Periyava Golden Quotes-174


Periyava_praying_meenakshi_sudhan
காரியங்களில் நமக்குப் பலவிதமான சந்தோஷங்கள் உண்டானாலும் காரியமில்லாத தூக்கத்திலிருக்கிற பெரிய சாந்தி இவற்றில் இல்லை. ஒரு நாள் தூங்காவிட்டால் எவ்வளவு கஷ்டப்படுகிறோம்? தூக்கத்தில் அப்படிப்பட்ட சௌக்கியம் இருக்கிறது! இதிலிருந்தே காரியம் இல்லாமலிருப்பதுதான் பரம சௌக்கியம் என்று தெரிகிறது. அப்படிக் காரியமே இல்லாமல் தன் உண்மை நிலையான பரமாத்ம ஸ்வரூபத்தில் அமிழ்ந்திருப்பதுதான் தியானம். தூக்கத்திலே ‘நாம் சௌக்கியமாயிருக்கிறோம்’ என்றும் தெரியவில்லை. தூக்கம் கலைந்த பின்தான் தூக்கத்திலே சுகமாயிருந்திருப்பதாகத் தெரிகிறது. இப்படியின்றி, பேரானந்தமாக இருக்கிறோம் என்ற பிரக்ஞையுடன் சாந்தமாக இருப்பதுதான் தியான யோகத்தின் முடிவான சமாதிநிலை. உள்ளுக்குள்ளே அப்படிக் காரியமே இல்லாமல் இருக்கப் பழக்கிக் கொண்டு விட்டால், பிறகு வெளியில் எத்தனை காரியம் செய்தாலும் கூட ஆத்மசாந்த அநுபவம் குலையாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Our actions make us happy in many ways. But in none of these actions do we find the peace that we enjoy during sleep. How we suffer if we lose even a single night’s sleep? There is so much happiness in sleep. Do we not realise from this that the supreme “comfort” or happiness is worklessness. Dhyana or meditation is the state of being absorbed in the Paramatman, a state of non-doing. In sleep we are not conscious that we are happy. It is only when we are awake that we realise that we are happy when we were asleep. The ultimate goal of meditation is samadhi in which we are fully conscious of the great bliss experienced by us. If we teach ourselves to remain in a state of non-doing within (inside ourselves) we will experience tranquillity even though we keep working outwardly. The inner peace will never be disturbed. – Pujya Sri Kanchi Maha Periyava.



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: