ஶ்ரீபராஶக்தியின் ஶாக்த மஹாபீடங்கள் :

ஶ்ரீபராஶக்தியின் ஶாக்த மஹாபீடங்கள் :

த்ரிபுராந்தகம் பகவதி ஶ்ரீபாலா த்ரிபுரஸுந்தரி :

தேவியின் ஶாக்த மஹாபீடங்களில் மிக முக்யமான பீடம் த்ரிபுராந்தகம். ஶ்ரீஶைல க்ஷேத்ரத்தினுடைய நுழைவாயில் என்று கூறப்படும் க்ஷேத்ரம். ஶ்ரீஶைல மத்தியில் உறையும் பகவதி ப்ரமராம்பா ஸாக்ஷாத் ஶ்ரீபராபட்டாரிகா. ஶ்ரீதூர்வாஸரால் ஶ்ரீவித்யா பத்ததியில் உபாஸிக்கப்பட்டவள். பகவதி ஶ்ரீப்ரமராம்பாளின் வைபவத்தை பின்னொரு ஸமயம் இந்த தொடர் பதிவில் சிந்திக்கலாம்!!

த்ரிபுராந்தகம். ஸ்வயம்வ்யக்தமாக ஶ்ரீசக்ரம் தோன்றி விளங்கும் மஹத்தான க்ஷேத்ரம். பகவதி ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி ப்ரத்யக்ஷமாக ஶ்ரீவித்யா ஸ்வரூபிணியாக விளங்கும் க்ஷேத்ரம்.

ஶ்ரீபரமேஶ்வரராலேயே உபாஸிக்கப்பட்ட ஶ்ரீவித்யா பாலா த்ரிபுரஸுந்தரி ப்ரகாஶிக்கும் அத்புதமான க்ஷேத்ரம்.

தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி எனும் ராக்ஷஸர்கள் பரஶிவனாரிடமிருந்து பெற்ற வரபலம் மிகுந்தவர்களாக உலகை துன்புறுத்தும் சமயம், தேவர்களின் ப்ரார்த்தனைக்கிணங்க ஸாக்ஷாத் ஶ்ரீபரமேஶ்வரரே யுத்த்திற்கு புறப்பட்டார்.

சதுர்வேதங்களை குதிரைகளாய்க் கொண்டு, தர்மார்த்த காம மோக்ஷங்களை சக்ரங்களாய்க் கொண்டு, ப்ரஹ்மாவை ஸாரதியாய்க் கொண்டு, மேரு மலையை வில்லாய்க் கொண்டு, மஹாவிஷ்ணுவையே அம்பாய்க் கொண்டு ஶ்ரீபரமேஶ்வரன் த்ரிபுராஸுரர்களுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டார்.

த்ரிபுராந்தக க்ஷேத்ர புராணத்தின்படி ஶ்ரீபரமேஶ்வரரின் தேரச் சக்கரம் த்ரிபுரஸுரர்களின் அஸ்த்ர ப்ரயோகத்தால் மண்ணில் புதையுண்டது. இதனால் கவலை கொண்ட பரமேஶ்வரன் ஸாக்ஷாத் பகவதியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை உபாஸித்தார். இவ்விஷயமானது தந்த்ர ஸாஸ்த்ரங்களிலும் உண்டு.

ஸௌபாக்யலக்ஷ்மி கல்பத்தில் விளங்கும் ஶ்ரீகாமாக்ஷி பஞ்சஶதியின் பூர்வபாகத்திலும் கூட இவ்விஷயத்தை ஶ்ரீபரமேஶ்வரன் மஹாவிஷ்ணுவிற்கு கூறி, ஶ்ரீகாமாக்ஷி பஞ்சஶதி எனும் மஹாக்ரந்தத்தை மஹாவிஷ்ணுவிற்கு உபதேஶிக்கிறார்.

த்ரிபுராந்தக க்ஷேத்ரத்திலே ஶ்ரீபரமேஶ்வரன் மஹாயாக குண்டத்தை நிர்மாணம் செய்து, சிதக்னியில் ஶ்ரீவித்யா மஹாயாக க்ரமத்தைச் செய்தார். அதனால் மகிழ்ந்த ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகை, ஶ்ரீபாலா த்ரிபுரஸுந்தரி வடிவிலே சிதக்னியின் மத்யத்தில் தோன்றினாள்.

அந்த சிதக்னி குண்டமே இன்று தேவியின் கர்ப்பக்ருஹமாக விளங்குகின்றது.

சிதக்னியிலிருந்து தோன்றிய ஶ்ரீபகவதி பாலா த்ரிபுரேஶ்வரியை, த்ரிபுரஸம்ஹாரத்தின் பொருட்டு ஶ்ரீபரமேஶ்வரன் ப்ரார்த்திக்க, ஶ்ரீபரமேஶரின் பாணத்தில் ஸாக்ஷாத் ஶ்ரீபாலாம்பா ப்ரவேசித்தாள்

மஹாவிஷ்ணுவே பாணமாக விளங்கிய போதும், ஶ்ரீபாலா த்ரிபுரஸுந்தரி தன்னுடைய ஶக்தியையும் அம்பில் செலுத்தினாள் என்பதை உணர வேண்டியது. (இதே போன்ற சரித்ரம் ஶ்ரீமத் தேவீ மஹாபாகவதத்திலும் வ்ருத்ராஸுர ஸம்ஹார ஸமயம் வருவதை ஒப்பிடுக.)

பகவதி ஶ்ரீபாலா பரமேஶ்வரி ஶ்ரீபரமேஶரின் அம்பில் ப்ரவேஶித்ததும், ஶ்ரீசங்கரர் தன் பாணத்தை ப்ரயோகம் செய்ய, அந்த பாணமானது மூன்று புரங்களையும் ஸம்ஹாரம் செய்தது.

த்ரிபுர ஸம்ஹாரம் பூர்த்தி அடைந்ததும் ஶ்ரீபரமேஶ்வரர் ஶ்ரீபாலா மஹாத்ரிபுரஸுந்தரியை அங்கேயே விளங்கி வர வேண்டுமாறு ப்ரார்த்திக்க, ஶ்ரீபராஶக்தி த்ரிபுராந்தகத்தில் ஶ்ரீயந்த்ர பீடத்தில் சிதக்னி குண்ட வடிவில் விளங்கும் கர்ப்பக்ருஹத்தில் கோவில் கொண்டாள்.

த்ரிபுராந்தகத்தில் மலைக்கு மேலே ஶ்ரீபார்வதி ஸமேத ஶ்ரீத்ரிபுராந்தகர் ஆலயம் உண்டு!! அதுவும் ஶ்ரீசக்ராகாரமாகவே விளங்குகிறது என்றே கூறுகின்றர். கீழே விளங்கும் ஶ்ரீபாலா மஹாத்ரிபுரஸுந்தரி ஆலயம் ஶாக்த கேந்த்ரமே.

பல்வேறு யோகினிகள் சூழ ஶ்ரீதேவி ப்ரகாசிக்கிறாள். பாலா த்ரிபுரஸுந்தரி என்றாலும் அம்பாள் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ஸ்வரூபத்திலேயே விளங்குகின்றாள்.

கூர்மத்தில் மேல் விளங்கும் ஶ்ரீமேரு கர்ப்பக்ருஹத்தில் விளங்குகிறது. ஸ்வயமாகவே தோன்றிய ஶ்ரீசக்ரமும் இந்த ஆலயத்தில் விஶேஷமாக விளங்குகின்றது.

ஶ்ரீதேவியின் பரிவார மூர்த்தியாக பகவதி ஶ்ரீசின்னமஸ்தா தேவியும், அவளோடு பல யோகினிகளும் ஆலயத்தில் சூழ விளங்குவது ஶாக்தோபாஸனை பரம உச்சமாக ஒரு காலத்தில் அங்கே விளங்கியதைக் குறிக்கிறது.

இன்றும், அனைத்து மூர்த்தங்களுக்கும் ஆராதனா க்ரமங்கள் நடக்கிறது. ஶ்ரீவித்யா க்ஷேத்ரங்களில் முக்யமான ஶ்ரீபரமேஶராலே உபாஸிக்கப்பட்ட ஶ்ரீத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகா விளங்கும் த்ரிபுராந்தக க்ஷேத்ரத்தை தர்ஶனம் செய்து ஶ்ரீபராம்பா கடாக்ஷத்திற்கு பாத்திரர்கள் ஆவோம்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Announcements

1 reply

  1. Blessed to know these details ! Thanks Mr. Raghavan

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading