Periyava Golden Quotes-163

Periyava_sitting_laughing_sudhan

 

நல்ல ஞான வைராக்கியத்தில் பிடிப்பு ஏற்பட்டவர்கள் கிருஹஸ்தாச்ரமம் ஆனபின் குடும்பப் பொறுப்புகளை விட்டுக் காட்டிலே போய் வைதிக காரியங்களை மட்டும் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். பிள்ளைகுட்டிகளையும் சொத்து சுதந்திரங்களையும் விட்டுவிட்டுப் பத்தினியை மட்டும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு போய்விடவேண்டும். பத்தினி எதற்கு என்றால் இந்திரிய ஸுகத்துக்காக அல்ல. பின்னே எதற்கு என்றால் அக்னி காரியங்களைப் பத்தினி கூட இருந்தால்தான் பண்ண முடியும் என்பதற்காகவே. யாகாதிகளையும் ஒளபாஸனையையும் பண்ணும் பொருட்டே அவளை அழைத்துக் கொண்டு போக வேண்டும். இதுதான் வானப்ரஸ்தம் – வனத்தில் போயிருப்பது என்று அர்த்தம். வீடு வாசலையும், உறவுக்காரர்கள், அவர்களுடைய காரியங்கள் ஆகியவற்றையும் விடுகிற பக்குவம் முதலில் வரவேண்டுமாதலால் வானப்ரஸ்தம் ஏற்படுகிறது. அப்புறம் வைதிக காரியத்தையும் விட்டுவிட்டு ஆத்மா என்ன, பரமாத்ம ஸத்யம் என்ன என்று தெரிந்து கொள்வது ஒன்றிலேயே நாட்டம் வலுத்த பின் குருமுகமாக ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும். பத்தினியையும் வேதகர்மாக்களையும் விட்டு விட்டு குருமுகமாக ஸந்நியாஸ ஆச்ரமம் பெற்று பரமாத்ம ஸத்யத்தையே ஸதாவும் சிந்தித்து தியானித்து, அதை அநுபவத்தில் தெரிந்து கொண்டுவிட வேண்டும். “அந்த ஸத்யம்தான் தானும்; லோகமெல்லாம் அதன் பொய் விளையாட்டு தான்” என்ற அநுபவம் ஏற்பட்டு, சரீரத்துக்கும் மனஸுக்கும் அதீதமான பரம ஸத்யமாக இருந்து கொண்டிருப்பதுதான் மோக்ஷம். பிராரப்தப்படி [முன்வினைப் பயன்படி] சரீரம் இருக்கிற மட்டும் இருந்து விட்டு அப்புறம் மரணம் அடைந்துவிடும். ஆனால் அதைப் பற்றி அநுபவ ஞானியான ஸந்நியாஸிக்கு ஒரு பொருட்டும் இல்லை. வெளி உலகத்தின் பார்வையில், இது வரைக்கும் தேகத்தில் வாழ்ந்த போதே முக்தி நிலையில் இருந்த ‘ஜீவன் முக்தன்’, தேகம் போய் ‘விதேஹ’ முக்தனாகிறான் என்று சொல்வது வழக்கம். அவன் நேரே குணம் குறியற்ற பரமாத்ம தத்வமாகி விடுகிறான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

A person who has the light of knowledge in him and is free from passion must live in the forest giving up family responsibilities and performing only Vedic rites. He must leave his children and property behind and take only his wife with him to the forest. The wife, however, is not meant for carnal pleasure but is a partner in the conduct of rites involving the sacred fire-sacrifices, aupasana, etc. This is the meaning of Vanaprastha. A person qualifies for this stage of life when he is mature enough to leave home and hearth, children, and relatives. Later he gives up the Vedic karma itself and turns his mind exclusively to the quest of the Self. This is the time when he enters the Sannyasa Aahsrama. The man who has thus separated himself from his wife and given up Vedic works is initiated into sannyasa by his guru. He must constantly meditate on the Paramatman and experience the Truth as an inward reality. Also, he must have the realisation that, “That Truth am I, all else is false play”. Then he is by himself, beyond his body and mind, as the Ultimate Truth. This is moksha, liberation. Such a man will continue to dwell in his body until the fruits of his past karma are exhausted. But he will not be affected by such karma as a sannyasin who has inward realisation. From the point of view of the outside world he may still dwell in his body; but even in this state he is liberated. He is now a “Jivanmukhta”. When the body perishes he becomes a “Videha Mukhta”(liberated without the body). And he himself is now the unconditioned Ultimate Truth. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading