Periyava Golden Quotes-106

Periyava_with_mattai_coconut

 

இயற்கை தர்மத்தை அநுஸரித்து பிரம்மச்சாரியானவன் ஸமாவர்த்தனம் பண்ணிக் கொண்டு அப்புறம் விவாஹம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்பதுதான் பொதுதர்மம். பிரகிருதிக்கு எதிர் நீச்சல் போடுவது கஷ்டம். அதன் போக்கிலேயே போய், ஆனாலும் அதிலேயே முழுகிப் போய் விடாமல் கரையைப் பிடிக்க வேண்டும். அதனால்தான் தர்மமாக கார்ஹஸ்தியம் [இல்லறம்] வகித்து அப்புறமே கொஞ்சம் விடுபட்டு வானப்ரஸ்தம், அதற்கும் அப்புறம் பூர்ண சந்நியாஸம் என்று விதித்திருக்கிறது. Nature-ஐ Violent-ஆக எதிர்த்துப் போனால் ஹானிதான் உண்டாகும் என்பதால் இப்படி வைத்திருக்கிறது. நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருப்பேன், ஸந்நியாஸியாக இருப்பேன் என்று நல்ல வாலிபத்திலேயே நினைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் பிரகிருதி வேகத்திலே இழுக்கப்பட்டு அந்த ஆசிரமத்துக்கு விரோதமாக நடந்து கொண்டு விட்டால் மஹத்தான பாபமாகிறது. இதுவே கிருஹஸ்தனுக்குப் பாபமாக இல்லாமல் பிரகிருதி தர்மமாக அநுமதிக்கப்பட்டிருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Our dharma takes into account the natural urges of man. The general rule is that, on his return home from the gurukula, the student must marry and settle down. It is difficult to go against the natural urges. But going along with nature does not mean being swept away in the flow of urges. After all the goal of all our efforts is reaching the other shore-that is release from the worldly existence. The householder must lead a life of dharma with his wife. But later he must become a forest recluse first and then, renouncing everything, a sannyasin. This path to asceticism through stages is based on the fact that curbing the natural instincts is likely to be harmful. A person who decides in his youth to become a naishthika brahmacharin (lifelong student-bachelor) may later succumb to his natural passions. This would be an offence against the ashrama code of conduct and therefore sinful. As a householder he is not guilty of any offence if he goes by his natural urges within the constraints of dharma. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. ஸ்ரீ பெரியவா சரணம்

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading