘பரா’ என்ற தத்வத்தில்ஆரம்பித்து, அதையும் சேர்த்து ஐந்து விதமான சப்த தத்வங்களைச் சொல்லியிருக்கிறது. பராவுக்கு அப்புறம் பச்யந்தி,மத்யமா என்று இரண்டு. மநுஷ்யக் காதுக்குக் கேட்காததாகவும், மநுஷ்யன் வாயால் சொல்ல முடியாததாகவும் உள்ளசப்த மூலமே பரா. அந்த அதி ஸூக்ஷ்ம தத்வம் ஒருமுகப்பட்டு சித்தே [சிறதளவு] ஸ்தூலமான சப்தமாக ஆகும்போது‘பச்யந்தி’ எனப்படுகிறது. ஒரு நோக்கமுமில்லாமல் கேவல [வெறும்] சப்தமாயிருந்த ‘பரா’ வெளிப்படப் பேசிக்கேட்கக்கூடிய சப்தமாக ஆகவேண்டுமென்ற நோக்கத்தோடு கொஞ்சம் இறுகுகிற நிலைதான் ‘பச்யந்தி‘. ‘பார்க்கிறது’என்று அர்த்தம். ‘நோக்கம்’ என்பது நோக்குவது, பார்ப்பது என்பதைக் குறிப்பதுதான். எந்த நோக்கமும் இல்லாத‘பரா’வுக்கு நோக்கம் வந்து நோக்குகிறபோது ‘பச்யந்தி’ ஆகிறது! தமிழில் ‘பைசந்தி’ என்பார்கள். அதற்கப்புறம், மநுஷ்ய யத்னத்தின் மீது இல்லாமல் தானாகவே அது சப்தமாக எழும்பும். அந்த நிலையில் அதற்கு ‘மத்யமா’ என்றுபெயர். ஸூக்ஷ்ம சப்தத்திற்கும் ஒரு மநுஷ்யன் வாயால் எழும்புகிற ஸ்தூல சப்தத்திற்கும் மத்தியில் அது இருப்பதால்‘மத்யமா’ என்று பெயர். இப்படித் தானாகவே உண்டாகும் சப்தத்திற்கு ‘அநாஹத சப்தம்’ என்றும் பேர். ‘அடிக்கப்படாமல் உண்டான ஒலி’ என்று அர்த்தம். ‘ஆஹதம்’ – அடிக்கப்பட்ட;… Read More ›

Happy Navarathri!

Jaya Jaya Shankara Hara Hara Shankara, Dear All – Wishing you a Very Very Happy and divine Navaratri celebrations. Let us pray to loka matha for Her anugraham to bless us and protect us from the difficult time that we… Read More ›

ஜீவன் முக்தர்களின் சன்னிதி விசேஷம்

கீழ்க்கண்ட அனுபவங்கள் மகா பெரியவா, சிவன் சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்னிதியிலும் ஏற்பட்டதை அவர்களுடைய பக்தர்கள் வாயிலாக நாம் கேட்டிருக்கிறோம். ஜீவன் முக்தர்களுடைய சன்னிதி விசேஷம் அது. என். பலராம ரெட்டி ====================== இவரைப் பற்றி: பலராம ரெட்டி, M.A (1908-95), ஆந்திரபிரதேசத்தின் ஆன்மிக சூழலுள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தார். 1931ல் ஸ்ரீ அரபிந்தோ… Read More ›

பிறகு நான் எதற்கு?

Beautiful incident from Mahabharatham shared by Sri Krishnan Srinivasan in Twitter! பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா? பாண்டு உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் ,… Read More ›

முதியர்வகளுக்கு மரியாதை

Thank you Karthikeyan for the share பெரியவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது பல. இன்றைய இளைஞர்கள் , பெரியவர், வயதில் முதிர்ந்தவர்களுடன் பேசும் விதம், அவரது பாவனை நம்மை சிந்திக்க வைக்கும். அந்த பாவனை எல்லோரிடமும் இருந்தால், முதியோர் இல்லத்திற்கு தேவையே இருந்து இருக்காது. ஒரு சமயம், சுமார் என்பது வயதுக்கு மேல் இருக்கும்… Read More ›

எனக்காக ஒன்னு செய்யறையா?

Thanks to Sri Sarma Sastrigal for this share. ஆடி அமாவாசை என்றாலே எனக்கு மஹா பெரியவா அவர்கள் எனது அப்பாவிடம் சொன்ன வார்த்தைகள் தாம் நினைவுக்கு வரும். திருப்பதி அருகில் இருக்கும் சூர்யநாராயணபுரம் காட்டன் மில்ஸ் கெஸ்ட் ஹெளஸ் மற்றும் பிள்ளையார் கோவிலில் ஸ்ரீமட முகாம். 55 வருஷம் இருக்கலாம். வருஷம் சரியாக… Read More ›

Mahaperiyava vigrahams – FYI

Found this in FB. Thought of sharing with you all…I do not know this person – pl contact him directly for details…Looks like he makes both metal and fiber vigrahams.. His number is +91 6385620017