Periyava Golden Quotes-486

album1_126

மனஸைத் தனியாக விட்டால் என்று மட்டுமில்லை; அதை நாம ஜபம், ஸ்தோத்திரம் என்று வாக்குடன் சேர்த்துவிட்டாலுங்கூடக் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அது பிய்த்துக் கொள்கிறது. அதனால் மனோ-வாக்-காயம் என்றபடி மனஸை வாக்கு மட்டுமின்றி, சரீர கார்யத்தோடும் பிணைத்தே சடங்குகளைக் கொடுத்திருக்கிறது. மந்திரங்களை வாக்கால் சொன்னபடியே ஹோமம் என்ற காரியத்தைப் பண்ணுவது ஸஹஸ்ரநாமத்தை வாக்கால் சொன்னபடியே அர்ச்சனை என்ற கார்யத்தைப் பண்ணுவது — என்று வைத்திருக்கிறது. கேசவ, நாராயண, த்ரவிக்ரம என்று வாயால் சொன்னால்கூட பகவான் மஹிமையில் மனஸ் நன்றாக ஈடுபட மாட்டேன் என்கிறதே! அதற்காக, “அந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லிக் கொண்டே உடம்பில் பன்னிரண்டு நாமங்களைத் திருமண்ணால் போட்டுக் கொள்ளு” என்று பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். த்ரவிக்ரமன்தான் உலகளந்தான். உலகத்தை அளந்தவனே அதை ச்வேத வராஹமாக அவதாரம் பண்ணி வெள்ளைவெளேரென்ற தெற்றிப் பல்லிலே தூக்கி நிறுத்தினான். பல்பட்ட இடத்தில்தான்  ‘ச்வேத ம்ருத்திகை’ என்ற வெளுப்பு மண்கட்டி கிடைக்கிறது.  ‘திருமண்’ என்பது அதுதான். துளஸிக்கு அடிமண்ணும் இப்படி விசேஷமானது. இப்படிப்பட்ட மண்ணைக் குழைத்து ஒரு காரியமாக்கி உடம்பிலே போட்டுக் கொண்டால், அப்போதுதான்  ‘த்ரிவிக்ரம’ என்கிறபோது, “அப்பா, உன் ஸ்பரிசம் பெற்ற மண்ணை என் சரீரத்திலும் தாரணம் பண்ணிக் கொள்கிறேன்” என்கிற மனக் குழைவு உண்டாகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


The mind has the capacity to go astray not only when it is left free but even when it is attached to the reciting hymns or Bhagawan Namavali. That is the reason the mind has always been made to engage in physical tasks along with oral prayers.  After all as the phrase goes, it is mano, vakku, and kaayam (mind, speech, and the body). Homams (sacrificial rituals) are done uttering the mantras and archana or worshipping the deity with flowers is done along with the utterance of his thousand names or Sahasra Nama. Even if we utter the divine names of Bhagawan – Kesava, Narayana, Trivikrama, the mind refuses to engage itself in contemplating the greatness of Bhagawan. Hence, one has been asked to practice drawing the Thiruman (the holy sign of the devotees of Lord Vishnu) on the body while reciting the twelve names of Bhagawan.  Trivikrama measured the world and in His incarnation as the Boar (Varaahaa), he lifted the same world up with his white fangs. White sand stone called ”Swetha Mrithugigai” is obtained from where the fangs stuck to the earth. That is the Thiruman. Similarly, the soil underlying a Thulasi (Holy Basil) plant also has a special value. If such a soil is made into a paste and applied on the body while chanting the holy name of Trivikrama, the heart will melt on the thought that one is applying on the body the very same soil which enjoyed the divine touch of the lord. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading