73. Gems from Deivathin Kural-Vedic Religion-Who is Responsible? What is the Remedy? (Part 3)


Jaya Jaya Sankara Hara Hara Sankara – How much our Periyava would have felt at heart when HH made the following statement conclusively.  “ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்.”(“It’s my definite opinion that Brahmins are responsible for the spoiling of the Hindu society.”)

How Brahmins not only spoiled themselves but spoiled the entire society by instigating them to leave their dharmas? What does the Sastras say on how a Brahmin  should lead their lives? How things went spirally down in the last hundred odd years? The greatness of other caste people in protecting Brahmins & Veda Dharma but how Brahmins abandoned their dharma due to avarice. All these has been explained by Sri Periyava below.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri S. Ravisankar for the translation. Rama Rama.

Click HERE for Part 2 of this chapter.

பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன? (Part 3)

‘தானும் கெட்டு, சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம்’ என்கிற கதையாகப் பிராமணன் தானும் தர்மத்தை விட்டு, மற்றவர்களுக்கும் அவரவர் தர்மங்களைவிடுகிற மாதிரி செய்துவிட்டான். தன் தர்மத்தை விட்டபின் இவனுக்கு உயர்வு எதுவுமே இல்லை. தன் தர்மத்தைச் செய்தபோதும்கூட, இவனாக உயர்வு பாராட்ட நியாயமில்லை. ‘ஒவ்வொருவரும் ஒன்றைச் செய்கிறார்கள்; நான் இதைச் செய்கிறேன்’ என்றுதான் அடக்கமாக இருக்கவேண்டும். ஆனாலும் தன்னலமில்லாமல், கடும் விரத நியதிகளோடு இவன் தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்களே இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்து கௌரவித்து வந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எல்லாரும் தன்னைத் தூற்றும்படி, கரித்துக் கொட்டும்படி இவனே ஆக்கிக் கொண்டு விட்டான்.

ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்.
சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள். வேதாத்யயனம், யக்ஞாதி கர்மாக்களுக்கே பிராமணனுக்கு ஸதாஸர்வ காலமும் தேவையாயிருந்தது. ஆயுசுக் காலம் முழுதையும் அதற்கே செலவிடுவது அவசியமாயிருந்தது. இப்படி இவன் வேதம் ஓதுவது, வேள்வி செய்வது, சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தருவது என்றே பொழுது முழுவதையும் செலவழித்தால், இவனுடைய ஜீவனோபாயத்துக்கு என்ன செய்வது? இவன் பொருள்தேடிப் போக ஆரம்பித்தால், ஆயுட்கால பிறவிப் பணி (life-time mission) நடக்காது. இந்தப் பிறவிப் பணிக்கோ part time போதாது. அப்படியே இவன் வயிற்றுக்காக வேறு வேலையும் வைத்துக்கொண்டால் ஆசாரங்களும் கெட்டுப்போகும். அதன்பின் பத்தியமில்லாத மருந்துபோல் இவனுடைய அத்யயன வீர்யம் குறைந்துபோய், அதனால் லோகத்துக்குக் கிடைக்கிற க்ஷேமம் நஷ்டமாகிவிடும். இதனால்தான் பிராமணன் மாத்திரம் யாசகம் செய்யலாம் என்று சாஸ்திரம் அனுமதித்தது. ‘யாசகம் என்றில்லாமல், ராஜாக்களே இவனுடைய அத்யயனம், யக்ஞம், சாஸ்திர ரக்ஷணம் இவற்றால் ஏற்படுகிற சமூக சிரேயஸை முன்னிட்டு இவனுடைய அத்யாவசியத் தேவைகளுக்கு குறை வைக்கக்கூடாது என்று மானியங்கள் விட்டார்கள். பூதானம், கிருஹதானம், கோதானம், ஸ்வர்ணதானம் எல்லாம் செய்தார்கள். ஆனாலும், ‘அவர்கள்தான் கொடுக்கிறார்களே’ என்று இவர்கள் வரம்பில்லாமல் வாங்கிக்கொள்ளக்கூடாது; அப்படிச் செய்தால் அது ரொம்பவும் இவர்களை இந்திரிய சுகத்தில் இழுத்துவிட்டு ஆத்மா அபிவிருத்தியைக் கெடுக்கும்; அதோடு ரொம்பவும் கைநீட்டி வாங்கிவிட்டால் இவர்கள் கொடுக்கிறவனுக்கு பவ்யப்பட்டு சாஸ்திரங்களை அவர்கள் இஷ்டப்படி வளைத்து அர்த்தம் பண்ண வேண்டிவரும். நடுநிலைமை தப்பிப்போகும்படி நேரிடும்—இந்தக் காரணங்களை உத்தேசித்து தர்ம சாஸ்திரங்கள் பிராமணன் உயிர் வாழ்வதற்கு அதம பட்சமாக எது தேவையோ அதற்கு மேல் ஒரு திருணமாத்திரம்கூட வைத்துக் கொள்ளக்கூடாது என்று விதித்தன. இந்த முறைப்படியே இவர்களும் ராஜாக்களின் போஷணையில் தங்கள் தர்மத்தைச் செய்துகொண்டு வந்தார்கள்.

இங்கிலீஷ்காரர் ராஜ்யம் வந்தபின், இவர்களுக்கு ராஜ மான்யங்கள் இல்லையே. இவர்கள் எப்படி எவ்விதமான வருவாயும் இல்லாமல் உயிர்வாழ முடியும்? அதனால்தான் இங்கிலீஷ் படிப்பு, சர்க்கார் உத்தியோகம் என்று இவர்கள் இறங்கும்படி ஆயிற்று. சந்தர்ப்பச் சூழ்நிலை (force of circumstances) இவர்களை அப்படி நெரித்தது. அதற்காக இவர்களைக் கண்டிக்கக் கூடாது என்று ஒரு சமாதானம் சில பேர் சொல்கிறார்கள்.

இதில் கொஞ்சம் நியாயமும் இருக்கலாம். ஆனால் முழு நியாயமும் இல்லை என்றுதான் என் மனசுக்குப் படுகிறது. இங்கிலீஷ்காரனுக்கு முன்னால் மொகலாய சாம்ராஜ்யம் (Moghul Empire), மற்ற பல சுல்தான் ஆட்சி எல்லாம் இருந்ததே. அப்போதெல்லாம் ஏதோ கொஞ்சம் பண்டிதர்கள் தர்பார் உத்தியோகத்துக்குப் போனார்கள் என்றாலும், மற்றவர்கள் ராஜ மானியம் இல்லாமலேதானே தங்கள் தர்மத்தைத் தொடர்ந்து செய்து வந்தார்கள்? அக்ரஹாரம் காலியானது; கிராமம் பாழானது. வேதபாடசாலைகள் சூனியமானது, நிலங்கள் எல்லாம் ஸர்டிஃபிகேட்களாக மாறினது—இந்த அனர்த்தங்கள் எல்லாம் சுமார் நூறு வருஷத்துக்கு உட்பட்ட விஷயங்கள்தானே? அதற்கு முந்தின தலைமுறை வரை வைதிக தர்மம் உருக்குலையாமலேதானே இருந்திருக்கிறது.

இதற்குக் காரணம் ஹிந்து ராஜாக்கள் மட்டும்தான் என்றில்லை; ஹிந்து சமூகத்தில் மற்ற எல்லா வர்ணத்தாருமே வேத தர்மம் நசித்துப் போகக்கூடாது; பிராமண ஜாதி அழிந்து போகக் கூடாது என்று மனசார நினைத்து அதற்காக அள்ளிக் கொடுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் படிப்பதற்கு பிராமணப் பசங்கள் இல்லாததால் வெறிச்சோடியிருக்கிற நூற்றுக்கணக்காண பாடசாலைகள் இருக்கின்றனவே. இவற்றுக்கெல்லாம் முதல் போட்டு மூலதனம் வைத்திருப்பது யார்? பெரும்பாலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களும், கோமுட்டிச் செட்டிமார்களும், பண்ணையார்களான வேளாளர்களும்தான். நகரத்தார் செய்த கோயில் திருப்பணிக்குக் கணக்கில்லை. அதே மாதிரி, ‘இந்தக் கோயிலுக்கும் வேர் வேதம். அது இருந்தால்தான் இந்தக் கோயிலில் பூஜையும் சாந்நித்தியமும்’ உண்டு என்ற நம்பிக்கையில், ஒரு ஆலயத் திருப்பணி செய்தால் ஒரு வேத பாட சாலையும் வைக்க வேண்டும் என்று அவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் வைத்திருக்கிறார்கள். வேளாளர்களில் பெரிய நிலச்சுவான்தார்களாக இருந்தவர்களும் இப்படியே வேத பாடசாலைகளுக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இங்கிலீஷ்காரன் ஆட்சி வந்த பிறகும் அவன் காட்டிய சுகபோக்ய ஜீவனத்தில் மயங்காமல், சாஸ்திரம் விதிக்கிற அளவுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு மட்டும் பிராமணன் வாழ முற்பட்டிருந்தால், அவனுக்கு நிச்சயம் மற்ற சமூகத்தார் அதற்கான வசதிகளைச் செய்து தந்திருப்பார்கள். அவர்கள் இவனைக் கைவிடாதபோதே, இவனாகத்தான் அக்ரஹாரத்தை, வேதபாடசாலைகளை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான். மேல் நாட்டு நாகரிகத்தில் புதிதாக வந்த ஸயன்ஸினால் பெருகி விட்ட போக்கிய வாழ்வில் இவனுக்கு ருசி வந்துவிட்டது. ‘ஆத்மாபிவிருத்திக்கு எந்த அளவு அவசியமோ, அநுகூலமோ, அந்த அளவிற்கு மட்டுமே சரீர போஷணம் செய்து கொண்டால் போதும்’ என்ற உயர்ந்த லட்சியம் போய்விட்டது. ‘சாப்பாட்டுக்கே இல்லையே என்ற நிர்பந்தத்தின் மேல்தான் இவன் தர்மத்தை விட்டான்’ என்ற சமாதானத்தை ஒப்புக் கொள்வதற்கில்லை. அவசியத்துக்கு அதிகமான வஸ்துக்களில் இவனுக்குத் துராசை வந்துவிட்டது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

—————————————————————————————————————————————-
Who is responsible?  What is the Remedy? (Part 3)

Similar to the story of “a Brahmin, not only got spoiled self, but also spoiled Chandra Pushkarani”, he left the dharmas to be carried out by him and made others to follow suit. Once he left his duties there is nothing to boast high. Even when he followed strictly the dharmic duties there was no justice (right) to claim superiority.  Each one are carrying their duty and I do my duty, is the way he has to live with modesty. Others seeing him living selfless, strict fasting and clean life gave a special position and honored. For all these wrong deeds he repays now with capital and interest by becoming a laughing stock and others mud slinging about him.

“It’s my definite opinion that Brahmins are responsible for the spoiling of the Hindu society.”  For this some people try to give compromising answers. A Brahmin’s whole time was consumed to do Vedhadyayana, yagnas and rituals. It was necessary to spend the whole life for this purpose. If he has to spend all his time only for vedha reciting, agni karyas, protecting the Sastras, what is to be done for his daily needs? If he goes in search of material benefits, his life time mission can not be done.  Part time is not sufficient for the basic religious rites he has to do. To fill his stomach if he keeps other jobs, the discipline he has to maintain will also be gone. Like a medicine consumed without following the dietary rules (Pathyam) his vedha adhyayana power comes down sharply resulting in which the benefit obtained by society is lost. That’s why Sastras allowed that Brahmins alone can seek alms. The Kings themselves seeing their selfless practice of yagnas, vedha chanting, protecting Sastras for the benefit of the society gave lands, materialistic comforts etc for their minimum needs. They gave donations like Bhoomi (land), gruha (house), Gho (cows), and jewelry (swarna). Just because “they are giving” Brahmins are not supposed to receive without limit. That will lead to bodily comfort and spoil their intellect.  Moreover if received with wide open arms, then it is necessary to bow and bend the Sastras and rules to the whims and fancies to satisfy the giver. Neutrality is to be missed. Citing the above reasons, dharma Sastras have strictly framed that the bare necessities only are to be kept by a Brahmin to live (to lead his life). In this method they also under the protection of kings carried out their dharmic duties.

Once the English kingdom was established all king’s subsidies were not forth coming. Without any income, how was it possible to live? That’s why they were forced to step in to English education, government jobs, etc. Circumstances had forced them into such life. So they should not be criticised, is the argument put forth.

There may be some justification in that. But in my mind, I feel it is not totally correct. Before British man, were they not Mogul empires and various sultans ruling the country? Though few pundits had gone for kings durbar jobs, did they not carry out their dharmic way of life without kings grant or subsidy? Agraharams became vacant, villages were spoiled. Vedha patashalas were deserted. Lands had become certificates — is it not that all these tumblings happened within last 100 years?  Don’t we see till that generation, Vaideeha dharmas were in tact and in order?

Hindu kings alone were not responsible for supporting Brahmins.  In Hindu society all other people from different castes were generous in giving them with the thought that Vedha dharma should not get crushed and brahmin caste should not meet its end. Even today we find hundreds of Veda patashalas with empty halls as there are no brahmin boys to join there. Who has invested capital for all these? It is mainly by Naattukkottai Nagarathars, Komutty Chettiars and rich land lord velalars. It cannot be counted, the way in which Nagarathars did temple renovations. In the same way they thought “the root for this temple is Vedhas.  If it exists then only this temple will have its power and Puja” and decided to establish a vedha patashala when a temple was consecrated all through Tamil nadu. Rich Velala Mirasdars had also donated in plenty to such vedha patashalas. Even after British rule had come, if the Brahmin had not fallen or trapped as a victim for the the luxurious life, but lived with minimum necessities, other castes in society would have given the comforts needed. When he was not let down by others, he himself ran away from Agraharams and Veda patashalas. With the foreign style of life, newly developed science he was carried away with the tastes of comforts of life. Minimum requirement for the upliftment of soul (Aathma), to keep the soul and body alive were gone. I cannot accept the theory that he left the dharma because he had no way even to earn for his food. It is to be accepted that he was greedy to have things more than necessity.



Categories: Deivathin Kural

Tags:

9 replies

  1. @ Natarajan: I know it is a tough job but some one and somewhere we have to start. Not a big task and big way we need to start. With litlle way, within our circle let’s start and that will inspire the others and will go on further to others. Whether one is in India or in foreigh soil what makes the difference? It is only the inclination to do is all that matters. Sri Mahesh, who runs this blog is the obvious example for this. Although he is in alien soil, still follows at his best of Anustanams and Nithyakarma. Everybody know how difficult it is to follow these in other countries. Why not Indians in India? As said earlier, it is only mindset, nothing else. We need a strong Sankalpa and Periva will usher us to destination, of course.

    • If it is getting diluted in India itself where we tell our children to pursue higher goals and go to US, how can we expect our future generations in other lands when in our motherland itself it does not last more than one generation. I may sound very pessimistic here, but I am seeing that in reality. I just hope the Great and Benevolent One provides His anugrahams to us and guides us in the right direction

  2. No one can change anyone unless one changes himself first…Status,status,status…is anything and everything today. Where are you living? America??? Wow! Where are you working? IT? Wow wow!! What salary are you getting? US dollars??? OMG! What car are you driving? The list goes on and on and on….so where does it meant to start?. It’s like saying, ” Lets the whole world change from its evil ways…and than I will change from mine”
    “Vollukatthil Yevan Seranthayenno…Aavenne Brahmanan!”.

  3. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam.

  4. We are all at fault here. All of us have given up Vaidheekam and entered full time loukeekam. Deivam has become secondary. Kaasu has become primary. While I rant, the river has deviated so much that it is difficult to bring it back on course.

    • This is…. this is it….. what Maha Periva was mentioning it. ‘Any we lost the course, what if we continue the present’ is the mindset of present day so called ‘Proud Brahmins’. Why not we give a try to change the course our river, instead of giving up?

      God too favours the one who labours hard. Let’s make a Sankalpa to bring back our lost legacy, rest will be taken care by Maha Periva. Let’s make the first step to start with little changes within us and that will lead to the big. Can we?

      • It takes mindset change from too many people to change things in one generation. First a lot of us need to go back to Bharatha Desam to do this. I know a few people who continue their loukeekam but made sure their children focus only on Veda Adhyanam so that future generations can follow. But only a few. They are shining examples of change. Across the board and I am generalizing here, we want to pursue a full IT led lifestyle and also intent on getting back to roots. But not enough is being done. We push our children into the same pit we are falling into. Unless we start changing ourselves completely we cannot change our children or future generations. To me that is not possible and I am also one culprit here. In one strike we have to change our mindset and make a hard decision.

        But like I said, it is not one individuals decision only. It involves the change from people around you too. We usually succumb to external pressures and “get back on track”.
        Like you say little drops make an ocean and hopefully that works. But it took one or two generations only for the river to get completely diverted. It will take more than that to regain course unless there are larger changes within oneself and surrounding people.

  5. After reading this, every brahmin should start doing (at least) Trikala Sandhaya Vandhanam. Madhyanikam can be done around 7:30 AM.

Trackbacks

  1. 74. Gems from Deivathin Kural-Vedic Religion-Who is Responsible? What is the Remedy? (Part 4) – Sage of Kanchi

Leave a Reply to balaji690Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading