அபிராமி அந்தாதியும் – காமகோட்டமும்

Thanks to Smt Saraswathi Thyagarajan Mami for the share.

Periyavas_Kamakshi_Poster

அபிராமி அந்தாதியும் – காமகோட்டமும் என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள். அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது.

நான் தர்சனம் செய்து கொண்டபோது , அவர்கள் ” அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா ?”, என்றார் . நான் ” இல்லையே ! அபிராமி பற்றித்தான் பாடியிருக்கிறார் ” என்றேன்.

ஸ்ரீ பெரியவர்கள் ,”அபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான் பெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும். எப்படின்னு தெரியுமா?” என்று சொல்லியபின், அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டை சொன்னார்கள் .

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

இந்தப் பாட்டில் சொல்லியிருக்கும் ஆயுதங்கள் எல்லாம் திருக்கடையூர் அபிராமி அம்பாளின் கையில் இல்லை . இந்த ஆயுதங்கள் கூடிய திரிபுர சுந்தரியின் கருஞ்சிலா மூர்த்தி காஞ்சியில் உள்ள காமாக்ஷியைத் தவிர வேறு எங்குமில்லை. ”

பிறகு பெரியவர்கள் ” காமாக்ஷி எந்த ஆசனம் போட்டு உட்கார்ந்திருகிறாள்?” என்று கேட்டபோது , நான் “பத்மாசனம் ” என்றேன்.

அதற்கு பெரியவர்கள் ” இல்லை “யோகாசனம்” என்று கூறி தானே யோகாசனம் போட்டு காட்டினார்கள் . பிறகு “இந்த யோகாசனத்தில் இருபாதங்களும் ஒன்றாக இணையும் . சுக்ஷும்னா நாடி தானாக மேலே கிளம்பும். அம்பாள் கோவிலில் காமாக்ஷி , ஆச்சார்யாள் , துர்வாசர் ஆகிய மூன்று மூர்த்திகளுமே யோகாசனத்தில் தான் இருகின்றன” என்று சொல்லி பெரியவர்கள் என்னை அழைத்து
போய் காட்டினார்கள்.

சொன்னவர் கீதாசாமி அவர்கள்



Categories: Devotee Experiences

4 replies

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman

  2. Sent 10k to Ngo foundation thru city union bank. No response. No phone no to contact. Can you respond. Sent a mail to log also.  S V Ramakrishnan 

    Sent from Yahoo Mail for iPhone

  3. has the book been published

  4. The asana in which Kamakshi is seated is called Siddhasanam about which there was a discussion with Mahaperiyava in Mahagaon camp along with HH close devotee,Om.Ramachandraiyer

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading