HH Bala Periyava Dasakam on Sri Maha Periyava

Periyava-and-BalaPeriyava

Jaya Jaya Shankara Hara Hara Shankara – An excellent dasakam (10 stanza stothram) by Sri Bala Periyava on his Parama Guru. Imagine this was compiled when HH was 15 years old. What a Guru Bhakthi and Parama Gnanam!  As Sri Ganesa Sarma says all the aacharays in this Guru Parampara is Saakshath Adi Sankara Himself! Thanks to our Sathsang volunteer seva member for the translation. Ram Ram.

ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா பற்றி எழுதிய தசகம்

ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது பதினைந்தாவது வயதில் (1983 ம் வருடம் மே மாதம் 29ம் தேதி) பட்டம் ஏற்றவுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு பெரியவா பற்றி எழுதிய தசகம். (பத்து ஸ்லோகம் அடங்கியது).

1.ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும்
பக்தாநாம் ஹிதவக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே  II

வேதங்கள் ஸ்மிருதிகளில் கூறப்பட்ட அனைத்து  தர்மங்களையும்அனுஷ்டித்துக்காட்டி ஈடுபடுபவரும்,உலகின் குருவாக விளங்குபவரும் பக்தர்களுக்கு நன்மையைப் புகட்டுபவருமான குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.

2.அத்வைதானந்தபரிதம் ஸாதூநாமுபகாரிணம்
ஸர்வ சாஸ்திரவிதம் சாந்தம் நமஸ்யே சித்தசுத்தயே II

அத்வைத நிலையின் பேரானந்தத்தினால் திளைத்துள்ளவரும் நல்லோர்களுக்கு விருப்பத்தை நிறைவேற்றுபவரும் எல்லா சாஸ்திரங்களையும் அறிந்தவரும் அமைதியே வடிவானவரும் ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.

3.கர்ம பக்தி ஞானமார்க ப்ரசாரே பத்தகங்கணம்
அனுக்ரஹப்ரதாதாரம் நமஸ்யே சித்தசுத்தயே  II

கர்மா பக்தி ஞானம் என்ற மூன்று வழிகளையும், (நடந்து காட்டி), மற்றவர்க்குப் பிரசாரம் செய்வதில் முனைந்துள்ளவரும், எப்போதும் யாவர்க்கும் அனுக்ரஹம் பண்ணுபவரும் (பார்வை,புன்முறுவல்,பேச்சுகளால்) ஆன குருவை மனம் சுத்தமாவதற்கு வணங்குவேன்.

4.பகவத்பாதபாதாப்ஜவிநிவேசிதசேதஸ
ஸ்ரீ சந்த்ரசேகரகுரோ ப்ரஸாதோ மயி ஜாயதாம் II

ஆதிசங்கரரின் பாதகமலங்களில் ஈடுபட்ட மனதை உடையவரான ஸ்ரீ சந்த்ரசேகர குருவின் கருணை கடாட்சம் என்னிடம் உண்டாகட்டும்.

5.சேத்ர தீர்த்தகதாபிக்ஞ ஸச்சிதானந்தவிக்ரஹ
சந்திரசேகரவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி II

ஒவ்வொரு புனிதஸ்தலம், தீர்த்தம் முதலியவற்றின் உண்மைக் கதைகளை அறிந்தவரும், ஸச்சிதானந்த வடிவமானவரும் ஆன ஸ்ரீ சந்திரசேகரரான சிறந்த குரு எப்பொழுதும் என் மனதில் வசிக்கட்டும்.

6.போஷணே வேத சாஸ்த்ராணாம் தத்தசித்தமஹர்நிசம்
சேத்ரயாத்ராரதம் வந்தே ஸத்குரும் சந்திரசேகரம் II

வேதசாஸ்திரங்களை நன்கு வளரச்செய்யும் கார்யத்தில் அல்லும் பகலும் மனதைச் செலுத்தி ஆலோசிப்பவரும் (பல திட்டங்களை உருவாக்கியவரும்) பற்பல புண்ணிய சேத்திரங்களுக்கு பாத யாத்திரை செய்வதில் ஈடுபட்டவரும் (உண்மையில் சேத்ரங்களுக்கே பெருமை ஏற்படுமாறு விஜயயாத்திரை அமைகிறது) ஆன ஸத்குரு ஸ்ரீ சந்திர சேகரரை வணங்குகிறேன்.

7.வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம்
குருர்யஸ்ய மஹாதேவ தம் வந்தே சந்திரசேகரம் II

தகுதியுள்ளவர்களை வேதம் கற்றவர்களாயும் வேதம் கற்றவர்களை வேதப்பொருளை அறிந்தவர்களாகவும் ஆக்கும் பணியில் முயற்சியுடையவரும் ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதியை குருவாக உடையவரும் ஆன சந்திரசேகரரை வணங்குகிறேன்.

8.மணிவாசக கோதாதி பக்தி வாகம்ருதைர்ப்ருசம்
பாலானாம் பகவத்பக்திம் வர்த்தயந்தம் குரும் பஜே II

மாணிக்கவாசகர் ஆண்டாள் முதலியோரின் பக்தி ததும்பும் பாட்டுகளைப் பரப்புவதன் மூலம், குழந்தைகளுக்கு கடவுள் பக்தியை வளர்பவரான குருவை ஸேவிக்கிறேன்.

9.லகூயதேசைர் நாஸ்திக்யபாவமர்த்தனகோவிதம்
சிவம் ஸ்மிதமுகம் சாந்தம் ப்ரணதோஸ்மி ஜகத்குரும் II

எளிய யாவர்க்கும் மனதில் பதியுமாறு தெளிவான தன் தெய்வீகக் குரலின் (பேச்சுகளால்) உபதேசங்களால் நாஸ்திக்ய எண்ணங்களை அடியோடு அகற்றும் விஷயத்தில் நிகரற்றவரும் புன்னகை பூத்த முகத்தினால் மங்களங்களை அளிப்பவரும் சாந்திவடிவெடுத்தவருமான ஜகத்குருவை வணங்குகிறேன்.

10.விநயேந ப்ரார்த்தயேஸ்ஹம் வித்யாம் போதய மே குரோ
மார்கமன்யம் த ஜானேஸ்ஹம் பவந்தம் சரணம் கத II

ஒ குருவே நான் எனக்குக் கல்வியை (ஆத்ம ஞானத்தை) போதிக்க வேண்டும் என்று வணக்கத்துடன் வேண்டுகிறேன் எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை உம்மையே சரணம் அடைந்துள்ளேன்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
A Dasakam on Sri Sri Jagadguru Sri Sri Maha Periyava
This Dasakam ( comprising of ten stanzas) on Sri Sri Jagadguru Sri Maha Periyava was composed by Sri Sri Vijayendra Saraswati Swamigal, when he ascended the Kanchi Kamakoti Peetam at the age of fifteen (on 29 May, 1983).

 

1. Shruti smruti puraanokta dharma margaratham gurum
Bhaktaanaam hitavakthaaram namasye chittashudhaye II

He who adheres to all dharmas as prescribed in the Shruti (Vedas) and Smruti,  He who is the Guru of the whole world,  He who grants only good to the bhaktas (devotees)
To Him I shall bow, to cleanse my mind.

2.Advaitaanandaparitam sadhunaam upakaarinam
Sarvasastravidham shantam namasye chittashudhaye II

He who is immersed in the greatest joy of Advaita,
He who fulfills the wishes of the good people,
He who has the knowledge of all sastras,
He who is peace personified,
To Him I shall bow to cleanse my mind.

3.Karma bhakti gnanamaarga prachaare badhakankanam
Anugrahapradaataaram namasye chittashudhaye II

He who follows the (three) paths of Karma, Bhakti and Gnana
He who spreads these amongst others
He who always blesses others (by his looks, words and smile)
To Him I shall bow to cleanse my mind.

4.Bhagavadpaadaabjaviniveshitachetasa
Sri chandrasekhara guro prasaadomayi jaayataam II

He whose mind is set (focused) at the lotus feet of Sri Adi Sankara
May the compassionate blessings of that Chandrasekhara Guru be in me (reach me).

5.Kshetra teertha kathapigna sachidanandavigraha
Chandrasekharavaryo me sannidhattam sada hrudhi II

He who knows the kathas (sthala puranas) of the holy places and the holy teerthas
He who is Sachidananda roopam
May that Chandrasekhara Guru always reside in my heart.

6.Poshane vedasastranam dattachittamaharnisham
Kshetrayatraratham vande sadgurum chandrasekharam II

He who thinks day and night about nourishing the Vedas and Sastras
He who has been to many holy kshetras by pada yatra (only by walk)
To Him, Sadguru Chandrasekhara, I bow.

7.Vedagnana vedabhashyagnana karthum yasya samudhyam
Gururyasya mahadeva tam vande chandrasekharam II

He who makes the deserving learn the Vedas,
He who also makes them learn the meaning of the Vedas
He who has Sri Mahadevendra Saraswati as his guru,
To Him, Sri Chandrasekharendra, I bow.

8.Manivaachaka godhadhi bhakti vakamruthairbrusham
Baalaanam bhagavadbhaktim vardhyantam gurum bhaje II

He who spread the bhakti poems of Manikkavachakar and Andal,
He who promoted in children (the concept of) devotion to God (through these poems)
To that Guru, I bow.

9. Laghooyadechair naastikyabhavamardhanakovidham
Sivam smitamukham shantam pranatosmi jagadgurum II

He whose divine voice (speech) is simple and easily understandable,
He who through these words,eliminated atheistic thoughts,
He who is goodness itself, He who has a smiling face,
He who is Peace Personified,
To that Jagadguru I bow.

10. Vinayena prarthayesham vidhyam bodhya me guro
Margam anyam na jaanesham bhavantam sharanam gatha II

O Guru, I pray to you with humility
To teach (give) me knowledge
I do not know any other path
I have surrendered at your feet.

Jaya Jaya Sankara hara hara Sankara

 

 

 

 

 

 

 Categories: Krithis

Tags:

7 replies

 1. I am looking for this dasakam in Sanskrit Devanagari script. Whereat I can get this ?

  • I listened to MS Subbulakshmi’s rendition. I was able to script it in Sanskrit because of her excellent diction. I am not a Sanskrit scholar or anything. So, please feel free to verify it with one. Sri Gurubhyo Namaha!!

   श्रुतिस्मृतिपुराणोक्तधर्ममार्गरतम् गुरुं
   भक्तानां हितवक्तारम् नमस्ये चित्तशुद्धये ||

   अद्वैतानन्दभरितम् साधूनाम् उपकारिणं
   सर्वशास्त्रविदम् शान्तं नमस्ये चित्तशुद्धये ||

   कर्मभक्तिज्ञानमार्गप्रचारे बद्धकङ्कणम्
   अनुग्रहप्रदातारम् नमस्ये चित्तशुद्धये ||

   भगवत्पादपादाब्जविनिवेशितचेतस:
   श्री चन्द्रशेखरगुरो: प्रसादो मयि जायताम् ||

   क्षेत्रतीर्थकथाभिज्ञ: सच्चिदानन्द विग्रह:
   चन्द्रशेखरवर्यो मे सन्निधत्ताम् सदा हृदि ||

   पोषणे वेदशास्त्राणां दत्तचित्तमहर्निशं
   क्षेत्रयात्रारतं वन्दे सत्गुरुं चन्द्रशेखरम् ||

   वेदज्ञान् वेदभाष्यज्ञान्कर्तुं यस्यसमुद्यमहा
   गुरुर्यस्य महादेव: तं वन्दे चन्द्रशेखरम् ||

   मणिवाचक गोदादि भक्तिवागमृतैर्बृशम्
   बालानाम् भगवत्भक्तिं वर्धयन्तं गुरुं भजे ||

   लघूपदेशैर्नास्तिक्यभावमर्दनकोविदम्
   शिवम् स्मितमुखं शान्तं प्रणतोस्मि जगत्गुरुं ||

   विनयेन प्रार्तयेहं विद्याम् बोधय मे गुरो
   मार्गमन्यम् न जाने अहं भवन्तं शरणम् गत: ||

 2. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe Charanam! Beautiful, Bhakthi drenched Slokas on Maha Periyava rendered by Sri Bala Periyava at such a young age! MS Amma has rendered this Sloka in her Divine Voice!

 3. MS has rendered this beautiful shloka in het album Shatabdi Samarpan.
  Infact purchases family has been chanting this hymn daily since the late 80s.
  Thanks for sharing.

  .

Trackbacks

 1. HH Bala Periyava Dasakam on Maha Periyava – Smt. MS Amma Audio – Sage of Kanchi
 2. குரு தசகம் ஒலிப்பதிவு; Guru dashakam audio recording mp3 – Sage of Kanchi
 3. குரு தசகம் ஒலிப்பதிவு; Guru dashakam audio recording mp3 – Sage of Kanchi

Leave a Reply

%d