தாத்தா ஸ்வாமிகளை தரிசனம் செய்தீர்களா?

Thanks to Sri Margabandhu for the FB share.

I did not know that Sri Tapovanam Swamigal is much elder to Mahaperiyava – I was under the impression that they were both of the same age. While writing this post, I did bit of googling and it seems that there is no record of His birth and there are first references in 1860s or so and He attained samadhi in 1974 – He also lived close to 100 years like Mahaperiyava it seems – I could be wrong!

காஞ்சி மடத்தில். பரமாச்சார்யாள் மகாபெரியவா ஸ்தூல தேகத்துடன், தெம்பாக அருளாட்சி செய்து கொண்டிருந்த காலம். 1950 இருக்கும் என்கிறார்கள்.

தன்னை வந்து வணங்கிய பக்தர் கூட்டத்தை பாசத்துடன் விசாரித்தது அந்த நடமாடிய தெய்வம்.

சேஷத்ராடனம் போய்விட்டு திருக்கோவிலூர் வழியாக வருவதாகச் சொன்ன அவர்களிடம் பெரியவா கேட்டார்:

தாத்தா ஸ்வாமிகளை தரிசனம் செய்தீர்களா?”

பக்தர்கள் விழித்தனர். ‘தாத்தா ஸ்வாமிகள்’ என்று யாரைக் குறிப்பிடுகிறார் மகா பெரியவர்?

திருக்கோவிலூர் போனோம். அங்கேதான் ஒரு தபோவனம் இருந்தது. அதில் ஞானானந்தகிரி என்ற ஸ்வாமிகளைப் பார்த்தோம்…” ஒரு அன்பர் பணி வோடு மகாபெரியவரிடம் தகவல் சொன்னார்.

ஏற்கெனவே மின்னிக் கூர்ந்து பொங்கி ஒளிவீசும் மகாபெரியவாளின் விழிகள், திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்தகிரி என்ற வாசகத்தைக் கேட்டதும் – குங்கிலியப் பொடி விழுந்த குத்துவிளக்கின் சுடர்போல மேலும் பரவசித்து மின்னியது. அதேநேரம் சத்குருவின் பெயரை சாதாரணமாக அவர் சொன்னதை பெரியவர் ரசிக்கவில்லை.

ஓகோ. தபோவனம் பெரிய வாளை தரிசனம் பண்ணினேளா?” – அழுத்தம் கொடுத்துக் கேட்டார் மகாபெரியவர்.

பக்தர், விபரம் தெரியாததால் ஞானானந்தகிரி சுவாமியைத்தான் தரிசனம் பண்ணினோம்!” என்று பெயர் குறிப்பிட்டுச் சொன்னார் மறுபடியும்!

பரமாச்சார்யாள், கருணையுடன் அவரது பிழையைத் திருத்தினார்.

நாங்கள் யாரும் அவரைப் பேர் சொல்றது இல்லை. ‘தபோவனம் பெரியவாள்’ அல்லது ‘தாத்தா ஸ்வாமிகள்’னுதான் சொல்றது.”

மேலும் மேலும் விளக்காமல், ரத்னச் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார் பரமாச்சார்யாள்! புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று நினைத்தாரோ என்னவோ!

சத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள் என்ற அற்புதப் புதிரை மகாபெரியவர் வியந்து போற்றியதை நேரில் கண்ட, கேட்ட அன்பர்கள் – பரவசத்தின் உச்சிக்கே போனதில் வியப்பில்லைதானே!

எப்போது, எங்கே மகாபெரியவரும் சத்குருவும் நேர்முகமாக அளவளாவிக் கொண்டார்கள்? குறிப்புகள் இல்லை.

ஆனால், மகாபெரியவர் பால சந்நியாசியாக உலாவந்த போதே, ஞானானந்த சத்குரு அவரைக் கண்ட சம்பவம் பற்றிய குறிப்பு, ‘பகவத்சேவா ஆசிரமம்’ பதிப்பித்த புத்தகத்தில் கிடைத்தது!

ஸ்ரீ சுதர்ஸனானந்தா அவர்களின் பதிவின்படி… 1914ஆம் ஆண்டு அதிகாலை நேரம்… ஸ்ரீரங்கத்துக்கு வடபுறத்தில் – கொள்ளிடப் பகுதியின் தென்கரையில் நடந்து போய்க் கொண்டிருந்தார் ஞானானந்த கிரி சுவாமிகள். கூட அவரது சீடர்கள் சிலர்.

நடந்துகொண்டே இருந்த ஞானானந்தரின் திருப்பாதங்கள் சட்டென நின்றன. அவரது தீர்க்கமான திருவிழிகள் நிலையுற்று பரவசித்து உறைந்தன. சத்குரு பார்த்த திசையில் அவருடன் இருந்த சீடர்களும் பார்த்தனர்!

கொள்ளிட மணற்பரப்பில் சுமார் பதினைந்தே வயது மதிக்கத்தக்க பாலசந்நியாசி நடந்து வந்து கொண்டிருந்தார். காவிரியில் குளித்துவிட்டு ஒரு கங்கை நடந்து வந்தால் எப்படி இருக்கும்? தன் தழலையும் அழலையும் முற்றிலும் குறைத்து சந்திரப் பிரபையுடன் ஒரு பாலசூர்யன் உதயாதி நாழிகையில் உலா வந்தால் எப்படி இருக்கும்?

அப்படியே இருந்தது, அந்த பாலசந்நியாசி ஆடாது அசங்காது நடந்து வந்த திருக்கோலம்!

ஞானானந்தர் அந்தக் காட்சியை நேசத்துடன் உள்வாங்கியபடியே – காலச்சக்கரத்தை பின்னுக்கு நகர்த்திப் பார்த்து விட்டதே போன்ற பாவனையில் பரவசமான தொனியில் இதோ – பூஜிக்கத்தக்கவராய் விளங்கப்போகும் ஆச்சார்யர் போகின்றார்! பரம்பொருளின் திருவருள் பரிபூரணமாய் ததும்புகிறது இவர் முகத்தில்…” என்றாராம்!

அருள்வாக்கு பொய்க்குமா என்ன? அந்த பாலசந்நியாசியாக 1914களில் சத்குருவால் பார்க்கப்பட்டவர் மகா பெரியவராய், நடமாடும் தெய்வமாய் பூரணப் பெருவாழ்வு வாழ்ந்து அருள்பாலித்த ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆன பரமாச்சார்யர்!

(காஞ்சி பரமாச்சார்யர், 1911 – 14களில் திருச்சி அருகில் உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் தங்கி வேத அப்பியாசம் செய்ததாக ஆதாரப்பூர்வ குறிப்புகள் கூறுகின்றன!)

Here is another article that relates to Mahaperiyava and this Mahan!



Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. jaya jaya sankara hara hara sankara, saranam saranam.Janakiraman. Nagapattinam

  2. As far as I know Swamigal lived much more than 100 years. His guru is the 5th pontiff of Kashmir Jyotir Mutt.!!! God only knows this swamigals janma kaalam.

Leave a Reply to Lakshmi PrasannaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading