Periyava Golden Quotes-529

ஆர்க்யுமென்ட் என்ன? “மதாந்தரங்கள் என்றால் அவை வேதத்தை ஆதாரமாக, ப்ராமண நூலாகக் கொள்ளாதவை. பைபிள், கொரான், த்ரிபிடகம், ஃஜென்டோவஸ்தா, க்ரந்த ஸாஹேப், ஓல்ட் டெஸ்ட்மென்ட்*1 என்று ஏதோ ஒன்றைத்தான் அவை ஆதார க்ரந்தமாகக் கொண்டிருக்கின்றன. ஆகையால் வேத மதம் என்பதில் பிறந்துள்ள நாம் அவற்றிலொன்றுக்குப் போவது தப்பு. ஆனால் நாம் இந்த வேத மதத்தை விடாமலே இதில் ஒரு பிரிவிலிருந்து இன்னொன்றுக்குப் போனால் எப்படித் தப்பு? இந்தப் பிரிவுகள் தோன்றுவதற்கு முந்தி எப்படியிருந்தது? நீங்களே இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறீர்கள்? ‘மாறுபட்ட எல்லா ஹிந்துமத ஸித்தாந்தங்களின் அபிப்ராயத்துக்கும் வேதம் ஒவ்வொரு ஸ்டேஜில் இடம் கொடுக்கிறது. த்வைதம் விசிஷ்டாத்வைதம்-அத்வைதம், சைவம் வைஷ்ணவம் என்றெல்லாம் தனித்தனி ஸம்ப்ரதாயங்களாகப் பிரிவதற்கு முன்னாலும் தன்னுடைய பக்குவ ஸ்திதியில் ஒருவர் எந்த ஸ்டேஜில் இருந்தாரோ அதைப் பொறுத்துத் தத்வரீதியில் த்வைதியாகவோ, அத்வைதியாகவோ, இன்னொன்றாகவோ, இதே மாதிரி தெய்வ உபாஸனை என்று வரும்போது சிவ பக்தராகவோ, விஷ்ணு பக்தராகவோ, அம்பாள் பக்தராகவோ, தம் பாட்டுக்கு இருந்து கொண்டுதான் இருந்தார். ஸ்ருதி, ஸ்ம்ருதிகளைப் பார்த்தால் இது ஒன்றுதான் தத்வம், இது ஒன்றுதான் தெய்வம் என்று முடிவுகட்டி எல்லாருக்கும் பொதுவாக எதையும் சொல்லியிருக்கவில்லை. ஆதலால் பிரிந்து போகாமலே தமக்குக் ‘கன்விக்ஷன்’ உள்ள தத்வத்தை அநுஸரித்துக் கொண்டும், தமக்கு ‘அப்பீலா’கிற தெய்வத்தை உபாஸித்துக் கொண்டும் ஒரே ஸம்பிரதாயமாகத்தான் ஹிந்துக்கள் எல்லாரும் இருந்திருக்கிறார்கள். ஸம்ஸ்காரங்களிலும், ஆசாரங்களிலும் எல்லாரும் தர்ம சாஸ்திரப்படி ஒரே மாதிரிதான் அநுஷ்டித்து வந்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்திலேயே கூட இருந்தவர்கூட வெவ்வேறு தத்வ ஸித்தாந்தத்தை அநுஸரித்துக் கொண்டும், அவர்களில் ஒருவர் சிவபூஜை பண்ணுகிறவராகவும், இன்னொருவர் விஷ்ணு பூஜை பண்ணுகிறவராகவும் இருந்திருக்கிறார்கள். ச்ரௌத ஸ்மார்த்த கர்மாக்களான பஞ்ச மஹா யஜ்ஞங்கள், நாற்பது ஸம்ஸ்காரங்கள், ஸந்த்யாவந்தனம் முதலியவற்றில் வித்யாஸமில்லாமல் எல்லாரும் ஒரே போலப் பண்ணி வந்தார்கள். பிற்காலத்தில்தான் ஸித்தாந்தம், தெய்வம் என்பதற்காக வேறுவேறு பிரிவுகளானது’ என்றெல்லாம் நீங்களே சொல்லியிருக்கிறீர்களே! ஆகையால் இப்போது த்வைதியாகப் பிறந்திருக்கிற ஒருத்தனுக்கு அத்வைதத்தில்தான் ‘கன்விக்ஷன்’ என்றால் அவன் அப்படி மாறக் கூடாதா? சிவபூஜையே பண்ணி வருகிற ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு விஷ்ணுவிடம் தான் பக்தியிருக்கிதென்றால் அவன் அகத்துப் பூஜையை விட்டு விட்டு விஷ்ணுவைப் பூஜை பண்ணினால் தப்பா? இந்தப் பிரிவுகள் பிற்காலத்தில் ஏற்படுவதற்கு முன்னால் ஒருவனுக்கு இப்படிப்பட்ட ஸ்வதந்திரம் இருந்தது என்பதால் இப்போதும் இப்படி வேத மதத்துக்கு விரோதமாகப் போகாமல். அதற்குள்ளேயே மனஸ்ஸாக்ஷிப் படி குலாசாரத்தை விட்டு வேறுவிதமாகச் செய்தால் அது எப்படித் தப்பாகும்?” – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

What is the argument posed by those who question whether a person can change his sect within the Hindu religion? What are ‘Madaantaraas” (other religions)? They do not have the Vedic texts as their foundation and do not swear upon them. They have Bible, Quran, Thripitakam, Zendavasta, Granth Saheb, or the Old Testament as their basic texts. So we who follow the Vedic religion should not follow these paths. But how is it wrong when we switch over from one sect to the other on the Vedic religion itself? What was the situation before these different sects appeared? My own statement is quoted in this context. The Vedic religion has accommodated different schools of thoughts in various stages. Even before the various divisions like Dwaitam, Visishtadwaitam, Adwaitam, Saivam, or Vaishnavam appeared on the scene, a person was philosophically a Dwaiti or Adwaiti depending on his stage of maturity and was a devotee of Siva, Vishnu, or Ambal depending upon the kind of worship he was performing. Sruti or Smruti have not declared one philosophy or one god common to all. So, even without getting divided into sects, Hindus were following that philosophy which suited their convictions and worshipping those Gods who appealed to them. Everybody was following the same rituals and traditions according to the Dharma Saastraas. Even within the same family, people were following different philosophies and also used to worship different Gods like Siva or Vishnu. The various rituals like Pancha Maha Yagnas, the forty Samskaaraas and Sandhyavandanam which were prescribed by the Dharmic texts were followed by everyone. I myself had stated this and also that the divisions based on philosophy and the Deities appeared at a later stage. So people ask why should not a person born as a Dwaiti become an Adwaiti if his convictions so demand. Similarly if a person is born into a family which used to perform only Siva Pooja, can he not switch over to Vishnu Pooja if it appeals to him? If such a freedom of choice existed before the appearance of such divisions, how can it be wrong if a person switches over from one sect to another within the Hindu religion itself, giving up the traditions of his ancestors, because his conscience dictates him to do so? Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: