202. Mother Goddess by Maha Periyava

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Why should we worship Ambal with love and as our mother? Sri Periyava explains eloquently.

Many Jaya Jaya Sankara to Shri. B. Narayanan Mama for the translation. Rama Rama

அன்னைத் தெய்வம்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். இரண்டு முன்னறி தெய்வங்களிலும் முன்னதாக ‘அன்னை’யைச் சொல்லியிருக்கிறாள். தைத்திரீயோபநிஷதமும், ‘மாதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவைத் தெய்வமாகக் கொள்வாயாக’ என்கிறது. இங்கேயும் முதலில் அம்மாவைத்தான் சொல்லியிருக்கிறது.

தாயாரைத் தெய்வமாக நினைக்க முடியுமானால் இதையே திருப்பி வைத்துப் பார்க்கும்போது தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக் கொண்டிருக்கிற மகாசக்தியைத் தாயாராக நினைக்கும்போது ‘அம்பாள்’ என்கிறோம்.

எல்லாமாக ஆகியிருக்கிற பரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. எந்த ரூபமாகத் தியானித்தாலும், அப்படியே வந்து அநுக்கிரகம் செய்கிற கருணை பரமாத்மாவுக்கு உண்டு. அப்படி சாக்ஷாத் பரப் பிரம்மமே தாயாகி, அம்பிகையாய் இருந்து கொண்டு, நமக்கு அநுக்கிரகம் செய்யவேண்டுமென்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது.

பரமாத்மாவை அன்னைத் தெய்வமாக பாவிப்பதில் தனியான விசேஷம் உண்டு. அம்மாவிடம் நமக்குள்ள அன்பும் அம்மாவுக்கு நம்மிடம் உள்ள அன்பும் அலாதியானவை அல்லவா? எனவே, ‘அம்மா’ என்று நினைத்து பக்தி செய்தால் ஒரே அன்பு மயமாக இருக்கிறது. ஆனந்த மயமாக இருக்கிறது. நாம் குழந்தையாகி விடுவதால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மை விட்டு விலகுகின்றன. வயசேறிப் போவதால் ஏற்படும் விகாரங்களை, அவளுடைய குழந்தை என்ற உணர்வினால் போக்கிக் கொள்கிறோம்.

பரமாத்மாவை ‘அம்மா’ என்பது நாமாக உபசாரத்துக்கு செய்கிற பாவனை அல்ல. வாஸ்தவத்திலேயே பரமாத்மா ஒரு தாயாரின் அன்போடு கூடவே சமஸ்தப் பிராணிகளுக்கும் அநுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறது.

இந்த ஜன்மத்துக்கு ஏற்பட்ட தாயையே தெய்வமாக வழிபட வேண்டுமானால், எந்தெந்த ஜென்மத்துக்கும் துணையாக இருக்கிற பரமாத்மாவையும் தாயாக வைத்து வணங்கத்தான் வேண்டும். நம் வீட்டு அம்மா, இந்த ஒரு ஜன்மாவில், நாலைந்து குழந்தைகளுக்கு மட்டும் தாய் ஆவாள். அம்பிகையோ எல்லா ஜன்மங்களுக்கும் எல்லா ஜந்துக்களுக்கும் தாயாக இருக்கிறவள். அவள் ஜகன் மாதா, அணு முதல் மனிதன் வரை, பசு, பட்சி, புழு, பூச்சி, புல், செடி, கொடி, மரம் எல்லாம் ஒரே சக்தியிலிருந்துதானே பிறந்திருக்கின்றன? ஒரே ஜகன்மாதாவிடமிருந்துதான் நாம் இத்தனை பேரும், இத்தனை வஸ்துக்களும் வந்திருக்கிறோம். பரமாத்மாவை அம்பிகையாகப் பூஜிப்பதால், அவள் ஒருத்திதான் அம்மா, நாம் அனைவரும் அவளுக்குப் பிறந்த குழந்தைகள்; அதாவது எல்லாரும், எல்லாமும் சகோதரர்கள் என்ற அநுபவம் உண்டாகும். எல்லாரையும் தழுவும் பரம மதுரமான அன்பு நமக்கு வரும்.

தெய்வங்களும், அவதார புருஷர்களும், மகான்களும்கூட அம்பாளை உபாஸித்து அநுக்கிரகம் பெற்றிருக்கிறார்கள். ஆதிசங்கர பகவத்பாதர்களும், காளிதாஸனும் அவளுடைய அநுக்கிரகத்தாலேயே விசேஷ வாக்குச் சக்தி பெற்றார்கள். திருஞானசம்பந்தருக்கு, அவளது க்ஷீரமே திவ்வியப் புலமை தந்தது.

எல்லாவித இகபர நலன்களும் தருகிற அம்பிகை, விசேஷமாக வாக்குவன்மையை அருளுகிறாள். ஏனெனில், அவளே அக்ஷர ஸ்வரூபமானவள். நம் உடலின் மேல் சதையைச் சிறிது கீறிவிட்டால் – வெளியில் நாம் எத்தனை அழகாக இருந்தாலும் – உள்ளே அருவருப்புத் தருகிற வஸ்துக்களையே பார்க்கிறோம். பரமாத்மா அம்பாளாக வருகிறபோது, தரித்த சரீரமோ கருணா மயமானது. அம்பிகையாக வரும்போது, பரமாத்மா ஐம்பத்தொரு அக்ஷரங்களையே சரீரமாகத் தரித்துக் கொண்டு வருகிறது. அதனால்தான் தேவீ உபாஸகர்கள் விசேஷ வாக்கு வன்மை பெறுகிறார்கள்.

லோகம் முழுவதற்கும், காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அநுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரக்ஷிக்கும். அந்த அம்பிகையை நாம் அன்போடு தியானம் செய்ய வேண்டும். அக்ஷர மயமானவளை வாக்கால் துதிக்க வேண்டும். அம்மாவின் சரீரவாகு, மனப்பான்மை எல்லாம் குழந்தைக்கும் வருவதுபோல், அம்பாளே நம் சரீரம், மனஸ் எல்லாமாயிருக்கிறாள் என்ற உணர்ச்சியோடு – அவள் வேறு நாம் வேறு அல்ல என்ற அனன்ய பாவத்தோடு – அபேதமாக அம்பாளை உபாஸிக்க வேண்டும். அப்படி உபாஸித்துக்கொண்டேயிருந்தால், அவளைப்போலவே நாமும் அன்பே உருவமாகி லோகம் முழுவதற்கும் ஆனந்தத்தைக் கொடுக்கலாம்.

____________________________________________________________________________________________________________________________

Mother Goddess

Poet AvvaiyAr said, “Mother and Father are the primary (first—known) Gods”.  Among the two, she has mentioned Mother first. Thaithtreeya Upanishad also says, “Regard mother as God; Regard father as God”. Here too, Mother has been given the first place.

If  we  can  consider  mother  as  God,  then  the  converse  is  also  possible;  God  can  be  regarded   as  mother.  When  we  think  of  ParAsakthi,  who  creates  and  sustains  all  the  worlds,  as  mother,  we  call  HER  AmbAl.

ParamAthmA  who  is  Omnipresent,  comes  and  blesses  us  in  the  Roopa  of  whatever  we  think  of  Him.  In  whatever  RoopA  we  think  of  Him,  He  has  the  kindness  to  come  in  the  same  RoopA  and  bless  us.  When  we  pray  to  Him  and  asks  Him to   come  and  bless  us  as  our  Mother,  He  comes  as  Ambikai.

There is a unique speciality in considering ParamAtmA as mother. Mother’s  love  towards  us  and  our  love  towards  our  mother  is  unique,  is  it  not?  Therefore,  when  we  worship  Him  as  our  mother,  everything  is  full  of  bliss.  As we become children, lust and anger leave us. All the  mental  aberrations  and  deformity  which  come  to  us  due  to  old  age,  are  driven  away  by  the  feeling  that  we  are  HER  children.

Perceiving ParamAtmA as Mother is not a mere compliment. In reality,  ParamAtmA  is  blessing  all  the  living  beings  with  the  Love  of  a  mother.

If  one  has  to  worship  his  mother  as  God,  in  this  birth  then  we  have  to  worship   ParamAthmA,   who  is  our  Protector  in  all  our  births,  as  Mother.  Our  mother  at  home  is  the  mother  for  only  a  few  children  in  this  birth.  But  Ambikai  is  the  mother  for  all  living  beings  in  all  their  births.  She is ‘JaganMAthA’.  All  the  matters  from  atom,  through  the  human,  including  animals, birds, worms  insects, grass,  plants,  trees,  have  come  from  that  ONE  Sakthi,  is  it  not? All  of  us  and  all  the  matters  have  come  from  that  one  Jagan MAthA.  When  we worship  ParamAtmA  as  Ambikai,  She  only  is  the  Mother  and  all  of  us  are  Her  children.  This means all of us and everything are brothers. We will love all.

Gods,  ‘AvathAra  PurushAs’  and  great  MahAns  have  also  worshipped  AmbAl  and  got  Her  blessings.  Sri AdhiSankara  Bhagawath  PAdhar  and  KAlidAsan  got  their  unique  poetic  elocution  ability ,  only  with  HER  blessings.  Her  milk  of  wisdom  only  gave  ThirugnAna  Sambandar  his  wonderful  fluency  in  singing  stOtrams.

Ambikai  who  gives  all  the  goodness  of   both  this and  the  other  worlds,  specially   grants  the  power  of  speech,  because She is the ‘Akshara  SwaroopA’.  If  we make  a  cut  on  our  body  skin,  however  beautiful  we  are  as  seen  from  outside we  only  see  disgusting  matters  inside.  When  ParamAtmA  comes  as  AmbAl,  the  body  HE assumes  is  kindness  personified.  While  appearing  as  Ambikai,  He  assumes  the  51  letters  as  His  body  and  comes.  That  is  why,  Devi  Worshippers   get  a  special  power  of  speech (elocution).

Being  a  Mother  for  the  whole  world  and  for  all  the  time,  and  blessing  us,  ParAsakthi’s  KatAksham  will  lift  any  kind  of  person.  We should worship that Ambikai with utmost love. As She is the embodiment  of  letters,  we  should  worship  Her  with  SlOkAs.  As   the  child  inherits  the  tone  and  attitude  of  the  mother,  we  should  feel  that  AmbAl  only  is  our  body  and  mind. She is not different from us—-and worship Her.  If  we  keep  on  worshipping  Her  this  way,  we  will  also  become  an  embodiment  of  Love,  and  give  happiness  to  the  whole  world.



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. Maha Periaval and Mother Kamakshi are one and same and there is no difference. Kati Koti Pranams to Nadamadum Deivam.

  2. Sankaraaa… Kamakshi Amma… Mahaperiyavaaa…

  3. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d