Periyava Golden Quotes-739

சாஸ்திரமென்றால் ஒரே கட்டுப்பாடாயிருக்குமே என்று பயப்படக்கூடாது. “ஸ்வதந்திர யுகம் என்று சொல்லிக் கொண்டு ஸ்வயேச்சைப்படி கட்டையறுத்துக் கொண்டு போய் என்ன கண்டோம்? ஏதோ அவ்வப்போது, ஒரு பெரிய மரக்கிளை காற்றில் ஆடுகிறபோது, அதன் விஸ்தாரமான நிழலில் துளிப்போல, இரண்டு இலை இடுக்கால் ஸுர்ய வெளிச்சம் விழுகிற மாதிரி, எப்போது பார்த்தாலும் இனம் தெரியாமல் பாரமாக மனஸை அழுத்திக் கொண்டிருக்கிற துக்க இருட்டில் இந்த ஸ்வாதந்திரியப் போக்கினால் இரண்டு கீற்று ஸந்தோஷ ரச்மி துளி நேரம் ஆட்டம் போட்டுவிட்டுப் போவதைத் தவிர சாச்வத ஸெளக்யத்துக்கு, நிரந்தர நிம்மதிக்கு இந்த ஸ்வதந்திரத்தாலோ, ஸயன்ஸ் டிஸ்கவரிகளாலோ, பொருளாதார அபிவிருத்தியாலோ நம்மால் என்ன ஸாதித்துக் கொள்ள முடிந்திருக்கிறது? துக்கத்தின் மூலத்தைக் கண்டுபிடித்து நிவிருத்தி பண்ணி வைக்க ஸ்வதந்திரத்துக்கும் ஸயன்ஸுக்கும் ஸாமர்த்யம் உண்டா? பாபத்துக்குப் பரிஹாரம் செய்ய இவற்றால் முடியுமா? பாபத்தையும் துக்கத்தையும் போக்கிக் கொண்டு நிம்மதியாக நிறைவாக வாழ்ந்த நம் பெரியவர்களெல்லாம் சாஸ்திராசாரங்களை நன்றாக அநுஷ்டித்துத்தானே அந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்?” என்று யோசித்துப் பார்த்தால், வாஸ்தவத்தில் எதை இப்போது ஸ்வந்திரமென்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுதான் கட்டு என்று தெரியும். இதுதானே நம்மை நித்ய ஸுகத்தின் பக்கம் போகவிடாமல், புண்யத்தின் பக்கம் போகவிடாமல் துக்கத்திலும் பாபத்திலுமே கட்டி வைத்திருக்கிறது? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

One should not be scared of Sastras because they bind a person with too many restrictions. We should think on these lines: ‘What have we achieved by this unbound freedom? Like the Sun rays that peep through the dense branches of a tree and fall on the ground below for a very short while, the unbound freedom gives one or two rays of happiness in this otherwise sorrow filled , dark life. Do these, the freedom, the scientific discoveries or the economic development contribute towards eternal joy or eternal peace?  Does science or personal freedom have the capacity to find the root cause of sorrows and eliminate them? Are they capable of bringing remedy for all the sins committed? Our elders who lived a life of peace and fulfillment could do so only by following the sastras isn’t it?’ These thoughts will help us understand that what we now consider freedom, is in reality, the bondage. Does not this freedom bind us to sorrow and sins, preventing us from moving towards eternal joy? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. He never travelled in car or train …not even touched…then how photo?

  2. Maha Periyava’s teachings and quotes are eternally relevant. He led an austere, spartan life, apart from taking care of Sankara Matam. The Divine Sage walked, walked and walked throughout his life. I doubt if he had boarded a motor vehicle for long journeys in his entire life. If someone has a photo of Kanchi Periyava travelling in a car or train, please share with us.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading