106. Sri Sankara Charitham by Maha Periyava – Prayer at Trichur; Significance of the holy place

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The significance of Tirchur Maha Siva Kshethram, Vrushachalam and Swami Vrushabhaaruda has been tersely explained by Sri Periyava in this chapter. This is the holy place where Bhagawathpadhal’s parents (Sivaguru and Aryambaal) prayed to Swami for blessing them with a child.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for an illustrious drawing and audio. Rama Rama


திருச்சூரில் வேண்டுதல்; க்ஷேத்ரச் சிறப்பு

ஸத்புத்ரன் பிறக்க வேண்டுமென்பதற்காக அந்த இரண்டு பேரும் திருச்சூருக்குப் போய் ஸ்வாமிக்கு ப்ரார்த்தனை செய்து கொண்டு பஜனம் இருக்கலானார்கள்.

திருச்சூர் வ்ருஷாசலம் என்று பேர்பெற்ற மஹா சிவ க்ஷேத்ரம். வ்ருஷம் என்றால் நந்திகேச்வரர். ரிஷபம் என்பதும் வ்ருஷம் என்பதும் ஒன்றேதான். வ்ருஷபாரூடரான ஸ்வாமி நந்தி ஒரு மலை ரூபத்திலிருக்கும் இங்கு மலைக்கு மேலே வீற்றுக் கொண்டிருக்கிறார். நந்தி பெரிய ரிஷப ரூபத்திலும் அந்தக் கோயிலில் இருக்கிறார். மலையாளத்திலுள்ள சிவாலயங்களில் மிகவும் முக்யமானதும் பெரியதும் திருச்சூர் ஆலயம்தான். ஊருக்கே நடுநாயகமாக அது அமைந்திருக்கிறது. பெரிய மைதானத்துக்கு மத்தியில் பிரம்மாண்டமான மதில்களோடு உள்ள கோயில். பிற்பாடு மைதானமாகிவிட்டாலும் ஆதியில் இந்த இடமும் ஒரு “காவு”வாகத்தான் இருந்திருக்கிறது. ஒரே தேக்கு மரமாக அங்கே இருந்திருக்கிறது. இப்போதும் அந்த இடத்திற்கு ‘தேக்கிங்காடு’ என்று பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது! ரிஷபமலை என்பதும் மலையென்று சருகலாக ஏறிப் போகிற மாதிரித் தெரியாது. மண்ணை வெட்டிக் கொட்டி ஸமமாகச் செய்தாற்போல் அங்கே வ்ருத்தாகாரமாக (வட்ட வடிவமாக) பூமி அமைந்திருக்கும்.

வடக்குன்னாதர் என்று ஜனங்கள் சொல்கிற வ்ருஷாசலேச்வரர், ‘ஸ்ரீகோயில்’ என்று மலையாளத்தில் சொல்லப்படும் ப்ரதானமான ஸந்நிதியில் இருப்பார். அந்த தேசத்தில் சதுரமாக ஸந்நிதி அமைத்து ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்குக் கூரைகளாக ஓடு வேய்ந்து கோயில் கட்டுவது ஸஹஜமாயிருந்தாலும் இந்த ஸந்நிதி வட்டமாகக் கட்டப்பட்டு, குடை போன்ற ஒரே தளக் கூரையுடன் இருக்கிறது. இந்தக் கோயிலிலேயே சங்கரநாராயணருக்கும் ராமருக்கும் ஸ்ரீகோயில்கள் இருக்கின்றன. இவற்றில் சங்கரநாராயணர் ஸந்நிதியும் வ்ருத்தாகாரமானது (வட்டமானது). ஆனால் அது இரண்டு தளம் கொண்டது. ராமர் ஸந்நிதியோ இரட்டைத் தளத்துடன் சதுரமாக இருக்கிறது. சிவன் கோயிலில் இப்படி விஷ்ணு ஸம்பந்தமான ஸந்நிதிகள் இருப்பது கேரளத்தில் ஸஹஜமே. இது ஆசார்யாள் நிலை நாட்டிய தர்சனாத்வைதத்துக்கு — ஸமய ஸமரஸத்துக்கு — ஏற்றதாக இருக்கிறது. நாராயண ஸ்மரணத்துடனேயே கார்யங்களைச் செய்து வந்த சங்கரரின் அவதாரத்திற்காக வேண்டிக் கொண்ட கோயிலில் சங்கரநாராயணர் இருப்பதும் பொருத்தந்தானே? ஸ்வாமி ஸந்நிதிக்குப் பின்பக்கம் அம்பாள் ஸந்நிதி. ‘பார்வதி’ என்றே பெயர். அது தாரு மூர்த்தி (மரத்தாலான திருவுருவம்.)

மத ஸம்பந்தமான நாட்டிய நாடகங்கள் நடத்துவதற்கென்றே மலையாளக் கோயில்களில் ‘கூத்தம்பலம்’ என்ற மண்டபங்கள் உண்டு. திருச்சூர் கூத்தம்பலம்தான் அவற்றில் ரொம்பவும் புகழ் படைத்தது. மரவேலைப்பாடு மிக்கதாக அது இருக்கிறது.

திருச்சூர் என்றவுடன் ‘திருச்சூர் பூரம்’ என்பதாக ஏகப்பட்ட யானைகளில் அநேக தெய்வ மூர்த்தங்கள் எதிரும் புதிருமாக அணிவகுத்து நிற்கும் உத்ஸவம் நினைவுக்கு வரலாம். ஆனால் அதற்கும் திருச்சூர் வ்ருஷாசலேச்வரருக்கும் ஸம்பந்தமில்லை என்றால் ஆச்சர்யமாயிருக்கும். இந்தக் கோயிலுக்குப் பக்கத்திலேயேதான் தேக்கிங்காட்டில் அந்த உத்ஸவம் நடந்தாலும் இந்த ஸ்வாமி அதில் கலந்து கொள்வதில்லை. அண்டைப்புறக் கோயில்களிலிருந்து வரும் அம்பாள்கள் தான் பூர விழாவில் கலந்து கொள்வது. இந்தக் கோயிலுக்கு கிழக்கே பார்மேகாவு பகவதி கோயில் இருக்கிறது. வடக்கே திருவம்பாடி க்ருஷ்ணன் கோயிலிலும் ஒரு பகவதி இருக்கிறாள். இந்த இரண்டு பகவதிகள் ஆளுக்கொரு யானை கோஷ்டியுடன் பவனி வந்து நடப்பதுதான் பூர உத்ஸவம். அந்த யானைகள் வ்ருஷாசலேச்வரர் ப்ராகாரத்துக்குள் நுழைந்து ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டுதான் வெளியிலுள்ள உத்ஸவ பூமிக்கு வரும். ஸ்வாமி உத்ஸவ மூர்த்தியாகப் போய் அதில் கலந்து கொள்வதில்லை. சிவராத்ரி உத்ஸவம்தான் அவருக்கு உண்டு. ரொம்ப விமரிசையாக நடக்கும். அப்போதுங்கூட உத்ஸவ மூர்த்தி வெளியே வீதி உலா போவதென்பது கிடையாது.

இதைச் சொல்லும்போது இன்னொன்று நினைவு வருகிறது. ஸ்வாமிக்குப் பூஜை பண்ணும் அர்ச்சகர்களும் அவர்களுடைய முறைக்காலம் (‘டெர்ம்’) முடியும் வரையில் கோயிலைவிட்டு வெளியில் போக முடியாது. ஒவ்வொரு அர்ச்சகருக்கும் ஒவ்வொரு டெர்ம் வரும். அந்தக் காலம் பூராவும் பூர்ண ப்ரஹ்மசர்ய நியமத்துடன் கோயிலுக்குள்ளேயேதான் ஈச்வர ஸ்மரணத்துடன் வஸித்து வருவார். முறை இன்னொருத்தர் கைக்கு மாறின பின்தான் அவர் வெளியிலே வருவது, வீட்டுக்குப் போவது. இம்மாதிரி ஆசார நியமம்தான் மலையாளத்துக் கோயில்களில் ஸாந்நித்யத்தை நன்றாகக் காப்பாற்றி வருகிறது.

திருச்சூர் கோயிலில் ஒரு விசேஷம். அங்கே மஹாலிங்கத்துக்கு எப்பொழுதும் சுத்தமான பசு நெய்யால் அபிஷேகம் பண்ணிக் கொண்டேயிருப்பது. இப்படி ஆயிரம் பதினாயிரம் வருஷமாகப் பண்ணிப் பண்ணி லிங்கமே தெரியாமல் ஒரே நெய்ப் பாறையாகத்தான் கர்ப்பக்ருஹத்துக்குள் தெரியும். நல்ல வெயில் காலத்திலும், கிட்டத்திலேயே நிறைய தீபங்கள் எரிந்து கொண்டிருக்கும் போதிலும் நெய் உருகுவதில்லை! ஹிமலாயத்தில் சுற்றிலும் பனிப்பாறைகளுக்கு நடுவில் வாஸம் செய்யும் ஸ்வாமி இங்கே நெய்ப்பாறையில் அப்படியே புதைந்து வாஸம் பண்ணணுமென்று தீர்மானம் செய்து கொண்டிருப்பார் போலிருக்கிறது! பனி மலைக்குப் பதில் நெய் மலை. இன்னொரு ஆச்சர்யம். இத்தனை நெய் குன்றாகக் குவிந்திருந்தும் ஒரு ஈ, ஒரு எறும்பு அங்கே பார்க்க முடியாது!

மலையாள தேசத்தில் ஆயுர்வேத சிகித்ஸை நிறைய நடக்கிறதல்லவா? அதில் பலவித ரோகங்களுக்கு ‘புராதன க்ருதம்’ என்பதான பழம் நெய்யை மருந்துச் சரக்காகச் சொல்லியிருக்கிறது. திருச்சூர் கோயிலில் ஆயிரம் வருஷத்துக்கு முற்பட்ட நெய்கூடக் கிடைப்பதால் மலையாள வைத்யர்கள் அங்கே போய்தான் புராதன க்ருதம் வாங்கிக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட க்ஷேத்ரத்திற்குத்தான் போய் சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதி பஜனம் இருந்தார்கள். பஜனை, பஜிப்பது என்று சொல்வதெல்லாம் பக்தி பண்ணுவது என்பதையே குறிக்கும் வார்த்தைகள். ‘பஜ்’ என்ற தாதுவிலிருந்துதான் பஜனை, பக்தி என்ற இரண்டு வார்த்தைகளும் வந்திருக்கின்றன. பஜனம் என்றால் ஸேவை செய்வது. குறிப்பாக ‘பஜனமிருப்பது’ என்று சொன்னால், குறிப்பிட்ட ஒரு உத்தேசத்தை வேண்டி ஒரு புண்ய க்ஷேத்ரத்திற்குப் போய் ஒரு மண்டலம், இரண்டு மண்டலம் அங்கே இருந்து கொண்டு ஜபம் – பாராயணம் செய்வது, ப்ரம்மசர்யம் முதலிய நியமங்களோடு தினமும் புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஸ்வாமி தர்சனம் பண்ணுவது, அநுமதிக்கப்பட்ட ஆலயங்களில் ஸந்நிதியிலேயே நித்திரை பண்ணுவது என்று அர்த்தம். உத்தேசப் பூர்த்தி பற்றி ஸ்வப்னத்திலே ஸ்வாமி ஆஜ்ஞை கிடைக்கும். நம்பிக்கையிருந்தால் ஸங்கேதமாகவாவது கிடைக்கும்.

இவர்கள் வ்ருஷாசலத்தில் புத்ரனை உத்தேசித்து பஜனமிருந்தார்கள். பக்தி ச்ரத்தையுடன் வேண்டியபடி இருந்தார்கள்.
___________________________________________________________________________________________

Prayer at Trichur; Significance of the holy place

The couple went to Trichur and began offering worship, praying to the Swami to bless them with a virtuous son.

Trichur is a very well known Siva Kshetra, also called as Vrushachalam [वृषाचलम्]. Vrusham [वृषम्] means Nandikeswara. Both Vrushabham [वृषभम्] (Bull) and Vrusham are one and the same.  Swami, the Vrushabhaaruda [वृषभारूढः], is sitting on the Nandi, which is in the form of a hill here.  Nandi is also present inside the temple in the form of a big bull. Among all Siva temples in Kerala, the Trichur temple is the biggest and most important.  The temple itself is the centre of the town. It is a huge temple in a big open field with huge compound walls. Although later it had become an open field, originally it was also a ‘Kaavu’. There were lots of teak trees there.  Even now, the name ‘Thekkingadu’ is attached to that place! Though a hill, it does not have a slope which needs to be climbed.  The place is in the shape of a circle, as though the soil was taken out and spread over an expanse evenly.

Vrushachaleswar, who is called as Vadakkunathar by the people, is in the main Sannidhi, called ‘Sri Kovil’ in Malayalam. Although it is conventional to build a temple in that State with square shaped Sannidhis placing tiles one upon the other for the roof, this Sannidhi is constructed in a round shape with a single storey and the roof is in the shape of an umbrella. There are Sannidhis for Sankaranarayana and Rama also in this temple.  Of these, the Sannidhi of Sankaranarayana is also round in shape (circular).  It is two storeyed.  The Sannidhi of Rama also has two storeys, but in square shape.  It is quite common in Kerala to be having Vishnu related Sannidhis in Siva temples.  It is in accordance with the Darshanaadvaita (दर्शनाद्वैत)– harmony in faith – established by Acharya.  Is it not appropriate that Sankaranarayana should be in the temple where the parents prayed seeking the incarnation of Siva, who carried on his activities with constant mental focus on Narayana?  Ambal’s Sannidhi is at the rear of Swamy’s sannidhi.  The name is ‘Parvati’. It is an deity made of bark of a tree (Daaru murthy)[दारु मूर्तिः].

In the temples of Malayalam, there are halls called ‘Koothambalam’ exclusively designated for conducting dance and drama related to religion. Among them, the Trichur Koothambalam is the most famous.  It has a lot of intricate woodwork.

Upon mentioning Trichur, one may be immediately reminded of ‘Trichur Pooram’, the festival where many elephants stand in rows facing each other with deities on top of them.  It would be surprising to know that there is no connection to that and Trichur Vrushachaleswara.  Although that festival is observed very near to this temple, in Thekkingadu, this Swamy does not take part in that festival.  It is only the Goddesses of neighbouring temples who take part in it. Paarmekavu Bhagavathy temple is to the east of this temple.  There is one Bhagavathy in the Thiruvambady Krishnan temple also, located in the north.  In Pooram festival, these two Bhagavathis come over in procession, each with their herd of elephants.  The elephants will enter the ramparts of Vrushachaleswara temple, circumambulate and only then reach the venue of the festival, located outside.  Swami does not go over as the presiding deity and participate. Only Sivaratri Utsavam is celebrated for Him.  It takes place in a very grand manner.  Even then, the presiding deity would not go out in procession in the streets.

While mentioning this, another thing comes to mind.  The priests who perform puja to the Swamy are also prohibited from going out of the temple till their term is completed.  Each priest will have a specific term.  They will observe complete celibacy throughout that term and live inside the temple, with their thoughts only on Eswara.  (ईश्वर स्मरणं -Eswara smaranam).  Only after the turn is handed over to another, he will go out or go home.  Only these kind of strict observances of sacred traditions are preserving the sanctity of the temples in Malayalam.

One special feature of Trichur temple is that the Mahalingam is constantly offered Abhishekam with pure cow ghee. Owing to performance of this [abhishekam] for thousands of years, only a rock of ghee is visible inside the sanctum, completely covering the lingam itself.  Even during peak summer and even with many lamps lit nearby, the ghee does not melt.  Looks like the Swamy who is residing inside rocks of snow in Himalayas has decided to reside inside a rock of ghee here.  Instead of a mountain of snow, it is a mountain of ghee.  Another wonder is that even though so much ghee has accumulated, one cannot see a single fly or ant!

Does not lot of Ayurveda treatment take place in Malayalam state?  Old ghee is prescribed as a medicine there for many diseases and is called ‘Puraatana grutam’ [पुरातन घृतम्].  As ghee of more than thousand years-old is available in Trichur, the Malayala doctors go there to get the old ghee.

It is in such a renowned pilgrim centre that Sivaguru and Aryambal went and offered worship. Bhajanai, Bhajippadhu etc. are words which indicate offering worship. The two words Bhajan and Bhakti have originated from the root, ‘Bhaj’[भज्]. Bhajanam means to render service. Bhajanamiruppadhu means going over to a holy place, remaining there for one or two mandalams (period of forty eight days) for a specific purpose, perform japam [जपम्] and parayanam [पारायणम्], practice regulations like brahmacharyam [ब्रह्मचर्यम्], take bath in the holy river, have darshan of the deity daily and sleep in the temples (Sannidhis) if permitted. The order from Swamy regarding fulfilment of the wish will be obtained in the dream.  If there is complete faith, it will be obtained at least in an indirect manner.

The couple worshipped at the Vrushachala, praying for a son.  They offered their prayers with utmost devotion.
___________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

2 replies

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA

Trackbacks

  1. “Ask Sowmya to Perform As It Is” – Sri Periyava’s Reassuring Message to Smt. Sowmya Murali – Sage of Kanchi

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading