Periyava Golden Quotes-812


‘தாவரத்தை மட்டும் ஹிம்ஸிக்கலாமா?’ என்பதற்கு இன்னொரு ஜஸ்டிஃபிகேஷன் இருக்கிறது. ஒரு பிராணியைக் கொலை பண்ணிவிடுவதுபோல ஆஹாரத்துக்காகத் தாவர வர்க்கத்தை நாம் அநேகமாகக் கொலை பண்ணுவதில்லை என்றும் அப்படியே அவற்றை ஹிம்ஸிக்க நேர்ந்தாலும், அப்போது கூட பிராணிகளுக்கு உள்ள அளவுக்கு வலியுணர்ச்சி அவற்றுக்கு ஏற்படுவதில்லை என்றும் சொன்ன ஸமாதானம் நாம் அவற்றை எப்படி affect பண்ணுகிறோம் [பாதிக்கிறோம்]?’ என்பது வைத்துச் சொன்னது. இப்போது மாம்ஸ போஜனமும் சாக போஜனமும் நம்மை எப்படி affect பண்ணுகின்றன என்பதை வைத்தும் ஸமாதானம் சொல்கிறேன். நமக்குச் சித்த சுத்தியும், ஸத்வ குணமும் உண்டாவதற்கு மாம்ஸ போஜனம் உதவுவதில்லை. சரீரம் வேண்டுமானால் ஸ்ட்ராங்காக ஆகலாமே ஒழிய, தியானாதி அப்யாஸங்களுக்கு நான்-வெஜிடேரியன் ஆஹாரம் அநுகூலம் செய்வதில்லை; அதோடு ‘கம்பேர்’ பண்ணினால் சாக போஜனம்தான் ஆத்மாபிவிருத்திக்கு அநுகூலமாயிருப்பது. சாக போஜனத்திலும் ஆத்மாபிவிருத்தியை முன்னிட்டு தள்ள வேண்டிய பல பதார்த்தங்கள் இருந்த போதிலும் மாம்ஸத்தைவிட இதுதான் மேலானதாக இருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

There is another justification for the question on whether we can harm plants. I had mentioned about the varying pain and sensitivity levels between plants and animals. By and large, we do not chop or kill plants like we do animals. This justification is based on how we affect them. Now let me justify based on how vegetarian and non-vegetarian foods affect us. Non vegetarian food does not help us in any way in acquiring mental tranquility and Sathva Guna. Our body may become strong but for meditation and other practices non-vegetarian food does not help. Vegetarian food is the one that helps in all the above mentioned aspects. Even in vegetarian food there are certain items that need to be avoided, but still, it is much superior to consuming meat. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading