Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Part 4

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The divine secret behind Sri Periyava’s transformation from a young boy to a Jagadguru continues in Sri Periyava’s words.

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama for the series, translation and a beautiful drawing…Rama Rama

ஸ்ரீ ரா.கணபதி  கண்ட  மஹாபெரியவா (அவர்  எழுத்திலேயே)                                                                                                                        – நான்காம்  படி

 – பெருமுக்கல் சாதுர்மாஸ்யம்  முடித்து  விஸ்வரூப யாத்ரையில் ஆலயம் வந்த பூர்வாச்சாரியரைப் பார்த்த ஸ்வாமிநாதனுக்கு “இன்னன்னு சொல்லத் தெரியாத ஏதோ ஒண்ணு மனஸூல ஆழப் பதிஞ்சுது” தான்!

இரண்டு நாள்கள் பீடாதிபர் பாலனைப் பன்முறை கூப்பிட்டு நிறைய உரையாடியபோது ஆத்ம சம்பந்தமாக ஏதும் கேட்கவில்லையா என்று ஸ்ரீ சரணாளை வினவியதற்கு அவர் அருளிய மறுமொழி:

“இல்லே-ன்னுதான் நெனக்கறேன். முக்யமா, புத்திசாலித்தனத்தை டெஸ்ட் பண்ணிப் பாக்கறதாத்தான் கேட்டார். பதில் சொன்னேன்-னு தோண்றது. [அப்படி அவர் கேட்டு இவர் சொன்ன பதில்களில் அவர் அடைந்த பரம திருப்தியைச் சொல்லாத எளிமையைப் பாருங்கள்!]

“ஆத்ம ஸம்பந்தமா ஏதாவது சொல்லலாம்னா மொத வருஷந்தான் [இதற்கு முந்தைய ஆண்டுதான்] எனக்குப் பூணல்-கல்யாணமாயிருந்தது. அதைப் பத்திக் கேட்டார். ரெகுலரா ஸந்தியாவந்தனம் பண்றேன்-கிறதுல ஸந்தோஷப்பட்டார். பூணலானதும் வழக்கமா கத்துக்கறதெல்லாம் கத்துண்டு வரேன்; அதுக்காகவே அப்பா ஸமஸ்கிருதத்துல ட்யூஷன் வெச்சிருக்கார்-ங்கிறதுலேயும் ஸந்தோஷப்பட்டார். [ஸமஸ்க்ருதமும், பாராயண ஸூக்தங்களும் ஸ்தோத்ரங்களும் கற்றுக் கொள்ள ஆரம்பித்து அந்தச் சில மாதங்களிலேயே பாலன் நிறைய மனப்பாடமாக்கிக் கொண்டு விட்டான்; பள்ளிப் படிப்பிலும் முதலாக இருந்து கொண்டே இதையும் செய்திருக்கிறான் என்பதால் பூர்வாச்சாரியர் பெற்ற மகிழ்ச்சிப் பூரிப்பை லேசாகத்தான் ஸ்ரீசரணர் மழுப்பிப் போனார். அநேகமாக ரா.க.வே. ‘லீடிங் கொஸ்ச்சி’ னாகக் கேட்டுத்தான் இதைத் தெரிந்துக் கொண்டது!]

ஸ்ரீமட நிர்வாகம் பாலனுக்குப் போகவிருக்கிறது என்பதை மனத்தில் கொண்டு பூர்வாச்சாரியர் ஏதேனும் சங்கேதமாகவேனும் சொன்னதோ, வினவியதோ உண்டா என்று ஸ்ரீசரணாளைக் கேட்டதற்கு அவர், “அப்படி ஓண்ணும் நிச்சயப்படுத்திச் சொல்லத் தெரியலே, க்ளாஸ்ல ஃப்ர்ஸ்ட் ஆச்சே, அதனால மானிட்டரா இருந்தேனா-ன்னு கேட்டிருக்கார். அதுல மத்த பசங்களை மேச்சுக் கட்டற ஸாமர்த்தியம் இருக்கோல்லியோ? அதனால கேட்டதாகவும் இருக்கலாம்” என்றார்.

ஆனால் தாம் மானிட்டராக இருந்ததாகவோ இல்லாததாகவோ ஸ்ரீசரணர் ஏதும் சொன்னதாக நினைவில்லை. அவர் சொல்லியும் துரத்ருஷ்டவசமாக நான் நெஞ்சத் திரையிலோ, காகிதத்திலோ பதிந்து கொள்ளத் தவறியும் இருக்கலாம்.

பள்ளியில் பேச்சுப் போட்டி, நாடக வசனம் ஒப்பிப்பது முதலானவற்றில் பாலன் முதலாக நின்றதாக அறிந்து பரமகுருஸ்வாமி மகிழ்வெய்தினாராம்.

மிகவும் ஆச்சர்யமானதொரு விஷயம். ஸ்வாமிநாதன் வருங்கால பீடாதிபதிகள் என்று அந்தப் பெருமுக்கல் வாஸத்தின்போதே பரமகுரு தீர்மானித்து, அதை அணுக்கமான சிலருக்குத் தெரிவித்ததாக அறிய வருகிறோம். ஆயினும் அவன் மிஷனரிப் பள்ளியில் பொதுக் கல்வி பயில்வதை நிறுத்தி அவனுக்கு சாஸ்திராப்யாஸம் தருமாறு பாலனின் தகப்பனாரிடம் அவர் சொல்லவில்லை!

தகப்பனாரிடம் மகன் விஷயமாகத் தம் முடிவைத் தெரிவிக்க அது சமயமல்ல என்று அவர் கருதினார் போலும். வாய்மொழியாக அவர் முடிவு தெரிவித்து பாலனின் தந்தையின் சம்மதம் பெற பிற்பாடும் சமயம் வரவேயில்லை! தந்தையார் தாம் அலுவல் செய்து வந்த அரசின் கல்வித் துறைக் கூட்டமொன்றுக்குத் திருச்சி சென்றிருந்த போது அவ்விடத்துக்கு ஸ்ரீமடத்தின் அவசரத் தந்தி பறந்து, அவரது அவசரப் பதில் தந்தி மூலந்தான் சம்மதம் பெறப்பட்டு, ஸ்வாமிநாதப் பிரம்மசாரி சங்கராசார்ய சந்நியாசி ஆனது!

பவன்ஸ்  ஜர்னல்  கட்டுரையிலிருந்தும்,  பிற்பாடு ஸ்ரீ  பெரியவாள்  நேர்ப்பட  கூறியதிலிருந்தும் ஸ்வாமிநாதனை  அடுத்த  வாரிசாகப்  பூர்வாச்சாரியர் சங்கற்பித்திருந்தது  அவனுக்கு  அடியோடு  தெரியாது  என்றே ஏற்படுகிறது.  ஆறேழு மாதத்திற்கு  அப்புறம்  எதிர்பாராத  திருப்பங்கள்  ஏற்பட்டு, ஸ்ரீமடத்துச்  சிப்பந்திகளுடன்  ஸ்வாமிநாதன்  அப்போதைய  மடமுகாமான  வடார்கட்டுக்  கலவைக்கு  அழைத்துச் செல்லப்பட்ட  வழியில்  அவன்தான்  உடனே பீடாதிபதி  ஆகப்போகிறான்  என்று  மடத்து  மேஸ்த்ரி  தெரிவித்தபோது அவன்  அப்படியே  விலவிலத்துப்  போய்விட்டான்  என்று  பவன்’ஸ்  கட்டுரை  தெளிவாகக்  காட்டுகிறது.  பூர்வாச்சரியரிடமிருந்து  ஆவனுக்கு  அது  பற்றிப்  பூர்வ  சங்கேதம்  ஏதும்  இல்லாததால்தானே  அப்படி  விலவிலத்திருக்க  வேண்டும்?

எளிப்படவோ,  சங்கேதமாகவோ  ஒரு  மஹான்,  தமது  அல்லது  தெய்வத்தின்  கருத்தைத்  தெரிவியாவிடினும்  கூடச்  சில  சமயங்களில்  குருவிடம்  சிஷ்யருக்குள்ள  ‘உள்’  தொடர்பினால்  அது  ஒரு  விதத்தில்  தெரிவதுண்டு..  ‘சில’  சமயங்களில்தான்.  பராசக்தியின்  மாயா  நாடகத்தில்,  பரம  சிஷ்யருங்கூட  குருநாதரின்  திருவுள்ளம்  அறியத்  தவறுவதுண்டு.  எனவே  பாலன்  ஸ்வாமிநாதன்  தனது  அதிப்ரிய  பூஜ்ய  ஆசாரியனின்  திரு  உள்ளத்தை  உடனுக்குடனே  உணரத்  தவறியிருப்பினும்  அதில்  வியப்பதற்கு  ஏதுமில்லை. வித்தின்  மீது  மழைத்துளி  விழுந்தவுடன்  அது  முளையிட்டு  விடுகிறதா  என்ன?  அப்போதைக்கு  வித்து  மழை  நீரை  வாங்கிக் கொண்டதாகவே  தோன்றாது.  ஆயினும்  அவகாசம்  கொடுத்தால் அதனின்று  பச்சென ஒரு  முளை  வெளி  வருவதைக்  காண்போம்.  அப்புறம்  அது  சின்னஞ்சிறு  கன்றாக,  செடியாக, மரமாக  ஆகியே விடுகிறது!

பள்ளி  ஆசிரியர்கள்  கேள்வி  கேட்டால்  எப்படித்  தயங்காமல்  விடை  சொல்வானோ,  அப்படியேதான்  ஸ்வாமிநாதன்  ஸ்வாமிகளின்  கேள்விகளுக்கும்  விடை  பகர்ந்தான்.  யதி  சிரேஷ்டர்  இக்  குழந்தையின் உருவ  அழகிலும்,  அறிவின்  அழகிலும்  கவரப் பெற்றார்.  பந்தமற்ற  அவர்  அவனைக் குறித்து  ஒரு  தனிச்  சொந்தம்  கொண்டாடுவது  போன்ற  உணர்வுடன்,  :இந்தப்  பிள்ளையைப்  பார்த்தீர்களோ?  இவன்  மேதையைப்  பார்த்தீர்களோ?”  என்று  அங்கே  இருந்தோர்களிடம்  பெருமையடித்துக்  கொண்டார்.  சடேரென்று,  “இவன் மிகப் பெரியவனாக  விளங்கப்  போகிறான்”  என்று  கம்பீரமான  மகிழ்ச்சியுடன்  கூறினார்.

அப்போதுங்கூட  ஸ்வாமிநாதனோ,  தந்தை  சுப்ரமண்ய  சாஸ்த்ரிகளோ  அந்தப் ‘பெரியவன்’  ‘பெரியவா’ளாகவும்,  ‘மஹாபெரியவா’ளாகவும்  பீடப்பேரரசு  பெறப்போவதாக  ஊகிக்கவில்லை.

சாஸ்திரிகள்  குடும்பத்துடன்  திண்டிவனம்  புறப்பட்டார்.  அதன்  பின்னரும்  அடிக்கடி  ஸ்வாமிநாதனை  மடத்தின்  முகாமுக்கு  இட்டு  வருமாறு  ஸ்வாமிகள்  உத்தரவிட்டார்.  அவ்வாறே  சாஸ்திரிகளும்  செய்தார்.

நீரில்  வித்து  மேன்மேலும்  ஊறலாயிற்று!

இன்னும்  வரும்……………

___________________________________________________________________________ 

  MAHAPERIAVA  AS  Shri Ra.GANAPATHY  SAW  HIM. (IN  HIS  OWN  WORDS) – STEP 4.


When  the  ChAturmAsya  Vratam in  the  village  was  completed  and  PoorvAchAryAr  came to the temple in His ‘Vishwa Roopa  YAtrA’,  Swaminathan  saw  Him  and  ‘something  which  cannot  be  expressed  in  words  was  etched  deep  in  my  mind’.

When  asked  if  anything  related  to  ‘AtmA’  was  not  asked  by  Him  while  He  called  the  ‘boy’ and  talked  to  him  during  the  two  days, Sree  SaranAl  replied,

“I  THINK  He  didn’t. His  questions  were  mostly  ‘to  test  my  intelligence’,  and  I  THINK  I  answered (Look  at  the  humility in  not  expressing the satisfaction the  PeetAthipati  had  after  hearing  his  answers  to  His  questions!)

“If at  all  something  related  to  AtmA  happened, my  Upanayanam  was  performed  the  previous  year  only.  He  asked  me  about  it.  He  was  pleased  to  know  that  I performed  SandhyAvandhanam  regularly.  He  was  also  pleased  to  know  that  I was  learning  whatever  there  was  to  be  learnt after  Upanayanam  and  that  for  that  purpose,  my  father  had arranged  tuition  for  Samskrit;  ( Swaminathan,  studied  Samskritam,  SlOkAs,  and learnt  by  heart  ‘PArAyana’  books  within  those  few  months. PoorvAchAryAr  was  extremely  pleased  that  Swaminathan,  in  addition to   studying  the  school  lessons,  had  also  done this!  But  Sree  Saranal  evaded  this  matter !  Ra.Ganapathy  had  to  eke out  all  this  by  putting  some  leading  questions!)

When  asked  if  PoorvAchAryAr  had  given  any  slight  hint  about  His  decision  to  hand  over  the  administration  of  See  Matam  to  him,  Sree  SaranAl  answered, “ I  cannot  say  anything  with  certainty;  He  asked  me if  I  was  made  the  class  monitor  as  I  stood  first  in  the  class.  Monitor  has  to  manage  the  other  students  and  that  requires  some  skill,  is  it  not?  He  might  have  asked that  question  because  of  that!”

I do  not  remember  if  Sree  SaranAl  told  me  if  he  was  the class  monitor.  May  be,  He  would  have  said something, but  I  might  have  failed  to  register  it  in  my  mind  or  noted  it  down  in  paper.

‘ParamaGuru’  was  extremely  pleased  to  know  that  Swaminathan  stood  first  in  oratorical  competition, recitation  of  Drama  dialogues etc.

One  surprising  thing  in  this  is  that  though  the  ‘ParamaGuru’  had  decided  during  the  stay  in  Perumookkal  itself  that  Swaminathan  was  to  be  the next  Peetathipathi  and  had informed  some  of  His  close  attendants,  He  did  not  ask  his  father  to  stop  his  education  in  the  missionary  school  and  start  ‘SAstrAbyAsam’ (study  of  SAstrAs) !  He  probably  thought  that  it  was  not  time  to  inform  the  father of  His decision  about  his  son. But,  ‘that’  time  when  He  could  inform  his  father  and  obtain  his  permission  never  came.  When  his  father  had  gone  to  Trichy  to  attend  an  official  meeting,  the  telegram  from  Sree  Matam  was  sent  to  him,  and his  permission  was  obtained  through  telegram.  Swaminathan,  the  ‘Brahmachari’  became  Sankaracharya  ‘SanyAsi’ !

From  the  article  in  Bhavan’s  journal,  and  from  what  Sree  PeriavA  told  me  in  person,  it  looks  that  Swaminathan  was totally   unaware  of  the  decision  made  by  the  ‘PoorvAchAryar’  to  make him  the  next  heir  of  Sree  Matam.  After  six  or  seven  months,  there  were  unexpected  turn  of  events,  and  when  Swaminathan  was  taken  to  Kalavai (the  Sree  Matam  camp  at  that  time)  along  with  the  attendants  of  SreeMatam,  on  the  way,  the  supervisor  of  Matam  told  him  that he  was  going  to  become  the  Peetathipathi,  he  was  shaken  totally—-says  the  article  in  Bavan’s  journal.  It  must  be  because  he  had  no  hint  about  that  from  the  PoorvAchAryar.

Even  though  a  MahAn’  does  not  reveal  His  or  God’s  will  either  openly  or  by  a  hint,,  sometimes,  because  of  the  deeper  connection  that  a  ‘SishyA’  has  with  his  Guru,  it  will  be  known  in  some way.  ‘Sometimes’  only!  In  the  drama  of  illusion  enacted  by  ParAsahakthi,,  even  the  best  ‘SishyA’  might  fail  to  understand  the  will of  his  Guru.  Therefore there is  no  wonder  that  child  Swaminathan  failed  to  understand  his  Guru’s  wish  immediately.  Does  a  seed  sprout  as  soon  as  the  rain  drop  falls  on  it?  It  will not  be  known  if  the  seed  absorbed  the  rain  drop  at  all.  But,  given  the  time,  we  will  see  a  leaf  sprout  out  of  the  seed.  Then  it   will  become  a  small  sapling,  grow  into  a  plant  and  then  a  big  tree!

Swaminathan  answered  the  questions  posed  by  Swamikal,  as  fluently  as he  would answer  his  teacher’s  questions  in  the  school,  without  any  hesitation  whatsoever.  Gurunathar,  was  attracted  by  the  child’s  physical  beauty, and  intelligence.  He  used  to  boast with  others,  saying, “Did  you see  this  boy?  Did  you  notice  his  genius ?”  with  a  special  affinity  towards  the  boy.  Even  at  that  time,  neither  Swaminathan  nor  his father  Subramanya  Sastrikal  had  no  hint  that  Swaminathan  would  become  ‘Periava’  and  then  ‘MahaPeriava’  to  adorn  the  Peetam!

Sastrikal  left  for  Tindivanam  with  his  family.  Even  after  that,  Swamikal  used  to  ask  His  attendants  to  bring  Swaminathan  to  the  camp  and  Sastrikal  readily  obliged.

The  seed  started  soaking  in  water  more  and  more!

TO  BE  CONTINUED…………………



Categories: Deivathin Kural, Devotee Experiences

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading