120.14. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava now delves in the Mahayana sect of Buddhism in determining the time period of Bhagawathpadhal.

Many Jaya Jaya Sankara to Smt. Sowmya for the contextual drawing and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama

________________________________________________________________
மஹாயான விஷயம்

‘மஹாயானத்தைப் பத்மபாதர் குறிப்பிட்டிருக்கிறாரே; கிறிஸ்து சகாப்த ஆரம்பத்தில் இருந்திருக்கக் கூடிய கனிஷ்கரின் காலத்தில்தானே பௌத்தம் மஹாயானம், ஹீனயானம் என்று உடைந்தது?’ என்று ஒரு பாயின்ட் பார்த்தோம். இப்படி முழுக்க வேறு வேறாக இரண்டு பிரிவுகள் உறுதிப்பட்டது கனிஷ்கர் காலத்தில் தானென்றாலும், புத்தர் மஹா பரிநிர்வாணம் அடைந்ததை அடுத்து ராஜக்ருஹத்தில் நடந்த முதலாவது பௌத்த மஹாநாட்டிலேயே இரண்டு விதமான அபிப்ராயக்காரர்கள் மோதிக் கொண்டார்களென்றும், அப்புறம் ஸ்தவிரவாதம் (‘தேராவாதம்’ என்று பாலிப் பெயரில் வழங்குவது) என்றும் மஹாஸங்கிகம் என்றும் இந்த இரண்டு பிரிவுகளும் விரிந்து கொண்டே போய்த்தான் முடிவில் (முறையே) ஹீனயான, மஹாயானங்களாக ஆயின என்றும் அவர்களுடைய மதப் புஸ்தகங்களிலிருந்து தெரிகிறது. முதலிலிருந்தே பல காலம் ஹீனயானம் மஹாயானம் என்ற இந்தப் பெயர்களும் ஓரளவு வழங்கியிருக்கலாம். அப்படியானால் பத்மபாதர் அந்தப் பெயர் குறிப்பிட்டதில் chronological error (காலக் கணிப்பில் தவறுதல்) இல்லைதானே? மெகஸ்தனிஸ் ஸமாசாரத்தை நினைவு வைத்துக் கொண்டு ஹிஸ்டரி முழுதையும் முற்காலத்துக்குத் தள்ளினாலோ இந்தக் கேள்வியெல்லாமே அடிபட்டு விடும்!

____________________________________________________________________

Determining the period of Sri Sankara’s life – The issue regarding Mahayana

We had analysed a point “Padmapada [पद्मपाद:] himself has mentioned about Mahayana; Did Buddhism not break into Mahayana and Heenayana only during the time of Kanishka whose period could have been during the beginning of Christian era?”  Although this break up got confirmed only during the time of Kanishka, we learn from their religious literature that during the first Buddhist assembly that was held at the Rajagriha [राजगृह] after Buddha attained Maha Parinirvana [महा परिनिर्वाण],  people with two different opinions had clashed with each other and later these two divisions had expanded as Sthaviravada (स्थविरवाद- known as ‘Theravada’ in Pali) and Mahāsaṅghika [महासङ्घिक]  and in the end became Heenayana [हीनयान] and Mahayana [महायान] respectively. The two names – Heenayana and Mahayana – could have been there right from the beginning, probably only to a certain extent.  If that is the case, there is no chronological error in Padmapada mentioning it [the name Mahayana] isn’t it?  When we keep in mind the issue regarding [the time period of] Megasthenes and push the entire history to an earlier period, all these questions will get knocked off!
_____________________________________________________________________
Audio

 



Categories: Uncategorized

2 replies

  1. Awesome!

  2. The Deep Analysis on Bhuddism an interesting subject which paved way furthering expansion for strong base on Hinduism no doubt been briefed

Leave a Reply to Uma SomayajiluCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading