Shri Subramanyan’s experience with Mahaperiyava

Dr. T.K.Subramanian is one of our readers and he has shared three precious things (1) his experience (2) guru gita (3) padhuka stuthi on HH Mahaperiyava. The poems are in Tamil. The experience has both english and tamil version.

IMG_20120527_115931-1

1985ம் ஆண்டு மதுரையில் மாநகரபஸ்ஸின் கீழ் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய  நான் மீனாக்ஷிஅம்மன் கருணையால் பிழைத்து,கால்களும்,நடையும் இழக்காமல் படுத்திருந்த காலம்அது. அன்பால் உறவினரும், நண்பர்களும் பரிஹாரம், பூஜை, ஹோமங்கள் என்று என் நலனுக்காக நிறைய சொன்னார்கள்.

குழப்பத்தில் இருந்த எனக்கு மஹாபெரியவாளைக்கேட்கவேண்டும் என்ற ஆவல் வந்தது. அதுவரை அவரை நெருங்கியதில்லை. ஆனால் சாஸ்த்ர ஸம்ப்ரதாய அனுபவம் இல்லா  எனக்கு “தெய்வத்தின் குரல்”தான் வேதம்,புராணம், இதிஹாசம் என் மனைவிக்கு மந்த்ரதீக்ஷைகுரு மூர்த்திசுவாமிகள் என்ற சென்னை பெரியவா பக்தர்.

அடிக்கடி காஞ்சிமடம் செல்பவர். அவருக்கு கடிதம் எழுதி எனக்காக பெரியவாளை மூன்று சிறுகேள்விகளை சமர்ப்பிக்கச்சொன்னோம்.

1.ஏன் இப்படி நிகழ்ந்தது? 2.என்ன பரிஹாரம்? 3.நான் தினம் என்ன பூஜை செய்யவேண்டும்?

அவர் பதிலில், இன்னும் ஒரு வாரத்தில் காஞ்சிபோய் பெரியவாளை கேட்பதாக எழுதினார்.ஆனால் அவர் பெரியவாளை தரிசித்தபோது கடிதத்தை கொண்டுபோகவில்லை,என் கேள்விகளும் நினைவிலில்லை (இது அவரே எங்களிடம் சொல்லும்போது ஒத்துக்கொண்டார்!) ஆனால் அவர் வணங்கி உட்கார்ந்த உடனே பெரியவா அவரை கேட்டது: “உன் சிஷ்யை குடும்பத்திலே ஒரு அசம்பாவிதம் நடந்துதே, நீ ஏன் அதைப்பத்தி எங்கிட்ட சொல்லலே?” தடுமாறி ஏதோ சமாதானம் சொல்ல முயர்ச்சித்தவருக்கு மிகசுருக்கமாக என் 3 கேள்விக்கும் அதே வரிசையில் பெரியவா பதில் அனுக்ரஹித்தாராம்

1.அது பூர்வஜன்மகர்மபலன்  2.பட்டதே போதும் பரிஹாரம் 3.[அவரை அம்பாள்தான் காப்பாத்தினா ஆத்மார்த்தபக்திக்கு]  அவருக்கு என்ன தோண்றதோ பண்ணட்டும். தொடர்ந்தது அருளாசி: “இனி ஒண்ணும் இதனாலே கஷ்டம் இருக்காது” ஏதாவது கோவில்,ஜப மந்திரம்,பூஜை என்று உபதேசம் எதிர்நோக்கி இருந்த முட்டாள் எனக்கு குறைதான்!

{நான் பிழைத்ததும்,நடப்பதும் என் மருத்துவர்களே அதிசயப்பட்டாலும் பிறகு அறிவும்,பக்தியும் பெரியவா தரிசனங்களால் வந்தபின்தான் புரிந்தது:.. எனக்கு என்ன ‘தோண்றதோ’ அது அவரை நினைத்தால் அவரால் வரும் என்ற சிற்றறிவு!

பெரியவா த்ரிகால ஞானம் பார்க்காத கடிதத்துக்கு பதிலுக்கு மேலும் தொடர்ந்தது:

“அவருக்கு இப்போ கேதுதசை,அப்போ இதுமாதிரி பாதிப்பு இருக்கும்.எனக்கே கேது தசையிலே பாதிப்பு இல்லையா?” அதுவரை தான் பார்க்காத கடிதத்தில்  இருந்ததையும்

என் ஜாதகத்தையும் அவரறியாததில்லை..ஆனால்நினைத்தவர்களுக்கும் இவ்வளவு அனுக்ரஹமா! ..குருகருணை தெய்வத்துக்கு மேல்!

சில நாட்களுக்கு பிறகு குணமடைந்து வருகையில் பெரியவா குருகீதை, பாதுகாசரணம் என்ற இரு துதிப்பாடல்களை அதே மூர்த்திசுவாமிகள் மூல்ம் சமர்ப்பித்தேன்.பெரியவா ஆசியும் “பேஷ்” சொல்லோடு கிடைத்தது கேட்டேன். பிறகு பல ஆண்டுகள் சென்னைவாசத்தில் பலமுறை தரிசனபாக்யம் கிடைத்தது.

நெருங்கிய தொடர்பபில்லை..பார்க்கும்போது பேசமுடிவதில்லை!

சஷ்டிஅப்தபூர்த்திக்கு நான் வைதீககார்யங்கள் எதுவும் செய்துகொள்ளவில்லை. காஞ்சிக்கு நான் மனைவியுடன் சென்று கோவில்ககளுக்கு பின் மடத்தில் பெரியவா ஆசியை நாடிவந்தோம். உள்ளூர பயம்…வேதரக்ஷகர்.சனாதனதர்ம காவலர் என்ன கேட்பாரோ, என்ன சொல்வது என்று.  நான் சொன்னதை சேவையாளர் சொன்னார்  பெரியவாளிடம்:  “பெரியவா அனுக்ரஹம் இவாளுக்கு பரிபூர்ணமா இருக்காம். டாக்டரோட அறுபதுக்கு உங்ககிட்டே ஆசீர்வாததுக்கு வந்திருக்கா”

நடுங்கி நின்ற சிலவினாடிகளுக்குப்பின் பெரியவா கேள்வி:”அறுவது ஆரம்பமா, முடிஞ்சுதா?”[அவருக்கு தெரியாதா! எப்போது செய்வது என்று எனக்கு தெரிவிக்க!

60 முடிந்தது என்று நான் சொன்னேன்.

ஒரு மாம்பழத்தை எடுத்து அதன்மேல் மல்லிகைபூ செண்டை வைத்து இரண்டையும வலக்கைவிரல்களடியில் வைத்தார். சிறிது நேரம் கண்மூடி தியானம்..அவரையே பார்த்துநிற்க எங்கள் பாக்கியம்.

கணதிறந்து பழத்தைபூவோடு என்பக்கம் நதர்த்தினார்.வலதுகரம் உயர்த்தி ஆசிகள். நமஸ்கரித்து மனநிறைவுடன் விடைபெற்றோம். மறைமூர்த்தி ஆசிக்குபின் குறைஏது

பூவோடு மனைவி போக, ஆசிநினைவுடன் தொடர்கிறது என் பயணம்.பூத உடலை அதிஷ்டானத்தில் அடக்கி பரப்ரம்மமாய் வியாபித்து காக்கிறார் பெரியவா!

Shri KN Gurumurthy with His Padukas

பாதுகை சரணம்

அஞ்ஞான இருளகற்றும் தவமுனிவர் குருநாதரின்
மெய்ஞான சுடரொளியாம் திருப்பாதம் தாங்கியே
ஓதுமறை ஞானமெலாம் ஒருநொடியில் தரவல்ல
பாதுகையே சரணம் எனக்கு அருள்வாயே

மூலாதார ஸ்வாதிஷ்டான மணிபூரக அனாஹத
விசுத்தி ஆக்ஞையென ஆதாரம் ஆறினையும்
கடந்த த்வாதசாந்த பெருவெளி நின்றகுருவின்
பாதுகையே சரணம் எனக்கு அருள்வாயே

வேதாகம ஞானமுடன் அஷ்டாங்க யோகமும்
பற்றற்ற கர்மமும் பண்புடை பக்தியும்
தரஇயலா முக்திதரும் குருநாதர் பதமணை
பாதுகையே சரணம் எனக்கு அருள்வாயே

தீர்த்தங்கள் நீராடியும் தலம்பல சென்றும்
விரதங்கள் இருந்தும் பூஜைபல செய்தும்
காணஇயலா கடவுளை காணச்செய் குருஅணிந்த
பாதுகையே சரணம் எனக்கு அருள்வாயே

ஸ்ரீராமன் பாதுகையை சிரம்தாங்கி பரதனும்
சிறப்புடன் அமர்த்திய அரசபீடம் எனக்கேது?
வெறுமனதே வைக்கிறேன் திருப்பாதம் தாங்கிய
பாதுகையே சரணம் எனக்கு அருள்வாயே

ஓரிரவில் பாதுகைக்கு பாசுரங்கள் ஆயிரம்பாட
வேதாந்த தேசிகரின் கவித்திறன் எனக்கேது?
சிற்றறிவின் சிறுகருத்தை குருவருளால் கூறினேன்
பாதுகையே சரணம் எனக்கு அருள்வாயே

குருநாதரை பணிமனமே

கு’ எனும் இருளை ‘ரு’ எனும் ஓளியால்
தெளிவாய் மருள்நீக்கி அருள்தரு ஞானச்சுடராய்
பிறவியாம் பெருங்காட்டில் வழியறியா மனமதை
அறநெறி வழிகாட்டும் குருநாதரை பணிமனமே

குணத்துக்கு ‘கு’எழுத்து ரூபஉருவாய் ‘ரு’
குணமும் ரூபமும் கடந்த குரு ஒளியே
ப்ரம்மமாய் விஷ்ணுவாய் சக்தியாய் சிவனாய்
எல்லாமாகி நின்றதோர் குருநாதரை பணிமனமே

சம்சார ஸாகரததில் சுழிபட்டு தடுமாறும்
இம்சையை வேறறுத்து கரையேற தாரகமாய்
மாயத்திரை நீக்கி மெய்ஞான ஒளியால்
ஐயமற அரு்ள்தரும் குருநாதரை பணிமனமே

ஏழுலகம் சென்றும் ஏழ்கடல் நீராடினும்
சூழ்வினை அகலுமோ குருபதம் பணியார்க்கு
ஏழ்பிறவி எடுத்தே சேர்த்த கர்மவினை
பாழ்படவே எரிக்கும் குருநாதரை பணிமனமே

குருவாசமே காசித்தலம் பாதோதகம் ப்ரயாகை
குருவாக்யமே ப்ரமாணம் குருசேவையே வழிபாடு
குருபாதமே இறைவனடி குருபாதுகையே தாரகம்
குருஅருளே முக்திவழி குருநாதரை பணிமனமே

கண்ணனுக்கும் குருஉண்டு சங்கரர்க்கும் குருஉண்டு
குருஇன்றி உலகில் உய்ந்தோர் எவருமில்லை
குருவாக அனைத்தையும் கண்டார் தத்தாத்ரேயர்
குருஇன்றி வேறில்லை குருநாதரை பணிமனமே

சாத்திரம் வேண்டாம் இலக்கணம் வேண்டாம்
தத்துவம் வேண்டாம் ஹதயோகம் வேண்டாம்
தனிமையும் வேணடாம் தவநிலையும் வேண்டாம்
குருஅருளே போதுமென குருநாதரை பணிமனமே

நான்மறை பயின்றாலும் நல்வழியே சென்றாலும்
செல்வம் குவித்தாலும் புவியெலாம் ஆண்டாலும்
நற்புகழ் பெற்றாலும் போகுநாள் துணைவருமோ
உறுதுணையாய் ஆசிதரும் குருநாதரை பணிமனமே

wo and a half decades ago, I was run over by a city bus and divine grace saved my life, legs and movements. While convalescing, I was overwhelmed by suggestions from wellwishers about the cause of the accident, the “parihaaram” or pujas and ceremonies to be performed, what I should do etc .I requested my wife to write to her preceptor in Madras who was a devotee of periyavaa and frequent visitor to Kanchi to get His blessings and advice.

I have not yet seen Periyavaa closely but “Deivathin Kural” volumes were “veda-purana-ithihasa” to me in my ignorance and His words God’s laws. I framed 3 questions: 1] Why did it happen? 2] What is the parihaaram? 3] What prayer or worship should I do on a regular basis? Murthy swamigal acknowledged the letter and promised to visit Kanchi but forgot all about it. After 2 weeks, when he visited Kanchimutt, he did not have the letter or the contents in mind [according to his own statement later]

The moment he paid his respects, Periyavaa asked him: “Un Sishyai kudumbathiley oru asambhavitham nadandhuthe, nee en athaipathi enkitta sollalai?” {some untoward incident happened in your disciple’s family, why didnt you tell me of it?] The stunned Guru could only blabber about being informed rather late and did not remember my queries! In His next 3 sentences, Periyavaa gave him answers to my doubts in the same order!! 1]. poorvajanma karmapalan than athu [result of last birth karma] 2]pattadhe porum pariharam [Having suffered is penance enough] 3] Atmartha bakthikkaha Ambalthan kappathinaa, avarukku enna thonradho pannattum. [Goddess saved him for devotion. He can do what comes to his mind]

I was stunned at the anugraham of the karunaamoorthy but disappointed He did not suggest any prayaschitham or daily mantra. [Only later with a little maturity and wisdom, I realised that what comes to mind is from Him if I think of Him]

More to come: Periyavaa told the guru that it happened to me as I was passing through Kethu dasaa when such events occur. He recollected that even He had health problems in His kethudasa period!

My mind, my horoscope all read with anugraham by the living God whom I have not visited yet. Later, while still convalescing, I submitted through the same Guru two devotional poems which, I was told later, were read through by periyavaa and blessed with an approving “besh” 1.padhuka sthuthi 2.guru gita. I had several darsans in later years even if no close contact and only the speech of silence. For my 60th birthday [sashtiapdhapoorthi] I did not celebrate with any religious ceremony, I went to Kanchi with my wife and after temple visit, sought periyava’s blessings in the mutt.

When we prostrated before him, he asked whether I was starting or completed 60 yrs. He then took a mangofruit put jasmine flowers on top of it, kept his right hand on it and closed his eyes for some time. The he rolled it towards me and raised his hand in benediction.

Blessed by living God, I did not regret my lack of rituals. I believe now that  “what comes to my mind” in prayer or problems comes from Him within if I think of him.. Rid of the physical bodily frailty, He is now merged with the immense cosmic energy to aid us all anytime anywhere..



Categories: Devotee Experiences

Tags: ,

10 replies

  1. My apologies I missed to notice in the text that பெரியவா குருகீதை, பாதுகாசரணம் are written by Sri Subramanyan.

    “……ஆனால்நினைத்தவர்களுக்கும் இவ்வளவு அனுக்ரஹமா! ..குருகருணை தெய்வத்துக்கு மேல்!. Its really true with Periyava

    Ramesh

  2. குரு பாதுகை சரணம் அதி அற்புதமாய் இருக்கிறது.

  3. “…ஸ்ரீராமன் பாதுகையை சிரம்தாங்கி பரதனும் சிறப்புடன் அமர்த்திய அரசபீடம் எனக்கேது?……”
    “…தீர்த்தங்கள் நீராடியும் தலம்பல சென்றும் விரதங்கள் இருந்தும் பூஜைபல செய்தும்……”
    “…ஓரிரவில் பாதுகைக்கு பாசுரங்கள் ஆயிரம்பாட வேதாந்த தேசிகரின் கவித்திறன் எனக்கேது?….”
    “…ஏழுலகம் சென்றும் ஏழ்கடல் நீராடினும் சூழ்வினை அகலுமோ குருபதம் பணியார்க்கு….”
    “…சாத்திரம் வேண்டாம் இலக்கணம் வேண்டாம் தத்துவம் வேண்டாம் ஹதயோகம் வேண்டாம் தனிமையும் வேணடாம் தவநிலையும் வேண்டாம் குருஅருளே போதுமென குருநாதரை பணிமனமே….”
    “…நான்மறை பயின்றாலும் நல்வழியே சென்றாலும் செல்வம் குவித்தாலும் புவியெலாம் ஆண்டாலும் நற்புகழ் பெற்றாலும் போகுநாள் துணைவருமோ உறுதுணையாய் ஆசிதரும் குருநாதரை பணிமனமே….”

    What a great sloga. Who done this Paduka saranam and Guru Saranam? exceellant one.

  4. “மறைமூர்த்தி ஆசிக்குபின் குறைஏது”. அபராமான வார்த்தைகள்

    குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா. பெரியவா கருணைக்கு ஈடு ஏது

    தென்னாடுடைய பெரியவா போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஸர்வக்ஞா ஸர்வவ்யாபி பெரியவா சரணம் மாயபிறப்பருக்கும் மஹாபெரியவா அடி போற்றி
    மந்தாதிகாரிகளுக்கும் சித்தஸுத்தீ ஏற்படுத்தி பரம்மானந்த நிலையான ஜீவன் முக்தி நிலையை அனுக்ரஹிகக வல்ல எல்லாம் வல்ல இறைவனான கைலாசபதியும் ஈரெழு புவன சக்ரவர்த்தியுமான பகவான் யோகமுர்த்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள்

  5. Rama Rama

    Who is the blessed soul holding the holy padukas standing along with our gurunath!

    Rama Rama

  6. Lucky and blessed soul. Without Sri Mahaperiyaval’s blessing he would not have recovered from the after effects of the accident. Jaya Jaya Shankara.

  7. THENNADUDAYA PERIYAVA POTRI, ENNATTAVARUKUM IRAIAVA POTRI, SARVAGNA SARVAVAYAPI PERIAYAVAA SARANAM. MAYAPIRAPAGATRUM MAHA PERIYAVAA MALARAD POTRI. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA. HARA HARA SANKARA, JAYA JAYA SANKARA.

  8. “ஓரிரவில் பாதுகைக்கு பாசுரங்கள் ஆயிரம்பாட
    வேதாந்த தேசிகரின் கவித்திறன் எனக்கேது?
    சிற்றறிவின் சிறுகருத்தை குருவருளால் கூறினேன்
    பாதுகையே சரணம் எனக்கு அருள்வாயே”
    Great blessing even to be able to read this devotional account! Maha PeriyavaL ThiruvadigaLee CharaNam!

  9. Wonderful experience sir. Blesses you are and all of us.

  10. what a grace !!! what a divinity of our times!!!

Leave a Reply to p e rameshCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading