Periyava Golden Quotes-450

album1_83
ஒருத்தன் கடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதால் அத்தனை பேருக்கும் கஷ்டம். “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்” என்று கம்பரே சொன்னபடி, கடன் வாங்கிவிட்டவன் கொடுத்தவனை நினைத்து எப்போதும் பயந்து கொண்டு கஷ்டப்படுகிறான்; தப்பித்துக் கொள்வதற்காகப் பொய் சொல்கிறான்; மிஞ்சினால் கடனை அடைப்பதற்காகத் திருடவும் துணிகிறான். கடன் பட்டாரைப் போல, அல்லது அதை விடவும், “கடன் கொடுத்தார் நெஞ்சமும்” கலங்கிக் கொண்டுதான் இருக்கம் – பணத்தை அழுதவன் இவன் தானே? அது திரும்பி வருமா வராதா என்று எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பான். கடன் கொடுத்தவனான இவனுக்கு எத்தனை எரிச்சலும் மனக் கொதிப்பும் உண்டாயிருக்கிறது என்பது “கடன்காரன், கடன்காரி” என்று வசவு ஏற்பட்டிருப்பதிலிருநந்தே தெரிகிறது. கடன்காரன் என்றால் கடன் கொடுத்தவன், வாங்கினவன் என்று இரண்டு தினுஸாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ள இடமிருக்கிறது! வளர்ந்த குழந்தைகள் செத்துப் போனால், “கடன்காரன் (கடன்காரி) போயிட்டானே (போயிட்டாளே)” என்று தாயாக இருக்கப்பட்டவள் மனஸ் நொந்து பிரலாபிப்பதுண்டு. இங்கே கடன்காரன் என்றால் பூர்வ ஜன்மத்தில் நமக்குப் பணமாகவோ உழைப்பாகவோ கொடுத்தவன் என்று அர்த்தம். அப்படிக் கொடுத்ததை, கடனைத் திருப்பி வாங்கிக்கொள்கிற மாதிரி வாங்கிக் கொள்ளவே இப்போது பிள்ளையாகப் பிறக்கிறான். பெற்றவர்களுக்குச் செலவு, தேஹ ச்ரமம் எல்லாம் வைக்கிறான். இவற்றில் தான் முன் ஜன்மாவில் கொடுத்த அளவுக்குத் திரும்ப அவர்களிடம் வாங்கிக் கொண்டவுடன் கடன் தீர்ந்தாயிற்று என்று கண்ணை மூடிக் கொண்டு போய்விடுகிறான். “ஜன்மாந்தர கடன்காரன்” என்று சொல்கிற போதும் பூர்வஜன்மத்தில் நாம் ஒருத்தனால் பெற்றதைத் திரும்ப நம்மிடமிருந்து வாங்கிக் கொள்ள அவன் வந்திருக்கிறான் என்றே அர்த்தம். – ஜகத்குரு ஸ்ரீ   சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


When a person develops the habit of borrowing money, he is the source of suffering to many. Tamizh Poet Kamban draws a comparison between the agonized state of the demon King Ravana’s mind and that of a person who is in a state of debt. The borrower is always afraid of the lender and thus suffers. He lies to escape from the lender. When things go beyond control, he even resorts to thieving to settle his debt. The lender also is always worried whether the money will be returned to him or not. The amount of tension and agony of the lender is evident from the words used in Tamizh to scold a person-‘kadankaaran’ or ‘kadankaari’ (kadan meaning debt). The word ‘kadankaaran’ seems to denote both the lender and the borrower. When grown upchildren die, the bereaved mother always laments that the ‘kadankaaran’ or ‘kadankaari’ has died. Here the word denotes that the deceased person had helped us in our previous birth in a monetary or physical form. He or she was born as a child only to collect the debt. He makes his parents spend and labor for him. When the debt is settled, he departs from this earth. When we scold somebody as “Janmaanthirak Kadankaaran” it means that he has come to us to collect his debt from the previous births. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading