Sri Periyava Mahimai Newsletter – Feb. 5, 2013

Jaya Jaya Sankara Hara Hara Sankara – How Sri Periyava’s grace is all pervading including foreigner, how Ambal comes in the form of Guru and Aditya Hrudaya upadesam are the highlights of this newsletter from Sri Pradhosha Mama Gruham

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (5-2-2013)

ஆஸ்த்திரியப் பெண்ணுக்குக் கிட்டிய அருள்

(நன்றி: தரிசன அனுபவங்கள்)

எங்கும் நிறை பரப்பிரம்மாய் அருளும் சுகப்பிரம்மரிஷி அவர்களின் உயரிய மேன்மையோடு திகழ்ந்து அனுக்கிரஹிக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் ஞானேஸ்வரர் சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வரரின் திருஅவதாரமே என்பதில் ஐயமில்லை.

கலவையில் நவராத்திரி மகோத்ஸவம் காலை பதினோரு மணி. ஏராளமான பக்தர்கள் கூட்டம் ஸ்ரீ பெரியவா தரிசனத்திற்குக் காத்து நிற்கின்றது.

சென்னை பாண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாராயணனுக்கு மகாபெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி. நவராத்திரி புண்ணியக் காலத்தில் ஸ்ரீ பெரியவா எனும் காமாட்சியைத் திரிசித்துப் போக வந்தார். ஸ்ரீ புதுபெரியவா பூஜை செய்துக் கொண்டிருக்க அங்கே ஒரே நெருக்கடி. அதனால் எதிரே ஒரு கட்டிடத்தில் இவர் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

அப்போது ஒரு இந்தியப் பெண்மணியும் ஒர் ஐரோப்பியப் பெண்மணியுமாக இருவர் இவரிடம் நெருங்கி வந்தனர். அந்த இந்தியப் பெண்மணி “சார் நமஸ்தே” என்றவள் “எங்களுக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டாள்.

இவர் முடிந்தால் செய்கிறேன் என்றார்.

அருகில் நின்ற அந்த அயல்நாட்டு பெண்ணைக் காண்பித்து “இவருடைய விஸா நாளையோடு  முடிவடைகிறது. அந்த அம்மையார் ஆஸ்திரியக்காரர். மகா பெரியவாளை தரிசனம் செய்ய வந்திருக்கிறார். சுவாமிகளை இப்போதே தரிசனம் செய்தால்தான் உடனே சென்னை சென்று விஸா கெடு முடிவதற்குள் இவர் புறப்பட முடியும். ப்ளீஸ் பெரியவாளை சீக்கிரம் தரிசனம் செய்து வைக்க உங்களால் உதவ முடியுமா? என்று இந்திய வழிகாட்டிப் பெண்மணி, பவ்யமாக கேட்டுக் கொண்டாள்.

நாரயணன் உடனே உள்ளே சென்று அனுமதி பெற்றுக் கொண்டு வந்துவிட்டார். கிணற்றின் ஒரு புறத்தில் ஸ்ரீ பெரியவா நின்று கொண்டிருக்க எதிர்ப்புறத்தில் நாரயணனும் அந்த இரண்டு பெண்களும் தரிசித்து நின்றனர்.

“என்ன ஏதாவது சொல்லணும்னா சொல்லச் சொல்லுங்கோ….இல்லே பெரியவாளிடம் ஏதாவது கேட்கணும்னா கேட்கச் சொல்லுங்கோ” என்று நாரயணன் இந்தியப் பெண்ணிடம் அயல்நாட்டுப் பெண்ணுக்காகக் கூறினார்.

ஆனால் அந்த ஆஸ்திரியப் பெண்ணோ திக்பிரமை பிடித்தவள்போல் ஸ்ரீ பெரியவாளை வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்தபடி ஏதும் பேசாமல் நின்றாள். அவள் மௌனமாகவே ஸ்ரீ பெரியவாளிடம் பேசிக் கொண்டிருந்தாளோ என்ற சந்தேகம் தோன்றும்படி அவள் முகத்தில் ஒரு பரவசம் குடிகொண்டிருந்தது. சொற்கள் தேவைப்படாமலேயே அவள் எதிரே காட்சிதரும் தெய்வம், அவள் எதற்கு இங்கு தேடி வந்தாளோ அது நிறைவேறும் வகையில் அனுக்ரஹித்து விட்டரோ என்னவோ!

அந்த அயல்நாட்டு பக்தையின் கண்களில் முழு திருப்தியடைந்திட்ட ஒளிப் பிரகாசத்தை நாரயணன் உணர முடிந்தது. ஸ்ரீ பெரியவா ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து பிரசாதமாக அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

இவர்கள் மூவரும் வெளியே வந்தனர். வெளியே வந்ததும் இரு பெண்மணிகளும்  இவருக்கு  நன்றி சொன்னபோது அந்த ஆஸ்திரியப் பெண்ணுக்கு பூர்ணதிருப்தி ஏற்பட்டிருப்பதை அறியமுடிந்தது. பின்  அவர்களிடமிருந்து விபரங்கள் வெளிவந்தன.

இந்த ஆஸ்திரியப் பெண்மணிக்கு சிறுவயதிலிருந்தே  தான் ஒரு இந்திய நாட்டுப் பெண் என்ற உணர்வு இருந்து கொண்டே இருந்ததாம். அவளுடைய சகோதரி ஒருவள் சிறிது காலம் பாரதத்தில் இருந்திருக்கிறாள். அவளிடமிருந்து பாரதப் பண்பாடு, கலாச்சாரம் தத்துவம் முதலானவைகளை இவள் மிக ஆவலுடன் கேட்டு தெரிந்துக் கொள்வாள்.

தானும் இந்தியாவிற்குப் போக வேண்டுமென்ற மன உந்துதல் ஏற்பட தன் மாத வருமானத்தில் ஒரு பகுதியை பயணத்திற்காக சிறிது சிறிதாக சேர்த்து போதுமான தொகை சேர்ந்ததும் ஒரு மாத பயணமாக தன்னுடைய முப்பதாம் வயதில் வந்திருந்தாள்.

ஆனால் அவள் தேடி வந்ததைக் காண இயலாமல் சுற்ற வேண்டியதாயிற்று. ஒரு மாத காலமாக நூற்றுக்கணக்கான துறவிகளை சந்தித்து விட்டாள். தரிசித்த துறவிகள் யாரிடமும் இவளுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. துறவிகள் என்று சொல்லிக் கொண்டு ஆசிரமம் என்ற பெயரில் மாடமாளிகைக்குள் பார்த்த அவர்களிடம் இவளுக்கு தரிசித்த திருப்தி ஏற்படவில்லை.

மனம் வேறு எதையோ தேடியது. வேறு பெரியதான, மகத்தான ஒன்றைத் தேடி மனம் அலைந்து அலைந்து ஓய்ந்த சமயம் தான் யாரோ இவளிடம் ஸ்ரீ பெரியவாளைப் பற்றி தெரிவித்தனர்.

கலவையில் காட்சிதரும் மகானைத் தரிசிக்க வழிகாட்டப்பட்ட சமயம் இவளுடைய விஸா காலம் முடிவடையும் நாளுக்கு முன்தினமாக அமைந்துவிட்டதால் இப்படி அவசர தரிசனம் செய்ய நேரிட்டது. இருந்தாலும் ஒரு மாதமாக தேடி அலைந்து இந்தியப் பயணம் வீணாகிவிடாமல் அவளுக்கு ஸ்ரீ பெரியவா தரிசனத்தில் ஒரு அதிசயம் நடந்து காப்பாற்றியிருந்தது.

அந்த ஆஸ்திரியப் பெண்மணிக்கு தெய்வ அருளாக வெகு காலமாக ஒரு தேவமங்கை, ஜோதிப் பிழம்பாக கனவில் அடிக்கடி காட்சி தந்துக் கொண்டிருந்தாள். இப்படி ஒரு தேஜோமயமான தேவதையை தேடித்தான் இந்த ஆஸ்திரியப் பெண் இந்தியா வந்துள்ளார்.

