Mahaperiyava Ashtakam by SaanuPuthiran

Sri Suresh (a.k.a Saanuputhiran) is not an unknown face to us. He has penned several poems on Periyava. Only certain people get that blessing of being a great poet, who brings out the best Tamil along with the intense bakthi towards Periyava. Suresh’s words speak for themselves. I have enjoyed all his poems….This one is yet another gem!…Thanks Suresh for sharing with us…..I have reproduced his email as-is.

 

sri mahaperiyava vaara vazhipaattu potri pamalai-1

பெரியவா சரணம்.

சென்ற ஞாயிறு அன்று ஸ்ரீமஹாஸ்வாமிகள் அனுக்ரஹத்தில் அன்புச் சகோதரன் Ganesh Babu வுடனாக அத்வைத மூர்த்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அவதார ஸ்தலமான காலடி சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் அடியேனுக்கு கிடைக்கப் பெற்றேன். அவ்வமயம் நாங்கள் ஸ்ரீபகவத்பாதாள் ஸ்ரீபாத சன்னதி ஸ்தூபி தலத்தில் தரிசனம் செய்துகொண்டிருக்கின்ற பொழுது நண்பர் Suresh Veeraraghavan அவர்களிடமிருந்து ஒரு விண்ணப்பச் செய்தி வந்தது. ஸ்ரீசரணாளை கிழமைதோறும் போற்றும்படியாக பாடலை அமைத்து அனுப்புமாறு கோரியிருந்தார். ஸ்ரீசரணாளின் க்ருபையிலேயே இப்படியாக ஒரு வாய்ப்பு அமைகின்றது என கருதி, ஆச்சார்யாள் சன்னதியிலேயே அமர்ந்து வாட்ஸ் அப் மூலமாக ஒவ்வொரு பாடலாக எழுதி அனுப்பினேன்.

இன்றைய தினம் காலையில் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. இந்த ஏழு பாடலுடன் இன்னுமொரு பாடலை சேர்த்து எட்டாக ஒரு அஷ்டகமாக செய்யலாமே என வினவினார். இதுவும் ஐயனின் அனுக்ரஹமே; இருப்பினும் இந்த பாடலில் பிழையேதுமுள்ளதோ என்ற ஐயம் மிகைப்பாடாக தோன்றியதால் அன்பு சகோதரர், ஸ்ரீசரணாளின் பரமபக்தரும், ஸ்ரீமஹாபெரியவா அக்ஷரபாமாலை தனை எழுதி ஐயனிடம் நேரிலேயே ஆசிபெற்றவரும், ஸ்ரீகாமாக்ஷி பதிகம் எழுதி அன்னையின் அருளையும் பெற்றவரான திரு.எல்.எஸ். வெங்கடேசன் அவர்களிடம் பாடலை அனுப்பி அவரது உதவிதனிலே சிற்சில மாற்றங்களோடு, ஐயனின் அருட்பிரசாதமாக இந்த ஸ்ரீமஹாபெரியவா வார வழிபாட்டுப் போற்றிப் பாமாலையை உங்கள் அனைவரிடமும் பகிர்கின்றேன்.

சோடஷீயாக 16 ஸ்ரீசரணாளின் முகங்களையும் அன்பர்கள் தரிசனம் செய்யும்படியாக இதனை பகிர்வதால், காணும் இரு கண்களுக்கு சொந்தமான ஒவ்வொரு ஸ்தூலமும், அதனுள்ளாயிருந்து ஐயனை த்யானிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் ஐயனின் அருளால் சித்தசுத்தி பெற்று, அவர்களது பக்தி பன்மடங்காகப் பெருகி, ஆச்சார்யாளின் அனுக்ரஹத்தில் இம்மைக்கும் மறுமைக்கும் நல்லதான அறங்களைச் செய்து தாமும் வாழ்ந்து மற்றோரையும் வாழ்விக்கும் பாக்கியம் கிட்டவேண்டுமென ஆதமார்த்தமாக ப்ரார்த்திக்கின்றேன்.

இந்த பாடலைப் பகிரும் இத்தருவாயில் எந்தன் ஆத்மா அடைகின்ற சாந்தத்திற்கும் சந்தோஷத்திற்கும் வழிவகை செய்த அன்புச் சகோதரர்கள் மூவருக்கும் எந்தன் ஆத்மார்த்தமான நமஸ்காரங்கள்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை!

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

sri mahaperiyava vaara vazhipaattu potri pamalai



Categories: Bookshelf

Tags:

8 replies

  1. குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை!

    பெரியவா கடாக்ஷம்.

  2. Great service by Sri Suresh Krishnamoorthy(Saanu Puthran). It is also a Navagraha Ashtakam. May Maha Periyava’s Blessings be ever on him and us all. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. I request the author or any members of our forum to post word by word meaning for the poem.

  4. Sri Chanu Puthran is a blessed soul,and a receipient of poornashirvadam from Mahaperiava.
    Lucid ashtagam.
    If not mistaken by Sri C P ji may I suggest two minor modifications?
    Tuesday .sricharana could be sricharanaa
    Wednesday. Angayarkanni Na could be ” tannagaram instead of rannagaram.
    Saturday. Guruparvai thannoliyum could also be thannoliyum could have na of tannagaram
    This is for the kind attention of Sri chanuputhran with 1000 apologies
    Ayyarappan

    • பெரியவா சரணம்.

      நமஸ்காரம். ஸ்ரீமஹாஸ்வாமிகள் க்ருபையில் தங்கள் மூலமாக எழுத்து பிழைதனை அறியமுடிந்தது எந்தன் பாக்கியமே! மேற்கண்ட திருத்தங்களாய் செய்து திருத்திய பதிவினை மஹேஷ் அண்ணாவுக்கு அனுப்புகிறேன். சிறியேனின் பிழைதனை அருட்கூர்ந்து பொறுத்தருள வேணுமாய் வேண்டிக்கொண்டு நமஸ்கரிக்கின்றேன்.

      அதீத பிரேமையில் ஆனந்தமாக போற்றுகிற இந்த குழந்தையை ஸ்ரீசரணாள் அன்போடு பிழைகளை அகற்றிக்கொள்ளவும் தங்கள் மூலமாக செய்தருளியதை மஹாபாக்கியமாகக் கருதுகிறேன்.

      பெரியவா கடாக்ஷம்.

      நமஸ்காரங்களுடன்
      சாணு புத்திரன்.

  5. Very divine. Thanks Mahesh. Mr. Chanu Puthiran, you are indeed a blessed soul. May Maha Periyavaa continue to bless you & family.

    • சதாசர்வ காலமும் அந்த பாதாரவிந்தங்களை விட்டு அகலாத மனமும், அமைதியும், எப்பொழுதும் எல்லாருக்குமாக ப்ரார்த்திக்கும் பக்குவத்தையும் அவரது கருணாகடாக்ஷம் அளிக்க வேண்டும் என ப்ரார்த்திக்கின்றேன்.

      பெரியவா சரணம்

  6. Thank you so much sir!!
    Sri Maha Periyava Thiruvadegaley Saranam, Saranam!

Leave a Reply to சாணு புத்திரன்.Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading