Periyava’s concern for Shivacharyas….

 

 

ஒருநாள் விடியக்காலம் ஞான பானுவை தன்னுள் கொண்ட காஞ்சி மடம் மெல்ல விழித்துக்கொண்டிருந்தது. ரம்யமான அதி தெய்வீகமான சூழல். பெரியவாளுடைய விஸ்வரூப தர்சனம் முடிந்து அவரவர் அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர். தன்னுடைய அணுக்கத் தொண்டர்களிடம் அந்த நேரம் பெரியவா விஸ்ராந்தியாக பேசிக்கொள்ளுவது உண்டு. அன்றும் அப்படியே பொழுது விடிந்தது……

“ஏண்டா……நம்மூர்ல எத்தனையோ ஆயிரக்கணக்கான கோவில் இருக்கு. ஆனா, அந்தக் கோவில்ல இருக்கற அர்ச்சகா எல்லாரும் மூணு வேளை நிம்மதியா சாப்டறாளோ? ….மதுரைவீரனுக்கு ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற கிராமத்துப் பூஜாரில்லாம் சந்தோஷமா இருக்காளோ? பெருமாளுக்கு பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார் குடும்பமெல்லாம் வயத்துக்கு மூணுவேளை சாப்ட்டுண்டு இருக்காளோ?…..இதையெல்லாம் யாராவுது அப்பப்போ விஜாரிக்கறேளோ?..”

பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகையுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். எனவே எல்லாரும் “நிச்சயமாக தங்களுக்கு இதெல்லாம் தோன்றியதே இல்லை” என்ற உண்மையை ஒத்துக்கொள்வது போல், பேசாமல் முழித்தார்கள்.

“……ஏன் கேக்கறேன்னா….ஏதோ மூணு நாலு கோவில்ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோசிங்கோ!..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராமலிங்க பட் என்ற குஜராத்தி ப்ராம்மணர் வந்து நமஸ்கரித்தார். பெரியவாளிடம் மிக மிக ஆழ்ந்த பக்தி கொண்டவர், ஆசாரம் அனுஷ்டானம் கடைப்பிடிப்பவர்கள் லிஸ்டில் இவருடைய பெயர் இருக்கும். சென்னை IIT யில் ப்ரொபஸராக இருப்பவர். நமஸ்காரம் பண்ணியபின் மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கலாம் என்று திரும்பி நடந்தவரை, வலக்கையின் நடுவிரலையும்,கட்டைவிரலையும் சேர்த்து போடும்  “டொக்” கென்ற பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு சத்தம் திரும்பிப் பார்க்கவைத்தது. ஆள் காட்டி விரலால் “இங்கே வா” என்று சைகை பண்ணினார். விடியக்காலை தர்சனத்திலேயே ஒருமாதிரி ஆனந்த மயக்கத்தில் இருந்த ராமலிங்க பட், பெரியவா தன்னை அழைத்ததும் திக்குமுக்காடிப் போனார். பவ்யமாக அருகில் வந்து நின்றார்.

“ஒன்னோட ஒருமாச சம்பளத்த எனக்கு குடுப்பியா?…..” குழந்தை மாதிரி கேட்டதும், நெக்குருகிப் போனார் பட். மோக்ஷத்தையே அனாயாஸமாக பிக்ஷையாகப் போடும் தெய்வம், ஒரு மாச சம்பளத்தை கேட்கிறதே! என்று அதிர்ந்து பேச நா எழாமல் நின்றார்.

“என்ன….. யோசிக்கறே போலருக்கு?……ஏதோ, இன்னிக்கு காலங்கார்த்தால ஒன்னை பாத்தேன்னோல்லியோ…..கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். குடுப்பியா?…..” மறுபடியும் குழந்தை ஸ்வாமி கேட்டது. வேரறுந்த மரம் மாதிரி பாதத்தில் விழுந்தார் பட்.

“பெரியவா ஆக்ஞை! எங்கிட்டேர்ந்து என்ன வேணுன்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு இதைத் தவிர வேறென்ன ஸந்தோஷம் நிலைக்கப் போறது?…” உடனேயே நாலாயிரம் ரூபாயை பெரியவாளின் திருவடியில் சமர்ப்பித்தார். அவரிடமிருந்த வந்த பணத்தை கொண்டுதான் “கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்” துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்சகர்கள்,பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி செய்துகொண்டு வருகிறது.

டிரஸ்ட் துவங்கியதும் வேதமூர்த்தி என்பவர் ” ஹிந்து” பேப்பரில் விரிவான செய்தியாக எழுதியிருந்தார். பெரியவா அதைப் படித்துப்பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது அங்கே வந்த ராகவன் என்ற ஆடிட்டரிடம் “இந்த ஹிந்து பேப்பர்ல வந்திருக்கே….இதை எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தருவியா?…” குழந்தை ஸ்வாமி கேட்டார். ராகவனுக்கோ சந்தோஷம் தலைகால் புரியவில்லை.உடனே ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வந்து குடுத்தார்.

“ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் எடுத்துண்டு வந்தியோ?….”

“இல்லே பெரியவா…..ஆத்துல இருக்கும்”

“மெட்ராஸ்ல IIT ல ராமலிங்க பட்…ன்னு ஒர்த்தன் இருப்பான்…அவன்ட்ட அந்த பில்லைக் குடுத்துட்டு காசு வாங்கிக்கோ! ஜெராக்ஸ் போட்டுக் குடுத்ததே நீ பண்ணின பெரிய கைங்கர்யம்…” சிரித்துக்கொண்டே ஆசிர்வதித்தார்Categories: Devotee Experiences

8 replies

 1. What our Periyava declare is a pure truth only.My wifes house is at Trichy,ie Keezha Valady Agraharam.There is Two Siva temple ,both temples where in a very bad condition.The people of the village united and form a committe under the leader ship of Shri Sundaram,(Pattedhar),Very Near to Lakshmi Narayana Perumal Temple,Valady Agraharam, Tiruchi- 621218. Phone number :-0431-2548355, and the Second person is ……………… Shri Dattathreyan (Shanker),Double Street,Valady Agraharam,Tiruchirapalli-621218. and his phone number is 0431–2548580. All other people of the village join together and there Palmlet itself shows the blessings Of our Kanchi Kamakoti Sankaracharyar for this Scheme.Now the Sivan koil at the Easana moolai is very well renovated and the kumbhabheshekam of the temple has done successfully . Me and my wife attend the function this year July 2012. At present the whole village is trying to renovate the Sivan Temple on the road side ie at Trichy–Lalgudy Road. comes Keezha Valady or Railway Station Valady. Let us Pray Kanchee Periyava to Give this village folks enough strength to perform Kumbhabheshekam to this Sivas Temple Too.

 2. quote partha “Most of us are brahmins by caste name doing all the jobs of vaisya sudhra and sathriya” unquote – I completely agree

 3. As a lay person, I get Information on the collection and use of hundi and other donations to temples and madams, that are very disturbing. I do not know how much of it is true. Is there anyone who is fully knowledgeable on this issue and who can authoritatively talk about it, answer the following questions?

  What exactly is the Muzrai Department? How is it constituted and what are its duties and powers?

  Which are the temples that come under the Muzrai Department?

  Who forms the Trust of big temples like Thirupati, Pazhani, etc.? How are the Trust members selected? What need be their qualifications?

  When and what temples are notified as coming under the Arcaeological Department? What are the benefits and otherwise if they are so notified?

  How, when, and who opens the bUndis of temples, and how is the contribution counted? What are the measures in place that ascertain that not one paisa is misappropriated?

  Who decides how these donations in cash and kind should be used? (It is public rumour that a large amount of these funds are channelled to the use of religions other than those that come under Sanathana Dharma. Is this true? If so what percentage?)

  How much are the archakars and others, who work for the temples, paid? (It is again public rumour that the archakars are paid such a tiny amount that it is tragic. Apparently, the money put into the deeparadhanai thattu is all they can depend on. Is this true?)

  There are many old temples falling to ruin due to neglect and lack of maintenance. Many of them are of immense religious, mythological, historical and archaeolological importance. Are there any arrangements and procedures in place for the richer temples to adopt these for upkeep?

  Many individuals and organizations come forward to repair and renovate temples and restart the worship. Very often they face difficulty in getting permission from the Govt. Depts. to do so. Can this situation be explained?

  When temples are renovated nowadays, more often than not, the method, materials, etc. that were used in the original construction are changed. The renovation betrays the integrity of the temple. What immediately comes to my mind are polished granite and marble slabs replacing the original rough hewn stone slabs, bathroom porcelain tiles laid on walls of even the deities in the garba graham, and so on. Who is responsible for defining and enforcing required controls in such cases?

  Is it true that temples are charged electricity and water rates as are applicable to commercial institutions and places of worship of other religions are charged rates as ate applicable to charitable institutions.

  The reason I am asking these questions is because I get very angry at real or assumed injustices; I would like to know the truth; I do not know where to go to find out the truth; I want to do what I can within my very very limited capacity to correct a situation if it is not right; and finally not be responsible for taking wrong decisions (for example I have stopped putting money into hundis of big temples and put my contribution only intonation plates) because I do not know better.

  Please pardon me for using this forum for seeking this information.
  Chandra Ravikumar

 4. jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara
  jaya jaya sankara hara hara sankara

 5. Vasu, I am happy to tell that after having darisanam of Periya”s paduka I am using my new ipad

  J. Ramakrishnan

 6. Real Brahmins are the archagas who ever they may be where ever they do puja. As Hindus we should pay them well. Jews priest get on an average of 80,000 dollars a year. We need to keep our priest happy. Otherwise we may not have priest to do puja. Most of us are brahmins by caste name doing all the jobs of vaisya sudhra and sathriya. Sorry if any one is offended by this. Put more dakhsna generously if you can.

 7. நிஜமாஹவே இராமலிங்க பட்டும், ஆடிட்டர் ராகவன் அவர்களும் மிகிந்த புண்ணியம் செய்தவர்கள். ஸ்ரீ மகாபெரியவாளின் கண்ணிலிருந்து எதுவும் தப்பாது என்று தெரிகிறது.

 8. we all know that periya never leave loose ends to any of the issues handled by him .. Ramalinga Bhat & Auditor Raghavan very lucky people ..
  Jaya Jaya Sankara Hara Hara Sankara!

Leave a Reply

%d bloggers like this: