Gho Matha Samrakshanam – Even the Cow’s Dung Is Pure

7. கோவின் மலமும் பரிசுத்தம்!

Lord Krishna with Cow-3

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Is there is anything in Gho Matha that is considered inferior? All the other 24 lakh species including humans have something inferior in them which goes to show how divine and pure Gho Matha is. Jai Gho Matha!

எதிரிடையாகத் தோன்றுகிறவையும் பசுவிடத்தில் ஒன்று சேர்கின்றன. ரக்த ஸமானமான அதன் க்ஷீரம் புத்தியைக் கெடுப்பதற்குப் பதில் சுத்தப்படுத்துவதைச் சொன்னேன்; உடம்புக்கு சக்தியைக் கொடுப்பதே உள்ளத்துக்கும் சுத்தி தருவதைச் சொன்னேன். இதைவிடவும் எதிரிடையான இன்னொன்று, அதனுடைய கழிவுப் பொருளான கோமயம் என்கிற சாணமும் பரிசுத்தப்படுத்துவதுதான். அது உடம்பு, உள்ளம் இரண்டையும் சுத்தி செய்வதாக இருக்கிறது. கழிவுப் பொருளான மலம்தான் பொதுவில் மிகவும் அசுத்தமானதாக இருப்பது; நோய் நொடிகளைப் பரப்புவது; பரம துர்கந்தமாகவும் இருப்பது. அதை உடனேயே தேய்த்து அலம்பி சுத்தம் செய்வோம். ஆனால் கோவின் மலமோ மற்ற மலங்களையும், ஏனைய அசுத்தங்களையும் போக்குவதாக இருக்கிறது; நோய்க்கிருமிகளை அழிப்பதாக இருக்கிறது. அது துர்கந்தமும் வீசுவதில்லை. அதற்குப் பவித்ரமான, ஆரோக்யமான ஒரு தினுஸு மணம் இருக்கிறது.

மற்ற பிராணிகளின் மலம் புனிதத்தன்மையைக் கெடுத்து அசுத்தி செய்வதாயிருக்க, கோமயம் மட்டும் அசுத்தியை நீக்கிப் புனிதம் செய்வதாக இருக்கிறது. சாப்பிட்ட உச்சிஷ்டம் – எச்சில் என்பது – ஸுகாதாரப்படியும் அசுத்தம்; சாஸ்த்ரப்படியும் மடித்தப்பானது. அதன் அசுசியைப் போக்கிப் புனிதப் படுத்துவது கோமயம். அதனால்தான் எச்சிலிடுவதற்கு கோமயத்தை உபயோகிப்பது. பரம சுத்தத்தை க்ருஹத்துக்கு வரவழைப்பதற்காகவே, ஆரோக்யலக்ஷ்மியையும் ஸௌமங்கல்ய லக்ஷ்மியையும் நம் க்ருஹத்தில் குடிகொள்ளப் பண்ணுவதற்காக வாசலில் கோலம் போடும் இடத்தில் சாணம் தெளிப்பதும், வீட்டைச் சாணியால் மெழுகுவதும். இப்போது பாஷனின் பெயரில் இந்தப் பழக்கங்கள் எல்லாம் போய், எங்கே பார்த்தாலும் infection, pollution என்று ஆகியிருக்கிறது.

கோ
மயம் எவ்வளவு புனிதமாக நினைக்கப்படுகிறது என்பதற்கு அநேகச் சான்றுகள் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஸந்நியாசிக்கு அக்னி ஸம்பந்தம் கூடாது என்ற விதியை ரொம்பவும் கண்டிப்பாகப் பின்பற்றுகிற ஸாதுக்கள் உண்டு. அவர்கள் அக்னி மூட்டிச் சமைத்த ஆஹாரம் எதையும் புஜிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் விறகு, கரி மூட்டாமல் முழுக்கவும் பசுஞ்சாணி விரட்டியிலேயே அக்னி மூட்டி அதிலே சமைத்ததென்றால் அப்போது தோஷமில்லை என்று அதை புஜிக்கிற வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். பசுவுக்கு இருக்கப்பட்ட புனிதத்தன்மையால்தான் இப்படி அதன் மலத்துக்குங்கூடப் பெருமை இருக்கிறது.Categories: Deivathin Kural, Samrakshanam

Tags:

3 replies

 1. Dear Sri Sai Srinivasan,
  I was watching this wonderful documentary on Gho maths, ‘one man one cow one planet’, One Man One Cow One Planet: http://www.youtube.com/playlist?list=PLF5467D7906C0FE5A

 2. English Translation – Thanks a ton to Kanchi Paramacharya FB Community

  7. Even the Cow’s Dung Is Pure
  |
  What appears to be opposite come together in the cow. I have said that its milk which is like its blood instead of spoiling the mind purifies it. What gives energy to the body also gives purity to the mind. More than all these, its dung which is actually its excreta also purifies. It purifies both the body and the mind. Usually, any excreta is dirty, foul smelling and capable of spreading disease. But the cow’s excreta is capable of removing all other dirt and killing disease causing bacteria. It has no foul smell. In fact, it has a kind of healthy smell.

  There are several proofs to show how holy the cow dung is considered. There are Sadhus who strictly follow the rule that the sanyasi should not have any connection with fire. They will not take any food that is cooked on fire. But a section of sanyasis follow the custom of taking food cooked entirely by using cow dung cakes. It is because of the cow’s divinity, its dung too enjoys such greatness.

  • Gomatha Stuti

   Namo devyai Maha devyai,
   Surabyai cha namo nama.
   Gavam Bheeja swaroopaya ,
   Namasthe Jagad Ambike. 1

   Namo radha priyayai cha
   Padmamsaya namo nama,
   Nama Krishna priyayai cha
   Gavam mathre namo nama. 2

   Kalpa vruksha swaroopayai ,
   Sarvesham sathatham pare,
   Ksheeradayai , dhanadayai,
   Budhidayai namo nama. 3

   Shubhayai subhadarayai
   gopradhayai namo nama
   Yasodhayai kerthidhayai ,
   Dharmadhayai namo nama. 4

   Stotra shravana mathrena,
   Dushta, hrushta jagatprasu,
   Mahendraya varam dhatwa,
   Go lokam saa yayaou puna. 5

Leave a Reply

%d bloggers like this: