ஸ்ரீ குமாரஸ்த்தவம் / Sri Kumarasthavam

Happy Skanda Shashti to all!

Kumarasthavam is a popular work by Sri Pamban Swamigal on Lord Subrahmanya.  This is my father’s favorite one on his daily puja routine. Being Skanda Shashti, I thought I could share this with you all.

Please read about Sri Pamban Swamigal here.

Vetri Vel Muruganukku Arohara!

1.   ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
         ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்

2.   ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
         ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்

3.   ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
         ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்

4.   ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
         ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்

5.   ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
         ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்

6.   ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
         ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்

7.   ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
         ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்

8.   ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
         ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்

9.   ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
         ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்

10.   ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
         ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

11.   ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
         ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்

12.   ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
         ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்

13.   ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
         ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்

14.   ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
         ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்

15.   ஓம் இகபர பதயே நமோ நம ஹ
         ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்

16.   ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
         ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்

17.   ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
         ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்

18.   ஓம் நயநய பதயே நமோ நம ஹ
         ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்

19.   ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
         ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்

20.  ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
         ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்

21.  ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
         ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்

22.  ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
         ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

23.  ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
         ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்

24.  ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
         ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்

25.  ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
         ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்

26.  ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
         ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்

27.  ஓம் அபேத பதயே நமோ நம ஹ
         ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்

28.  ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
         ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்

29.  ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
         ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்

30.  ஓம் மயூர பதயே நமோ நம ஹ
         ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்

31.  ஓம் பூத பதயே நமோ நம ஹ
         ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்

32.  ஓம் வேத பதயே நமோ நம ஹ
         ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

33.  ஓம் புராண பதயே நமோ நம ஹ
         ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்

34.  ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
         ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்

35.  ஓம் பக்த பதயே நமோ நம ஹ
         ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்

36.  ஓம் முக்த பதயே நமோ நம ஹ
         ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்

37.  ஓம் அகார பதயே நமோ நம ஹ
         ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

38.  ஓம் உகார பதயே நமோ நம ஹ
         ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

39.  ஓம் மகார பதயே நமோ நம ஹ
         ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

40.  ஓம் விகாச பதயே நமோ நம ஹ
         ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்

41.  ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
         ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்

42.  ஓம் பூதி பதயே நமோ நம ஹ
         ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்

43.  ஓம் அமார பதயே நமோ நம ஹ
         ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்

44.  ஓம் குமார பதயே நமோ நம ஹ.
         ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

… ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.

1.    Om shaNmuga pathayE namO nama ha
2.    Om shaNmadha pathayE namO nama ha
3.    Om shatkreeva pathayE namO nama ha
4.    Om shatgreeda pathayE namO nama ha
5.    Om shatkONa pathayE namO nama ha
6.    Om shatkOsa pathayE namO nama ha
7.    Om navanidhi pathayE namO nama ha
8.    Om subanidhi pathayE namO nama ha
9.    Om narapadhi pathayE namO nama ha
10.  Om surapadhi pathayE namO nama ha
11.  Om nadachchiva pathayE namO nama ha
12.  Om shadakshara pathayE namO nama ha
13.  Om kavirAja pathayE namO nama ha
14.  Om thaparAja pathayE namO nama ha
15.  Om igabara pathayE namO nama ha
16.  Om pugazhmuni pathayE namO nama ha
17.  Om jayajaya pathayE namO nama ha
18.  Om nayanaya pathayE namO nama ha
19.  Om manjuLa pathayE namO nama ha
20.  Om kunjaree pathayE namO nama ha
21.  Om vallee pathayE namO nama ha
22.  Om malla pathayE namO nama ha
23.  Om asthra pathayE namO nama ha
24.  Om sasthra pathayE namO nama ha
25.  Om shashti pathayE namO nama ha
26.  Om ishti pathayE namO nama ha
27.  Om abEdha pathayE namO nama ha
28.  Om supOdha pathayE namO nama ha
29.  Om viyUha pathayE namO nama ha
30.  Om mayUra pathayE namO nama ha
31.  Om bUtha pathayE namO nama ha
32.  Om vEdha pathayE namO nama ha
33.  Om purANa pathayE namO nama ha
34.  Om prANa pathayE namO nama ha
35.  Om baktha pathayE namO nama ha
36.  Om muktha pathayE namO nama ha
37.  Om agAra pathayE namO nama ha
38.  Om ugAra pathayE namO nama ha
39.  Om magAra pathayE namO nama ha
40.  Om vikAsa pathayE namO nama ha
41.  Om Adhi pathayE namO nama ha
42.  Om pUdhi pathayE namO nama ha
43.  Om amAra pathayE namO nama ha
44.  Om kumAra pathayE namO nama ha.



Categories: Announcements, Bookshelf

5 replies

  1. Thanks for posting. We get immense peace by reciting this. Velum, Mayilum, Sevalum thunai.

  2. Kanda Shasti recital is a daily must for my mother who has never missed it even once till now. Before taking morning food, she recites the entire slokas from a slim book. Her tenacity of purpose with religious bent of mind is tremendous. Thanks for sharing the Tamil slokas

  3. ஸ்கந்த ஷஷ்டியன்று இதைப் படிக்க நேர்ந்ததில் மிகவும் சந்தோஷம்.அவதாரங்களில் முருகன் அவதாரம் மிக முக்கியமானது. ஏனெனில் இது வைதிக நெறியைக் காப்பதற்கான வந்த அவதாரம்.
    “இந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் வினோதன்” என்பார் அருணகிரி நாதர்.
    இந்திரன் தானே தேவர்களுக்குத் தலைவன். யாகங்களை ஏற்பவன். அதனால் இந்த்ரனைக் காப்பது என்பது யாகங்களைக் காப்பதாகும்.
    “மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே” என்பது திருமுருகாற்றுப்படை. மந்திர விதி தவறாமல் அந்தணர்கள் செய்யும் யாக-யஜ்ஞங்களை ஏற்பவன்.
    “விப்ரகுல யாகச் சபாபதியும்” என்பார் அருணகிரிநாதர்.
    முருகனே அந்தணர்களின் சொத்து என்று திருமுருகாற்றுப்படை சொல்கிறது: “அந்தணர் வெறுக்கை”.
    சிவனுடைய சூலமும் திருமாலின் வெற்றி பெரும் ஒளிச் சக்ரமும், இந்த்ரனின் வஜ்ராயுதமும் செய்ய முடியாத செயலைச் செய்தது வேல்:
    “வெங்காள கண்டர் கைச் சூலமும்
    திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும்
    விபுதர்பதி குலிசமும் சூரன் குலங்கல்லி வெல்லா எனக் கருதியே
    ஸங்க்ராம நீஜயித் தருளெனத் தேவருடன் சதுர்முகனும் நின்றிரப்பச்
    சயிலமொடு சூரனுடல் ஒரு நொடியில் உருவியே
    தனி ஆண்மை கொண்ட நெடுவேல்”
    என்பது அருணகிரி நாதர் வாக்கு.
    இப்படிப்பட்ட வேலாயுதக்கடவுளின் நாமமாகிய முருகன் என்பது ஒரு நாமமல்ல!
    “மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்” என்பது கந்தரலங்காரம்.
    முருகா என்ற நாமமே பல நாமங்களுக்குச் சமமாகும்! ஆனால் அதை மனச்சுத்தியுடன் ஓதவேண்டும்! (மெய்ம்மை குன்றா மொழி!)
    இந்த குமாரஸ்தவம் முருகனின் பெருமையைச் சொல்கிறது! நாமும் ஓதிப் பயன் பெறுவோம்! வைதிக நெறிக்கு வலிமை சேர்ப்போம்!

  4. Thanks so much for sharing. Everyday i get to learn so many things from this group. Many many thanks to you & your team.. Mahaperiyava Charanam

  5. Happy Kanda shasti to all. Feeling very happy today to see this post. Thank you very much for sharing. Thinking of kumran and our Swaminatha guru gives blissful feeling. May all of us immerse in chanting ‘om muruga’ as many as possible today.

Leave a Reply to arthivenkatCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading