Periyava Golden Quotes-462

album1_94
நம் பூர்விகர்கள் எப்படிப்பட்ட நெறிகளைக் கைக் கொண்டிருந்தார்களென்றால், நம் சாஸ்திரங்களிலும் ஸம்பிரதாயங்களிலும் என்னென்ன உண்டோ அவற்றைத் தான். அவற்றை அவர்கள் அநுஷ்டித்த சிறப்பினால்தான் நம் தேசமே தொன்றுதொட்டுப் பாரமார்த்திகத்திலும், ஞானத்திலும், பக்தியிலும், அது மட்டுமின்றி எல்லாக் கலைகளிலுங்கூட லோகத்திலேயே முதன்மை ஸ்தானம் பெற்றிருக்கிறது. இன்றைக்கு நாம் இவ்வளவு சீரழிந்துவிட்ட பிறகுங்கூட நாம்தான் ஆத்யாத்மிகத்தில் தங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று மற்ற தேசத்தவர்கள், மற்ற மதஸ்தர்கள் இங்கே உள்ள ஆச்ரமங்களுக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது பூர்வாசாரம் ‘பெடல்’ பண்ணிவிட்ட வேகத்தின் எஞ்சிய பலத்தால்தான்! – ஜகத்குரு ஸ்ரீ   சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Our ancestors adhered to those high ethical values which were prescribed by our shastras and which were traditionally revered. It was only because our ancestors observed them very strictly that our country, since time immemorial, has come to occupy a premier position not only in spiritual knowledge and devotion but also in various arts. Even after so much of degeneration has taken place in our country, if foreigners and followers of other religions flock to us in the firm belief that we still can guide them in matters of spirituality, it is the result of the strength which our ancients bestowed on our spiritual status by virtue of strict adherence to values – like the acceleration and strength which are the result of vigorous pedaling which keeps the cycle going even after the pedaling is stopped! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading