Periyava Golden Quotes-530

இதற்கு மேலேயும் கேள்வி போகிறது. நானே சொன்னதை வைத்தே என்னை மடக்குகிறார்கள்! “சங்கராசார்யார் தம் ஸித்தாந்தப்படிப் போகிறவர்களை வேத ஸம்பிரதாயத்தில் புதுப் பிரிவு என்றே நினைக்கவுமில்லை, வைக்கவுமில்லை. இதற்கு அத்தாட்சியாக அதுவரை ஹிந்துக்களுக்கு இருந்து வந்திருக்கிற பொதுப் பெயரான ‘ஸ்மார்த்தர்’ என்பதேதான் இன்றுவரை அவரை ஆசார்யராகக் கொண்டிருக்கிறவர்களுக்கும் பெயராக இருக்கிறது. ராமாநுஜரைச் சேர்ந்தவருக்கு ஸ்ரீவைஷ்ணவர் என்றும், மத்வரைச் சேர்ந்தவர்களுக்கு மாத்வர் என்றும், இப்படியே மற்ற ஸம்பிரதாயஸ்தர்களுக்கு ஒவ்வொரு தனிப்பெயரும் ஏற்பட்டிருப்பதுபோல் சங்கரரைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாமல், ‘ஹிந்துவாகப் பிறந்த எல்லோருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களைப் பின்பற்றுகிறவன்’ என்று அர்த்தம் கொண்ட ‘ஸ்மார்த்தர்’ என்பதுதான் பெயராயிருக்கிறது. அவர் அவருக்கு முற்பட்ட சாஸ்திரங்களில் சொல்லியுள்ள ஆசார, அநுஷ்டான, ஸம்ஸ்காரங்களையேதான் அவலம்பித்தாரே [நிலைநாட்டினாரே] தவிர அவற்றில் மாறுதல் எதுவும் செய்யவில்லை. பிற்பாடு மற்ற ஆசார்யர்கள் வந்த போதுதான் தங்கள் தங்கள் ஸம்பிரதாயத்துக்குத் தனிப் பெயர் தந்தது; இவர்களும் ஆசார, அநுஷ்டான, ஸம்ஸ்காரங்களில் பூர்விகமான தர்ம சாஸ்திரங்களைத் தான் பெரும்பாலும் பின்பற்றினார்களென்றாலும், அவற்றோடு தங்களுடைய புதிய பிரிவைத் தழுவுவதற்கு அடையாளமாக அதிகப்படியான சிலவற்றையும் (ஸமாச்ரயணம், முத்ராதாரணம் முதலியவற்றைப் போன்றவை) சேர்த்தார்கள். ச்ரௌத ஸ்மார்த்த கர்மாவுக்குக் கொஞ்சம் முக்யத்தைக் குறைத்து புராணாதிகளுக்கு அதிகம் முக்யம் தருவது போன்ற சில மாறுபாடுகளையும் செய்தார்கள். புண்ட்ரத்திலும் [நெற்றிக்கு விடுவதிலும்] புது விதமாக வைத்தார்கள்” என்றெல்லாம் நான் சொல்லியிருக்கிறேனல்லவா?*3 இதை வைத்தே கேட்கிறார்கள்: “நீங்கள் சொல்லியிருப்பதிலிருந்தே, பிற்கால ஆசார்ய புருஷர்களாக இருக்கப்பட்டவர்களே அதுவரை இருந்து வந்த அவர்களுடைய குலாசாரத்துக்கு வித்யாஸமாகப் பண்ணியிருக்கிறார்களென்று ஆகிறதே! அப்படியானால் இப்போதும் அப்படியே ஒருத்தன் ஹிந்துவாகவே இருந்து கொண்டு ஸ்மார்த்தத்திலிருந்து வைஷ்ணவத்துக்கோ, மத்வ மதத்திலிருந்து ஸ்மார்த்தத்துக்கோ போனால் என்ன?” – இப்படி ஆர்க்யுமென்ட் போகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

The argument develops further. People try to use my own statement against me. Sankaracharya never considered or identified those who followed his philosophy as belonging to a new branch of Vedic tradition. Those who follow the Acharya are still called Smaartaas (those who follow the Smruthi), the name which was commonly used for the Hindus of his time. Those who follow Ramanuja are called Sri Vaishnavas and the followers of Madhvar are identified as Maadhwas, but those who follow Sankaracharya are still called only by that name which is common to all Hindus – Smaartaas – which denotes those who follow the tenets of Dharma Saastraa. He established only those traditions and rituals which were stated in the scriptures before him and did not bring about any changes in them. It was only during the period of the other Acharyas who came after him that different nomenclatures were given for the different traditions established by them. Though these Acharyas also mostly followed the ancient scriptures in the matter of traditions and rituals, they incorporated some more rituals to symbolize acceptance of their new groups, like Samaachrayanam or Mudhraadhaaranam. For example they brought about certain changes like giving more importance to aspects related to Puraanaas (Puraanaadhi) than to the Smaarta rituals. I have already stated that they introduced new methods in Pundram – the mark on the forehead. This statement is used by those who pose the questions. Their argument is that when these Acharyas themselves deviated from the established path of traditions what is wrong if, in these days, somebody switches over from Smaarta sect to Vaishnavism or from the Madhwaa sect to Smaarta sect, remaining within the folds of Hinduism. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: