Mangalam-Sri Adi Sankaracharyal’s Guru Bhakthi!

Sankara and Sishyas

 

Jaya Jaya Shankara Hara Hara Shankara – It’s been an incredible couple of weeks where we saw the greatness of our Adi Aacharyal in this Jayanthi of Jayanthi’s Special series. Of course what we saw is probably a drop in the great ocean. Let’s do a mangalam to this series by following our Adi Aacharyal’s Guru Bhakthi, chanting Jaya Jaya Sankara Sankara Hara Hara Sankara, following the 13 point upadesams from Deivathin Kural on account of Sri Sankara Jayanthi, and doing a Poorana Saranagathy in the lotus feet of our great Sankararacharya Guru Parampara. Bhava Sankara Desikame Charanam!

Thanks to Sri ST Ravikumar, our sathsang seva member for the translation. Ram Ram


ஆதிசங்கரரின் ஆசார்ய பக்தி

 

ஆசார்யாள்என்ற மாத்திரத்தில் லோகமெல்லாம் நினைத்துப் போற்றும் நம் பகவத்பாதாளுக்கு இருந்த குருபக்தி சொல்லி முடியாது. பத்ரிநாத்தில் அவர் தம்முடைய குருவான கோவிந்த பகவத்பாதரையும், பரமகுரு (குருவுக்கு குரு) வான கௌடபாதரையும் ஸாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமாகவே பார்த்து, அப்போதுதான் தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லி, அடிக்கு அடி அவர்களை நமஸ்காரம் பண்ணினார், என்று சொல்கிறதுண்டு. இவரே அந்த தக்ஷிணாமூர்த்தியின் அவதாரந்தான். குருவின் மஹிமையை ஆசார்யாள் ஒரு இடத்தில் ச்லாகித்துச் சொல்லும்போது, “பித்தளையைக் கூடப் பொன்னாக்குகிற ஸ்பர்சவேதி மாதிரி குருவானவர் பித்தளை மனஸுக்கரார்களையும் மாற்றித் தங்கமாக ஜ்வலிக்கச் செய்பவர் என்று சொன்னால்கூட குரு மஹிமையை உள்ளபடி சொன்னதாகாது. ஏனென்றால் ஸ்பர்சவேதியில் இருந்த பித்தளை தான் மட்டுமே ஸ்வர்ணமாக ஆகுமே தவிர, மற்ற பித்தளை வஸ்துக்களை ஸ்வர்ணமாக்குகிற ஸ்பர்சவேதியாக மாறாது. ஆனால் குருவை ஆச்ரயித்த சிஷ்யனோ, தான் பூர்ணத்வம் பெறுவதோடு மட்டுமின்றி, தானும் குருவாகி மற்றவர்களுக்குப் பூர்ணத்வம் தருபவனாகி விடுகிறான். அதனால் குரு ஸ்பரிசவேதிக்கும் மேலே” என்கிறார்*. காசியில் பரமேஸ்வரனே சண்டாள வேஷத்தில் வந்துபோது, “ஆத்ம ஞானியான ஒருத்தன் பிராம்மணனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை;அவன் சண்டாளனாகப் பிறந்தவனாயிருந்தாலும் ஸரி, அவனே எனக்கு குரு” என்று பரம விநயமாகச் சொன்னார்” – ஜகதாசார்யர் என்று பிருதம் பெற்றவர் இப்படி நடுவீதியில் சொன்னார் *.

Aacharya Bhakthi of Sri Adi Shankara.

The moment one hears the word Aacharya, the only person who comes to the mind is Sri Adi Shankara. But Sri Shankara Himself, who is celebrated by the entire world as Acharya, had an unfathomable Guru Bakthi which can never be articulated fully. It is believed that In Badrinath, Sri Shankara worshipped His Guru Govindha Bagavath Padhar and Paramaguru (Guru’s Guru) Kouda Padhar as the very incarnation of  Dakshinamurthy and sang the Dakshinamurthy Ashtakam, while prostrating for every line in it. He Himself is the Avathar of Dakshinamurthy. Aacharyal, while highlighting the greatness of Guru in the Sloka says,” To speak of the greatness of Guru, it won’t suffice to say that a Guru, just like an Alchemist who transforms copper into gold, transforms the copper minds of the disciples to gold and let them shine in enlightenment. The two cannot really be paralleled so to speak; because in Alchemy, only the copper becomes gold and it cannot by itself become a medium of Alchemy and change another piece of copper into gold. Whereas a Sishya, who has gone into the golden embrace of his Guru, not only attains his own fulfillment but also becomes a Guru himself and is capable of giving forth fulfillment to others too. So Guru stands above an Alchemist”* Once in Kasi, when Lord Parameswara Himself appeared in the form Sandaala (one who is considered to be of low caste by birth) “An Athma Gnyani need not necessarily be a Brahmin. An enlightened man, even if he is a Sandaala by birth becomes my Guru,” said Acharya with utmost humility—He who is celebrated by the entire world as the Ultimate Guru said so, standing in the center of the street.*

*1 First Sloka of ‘Shadhashloki’

*2 A few more instances of Sri Adi Shankara’s Guru Bakthi can be seen in Dheivathin Kural ,Part Two, under the heading “Guru Bakthi”.



Categories: Deivathin Kural

Tags: ,

3 replies

  1. JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA…

  2. “ஆசார்யாள்” என்ற மாத்திரத்தில் லோகமெல்லாம் நினைத்துப் போற்றும் நம் பகவத்பாதாளுக்கு இருந்த குருபக்தி சொல்லி முடியாது.”
    அதே போல் மஹாபெரியவாளிடம் நமக்கு இருக்கும் அபிமானமும் பக்தியும் சொல்லி முடியாது! ஆதி ஆச்சார்யாளிடம் நம் பெரியவா கொண்டுள்ள பக்தி நம்மையும் புனிதர்களாக்க வேண்டும்! பரமேஸ்வர ஸ்வரூபமான ஆதி ஆச்சார்யாளையும் மஹா பெரியவாளையும் என்றும் வணங்குவோம்! ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர!

  3. Jaya Jaya Sankara Hara Hara Sankara! my Lord Maha Periyal before Audi Sankara Bhaghavaath Padhulu has done so many miracles and good blessings to so many un.countable devotees. The stories are infinite and credible to Maha Periyaval Swamies only can bless like that, the one drop if we can remember among all ocean drops it can be cherished and the very essence of Hindu cult will be well retained because these experiences are very popular among people all over universe, such selfless service showers have been spreaded on devotess of all religions all over world. So as just a bindu of lakhs devotees, we have to spread such one story at one gathering if we can able to explain it is enough on our part. jAYAHO mAHAA PERIYAVA… MEE DASAANU DAASUDU. M.Kameswara Prasad (Kameswarananda naadha vijayamba sahitha),A.P.Nellore.

Leave a Reply

%d