Cupertino Vidya’s 100th Mahaperiyava satsang – Nov 26th

I have a great pleasure in sharing that Smt Vidya will be doing her 100th Mahaperiyava satsang on Nov 26th as a padhuka puja at her home. All these started 8 years back when she started the first satsang and I shared that post in this blog. With blessings of Mahaperiyava, Pudhu Periyava and Bala Periyava she has been doing pravachanams every anusham – rain or shine – even during Covid days (remotely) if I am not mistaken. Nothing stopped her. Her son & daughter help her in videos, scheduling and Srinivasan does his part of help to keep this going. Today she has reached this fine milestone of 100th satsang. It only tells her dedication and commitment and unshaken bakthi towards our acharyas.

Devotees in and around Cupertino can plan to attend.

On a personal note – she is like a sister to me – she calls me and shares some divine experiences and other updates w.r.t to her kids etc. She wanted to let me know about this 100th satsang to me first before sharing with others! Blessed to know such a wonderful family of Periyava devotees!

We wish her and family all the best in their lives.

Mahaperiyava padham sharanam!

See below her experience on how this whole thing started! _____________________________________________________________________________

*100TH SRIMAHAPERIYAVA SATSANGAM IN SAN JOSE, CALIFORNIA*
Namaskaram.

We have been conducting Sri Mahaperiyava Satsangam in Cupertino / San Jose, California for the past 8 years.  It stated on December 20, 2014, on Sri Mahaperiyava’s Aaradhana day.  Satsangam happens everymonth on the Saturday, following Anusham Star.

With the Blesses of Sri Mahaperiyava, we will be doing the 100th Satsangam in the form of Paduka Puja, coming Saturday, Nov 26, 2022  at 3 pm in our home.  We cordially invite you to attend the Satsangam Padua Puja and be the recipient of Sri Mahaperiyava’s Blessings.

Evite link: http://evite.me/MdNkJpGSYW

Namaskaram
Vidhya Srinivasan
Srinivasan Balasubramanian
3274 Archbury Ct, San Jose.

____________________________________________________________________________

ஸ்ரீ மஹாபெரியவா ஸத்ஸங்கம், கூபர்டினோ, கலிபோர்னியா
நூறாவது ஸத்ஸங்கம்
ஸ்ரீ மஹாபெரியவா, ஸ்ரீ புதுபெரியவா, ஸ்ரீ பாலபெரியவா அனுகிரஹத்துடன் எட்டு வருஷங்கள் முன், டிசம்பர் 20, 2014 அன்று “ஸ்ரீ மஹாபெரியவா ஸத்ஸங்கம்” என்ற பெயரில் ஒரு ஸத்ஸங்கம் ஆரம்பித்தோம். அந்த வருஷம் (2014), ஜூலை மாதம் கோடை விடுமுறைக்கு சென்னை போனபோது, ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் போயிருந்தோம். அப்பொழுது ஸ்ரீ பாலபெரியவா என்னைக் கூப்பிட்டு ஒரு ஸத்ஸங்கம் ஆரம்பித்து அங்குள்ள குழந்தைகளுக்கும் மற்றவர்களும் ஸத்விஷயங்களைப் பிரச்சாரம் பண்ணு என்று அனுகிரஹித்தார்கள். ஸ்ரீ புதுபெரியவாளும் அவ்வாறே ஆமோதித்து அனுக்கிரஹம் செய்தார்கள். அமெரிக்காவிற்குத் திரும்பியபின் ஸத்ஸங்கம் என்றால் என்ன செய்வது என்று தெரியாமல் ஐந்து மாதங்கள் ஓடின. நான் என் பிரச்னையை ஸ்ரீ மஹாபெரியவாளிடம் சொன்னேன். ஏதாவது சரித்திரத்தை உபன்யாச ரூபமாக சொல்லும் படி மஹாபெரியவா தோன்றச்செய்தார். இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில், என்னுடைய தோழி ஒருவள், என்றைக்கு ஸத்ஸங்கம் ஆரம்பிக்கப் போகிறாய் என்று எதேர்சையாகக் கேட்டாள். இதையே ஸ்ரீமஹாபெரியவாளின் கட்டளை என்று எடுத்துக்கொண்டு, “சரி, வருகிற சனிக்கிழமை [டிசம்பர் 20, 2014] அன்று சாயந்திரம் 6 மணிக்கு ஆரம்பித்து விடலாம்” என்று சொல்லிவிட்டேன். அன்று ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆராதனை என்று எனக்குத் தெரியாது. அன்று காலை, கோவிலில், ஸ்ரீ மஹாபெரியவா பாதுகா பூஜையில் கலந்துகொண்டுவிட்டு, 3 மணிக்கு வீட்டிற்கு வந்து, பிரசாதங்கள் செய்து, தெரிந்த சில நண்பர்களிடம், இன்று 6 மணிக்கு ஸத்ஸங்கம் இருக்கிறது, வந்து கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இருபதுக்கும் மேற்பட்டு, அவர்களும் குடும்ப ஸஹிதமாக குழந்தைகளுடன் வந்துவிட்டார்கள். எனக்குப் பேசவோ உபன்யாசம் செய்யவோ தெரியாது, பழக்கமும் இல்லை. எல்லாவற்றையும் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் சமர்பித்துவிட்டு, “நள சரித்திரம்” என்ற தலைப்பில் ஸ்ரீ மஹாபெரியவா பேசும்படி செய்தார்கள். ஒன்றரை மணிநேரம் சொல்லி முடித்த பிறகுதான், இத்தனை நேரம் ஸ்ரீமஹாபெரியவாதான் எல்லாத்தையும் சொல்லியிருக்கா என்று என்னால் முழுவதாக உணரமுடிந்தது. எல்லோரும் நன்றாக இருந்தது என்று compliment செய்யும் பொழுதுதான், அந்த சரித்திரத்தை நான் சொல்லவில்லை, ஸ்ரீ மஹாபெரியவா தான் சொல்லியிருக்கா என்று உணர முடிந்தது. இப்படித்தான் முதல் ஸத்ஸங்கம் தொடங்கியது. எவ்வளவோ நாள் காத்திருந்தாலும், ஸ்ரீமஹாபெரியவா அந்த ஆராதனை தினத்தில், முதல் உபன்யாசத்தை நடத்திக்கொண்டு விட்டார். இதற்கு முன்னாடி நான் இதை மஹாபெரியவாளிடம் விண்ணப்பிக்கும்போது மஹாபெரியவாளிடம் இருந்த ஏலக்காய் மாலை விழுந்து அனுக்கிரஹம் முன்னமே செய்துவிட்டார். ஒவ்வொரு ஸத்ஸங்கத்திலும் ஸ்ரீ மஹாபெரியவாளுடைய அனுக்கிரஹம் கண்கூடாகத் தெரியும். உதாரணமாக, ஒரு ஸத்ஸங்கம் முடிந்த அன்று, என் மகன் வாகீஷ்வர் ஸ்வப்னத்தில் ஸ்ரீமஹாபெரியவா வந்து, “I am hearing every word of whatever your mother is saying” என்று சொன்னார்கள். ஸ்ரீமஹாபெரியவா அனுகிரஹத்துடன் நடப்பதாலும், அவரது ஆராதனையன்று ஆரம்பிக்கப்பட்டதாலும் இந்த ஸத்ஸங்கத்திற்கு “ஸ்ரீ மஹாபெரியவா ஸத்ஸங்கம் ” என்று வைத்து, பிரதி மாதம் அநுஷத்தை அடுத்து வரும் சனிக்கிழமையில், மாலை 6 மணிக்கு, ஸ்ரீமஹாபெரியவா அனுகிரஹத்துடன் கடந்த எட்டு வருஷங்களாக ஸத்ஸங்கம் நடந்துவருகிறது. இந்த மாதம் நடக்க இருக்கும் ஸத்ஸங்கம் நூறாவது ஸத்ஸங்கம். வருஷ கடைசி ஸத்ஸங்கத்தை [அநேகமாக டிசம்பரில், மஹாபெரியவா ஆராதனையை ஒட்டி], பாதுகா பூஜையாக செய்வது வழக்கம். இந்த நூறாவது ஸத்சங்கம், நவம்பர் 26, 2022 சனிக்கிழமை – ஸ்ரீமஹாபெரியவா பாதுகா பூஜையாக நடைபெறும்.
இதற்கு முந்தின 99 ஸத்ஸங்க தலைப்புகளும் தேதியும்:

Satsangam No Satsangam Topic Date
1 நளசரித்திரம் December 20, 2014
2 துருவ சரித்திரம் January 17, 2015
3 ஸாவித்ரி ஸத்யவான் சரித்திரம் February 15, 2015
4 தக்ஷ யக்ஞம், சிவநாம வைபவம் -பாகவதம் March 15, 2015
5 பிரஹல்லாத சரித்திரம் – பாகவதம் April 25, 2015
6 கபிலோபதேசம், கபில தேவஹூதி ஸம்வாதம், பாகவதம் May 23, 2015
7 ஸ்ரீ மஹாபெரியவா பாதுகா பூஜை (ஸ்ரீ மஹாபெரியவாஜெயந்தி) June 2, 2015
8 பீஷ்ம ஸ்தவராஜம் July 4 2015
9 கஜேந்திர மோக்ஷம் August 1, 2015
10 ஜடபரதர் சரித்திரம் August 29, 2015
11 குசேல சரித்திரம் September 19, 2015
12 வாமன அவதாரம் October 24, 2015
13 அம்பரீஷ சரித்திரம் November 21, 2015
14 பாகவத மஹாத்மியம் December 12, 2016
15 ஆதிசங்கர பாகவத்பாதாள் விஜயம் January 9, 2016
16 ஸ்ரீ ராமானுஜ வைபவம் February 6, 2016
17-20 ஸ்ரீ மஹாபெரியவா திவ்யசரித்திரம் Part-1,2,3,4 March 5, April 2, April 30, May 21
21 ஆதிசங்கரர் விஜயம் [நங்கநல்லூரில்] June 18, 2016
22 நளச்சரித்திரம் [நங்கநல்லூரில்] July 16 2016
23 சிவபக்த விலாசம்: அப்பர், ஞானசம்பந்தர் சரிதம் August 27, 2016
24 சிவபக்த விலாசம்: சுந்தரமூர்த்தி நாயனார் சரிதம் September 10, 2016
25 சிவபக்த விலாசம் : மாணிக்கவாசகர் சரித்திரம் October 15, 2016
26 சிவபக்த விலாசம் : நந்தனார், கண்ணப்ப நாயனார் சரிதம் November 5, 2016
27 மீளா அடிமை பிரதோஷ மாமா சரித்திரம் – December 3, 2016
28 வேதமூர்த்தி மஹாபெரியவா [மஹாபெரியவா ஆராதனைதினம்] December 24, 2016
29 விராட பர்வா – ஸ்ரீ மஹாபாரதம் January 28, 2017
30 உத்யோக பர்வா -கிருஷ்ணன் தூது – ஸ்ரீ மஹாபாரதம் February 18, 2017
31 கர்ணன் சரித்திரம் – ஸ்ரீ மஹாபாரதம் March 18, 2017
32-33 கிருஷ்ண சரித்திரம் Part 1 & 2 April 22 & May 20 2017
34 ஸ்ரீ மஹாபெரியவா பாதுகா பூஜை July 1, 2017
35 கிருஷ்ண சரித்திரம் PART 3 July 15, 2017
36-40 ஸ்ரீராம சரித்திரம் Part 1, 2, 3, 4 & 5 Aug 12, Sep 9, Oct 7, Oct 28, Nov 25
41 ஸ்ரீராம சரித்திரம், 3வது ஆண்டு நிறைவு, ஸ்ரீ பாதுகாபூஜை December 23, 2017
42 ஸ்ரீராம சரித்திரம்- Part 6-சுந்தரகாண்டம்[நங்கநல்லூரில்] February 20, 2018
43 ஸ்ரீராம சரித்ரம் Part 7- கிஷ்கிந்தாகாண்டம் March 17, 2018
44-45 ஸ்ரீராம சரித்திரம் Part 8 & 9 April 7, May 5 2018
46 ஸ்ரீ மஹாபெரியவா 125வது ஜெயந்தி – நாம சங்கீர்த்தனம் May 26, 2018
47 ஸ்ரீராம சரித்திரம்-Part 10 விபீஷண சரணாகதி June 30, 2018
48 ஸ்ரீராம சரித்திரம் Part 11 July 28, 2018
49 ஸ்ரீராம சரித்திரம் Part 12 விபீஷண பட்டாபிஷேகம் வரை August 18, 2018
50 ஸ்ரீராம சரித்திரம் – Part 13 ஸ்ரீராம பட்டாபிஷேகம் September 15, 2018
51 ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி திவ்ய சரித்திரம் October 20, 2018
52 ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள், மருதாநல்லூர் ஸத்குருசரித்திரம் November 10, 2018
53 ஸ்ரீ மஹாபெரியவா ஆராதனை – பாதுகா பூஜை December 15, 2018
54 ஸ்ரீ மஹாபெரியவா அவதார மஹிமை January 12, 2019
55 ஸ்ரீ ரமண மகரிஷி திவ்ய சரித்திரம் February 2, 2019
56 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் திவ்யசரித்ரம் March 2, 2019
57 ஸ்வாமி விவேகானந்தர் திவ்யசரித்ரம் April 13, 2019
58 ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமிகள் திவ்யசரித்ரம் April 27, 2019
59 ஸ்ரீ ஆதிசங்கர பாகவத்பாதாள் திவ்யசரித்ரம் May 18, 2019
60 ஸ்ரீனிவாச கல்யாணம் August 17, 2019
61 ஸ்ரீ மீனாக்ஷி கல்யாணம் September 7, 2019
62 நம்முடன் வாழ்ந்த மஹான்கள் – சிவன்சார் திவ்யசரித்ரம் November 2, 2019
63 நம்முடன் வாழ்ந்த மஹான்கள் – ஸத்குரு ஞானாநந்தர்திவ்யசரித்ரம் November 30, 2019
64 ஸ்ரீ மஹாபெரியவா ஆராதனை December 28, 2019
65-70 ஸ்ரீ ஸ்காந்தம் Part 1, 2, 3, 4, 5 & 6 Jan 25, Feb 15, Mar 14, April 14, May 9, June 6 – 2020
71 சிரஞ்சீவிகள் சரித்திரம் – ஹனுமான் – ஹனுமத் பிரபாவம்(இன்று குருபூர்ணிமா) July 7, 2020
72 சிரஞ்சீவிகள் சரித்திரம் – வேதவியாசர் திவ்யசரித்ரம் – August 1, 2020
73 சிரஞ்சீவிகள் சரித்திரம் – விபீஷணன்/விபீஷண சரணாகதி August 26, 2020
74 சிரஞ்சீவிகள் சரித்திரம் – மஹாபலி September 29, 2020
75 சிரஞ்சீவிகள் சரித்திரம் – பரசுராமர், அஸ்வத்தாமா, கிருபர் சரித்திரம் October 24, 2020
76 மஹான் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் சரித்திரம் (இன்றுஅண்ணாமலை தீபம்) November 28, 2020
77 ஆழ்வார்கள் சரித்திரம்  
78 ஸ்ரீமஹாபெரியவா ஆராதனை – பூஜை January 9, 2021
79 ராமபக்தி ஸாம்ராஜ்யம் -பத்ராசலம் ராமதாஸ்திவ்யசரித்ரம் February 6, 2021
80 ராமபக்தி ஸாம்ராஜ்யம் -ஸமர்த்த  ராமதாஸ் திவ்யசரித்ரம் March 6, 2021
81 ராமபக்தி ஸாம்ராஜ்யம் -துளஸிதாசர்  திவ்யசரித்ரம் April 17, 2021
82 ராமபக்தி ஸாம்ராஜ்யம் -ஸத்குரு த்யாகராஜஸ்வாமிகள்  திவ்யசரித்ரம் May 1, 2021
83 சுந்தரகாண்டம் May 29, 2021
84 பாண்டுரங்க லீலை June 26, 2021
85 சந்த் ஞானேஸ்வர் சரித்திரம் July 24, 2021
86 நாமதேவர் சரித்திரம் August 21, 2021
87 ஜனாபாய் சரித்திரம் September 18, 2021
88 கபீர்தாசர் சரித்திரம் October 16, 2021
89 மீராபாய் சரித்திரம் November 6, 2021
90 ஏகநாதர் சரித்திரம் December 4, 2021
91 துக்காராம் சரித்திரம் January 5, 2022
92-93 சைதன்ய மஹாப்ரபு சரித்திரம் March 26, April 23 -2022
94 ஸ்ரீமஹாபெரியவா பாதுகா பூஜை May 7, 2022
95 சுந்தரகாண்ட பெரியவா [நங்கநல்லூரில்] June 25, 2022
96 காமாக்ஷி பெரியவா [நங்கநல்லூரில்] August 17, 2022
97-98 திருத்தொண்டர் புராணம் Sep 24, Oct 15, 2022
99 திருத்தொண்டர் புராணம் -3 [சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், சோமாசி மாற நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், சடையனார் நாயனார், இசைஞானியார், இயர்கோன்கலிக்காம நாயனார், குறும்பர் நாயனார், கோச்செங்கட்சோழன்] இவர்களின் சரித்திரம் October 29, 2022
100 ஸ்ரீ மஹாபெரியவா பாதுகா பூஜை Nov 26 2022

பெரியவா இந்த ஸத்ஸங்கம் தொடர்ந்து நடப்பதற்கு அனுக்கிரஹம் செய்யவேண்டும். மேலும் மேலும் பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணும் அனுகிரஹத்தையும் பண்ணவேண்டும். குழந்தைகளும், இளைஞர்களும், பெரியவர்களும் எல்லோரும் உத்ஸாஹத்துடன் ஸ்ரீ மஹாபெரியவா ஸத்ஸங்கத்தில் மேலும் மேலும் கலந்து கொள்ளவேண்டும். If you want to be included in the email list, please contact srimahaperiyavasatsangam@gmail.com
Youtube Recordings: https://www.youtube.com/channel/UC8t6VeSvOG5kHEXpIOtC55Q/streams

நமஸ்காரம்.
வித்யா ஸ்ரீனிவாசன்
ஸ்ரீனிவாசன் பாலசுப்ரமணியன்

Address: 3274 ARCHBURY Court, San Jose, California, 95148 Date: Nov 14, 2022

 



Categories: Announcements

2 replies

  1. Beautiful list of topics covered in the sathsang. Sri Maha Periyava Blessings paripooranam. Hara Hara Sankara, Jaya Jaya Sankara. Hats off to Ms. Vidya for her dedication and Bakthi.

  2. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading