Periyava Golden Quotes-213

album2_84

எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈஸ்வரன் இருக்கிறான் என்று ஒருத்தன் உணர்கிறபோது தான் அவனுக்கு அருள் உண்டாகிறது. இவன் தன் மநுஷ்யர்களுடன் ஸமமான நிலையில் இருந்து கொண்டு பிரியம் காட்டுவதைவிட இன்னும் ஒரு படி கிழே இறங்கி தன்னைக் குறைத்துக் கொண்டு, மற்றவனை ஈஸ்வரனாக நினைத்துதான் ஸேவை செய்கிறான். கொஞ்சங்கூட மமதையே இல்லாமல் “நாம் பெரியவர், உபகாரம் பண்ணுகிறோம்” என்ற அகந்தையே இல்லாமல் இவன் ஸமஸ்தப் பிராணிகளிடம் ஈஸ்வர ஆராதனையாக அன்பைச் செலுத்துகிறபோது, அதுவே இவனை ஸகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி விடுகிறது. இவனுடைய அன்பு வெறும் பேச்சாகவும் எண்ணமாகவும் மட்டுமில்லாமல், ஈஸ்வராநுக்ரஹத்தை வாங்கித் தரக்கூடிய அருட் சக்தியைப் பெற்றுவிடுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Only when a person realizes that God is omnipresent and all living beings are equal, he is blessed by God. In fact, he should not consider himself even equal to his fellow beings. He should consider himself lower in status to them and serve them, considering all the living creatures as embodiments of divinity. There should not be even an iota of ego or arrogance in his attitude; the service should be a form of worship. When he does so, his Love does not remain as a mere thought or word but acquires a power to attract the divine blessings of the Supreme Power, Eshwara. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. Jaya Jaya Sankara! the Tamil Language I could not follow since I do not write or spoke, please make it easy to translate either in English/Telugu so that so many people will cherish by reading the enormous miracles of Maha periyaval Swamies.

Leave a Reply to Kameswara Prasad ManchellaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading