Nellikuppam Family Experience – Part 1

Thanks to Smt Saraswathy Thyagarajan Mami for this….

Krishna_Nee_Begane

ஒரு நாள் என் எதிர்வீட்டில் ஒரு சுமங்கலி மாமி கும்பகோணத்திலிருந்து வந்து தங்கினாள். அவள் காமாக்ஷி அம்மனை குத்து விளக்கில் ஆவாஹனம் செய்து முறையாக பூஜை செய்பவள். பூஜை முடிந்தவுடன் கேட்பவர் குறைகளுக்கு தீபஒளியைப் பார்த்தவாறே தக்க பதில் சொல்வாள். பூஜைக்கு எல்லாரையும் அழைத்திருந்தாள் எதிர் வீட்டுப் பெண்மணி. என் பத்னியும் சென்றிருந்தாள். அன்று பூஜைக்கு நிறைய சுமங்கலிகள் வந்திருந்தனர். பலர் கேட்ட கேள்வைகளுக்கு வெகு நேரம் வரை அந்த அம்மாள் அருள் வாக்கு சொன்னாள்.

இவளுக்கு அந்த பூஜை அருள் வாக்கு இவற்றில் ஆர்வம் இல்லாததாகையால் இவள் ஒன்றும் கேட்கவில்லை. ஆவேசம் வந்த எதிர் வீட்டுப் பெண்மணி இவளை ஏதாவது ப்ரச்நைக்கு அருள்வாக்கு கேட்கச் சொன்னாள். இவள் ஒன்றும் தேவை இல்லை என்று சொல்லி விட்டாள் ஆவேசம் வந்த அம்மா சிரித்தாள். இவள் எனக்குக் குறை ஒன்றுமில்லை என நிதானமாகக் கூறிவிட்டு அகத்திற்கு வந்து என்னிடம் நடந்தவை எல்லாம் கூறினாள். வெள்ளிக்கிழமையன்று ஒரு சுமங்கலி வந்து அழைத்ததால் நீ போனாய், இனிமேல் போக வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

இரவு பதினொருமணிக்கு எதிர் வீட்டுப் பெண்மணி ஓடி வந்து காமாக்ஷிஅம்மா உங்களை அழைக்கிறார் என்று சொன்னாள் நானும் அவளை அனுப்பி வைத்தேன்.அங்கு வந்த அனைவரும் சென்று விட்டனர்.

காமாக்ஷி அம்மா மட்டுந்தான் இருந்தார். ”நீ ஒருவள் மட்டுந்தான் ,நானே வலுவில் கேட்டும் விண்ணப்பிக்கவில்லை. எனக்கு அம்பாள் நியமனம் ஆகிறது, நீ அலக்ஷியம் செய்யாதே, நான் உன் அகத்திற்கு வருகிறேன். அம்பாளை குத்துவிளக்கில் ஆவாஹனம் செய்து வைக்கிறேன் அம்பாளே உன் அகத்துக்கு வருகிறேன் என்று சொல்லும்போது மறுக்காதே. பூஜைக்கு ஒரு ஏற்பாடும் வேண்டாம், நான் வந்து கொண்டே இருக்கிறேன்; உனக்கு செலவே வைக்கல்லை” என்றாள்.

இவள் ”அகத்துக்குப் போய் அவரிடம் உத்தரவு வாங்கறேன்” என்று சொல்லி என்னைக் கேட்டவுடன், வெள்ளிக்கிழமையாகையால் தட்டமுடியாமல் சம்மதித்தேன்.

அந்த அம்மாள் வந்தபோது நடு நிசி; பூஜை அறையில் குத்து விளக்கில் ஆவாஹனம் செய்து, பழம் தாம்பூலம் நிவேதனம் செய்து,கற்பூர ஹாரத்தி செய்து, ஸ்ரீ அம்பாளின் பீஜாக்ஷரங்களுடன் கூடிய மந்த்ரத்தை உபதேசித்து, தினமும் அந்த மந்த்ரம் சொல்லி 108 முறை குங்குமத்தால் அர்ச்சிக்கும்படி சொன்னாள். மூன்று மாதம் செய்த பிறகு அதன் பலன் தெரியும் என்றும் சொன்னாள்.

காமாக்ஷி அம்மாள் என்னைப் பார்த்து நீ ஆத்மார்த்தமாக ஒரு குருவைத் தேடி வருகிறாய். அது சபலமாகும்; குளத்தங்கரையிலோ, அரசமரத்தடியிலோ ஒரு மஹான் தரிசனம் கிட்டும் அவரால் உனக்கு மந்ரோபதேசம் ஆகும் ; க்ரஹஸ்தாஸ்ரமத்திலிருந்தே உனக்கு ஆத்ம க்ஷேமம் உன்டாகும், க்ஷேத்ராடனங்கள் லபிக்கும் என அருள்வாக்கு போல் கூறினார்.

அதன் பின் என் மனைவியும் அந்த மந்த்ரத்தை முறையே கூறி விளக்கில் அர்ச்சனை செய்து வந்தாள். ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபெரியவாளின் தரிசனம் , ஸம்பாஷணை எல்லாம் அவர் அவதரித்த விழுப்புரம் ஸ்தலத்தில் எங்களுக்கு ப்ராப்தமாயிற்று.

அவர் வீட்டின் எதிரே உள்ள ஹனுமார் கோவிலில் சங்கர ஜயந்தி வைபவத்தின் போது எங்களுக்கு லபித்தது. மங்கள வாத்யங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. எங்கும் ஜன சமுத்ரம்இவற்றின் மத்தியில் ஒரு தம்பதி நீந்திச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் உடலும் உள்ளமும் பூரித்து ஆனந்த வெள்ளத்தில் திளைத்தபடி இருந்தது. ஊர்வலம் ஒரு பந்தலை அடைந்தது மாலை ஆறு மணி வேளையில் கூட்டம் காரணமாக அந்த தம்பதியினருக்கு பந்தலில் நுழைய முடியவில்லை. அவர்கள் வீதியிலேயே நிற்கும்படி ஆயிற்று.

அந்த சமயம் ஸ்ரீ மடத்து த் தொண்டர் ஒருவர் பந்தலில் நுழைந்து கொண்டிருந்தார். அவரிடம் இந்தப் பெண்மணி சென்று ”ஸ்வாமி இந்த க் கமலத்தட்டில் முத்து ஹாரத்தி, பெரியவருக்கு எடுக்கவேண்டுமென ஆசை; எப்போ ஆரத்தி எடுக்கலாம் என்று கேட்டாள்.

அவர் உடனே இதுதான் தக்க சமயம் ; என்னுடன் வாருங்கள் என்று சொல்லிக் கூட்டத்தை விலக்கி, அவர்களுக்கு வழி செய்து கொடுத்து அவர்களை மேடைக்கு முன்பு நின்றிருந்த யானை அருகே நிறுத்தி விட்டார்.

அங்கு யானை தீபத்திற்கு வந்தனம் செய்தது.மேடையில் ஆதி சங்கரர் பாதுகை எழுந்தருளப்பட்டிருந்தது. மஹாபெரியவாளும், புதுப் பெரியவாளும் மடத்துச் சிப்பந்திகள் எல்லாரும் தோடகாஷ்டகம் சொல்லி பாதுகைக்கு வந்தனம் செய்தரர்.

அதன் முடிவில் புதுப் பெரியவாள் அந்தப் பெண்மணியை நோக்கி ஆரத்தி எடுக்குமாறு சமிக்ஞை செய்தார். அவளும் எடுத்தாள். அந்தப் பெண்மணி யாரென்று தெரிகிறதா? நெல்லிகுப்பத்தில் விளக்குபூஜை செய்யுமாறு காமாக்ஷி அம்மாளால் உபதேசம் செய்யப்பெற்றவர்தாம்.

இப்படி எங்கள் காஞ்சிப் பயணம் துவங்கியது. நெல்லிக்குப்பம் ஸ்ரீ நிவாசன் ஆண்டாள் தம்பதியினர்; தீவ்ர வைஷ்ணவ பக்தர்கள்; ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை எப்படி பெரியவா கொஞம் கொஞ்சமாகத் தன் பால் இழுத்துக் கொண்டார் என்பதன் முதல் படி இது.

(to be continued….)Categories: Devotee Experiences

Tags:

4 replies

 1. I know Sri.Nellikuppam mama family. Right now he lives with Paranur Sri.Anna. more experiences with mahaperiyava can be found in his book called Mouna Geetham. Thanks Pandit Ravi (california)

 2. Great experiences! Much Blessed to read! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

 3. Dear Mahesh
  Most of the mails are not opening. Somehow I manage to read on the experiences of devotees but this one is not posted. Could you please help?
  Jalpesan

  Date: Mon, 9 Mar 2015 11:12:39 +0000
  To: jalpesan@hotmail.com

 4. I think I know them. Perhaps Mr Srinivasan was working in reserve bank. I have lost contact with them after my transfer to madras from North.

Leave a Reply

%d bloggers like this: