பாலு மாமாக்கு கிடைக்காத காட்சி பக்தைக்கு

Thanks to Sri Varagooran mama for the article. What else one wants? Won’t he give darshan to us too like this?? If our bakthi is as pure as the other devotee, He will…Periyava_Temple_with_Balu_Swamigal

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

தேனம்பாக்கம் பக்கத்தில் வெள்ளிக்குளம் என்று ஒன்று இருக்கு. அங்கு ஒரு நாயுடு அம்மா இருந்தார்கள். அவர்கள் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள். அவர் தினமும் ஸ்ரீ மகாபெரியவாளை நமஸ்காரம் செய்ய வருவார்.

ஸ்ரீமகாபெரியவாளிடம் ரொம்ப பக்தி. ஒரு நாள் அவர் என்னை (பாலு) தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தார். நான் வரவில்லை என்றேன். இதை ஸ்ரீ மகா பெரியவா பார்த்துக் கொண்டே இருந்தார்.

என்னிடம் “ஏன் அவள் வீட்டிற்கு போனால் என்ன? உன்னை கூப்பிடறா” என்றார்.

இல்லை, பெரியவா சொன்னா சென்று வருகிறேன் என்றேன்.

‘போய்ட்டு வா’ என்றார்.

அந்த அம்மா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். என்னை ஒரு பெஞ்சில் உட்கார சொல்லிவிட்டு வீட்டை
சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டு ஒரு பலகாயை கொண்டு வந்து வைத்தார். பலகாயிலும் கோலம் போட்டு
வைத்து விட்டு ஸ்ரீ பகவானே,குருநாதா என்று சொல்லிக் கொண்டு பால்,தயிர்,நெய்,வெண்ணெய் இவற்றை கொண்டு
வந்து பலகாயின் பக்கத்தில் வைத்தார். வீட்டில் பூத்த பூக்களை கொண்டு வந்து பலகாய் மேல் போட்டு பின் அதில்
பால்,தயிர்,நெய், வெண்ணெய் கிண்ணங்களை வைத்தார்.

மெதுவாக நமஸ்காரம் செய்தார்.ஒரு ஐந்து நிமிடம் சென்றது.

பிறகு என்னிடம் ‘சாமி ஸ்ரீ பெரியவாளை பார்த்தீகளா?’ என்றார்.

இல்லையேம்மா என்றேன்.

“ஸ்ரீ பெரியவா வந்து சாப்பிட்டார்’ என்றார்.

பின் கிண்ணங்களை பார்த்தால் எல்லா கிண்ணங்களும் காலியாகஇருந்தது. ஸ்ரீ பெரியவா அந்த அம்மாளுக்கு காட்சி கொடுத்திருக்கா.எனக்கு காட்சி கொடுக்கவில்லை

திரும்பி மடம் வந்தேன்.

ஸ்ரீ பெரியவா, ‘என்ன அவாத்துக்கு போயிட்டு வந்தாயா? என்றார்.

போயிட்டு வந்தேன்.பார்த்தேன் என்றேன்.

“சரி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார்.

பாலு பொய் சொல்கிறான் என்ற பேச்சு வரும். வீணாக விஷயம் பரவும், வேண்டாம் என்றார்.

ஸ்ரீ பெரியவா தெய்வம்.



Categories: Devotee Experiences

Tags:

11 replies

  1. jaya jaya sankra hara hara sankara1

  2. English translation

    Balu Mamavukku Kidaikkatha Kaatchi Bhakthaikku
    Experiences: Shri Balu Mama
    Compilation: Thirumathi Revathi Kumar
    Typist: Varagooran Narayanan

    There is a place called VeLLikkuLam near Thenambakkam. There, a Naidu lady used to live. She used to sport a ‘Naamam’ on her forehead. She would come daily to prostrate in front of Periyava.

    She used to have a lot of Bhakthi towards MahaPeriyava. Once she invited me (Baalu Mama) to her house. I turned down the request. MahaPeriyava was observing all this.

    HE addressed me and said, “She is inviting you; why don’t you go to her house? ”
    If Periyava orders, I will definitely go.
    “Yes, go and come”

    That lady escorted me to her house. She requested me to sit on a bench. She proceeded to clean her house entirely with cow dung, put Rangoli and brought a ‘Palagai’ and kept it.
    She also decorated the ‘Palagai’ with Rangoli, kept saying ‘Bagavaane, Gurunaatha’ and kept milk, curds, ghee, butter etc near the Palagai. She also brought flowers grown at her own house and put it on the ‘Palagai’. She then kept the cups of milk, curds, ghee and butter on it.

    She also prostrated in front of it. Five minutes passed like this.
    She then addressed me and asked, “Sir, did you see Periyava?”
    I said I did not.
    “Shri Periyava came and ate”, she said.
    I immediately looked at the cups and they were all empty. Periyava has given Darshan to just that lady. HE did not give me Darshan.
    I returned to the Shri Matam
    “So, did you go to that lady’s house?”, asked Periyava.
    I said yes.
    “Ok, don’t disclose this to anyone. Rumour will spread that Balu is a liar”
    Shri Periyava is God Himself.

  3. யார்கிட்டயுமே சொல்லாதே என்றால் எங்களைப் போன்ற பாப ஜன்மாக்களுக்கு உங்கள் மகிமைகள் எப்படித் தெரிய வரும் மகாபெரியவா? பாலு மாமாவுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் இந்த விஷயத்தில் மகாபெரியவா சொல்லை மீறியதற்கு!

  4. If we are qualified in Bhakthi like that Nayudu Amma and Balu Maama, we will also get such experiences. Because of our poor qualifications, we are not able to get such Divine Experiences. Yey Maha Periyava has kindly allowed us to retain the thought about Him and that, at least, will save us! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  5. admartha Bhakthi is enough.Jaya Jaya sankara. Hara hara sankara

  6. It is a miracle and miracles do happen and Maha Periyava does in hidden way not known to others. Jaya Jaya sankara.

  7. JAYA JAYA SHANKARA!
    HARA HARA SHANKARA!!
    DEVATHI DEVA! I LONG FOR YOUR CONTINUED ANUGRAHAM!!!

  8. Balumama used to be very strict in allowing people to see periava. Periava knows how to make us see Him!!! Periava gives Darshan and sometimes ask paapis like me to tell something to somebody and I failed not because I didn’t want but because of circumstances. He also knows how to pardon us. Strange for the last three hours I was thinking of this type of incident and I see this when I open my mobile. Periava is with me and in me always. This is the proof. Shankaraaaaaaa

  9. புல்லரிக்கிறது…. என்ன ஒரு கருணை பக்தர்களிடம் பெரிவாக்கு. பாதாபி வந்தனம்.

Leave a Reply to balaji690Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading