167. Maha Periyava’s Skanda Puranam-He Who Is The Ultimate Fulfillment Of All Ways (Part 1)


Jaya Jaya Sankara Hara Hara Sankara – How is Subramanya Swami the end and utlimate of all ways viz. Karma, Bhakthi, and Gnanam? Sri Periyava explains beautifully in the final chapter of this series with some great examples.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. Bharathi Shankar for the translation.

சகல மார்க்க நிறைவான சரவணபவன் (Part 1)

பரமாத்மாவை அடைய நாலு மார்க்கங்கள் ஞானம், பக்தி, கர்மம், யோகம் இருக்கின்றன. சரீரம், மனசு, இதற்கெல்லாம் ஆதாரமாக இருக்கிற, ஆத்மா என்ன என்கிற விவகாரத்திலேயே, எப்போதும் இருந்து கொண்டிருந்தால், கடைசியில் அது தானே பளிச்சிடுகிறது – Flash மாதிரி. இதுதான் ஞானம். அங்கே, அறிகிற ஜீவாத்மாவுக்கும் அறியப்படுகிற பரமாத்மாவுக்கும் பேதமே இல்லை. எல்லாம் ஒரே சாந்த சமுத்திரமாக அடங்கி விடுகிறது.

சிலருக்கு இந்த சாந்தியைவிட, பரமாத்மாவோடு ஒன்றாகச் சேர்ந்து கரைந்து விடுவதை விட, கொஞ்சம் பிரிந்து அவரிடம் அன்பாக இருந்து கொண்டிருப்பதில்தான் ருசி இருக்கிறது. இவர்கள் பக்தி செய்கிறார்கள். அதனால், பரமாத்மாவின் கருணையைப் பெறுகிறார்கள். இவர்கள் செய்யும் பக்தி, ஸ்வாமி திருப்பிச் செய்யும் கருணை, இரண்டும் அன்பு என்பதன் இரண்டு ரூபங்கள் தான். ஞானம் அறிவு வழி; பக்தி அன்பு வழி.

மனஸையும் கடந்து விட்டால் ஞானம்; மனஸை வைத்துக் கொண்டே பக்தி செய்ய வேண்டும். இதே மாதிரி சரீரத்தை வைத்துக் கொண்டு கர்மாக்களைச் செய்கிறோம். அப்போதும்கூட, நமக்கென்று பண்ணிக் கொள்ளாமல் லோக உபகாரமாகப் பண்ணி, அதன் பலனை ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்தால் அதிலேயே ஒரு ஆனந்தம், நிறைவு இருக்கிறது. இவ்வாறு பற்றில்லாமல் கடமையைச் செய்வது கர்ம மார்க்கம்.

மனஸை நிறுத்த முடியாததாலேயே, ஆத்மாவைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மனசு கட்டுப்படாமல் ஓடுகிறது. ஆனால், மூச்சைக் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டால், மனசும் நின்றுவிடும். நமக்குப் பிராணன் என்று ஒன்று இருக்கிறது. பேருயிர் ஒன்றிலிருந்துதான் இந்தப் பிராணன் புறப்பட்டிருக்கிறது. அதனால், இந்தப் பிராணனை சில தினுசுகளில் கட்டுப்படுத்தி, சமநிலைக்குக் கொண்டுவந்து விட்டால் பிராண மூலமான பேருயிரை, பரமாத்ம சக்தியை அடைய முடிகிறது. இதற்கு யோகமார்க்கம் என்று பெயர்.

ஸுப்ரம்மண்ய சுவாமியைப் பற்றி நிறையக் கதை சொன்னேன். இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. அவருடைய மகிமைக்கும் லீலைக்கும் முடிவேயில்லை. இத்தனை கதைகள், தத்வங்களிலிருந்தும் தெரிவது அவர் ஞானம், பக்தி, கர்மம், யோகம் எல்லாவற்றுக்கும் முடிவான பரம சத்தியமாக இருக்கிறார் என்பதுதான்.

முருகன் என்றால் ஞான பண்டிதன், ஞானோபதேசம் என்பது நினைவுக்கு வந்துவிடுகிறது. அத்வைத ஞான ஸ்வரூபமாகவே, அவரைத் திருப்புகழிலும் கந்தரபூதியிலும் அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார்.

நான் வேறு எனாதிருக்க, நீ வேறு எனாதிருக்க

ஏகபோகமாய் நீயு நானுமாய்

இறுகு வகை பரம் சுகமருள்

யானாகிய என்னை விழுங்கி வெறும்

தானாய் நிலை நின்றது தற்பரமே

பக்தி மார்க்கத்தில் முருகன் முடிவாக இருப்பதைச் சொல்லவே வேண்டாம்! அடியார்களின் பக்தியையும் அவர்களிடம் கருணையையும்தான் புராணக்கதைகள், ஸம்ஸ்கிருத ஸ்தோத்திரங்கள், தமிழ்த் துதி நூல்கள் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கின்றன. இவற்றில் எல்லோருக்கும் ஒரு சில திருப்புகழ்கள், திருமுருகாற்றுப்படை, ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் ஆகியனவாவது மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

கர்மா என்று எடுத்துக் கொண்டாலும், குமாரிலபட்டராகவும் ஞானசம்பந்தராகவும் அவதரித்து அவரே, இந்த மார்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். அப்பர் ஸ்வாமிகள் “தாஸமார்க்கம்” என்ற வழியில் எப்போதும் லோக க்ஷேமத்துக்காக ஊழியம் செய்துகொண்டே இருந்தவர். அவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று சொன்னவர். இந்த வரி வருகிற செய்யுளின் ஆரம்பம் நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் என்பது! கடம்ப மாலையை விரும்பி அணிகின்ற முருகன்தான் கடம்பன். ‘முருகனைப் பெற்ற அம்பாளைத் தன் பாகத்தில் கொண்ட பரமேசுவரன்’ என்ற ஸோமாஸ்கந்த மூர்த்தமாக இங்கே அப்பர் சொல்கிறார். நிஷ்காம்யமாகப் பணி செய்து கிடக்கிற பான்மையை முருகன் விசேஷமாக அருள்வான் என்கிறமாதிரி ‘நம் கடம்பன்’ என்று ஆரம்பத்திலிருக்கிறது!

கடைசியில் ‘யோகம்’ எனறு சொன்னேன். இது பிராண மூலத்தைக் கண்டுபிடித்து, அதோடு சேர்கிற வழி. பிராண சக்தி என்பது சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில், குண்டலினீ என்கிற ஸர்ப்ப ரூபத்திலேயே இருக்கிறது. நமக்கெல்லாம் அதன் மகாசக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச் சுருட்டிக் கொண்டு தூங்குகிற பாம்பாகவே இருக்கிறது. தூங்கும் பாம்பைத் தட்டி எழுப்புவதற்குத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன. சுப்ரம்மண்யர் யோக விஸ்வரூபம். அதனால்தான் அவரை எப்போதும் பாம்போடேயே சேர்த்துச் சேர்த்துச் பேசுகிறோம். ‘வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய’ என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர்கூட ‘ஸ்ரீ ஸுப்ரஹ்யமண்யாய நமஸ்தே’ கிருதியில் சொல்கிறார். ஆசார்யாளும் புஜங்கம் (புஜங்கம் என்றாலே பாம்பு) என்ற விருத்தத்தில்தான் ஸ்தோத்திரம் செய்கிறார். நாகர் பிரதிஷ்டை, ஷஷ்டியில் நாகராஜா பூஜை எல்லாம் சுப்ரம்மண்யரை உத்தேசித்தே செய்கிறோம்.

தெலுங்கு தேசத்தில் சுப்ரம்மண்யரையே ஸர்ப்பமாகப் பாவிப்பதால்தான், பாம்பை, ‘சுப்பராயடு’ என்கிறார்கள்.

அவரே யோகத்தின் நிறைவு.
—————————————————————————————————————————–

He Who Is The Ultimate Fulfillment Of All Ways (Part 1)

There are four ways to reach Paramathma namely Gnyanam, Bhakthi, Karmam, and Yogam. If one contemplates forever over the issue of Athma, which serves as the base for things like Sareeram (body) and Manas (mind), it ultimately appears on its own — just like a “flash”. This is what is Gnyanam (Knowledge, Enlightenment). There is no difference between the comprehending Jeevathma and the comprehended Paramathma at this state. Everything boils down to a serene ocean.

For some, there is a better taste in separating themselves a little from Him and showering love upon Him and being affectionate with Him than this serenity, this dissolving and Becoming one with Paramathma. They cultivate Bhakthi. Therefore they receive the Grace and Mercy of Paramathma. The Bhakthi they show and the Grace that the Swamy reciprocates are just two forms of the same love. Gnyanam is through intellectual way; while Bhakthi is an affectionate way.

If we transcend and go beyond the mind, it becomes Gnyanam ; we should cultivate Bhakthi while keeping with us the mind too. Likewise we carry out various karmas (actions) with our body. Even then if we do those actions selflessly and for the sake of Universal well-being and offer the outcome to Eswaran, then there is a sense of happiness and contentment in itself. Like this, carrying out actions without attaching ourselves to them is Karma Margam.

Because we are unable to stop the working of the mind that it’s difficult for us to identify the Athma. The mind runs amok uncontrollably. But if we control our breathing and make it stand still, then the mind will come to a halt too. There is something called Pranan (Breath) for us. This Pranan must have started from a Bigger form of life. Therefore if this Pranan is controlled through some prescribed ways and brought to a balanced plane, then it becomes possible to reach out to the base root of the Pranan, the Bigger life namely the Paramathma. This is called Yoga Margam.

I told a lot of stories about Subramanya Swamy. There are many more stories still. There is no end to His Greatness and Leelas (Acts). What is evident from all these stories and philosophies is that He happens to be the Ultimate Truth that stands as the end product of Gnyanam, Bhakthi, Karmam, and Yogam.

The utterance of the name Murugan always reminds us of Gyanapandithan (the all knowing scholar) and Gyanaopadhesham (Impartment of Knowledge). Arunagirinathar has also praised Him in Thiruppugazh and Kandhar Anubhuthi only as Adwaitha Gnyana Swaroopam (Incarnation of Adwaitha Philosophy).

Naan Veru Enaadhirukka, Nee Veru Enaadhirukka,

Aega Bogamaai, Neeyu Naanumaai

Irugu Varai Param Sugamarull

Yaanaaagiya Ennai Vizhungi Verum

Thaanaai Nilai Ninradhu Tharparame.

There is no need to mention that Murugan stands as the Ultimate end in Bhakthi Margam too. All Puranas, Sanskrit Slokas, and Tamizh Hymns speak elaborately about the Bhakthi of the Adiyars (Devotees) and the Grace showered on them. Everyone should know by heart, at the least a few Slokas in Thiruppugazh, Thirumurugaatruppadai, and Subramanya Bhujangam.

If we take Karma Margam also, it is He who took the Avathar of Kumarila Battar and Gnyanasambhandhar and established this Margam Himself. Appar Swamigall was one who kept serving for the wellbeing of the Universe in the way of “Dhaasamaargam”. It was he who said “En Kadan Pani Seithu Kidappadhe” (My duty is only to keep serving). The beginning of the Hymn that has this line is “Nam Kadambanai Petravall Panginan”. Murugan is the Kadamban, who willingly wears the Kadamba Maalai (garland of Kadamba flowers).  Here Appar speaks of Him as a Somaskanda Murtham while saying “Parameswaran has Ambal, who Has given birth to Murugan, as a part of His body.” Murugan will bestow a special Grace upon the attitude of rendering Nishkamya (selfless and without expecting a return) service is what the beginning of the poem “Nam Kadamban” seems to say.

Lastly I said Yogam. This is the way of finding out the base of Prana and uniting with it. Prana Shakthi lies within our body, in an area called ‘Moolaadhaaram’ and in the form of a serpent called Kundalini. We haven’t comprehended its Mahashakthi (great power) at all. It remains in the state of a sleeping serpent curling in a Kundalaakaaram (like an earring) form. It is to shake this sleeping serpent awake that all the Yoga Sadhanas exist. Subramanya is Yoga Swaroopam. That’s why we always speak of Him with a connection to the snake. Even Dikshithar refers to Him in his krithi “Sri Subrahmanyaaya Namasthe” as “Vaasuki, Dhakshakaadhi Sarpa Swaroopaaya Dharanaaya ( He who is in the form of serpents like Vasuki and Dhakshakan). Acharyall too creates Hymns in the form of a Virutham (poetry) named Bhujangam (the very word Bhujangam means Snake) and praises Him. We do Naga Pradhishtai and Nagaraja Puja in Sashti only for the sake of Subramanya.

In the Telugu Desam, people call Him Subbarayudu only because they assume Him in the form of a serpent.

He is the fulfillment of Yogam.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. One more Avatharam of Sri Subramaniar for Gnana upadesam and also Ashtanga Yogam is Shri Ramana Maharishi. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

Leave a Reply to R.AnandapadmanabanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading