Jaya Jaya Sankara Hara Hara Sankara – Why did Veda Rakshna stoop so low during British times and later? Our Periyava, the Sarvagnyan, is razor sharp in his assessment on how things went terribly awry and how Brahmins played a big hand due to their desire for materialistic comforts, greed, and hypocritical behavior that collapsed the society.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri S. Ravisankar for the translation. Rama Rama.
Click HERE for Part 1 of this chapter.
பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன? (Part 2)
முஸ்லீம்கள் ஆட்சிக் காலத்தில்கூட கெடாத வேதரக்ஷணம் வெள்ளைக்காரர்கள் வந்தவுடன் ஏன் கெட்டது என்று ஒரு கேள்வி. இதற்குக் காரணம், வெள்ளைக்காரர்களோடு புது ஸயன்ஸ்களும், இயந்திர (மெஷின்) சகாப்தமும் கூடவே வந்ததுதான்—இதுவரைக்கும் தெரிந்திராத பல புது விஷயங்கள் இப்போது தெரிந்தன. ‘விஷயம்’ என்று மட்டும் எடுத்துக் கொண்டால் இந்த ஸயன்ஸினால் பல உண்மைகள் தெரிய வந்தன. இது நல்லதுதான். ஆனால், இந்த விஷய ஞானத்தினால் ‘காரியம்’ என்று செய்கிறபோது, ஒழுங்கு தப்பிப் போகிறதற்கான சபலங்கள் ஏகப்பட்டதாக உண்டாகிவிட்டன. ஸயன்ஸினால் காரியம் செய்ய மெஷின்கள் உண்டாயின. எலெக்ட்ரிசிட்டி, ஸ்டீம் பவர் எல்லாம் வந்தபின் வெகு விரைவில் பல காரியங்களைச் செய்து கொள்ள முடிந்தது. இவற்றால் பல சௌகரியங்களைச் செய்து கொள்ளலாம் என்றாயிற்று. ஆனால் இந்த செளகரியங்கள் எல்லாம் இந்திரியங்களுக்குத்தான். இந்திரியங்களுக்கு சுகத்தைக் காட்டிவிட்டால் போதும். அது மேலே மேலே கொழுந்துவிட்டுக் கொண்டு, ஆசைகளை விஸ்தரித்துக்கொண்டே போகும். இப்படியாக அவசியமில்லாத—ஆத்மாவையே கெடுக்கிற சுக சாதனங்கள் பெருகின. முன்பின் கண்டிராத இந்த சுகங்களின் ஆசை எல்லா தேச ஜனங்களையும் இழுத்த மாதிரி பிராமணனையும் இழுத்தது. வெள்ளைக்காரனோடு வந்த ஸயன்ஸினால் ஏற்பட்ட இன்னொரு பெரிய அனர்த்தம் அது. ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு, நம்பிக்கையின் மீதும் அநுபவத்தினாலும் ஏற்பட வேண்டிய சமய விஷயங்களைப் பொய், புரளி என்று நினைக்க வைத்தது. முஸ்லீம் ஆட்சியில்கூட தன் ஸ்வதர்மத்தை விடாதவன், இப்போது அதைவிட்டு சௌக்கியங்களைத்தேடி வந்து விட்டான். இங்கிலீஷ்காரனைவிட ‘டிப்டாப்பாக’ டிரஸ் செய்துகொண்டு, சிகரெட் குடிக்கவும், டான்ஸ் ஆடவும் சாமர்த்தியம் பெற்றுவிட்டான். தங்கள் வித்தைகளில் இப்படிக் கைதேர்ந்து விட்டவனுக்கு அவர்களும் நிறைய உத்தியோகம் கொடுத்தனர்.
இப்போதுதான் பெரிய அனர்த்தம் உண்டாயிற்று. ‘இதுவரை தலைமுறை தத்வமாக அவரவருக்கும் ஒரு தொழில் என்று ஏற்பட்டு, ஜீவனோபாயத்துக்கு என்னடா செய்வோம்?’ என்கிற கவலையில்லாமல் நிம்மதியிருந்து வந்தது. இப்போது பிராமணனைப் பார்த்து, மற்றவர்களும் இப்படிப் பரம்பரையாக வந்த தொழிலை விட்டுவிட்டு, பிரிட்டிஷ்காரன் தருகிற உத்தியோகம், அவனோடு வந்த தொழில்கள், பாங்கு, ரயில்வே இவற்றிலேயே போய் விழுந்தார்கள்! அதோடு மெஷின்கள் ஜாஸ்தியாக ஆக, கைவேலையும் குறைந்ததால், சில தொழில்காரர்கள் கஷ்டத்துக்கு ஆளாகி, வேறு உத்தியோகத்துக்கு வர வேண்டியதாயிற்று. இன்னாருக்கு இன்ன தொழில் என்ற வரையறை இல்லாமல், புதிதாக நம் தேசத்தில் “தொழிலுக்காகப் போட்டி” என்கிற பெரிய விபரீதம் உண்டாயிற்று. போட்டி என்று வந்துவிட்டால் சாதாரணமாகவே அப்புறம் பொறாமை, வயிற்றெரிச்சல், அசூயை, துவேஷம், சண்டை அத்தனை பட்டாளமும் அதன்கூட வந்துதானே ஆக வேண்டும்? அதோடுகூட, இங்கே, விசேஷமாக, முன்னே நான் சொன்னபடி, பூர்வீகர்கள் பெடல் செய்து தந்திருந்த புத்தி பலம் பிராமணனுக்கு அதிகமாக இருந்து படிப்பு, உத்தியோகம் இவற்றிலே இவன் முதன்மைக்கு வந்ததால்—சமூகத்தில் ரொம்பக் குறைச்சல் சதவீதமே இவனுடைய ஜனத்தொகையாக இருந்தும்கூட சர்க்கார் பதவி, காலேஜ், வைத்தியம், சட்டம் (law) எல்லாவற்றிலும் இவனே ரொம்ப ஸ்தானங்களைக் கைப்பற்றியிருந்ததால், மற்றவர்களுக்கு இவனிடம் துவேஷம் வரத்தானே செய்யும்? துவேஷத்தைக் கூடுதலாக்கினால் தன் ஆட்சியைத் ஸ்திரப்படுத்திக்கொள்ளலாம் என்று வெள்ளைக்காரன் கண்டு கொண்டான். ஆரியன்-திராவிடன் Race-theory ஐக் கட்டிவிட்டான். ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தவர்களிடையில் பேதத்தின் விதைகளை நன்றாக போட்டு விட்டான். போட்டிச் சூழ்நிலையில் ஏற்பட்டிருந்த கசப்பில் இந்த யுக்தி நன்றாகப் பலித்துவிட்டது.
துவேஷம் இரட்டிப்பாகிற மாதிரி பிராமணனே இன்னொன்றும் செய்தான். ஒரு பக்கத்தில் ஜாதி தர்மத்தை விட்டுவிட்டு, இவனும் வெள்ளைக்காரனோடு சேர்ந்து ‘பழைய ஏற்பாடு காட்டுமிராண்டித்தனமானது; ஒருத்தரை இன்னொருத்தர் சுரண்டுவது (எக்ஸ்பிளாயிட் பண்ணுவது) கூடாது’ என்றெல்லாம் சமத்துவம் பேசினாலும், இன்னொரு பக்கம் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்போகாமல், தான் ஏதோ உசத்தி என்று பெருமை கொண்டாடிக் கொண்டான். முன்பும் இவன் மற்றவர்களோடு ஸ்தூலமாக (Physical) ஒட்டிப் பழகத்தான் இல்லை. ஆனால், அதற்கு நியாயம் இருந்தது. பலவித காரியங்களை உத்தேசித்து, அவரவருக்கும் ஆகாரம் முதலியவற்றிலும் மற்ற விஷயங்களிலும் வித்தியாசங்கள் இருந்தாக வேண்டியிருக்கிறது. அவர்கள் வேறு வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்தாக வேண்டியிருக்கிறது. ஃபிலிமைக் கழுவுகிற இடம் இருட்டாகத்தான் இருக்க வேண்டும்; ஸினிமா ஷூட்டிங் செய்கிற இடத்திலோ நிறைய வெளிச்சம் வேண்டும். ஒரே காரியாலயத்தில் கான்டீனில் இருக்கிறவர்கள் பரம சுத்தமாகக் கைகாலில் அழுக்கில்லாமல் இருக்க வேண்டும். அங்கேயே மெஷினைத் துடைக்கிறவன் எண்ணைப் பிசுக்கோடு அழுக்குச் சட்டை போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். இதனால் இந்த ‘ஸர்வர்’ அந்த ‘மெஷின்மேனை’விட உசந்தவன் என்று அர்த்தமாகுமா? இதே மாதிரி, தன்னலமில்லாமல் புத்தி பலத்தைப் பேணுகிறவன் பட்டினி கிடக்க வேண்டும். சைனியத்திலிருக்கிறவனோ மாம்சாதிகளுக்குக்கூட விலகில்லாமல் புஷ்டியாகச் சாப்பிட்டாலும் தோஷமில்லை. ஆகாரம் வேறாக இருப்பதால் பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும் துவேஷம் என்று அர்த்தமாகுமா? அதற்காக துவேஷமில்லையே என்று இவன் ஸ்தூலமாக அவனோடு ஒட்டி வாழ்ந்தால், அவனுடனேயே உட்கார்ந்துகொண்டு இவனும் சாப்பிட்டால், அவனுடைய ஆகாராதிகளை நாமும்தான் ருசித்துப் பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டுபோய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும். அந்தந்த சமுதாயத்துக்கு அந்தந்த குல தர்மம், பழக்க வழக்கம், ஆகார முறைகள்தான் உகந்தவை. ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, அந்த தனித்தனி ஏற்பாடுகளையெல்லாம் பல பட்டறையாகக் குழப்ப ஆரம்பித்தால், அத்தனை காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக்காரியமே சீர்குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள். கிராம வாசத்தில் இது முடிந்தது. புதிதாக உண்டான பட்டணவாசத்தில் இது சாத்தியமாக இருக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி ஷிஃப்டில் வேலைக்குப் போய், ஒரே மாதிரி காண்டீனில் உட்கார்ந்து, ஒரே ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும் என்றாகிவிட்டது. இப்படிப் பல தினுசுகளில் கலந்து கலந்துதான் இருக்க வேண்டும் என்றாகி விட்டது. உபவாஸாதி நியமங்களைக் கண்டிப்பாக அநுஷ்டிக்க வேண்டிய பிராமணன் எல்லாவற்றிலும் மற்றவர்கள் போலவே ஆகிவிட்டான். ஆபீஸ் நேரம், காலேஜ் நேரம் எல்லாம் இவனுடைய கர்மாநுஷ்டானங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் அவற்றை எல்லாம் காற்றிலே விட்டு விட்டு, மற்றவர்களைப் போலவே ஆகிவிட்டான். இதுவரை இவன் அவற்றை அநுஷ்டித்தது மற்றவர்களுடைய க்ஷேமத்துக்காகத்தான்; முக்கியமாகவே அதற்காகவேதான். தர்மகர்த்தா (trustee) மாதிரி, சமூகத்தின் பொருட்டு, இவன் இந்த தர்மங்களை ரக்ஷித்துப் பிரயோஜனத்தை எல்லாருக்கும் தந்துவந்தான். இப்போது ‘அவர்களோடு நானும் ஒன்று, எல்லோரும் சமம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்களுடைய வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக எல்லா ஸ்தானங்களுக்கும் போட்டியாக வந்துவிட்டான். இது போதாது என்று நியமங்களில் அவர்களைவிடத் துளிக்கூட கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், உள்ளூற அவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் துவேஷம் ஜாஸ்தியாகத்தானே செய்யும்?
—————————————————————————————————————————————-
Who is responsible? What is the Remedy? (Part 2)
There is a question, “Why did Veda Rakshana stoop so low during British period, though it withstood the weather during Muslim ruling time?”
The answer is, along with whites, new technology in science and ruling of machines came in many spheres. Many new things unknown so far came to lime light. Oneway it was good. But with this wisdom when works were executed there was a possibility of loosing discipline due to fickle mindedness. Machines were created to work as per science. Many works could be executed fast when electricity, steam power, etc. started arriving. Many comforts were possible due to this. But all these comforts are only for sense organs. Once these comforts are shown to the physical organs, its desire expands more and more like a burning fire, to receive further. That’s how many unwanted – gadgets started arriving to spoil the soul (Aathma). Such comforts which were never seen, already ruling all people in the country started attracting Brahmins too. This was another big disaster due to science which accompanied whites. Talking too much with discernment (common sense/rational) we started believing in false and wrong things what otherwise we should have learnt by belief and experience of religious matters. The person who had not left his swadharma even during Muslim ruling period now swung towards comforts. He obtained the skill of dressing better than Englishman, smoking cigarettes, and dancing. Whites also gave lot of jobs for such people who learned these arts.
Only now a big disaster struck. “Till now generation after generation everybody had their traditional job to take care of their livelihood”, never gone through worries. Seeing the Brahmins others too followed, left their traditional works, had fallen for the jobs like banks, railways, etc. given by British. As the machines had increased, some workers were to suffer, leave their jobs and seek for other works. The tradition of “this man, to do this job” was gone and the “perverse competition for works” started. Once the competition starts “does it not automatically accompany with a battalion of jealousy, heart burning, inner fight, hateredness and rivalry?”
Moreover specifically as I narrated earlier, Brahmins enjoying the shrewdness from ancestors like energy generated in cycle by earlier pedaling, even though in minority occupied most of the government jobs, colleges, medical field,law etc. It was but natural, others started hating /disliking them. The British used this to stabilise his rule and created “divide and rule” policy. He spread the rumor story of Arya-Dravida race theory. He strongly planted the seeds of hateredness among the children of one womb. In these circumstances of competition the strategy worked very well.
To double the feeling of bitterness the Brahmins had done one more thing. Leaving his dharmic life style, he joined the whites, started telling “old arrangements are barbaric, one person should not exploit another “. At the same time he never mingled with others, imagined with pride that he was superior to others. Earlier also he never mingled physically with others. But there was a reason for that. Considering the different type of jobs to be done by different people, there was a system even in their food and other habits. Different groups were to live in different circumstances. The place where film is washed is to be dark, where as the cinema shooting place should be with lot of light. In the same office, the person working in the canteen has to be bodily clean with his hands and legs. The person cleaning the machine is to wear shabby shirts with oil. Does it mean, the server in the canteen is superior to the man working with the machine? Same way selfless person, to obtain wisdom (intellect) has to starve where as there is no flaw when a soldier in military eats all types of meats. Just because there is a difference in food habits, can we say there is a division between a Brahmin and a Kshatriya? For that sake assuming there is no division, if he tries to mingle with other, sit along with him and takes food, it is but natural, he is tempted to taste soldier’s food. That temptation drags him to the extreme level to shake the basic principle of dharma. Each society is destined to have their own tradition, habits, food regulations, etc. Under the impression of equality, if everybody starts moving shoulder to shoulder, mix the independent arrangement made for each group, the whole society gets rotted, spoiling the entire general work culture. That’s why earlier in the villages they seperated agraharam, velalar street, Chery, etc. this was possible in village life. In the new city life this was not possible. All were to go together, work in shifts, eat together in canteen and take food from the same kitchen. In various circumstances togetherness was a necessity.The Brahmins who were to definitely observe certain Anushtanams (rituals) became like others in every field. He became like others, flouted everything in air, since timings of office, college, etc. were a hindrance to his daily rituals. Till now he observed all these things for the welfare of others. Mainly for that purpose only. He was like a trustee in the society to protect all these dharmas and the benefits were distributed. Now he said “I am also one among them, all are equal” and became a competitor in all fields giving heart burns to others. Not only that, he stooped lower than them in following rules of living. Does it not increase hateredness towards him when he thinks he is superior?
Categories: Deivathin Kural
Leave a Reply