நான் வேணா நேரில் போய் தரிசனம் கொடுக்கவா?

Thank you Smt Radha for the share in WhatsApp…

Pradosham_mama2

ஒரு முறை மீளா அடிமையான ப்ரதோஷம் மாமாவாத்திற்கு விஜயாத்திரை முடிந்து பெரியவா வருவதாக ஏற்பாடாகியிருந்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த மாமாவுக்கு ஓர் அதிர்ச்சி! ஏதோ காரணத்தால்
அது தடைப்பட்டுவிட்டது பொறுக்காமல் மிக வருந்தினார்.

பாலஸ்வாமிகள் வந்து சமாதானம் சொல்லியும் வருத்தம் தாளவில்லை.

அவர் வருத்தம் அறிந்த மகான்,’ நான் வேணா நேரில் போய் தரிசனம் கொடுக்கவா?’ என்று கேட்டிருக்கிறார்.

அவரை ‘சிவ சிவன்னு இருக்கச் சொல்லு ஆனந்தம் கிட்டும்’ என்றும் சொன்னாராம்.

மறு நாள் ஸ்திரவாரத்தன்றே மாமாவைப் பார்க்கக் கிளம்பியாயிற்று! அதுவும் உஷத் காலத்தில்!வழியில் பல அன்பர்கள் அழைத்தும் பாராமல் பங்காரு காமாக்ஷி தோட்டத்தில் மீளா அடிமையான மாமாவின் வீட்டு க்ரஹப்ரவேசம்!

அங்கு தன் பூர்வாசிரமத் தாயார் புண்யவதி லக்ஷ்மி அம்மாளுக்குப் பூஜை நடப்பதை அறிந்து அளவில்லா ஆனந்தம் கொண்டார். பக்கத்தில் வந்து பார்த்து’குழந்தை மாதிரின்னா இருக்கா’ என்று தாயிற்சிறந்த கோவில் இல்லை என குதூகலித்தார்.

பெரியவா வாயால் குழந்தை என்று சொன்னதால் நித்யம் மாமா வீட்டில் தாயாருக்கு பாயசம்
நேவேத்யம்! அடுத்து ஒரு ஸ்திரவாரம்!

செவிலிமேடு சென்று திரும்புகையில் பெரியவா ‘அவா ஆத்துக்கு மட்டுந்தான் போகப்போறேன் ‘என்று பெற்ற தகப்பன் பாசத்தோடு சொல்லி வழியில் இருந்த முட்புதர், கல இவற்றை லக்ஷியம் செய்யாமல் ஓடி வந்து வீட்டைப் புனிதமாக்கினார்.

அவர் அன்று வீற்றிருந்த இடந்தான் இன்று மாமா வீட்டில் கோவிலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த இடம் கர்பக்ருஹம் என்று உணர்த்தவே அந்த விஜயம்!

ஜய ஜய சங்கரா…….



Categories: Devotee Experiences

6 replies

  1. English translation please

  2. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! AvyaajakaruNaamurthaye Namaha!

  3. He is a lord shiva. Jaya jaya Shankara.

  4. MAHAPERIVA TIRUVADIGALUKKU ANANTHAKODI NAMASKARANGAL

  5. MAHAPERIVA TIRUVADIGALUKKU ANANTRHAKODI NAMASKARANGAL

  6. Periyava Charanam. Hara Hara Shankara! Jaya Jaya Shankara!

Leave a Reply to kahanamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading