Periyava Golden Quotes-502

album1_141

ஸநாதனமான ஆசார்யபீடமொன்றில் நான் இருப்பதால் நான் இந்த விஷயத்தைச் சொன்னால் உடனே vested interest [ஸ்வய நல நோக்கம்] எனற கண்டனம் வரும். வந்தாலும் வரட்டும் என்றுதான், மனஸில் படுவதைச் சொல்லாவிட்டால் தோஷம் என்பதால் சொல்கிறேன். இப்போது அநேக ஸ்வாமியார்கள் தோன்றியிருக்கிறார்கள். இவர்கள் ஹிந்துமதம் என்ற parent body -யிலிருந்து, மூலஸ்தானத்திலிருந்து தாங்கள் பிரிந்து போய்ச் சீர்திருத்த மதம் தனியாக ஆரம்பித்திருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. அதாவது இவர்கள் பெயரிலும் ஸ்தாபனம், மிஷன் ஏதாவது இருந்தாலும் அதை ஹிந்து மதத்தின் main stream–கு வெளியாக பிரம்ம ஸமாஜ், ஆர்ய ஸமாஜ் என்று அநேகச் சீர்திருத்த இயக்கங்கள் தனியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வதில்லை. ஸம்ப்ரதாயமாக வந்துள்ளதும், இன்றும் பெரும்பாலான ஜனங்கள் விட்டுப் போகத் தைரியமில்லாமல் ஒட்டிக் கொண்டிருக்கிற மாதிரி இருப்பதுமான traditional ஹிந்து மதத்தின் பிரதிநிதிகளாகவே தங்களை இந்த ஸ்வாமிஜிகள் சொல்லிக் கொள்கிறார்கள். நம்முடைய வேதாந்தம், இதிஹாஸம் இவற்றைப் பற்றி நன்றாகப் பிரஸங்கம் செய்தும் புஸ்தகம் போட்டும் பிரசாரம் பண்ணுகிறார்கள். நம்முடைய பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். பஜனையிலிருந்து யோகம் வரையில் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கிறபோது traditional-ஆக வந்துள்ள எங்களைப் போன்ற தர்ம பீடங்களை விடக்கூட இவர்கள்தான் மதப்பிரசாரத்துக்காக நிறையப் பண்ணி, “மறுமலர்ச்சி” என்கிறார்களே அப்படி ஸமய விஷயத்தில் ஜனங்களைச் சக்தியோடு திருப்பி வருகிறார்கள் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கூட்டம் இவர்களிடம் சேருகிறது. இவர்களில் சிலருக்கு விசேஷ வாக்குவன்மை இருக்கிறது. ஆத்மார்த்தமான விஷயங்களைப் பொது ஜனங்கள் ரஸித்துக் கேட்கும் விதத்தில் அழகாகவும் மனஸில் பதியும்படியும் எடுத்துச் சொல்கிறார்கள். இன்னம் சில பேருக்கு வியாதி, வக்கை, வேறே ஏதோ கஷ்டம், ஆபத்து என்றால் அதைத் தீர்த்து வைக்கிற சக்தி இருக்கிறதென்று போகிறார்கள். ஸித்திகள் உள்ளவர்களாக இப்படிச் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் போகிறவர்கள் இம்மாதிரி லாபங்களைப் பெறுவது மட்டுமில்லாமல் சில ஸமயாநுஷ்டானங்களையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Since I am heading an ancient peetam-religious seat, I’m aware that I may be accused of vested interest if I broach this subject. But if I failed to do so, it will be a serious lacuna (dosham) on my part of not expressing my true feeling. Many God men have appeared today on the scene. But they do not claim to have founded a new religion, away from the sanctum sanctorum of the Hindu religion. Though they have establishments and missions of their own, they do not claim to be outside the mainstream of Hindu religion, as a separate body, like the reformist movements of Brahmo Samaj or Arya Samaj. They still claim to represent the traditional religion to which many people still belong and are afraid of giving up. They do propaganda about our Vedanta and epics through their speeches and pamphlets. They celebrate our festivals. They teach everything from Bhajans to Yoga. On seeing them, it is even felt that these people are doing more for the propagation of the Hindu religion and its rejuvenation than the traditionalists like us and they seem to successfully attract people to the religion. They are such crowd pullers. Many of them possess a facile linguistic skill.  They are able to present deep spiritual matters in an easy, appreciable way to the masses. The public are drawn to some in the hope that they will find a relief for their illnesses and other troubles. Some of them possess such Sidhdhis-power. The public, while profiting from such powers also start following some of the religious traditions. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading