Golden Quotes

Periyava Golden Quotes-1126

ஆஃப்கானிஸ்தான் மாதிரியான துருக்க ராஜ்யங்களில் கூடப் பல வருஷங்கள் முன்பே கோஹத்தியை ban செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இதில் வேண்டுமென்றே மத த்வேஷங்களைத் தூண்டி விட்டிருந்தார்கள். எந்த ஸர்க்கார் இருந்தாலும், எந்தச் சட்டம் வந்தாலும், வராவிட்டாலும் பசுக்கள் கசாப்புக் கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் புனிதமான கடமை என்று நாம் இருந்தோமானால்… Read More ›

Periyava Golden Quotes-1125

கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் ஜீவிய காலம்வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்ய வேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை – தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமைக்கு ஸமதையான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக்கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி… Read More ›

Periyava Golden Quotes-1124

உண்டி வாயிலே மெகானிகலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய்விடலாம். அதுவும் பண்ண வேண்டியது தான். ஆனாலும் இப்படி மெகானிகலாக உண்டி வாயில் போடுவதைவிட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய்த் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு,… Read More ›

Periyava Golden Quotes-1123

ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்; தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு ஒரு பிடி என்பதை “கோ க்ராஸம்” என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு “க்ராஸ்”… Read More ›

Periyava Golden Quotes-1122

ச்யவன மஹர்ஷி கோ மஹிமையைச் சொல்லும் ச்லோகங்களில் ஒன்று: நிவிஷ்டம் கோகுலம் யத்ர ச்வாஸம் முஞ்சதி நிர்பயம் | விராஜயதி தம் தேசம் பாபம் சாஸ்யாபகர்ஷதி || என்ன அர்த்தமென்றால்: “எந்த தேசத்தில் பசுக்கள் தங்களுக்கு ஹிம்ஸை நேருமோ என்று பயப்படாமல் கோகுலங்களில் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த தேசமே எல்லாப் பாபங்களும் விலகப்… Read More ›

Periyava Golden Quotes-1121

மஹாபாரதத்தில் அநுசாஸனிக பர்வத்தில் பீஷ்மர் ஸகல தர்மங்களையும் தர்ம புத்ரருக்கு உபதேசிக்கும்போது கோஸம்ரக்ஷணத்தையும் சொல்லி கோ மஹிமையை எடுத்துக் கூறுகிறார். நஹுஷ மஹாராஜனுக்கு ச்யவனர் என்ற மஹரிஷியை விலை கொடுத்து வாங்கும்படியாக ஒரு ஸந்தர்பம், நிர்பந்தம் ஏற்படுகிறது. `[மூவுலகும் அடங்கும்] தன் த்ரைலோக்ய ராஜ்யம் முழுதையும் விலை கொடுத்தாலும் அந்த உத்தம ரிஷிக்கு ஈடாகாதே! எதைத்… Read More ›

Periyava Golden Quotes-1120

சாஸ்த்ர வசனப்படி தர்ம தேவதையே தபஸ், சௌசம் [தூய்மை], தயை, ஸத்தியம் என்ற நாலு கால்களுடைய ஒரு ரிஷபமாகத்தான் இருக்கிறது. அந்த தர்மக் காளையுடனேயே கோமாதாவும் இருப்பதாகவும், தர்மத்தையே பாலாகச் சுரக்கிற ‘தர்மதுகா’வாக அப்பசுத் தாய் இருப்பதாகவும், அந்த ஜோடியைக் கலி புருஷன் ஹிம்ஸித்ததாலேயே இந்த யுகம் இப்படிச் சீர்குலைந்திருக்கிறதென்றும் ‘பாகவ’தத்தில் இருக்கிறது.* ஆகையினால் கலிதோஷம்… Read More ›

Periyava Golden Quotes-1119

லௌகிக த்ருஷ்டி, வைதிக த்ருஷ்டி என்று எப்படிப் பார்த்தாலும் மிகவும் உயர்வு பொருந்திய கோவை வதைக்கக் கூடாது என்று சட்டம் செய்வதற்கு மிகவும் நியாயமுள்ளது. அது மிகவும் அவசியமானது. இனவேறுபாடு இல்லாமல் எல்லாப் பெருமக்களும் அப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு ஆதரவு திரட்டித் தந்து அரசாங்கத்தைச் செயற்பட வைக்க வேண்டும். தொன்று தொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள… Read More ›

Periyava Golden Quotes-1118

முகலாய அரசர்களான அக்பரும் ஷாஜஹானும், மிக ஸமீப காலத்திலேயே ஆஃப்கானிஸ்தானின் அமீரும் பசு ஸம்ரக்ஷணையின் அவசியத்தை உணர்ந்து அதற்கான சட்டங்களைச் செய்திருக்கிறார்களென்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே நாம் உரிய முறைப்படி எடுத்துச் சொன்னால் இந்த தேசத்தின் ஸகல பிரிவுகளையும் சேர்ந்த பிரஜைகள் எல்லோருமே நமக்கு ஆதரவு தருவார்கள் என்பதே என் நம்பிக்கை. அரசாங்கமும் எந்த ஒரு பிரிவினருக்கும்… Read More ›

Periyava Golden Quotes-1117

மக்கள், அரசாங்கம் ஆகிய இருவரும் பேணிக் காக்க வேண்டிய கோஸம்ரக்ஷண தர்மத்தில் மக்கள் செய்வதற்கு பெரிய பக்க பலமாக அரசாங்கம் முக்யமாகச் செய்ய வேண்டியது கோவதையைத் தடுத்துச் சட்டம் செய்வதாகும். அரசாங்கம் சட்டம் செய்வதற்கும் மக்களின் அயராத தூண்டுதல்தான் வழிவகுக்கும். சட்டத்தின் பலவந்தத்துக்கு பயந்துதான் கோவதை நிற்க வேண்டும் என்றில்லாமல் அதற்கு இந்த தேசத்திலுள்ள ஸகல… Read More ›

Periyava Golden Quotes – 1116

‘பரஸ்பரம் பாவயந்த:’ என்று பகவான் கீதையில் சொன்ன மாதிரி பரஸ்பரம் நாமும் கோவும் ஒருவரையொருவர் போஷித்துக் கொள்ள வேண்டும். கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க… Read More ›

Periyava Golden Quotes-1115

யஜ்ஞம் குறைந்து போனதால் அதற்கு நெய் செலவிடவும் இப்போது வாய்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் தெய்வ கார்யங்கள் இப்போதும் அகத்துப் பூஜை, கோயில் பூஜை, மடாலயங்களில் பூஜை என்ற ரூபத்தில் நடந்து வருவதால் நெய்த்தீபம் ஏற்றும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். நாமே பால் தோய்த்து வெண்ணெய் எடுத்து சுத்தமான பசு நெய் தயாரித்துக் கோயில்களுக்கும், மடாலயங்களுக்கும் கொடுப்பது… Read More ›

Periyava Golden Quotes-1114

காபிக்குப் பதில் காலை வேளையில் மோர்க்கஞ்சி சாப்பிடலாம். ‘தக்ரம் அம்ருதம்’ என்று சொல்லியிருக்கிறது. ‘தக்ரம்’ என்றால் மோர்தான். ஒரு பங்கு பாலிலிருந்து அதைப் போல் இரண்டு மூன்று பங்கு மோர் பெறலாமாதலால் இது சிக்கனத்துக்கும் உதவுவதாக இருக்கிறது. சில பேருடைய தேஹவாகுக்குப் பால் ஒத்துக் கொள்ளாது; பேதியாகும். அப்படிப்பட்டவர்களுக்கும் ஏற்றதாக கோமாதா அந்தப் பாலிலிருந்தே இந்த… Read More ›

Periyava Golden Quotes-1113

கோவிடமிருந்து நாம் பயன் பெறும் விஷயமாகவும் ஒன்று சொல்ல வேண்டும். உண்மையான பயன், அது தரும் த்ரவியங்களை வைதிக யஜ்ஞங்களிலும் தெய்வ கார்யங்களிலும் உபயோகப்படுத்திக் கொள்வதும், அதன் பால், தயிர் முதலானவற்றை நாம் சாப்பிட்டு ஆரோக்ய விருத்தி பெறுவதுந்தான். ஆனால் துர்பாக்யவசமாக நடப்பது என்னவென்றால் ஆரோக்யத்துக்கு ஹானியான காபிக்குத் தான் இப்போது பாலில் பெரும்பகுதி போகிறது…. Read More ›

Periyava Golden Quotes-1112

பசுவை தேசீயச் செல்வம் என்றே சொல்ல வேண்டும். பால் வற்றின பின்பும் அது செல்வந்தான். பால் வற்றினாலும் அது ஆயுஸ் உள்ளவரையில் சாணம் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறது? அந்தச் சாணம் எருவாகப் பிரயோஜனப்படுகிறது. இப்போது புதிதாக ‘கோபர் காஸ்’ என்று அதிலிருந்தே எரிவாயுவும் எடுக்கிறார்கள். ஆனால் கோ ஸம்ரக்ஷணம் – பசுவின் பராமரிப்பு – என்பது… Read More ›

Periyava 1111

கோ ஸம்ரக்ஷணை பற்றிச் சொல்லும்போது பசு மடங்கள் என்ற கோசாலை நிறைய வைத்துப் போஷிக்கும் நம் பக்கத்து நகரத்தாருக்கும் பிஞ்ஜராபோல் என்று வைத்து நடத்துகிற வடக்கத்திக்காரர்களுக்கும் நன்றி சொல்ல மறக்கக்கூடாது. பழையநாளில் கோவின் வயிற்றுக்கு யதேஷ்டமாகப் போடவே மேய்ச்சல் பூமிகளைப் பராமரித்தார்கள். ‘டவுன் லைஃப்’ என்பது வந்து விட்டதில் எங்கே பார்த்தாலும் தோட்டமா, துரவா, வயலா… Read More ›

Periyava Golden Quotes-1110

முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்ய வேண்டிய தர்மங்களை எண்-நான்கு — அதாவது முப்பத்திரண்டு -– அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன?… Read More ›