கனவில் காட்சி தந்த தேவமங்கையை நேரில் தரிக்கலாமென்று நம்பிகையோடு வந்தவளுக்கு ஒரு மாதத் தேடலுக்குபின் கிளம்ப வேண்டிய நாளின் முன்நாளில் அப்பேற்பட்ட தரிசனத்தை ஸ்ரீபெரியவாளெனும் துறவி நல்கியிருக்கும் அதிசயம் நடந்திருந்தது. கிணற்றுக்கு அந்தப் பக்கம் மற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ பெரியவாளாய் மட்டும் காட்சி தந்த ஈஸ்வரர் இந்த அயல்நாட்டு பக்தைக்கு மட்டும் அவள் கனவில் காட்சி தந்த தேவமங்கையாகவே தரிசனம் கொடுத்துள்ளார்.

மயக்கும் அருட்பார்வை, எளிமையான பக்திமயமான சூழல், மாலை கதிரவனின் செம்மை, முழுநிலவின் அமுத பொழிவு என ஒருமித்தமாய் ஒரு தெய்வீக மங்கையாக தன் கனவில் கண்ட அதே தேவமங்கையை அந்த ஆஸ்திரியப் பெண் கிணற்றின் அந்த பக்கம் பார்த்து பிரம்மித்து ஆனந்தத்தில் தான் வாய் பேசாமல் திக்பிரம்மை பிடித்தாற்போல ஆனதாக தெரிவித்தாள்.

பாண்ட்ஸ் நாரயணனுக்கு ஒரு புறம் ஆச்சர்யம் மறுபுறம் அந்த பெண்மணிக்கு மட்டும் இப்படி ஒரு அனுக்ரஹமா என்ற ஆதங்கமுமாக இருந்தது.

முழு திருப்தியோடு இவருக்கு இந்த விபரத்தை சொல்லி விட்டு அந்த பெண்மணிகள் அன்று அகன்றனர்.

சரி, அந்த ஆஸ்திரியப் பெண்ணுக்குக் கிட்டிய அந்த ஆனந்த அனுபவத்தை நாராயணன் எப்படி நம்புவதாம்?

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுடைய திருவிளையாடல் அதற்கும் விடை அளிப்பதாக விரிந்தது. அன்றைய தினம் பிற்பகல் மூன்று மணிக்கு ஸ்ரீ பெரியவா தரிசனத்திற்கு நாரயணன் நின்றிருக்க ஒன்றும் அறியாத பரப்பிரம்மமாய் ஸ்ரீ பெரியவா இவரிடம்,

“என்ன நாரயணா அந்த பொண்ணு உன்னண்டை என்ன சொல்லித்து?” என்று கேட்க நாராயணனுக்கு அப்போதே அந்த அயல்நாட்டுப் பொண்ணுக்கு ஸ்ரீ பெரியவா காட்டியருளிய காட்சி உண்மை என்று தோன்ற ஆரம்பித்தாயிற்று.

ஸ்ரீ பெரியவாளிடம் அந்த பெண் கூறிய அனுபவத்தை முழுவதுமாக ஒப்பித்தார். ஸ்ரீ பெரியவா ஒன்றும் கூறாமல் கேட்டுக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலம் நாலுமணிக்கு விஸ்வரூப தரிசனத்தின் பக்தர் கூட்டத்தில் நாராயணன் நிற்க, ஸ்ரீ பெரியவா இவருடைய ஐயத்தை போக்கும் வகையில் ஒரு சம்பவத்தை நடத்தினர்.

ஸ்ரீ பெரியவா அருகில் ஒரு துறவி நிற்க அவரிடம் ஸ்ரீ பெரியவா ஆத்மார்த்தமாக எதையோ விளக்கிப் பேச, அது நாராயணன் காதில் விழும்படியாக ஸ்ரீ பெரியவா அருளியது தெரிந்தது.

மூக பஞ்ச சதி – ஆர்யா சதகத்தில் ஒரு பாட்டு அதில், ஸ்ரீ பெரியவா விளக்கிய வரிகள்:

குண்டலிகுமாரி  குடிலே  சண்டி

சராசரஸவித்ர  சாமுண்டே

குணனி  குஹாரிணி  குஹ்யே  குருமூர்த்தே

த்வாம் நமாமி காமாட்சி

 

இந்த வரிகளை ஸ்ரீ பெரியவா விளக்கியபோது அதன் பொருளான “பாலா பரமேஸ்வரி, குண்டலினி, சண்டிகை, மாயை என்ற ரூபங்களில் அருளும் இவளே அக்ஞானத்தைப் போக்குகிற குருமூர்த்தியாவாள். இப்படிப்பட்ட காமாட்சியை வணங்குகிறேன் என்று கேட்டுக் கொண்டிருந்த நாராயணன் அவர்களுக்காகவே சொல்லப்பட்டதாக அமைந்தது.

நாராயணனுக்கு ஸ்ரீ பெரியவா அந்த தெளிவை ஊட்டி விட்டார். அந்த அயல்நாட்டுப் பெண்மணி கூறியது போல் குருமூர்த்தியாய் நிற்கும் ஸ்ரீ பெரியவாளுக்கு அக்ஞானத்தைப் போக்கும் அம்பிகையாகவும் காட்சி அருள செய்ய முடியும் என்பது தெளிவானது.

விஸா இல்லாமலே ஆஸ்த்ரியா சென்று இத்தனை ஆண்டு காலமாக அந்த பெண்மணிக்கு இரவு வேளையில் கனவில் காட்சி தந்தருளியது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் காமாட்சியே என்பதை நாராயணன் உணர்ந்து மெய்சிலிர்த்து நமஸ்கரித்தார்.

உன் சந்தேகம் தீர்ந்ததா! என்பதுபோல் ஸ்ரீ பெரியவாளின் அருட்பார்வை இவரை மௌனமாகக் கேட்டருளியது!


ஞானமுனிவரின் உபதேசம்

ஆதித்ய பகவானான சூரிய நாராயணனின் அருளைப் பெற்று எல்லோரும் உடல் வலிமையும், ஆரோக்கியமும் கூடிய மங்கள வாழ்வு பெற ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவாளெனும் தெய்வம் ஒரு பக்தர் மூலமாக நமக்கெல்லாம் ஒரு மந்திர உபதேசம் செய்துள்ளார்.

ஸ்ரீ பெரியவா டாக்டர். சி.பி. ராமசுவாமி அய்யர் அவர்களின் புதல்வர் திரு. சி.ஆர். பட்டாபிராமன் என்கிற பக்தருக்கு ஒரு உபதேசம் செய்தார்.

“இராம, இராவண யுத்தத்தில் இராமன் மனம் சோர்ந்த போது அங்கே அகத்திய முனிவர் வந்தார். அம் மாமுனிவர் இராமனின் கவலையை அறிந்து ஆதித்ய ஹ்ருதயம் என்கிற சூரியனை பிரார்த்திக்கிற சுலோகங்களை உபதேசம் செய்தார். அதன்படியே ஸ்ரீராமரும் சூரிய பகவானை வழிபட்டு தைரியம் அடைந்து இராவணனை ஜெயித்தார் என்கிறது வால்மீகீராமயணம்.

யுத்த காண்டத்தில் அந்த ஸர்க்கம் வருகிறது. மொத்தம் முப்பத்தோரு சுலோகங்கள் அதிலே ‘நக்ஷத்திர க்ரஹ தாராணாம்’ ன்னு ஆரம்பித்து ‘ரவயே லோகஸாக்ஷிணே’ ன்னு முடியும் ஏழு சுலோகங்களுக்கு விசேஷமான மந்திர சக்தி உண்டு”

என்று ஸ்ரீ பெரியவா உபதேசம்போல் சொன்னதை அங்கிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு பக்தருக்கு திரேதாயுகத்தில் தசரதராமனுக்கு அகத்திய முனிவர் உபதேசித்ததுபோல் இந்த கலியுகத்தில் பட்டபிராமனுக்கு காஞ்சி முனிவர் உபதேசிப்பதுபோல் தோன்றியது.

ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியாய், அகத்திய முனிவராய் அனைத்துமாக ஐக்கியப்பட்ட பரம்பொருளாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் தெய்வீக உபதேசம் உலக க்ஷேமத்திற்காக எல்லோருக்குமாக உபதேசிக்கப்படுவது தான்.

இந்த நடமாடும் ஞான தெய்வத்தைப் பற்றிக் கொண்டு பூர்ண சரணாகதம் செய்யும் மனப்பக்குவம் பெற்றுவிட்டால் வாழ்வில் சகல இடர்களிலிருந்தும் ஸ்ரீ பெரிவாளெனும் தெய்வம் நம்மை காப்பாற்றி சகல ஐஸ்வர்யங்களையும், சர்வ மங்களங்களையும் அருள்வாரென்பது சத்தியம்

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

__________________________________________________________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (5-2-2013)

“Blessings for the Austrian woman”

Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.

It was Navarathri festival at Kalavai and there was a huge line of devotees waiting for Periyava’s darshan. The time was 11 am.

Narayanan, a devotee, who worked at Ponds Chennai was also waiting for Periyava’s (who is also Kamakshi to be worshipped during Navarathri) darshan. Shri Pudhu Periyava was doing Pooja at that time, and the devotees had completely occupied that place. So he went to the building across the street and sat there.

At that time, an Indian woman along with a European woman came to him, wished him Namaste and asked if he could help them. He replied that he will help if it was possible.

She pointed at the European woman and said that her Visa was expiring the next day and so she would have to leave the country. She was from Austria and wanted to have Periyava’s darshan today, so she can go back to Chennai and take her flight back to Austria. They wanted his help in arranging for Periyava’s darshan that day.

Narayanan went inside and immediately got the permission for their darshan. Periyava was standing on the other side of the well. Narayanan and the two ladies were on this side.

“If she wanted to inform something, or ask anything, she can do now”, Narayanan told the Indian woman and asked her to tell it to the Austrian woman.

But the Austrian woman stood there transfixed and was unable to move her eyes away from Periyava. Her face had a happiness that indicated that she was already talking to Periyava silently. It looked as if she had the answers for which she had come there. Narayanan realized that the Austrian woman had already got her answers, by looking at her eyes shining brightly. Periyava gave her an apple as prasadam and stepped inside.

All the three of them came outside. Both the ladies thanked Narayanan and he was able to see the fulfillment in the Austrian woman’s eyes. They then started narrating their story.

The Austrian woman has always felt she was an Indian woman from her childhood. Her sister had once stayed in India for some time. She had learnt about Indian Culture, tradition and philosophies from her and was fascinated by it. She had a deep desire to visit India and started saving some money every month. She had saved enough and had planned a 30 day visit to India now.

But she was unable to find what she was looking for. For a month, she had met more than hundred sanyasis, but no one had an impact on her. She was not satisfied by meeting the so called sanyasis, who were living in palaces calling them their ashram. Her mind was constantly in the lookout for something else. During those times, someone had mentioned about Periyava to her.

When she came to know about Periyava, she had only one more day before her visa was expiring. So she had to travel immediately and complete her darshan before she could travel back. But, there was a miracle which made it possible for her to have Periyava’s darshan and making sure that her trip didn’t go waste.

The Austrian woman used to see a divine woman in her dreams and she had to come to India in search of her. She had come to India in the hope of seeing the divine woman. In Kalavai, when all the others were seeing Periyava on the other side of the well, the Austrian woman saw Him as divine woman that she had seen in her dreams.

She saw the divine woman with divine eyes, simple surroundings filled with bhakti, refined like an evening sun and cooler like the moon. She was fascinated by what she was seeing and was unable to speak anything. Narayanan was surprised and also jealous that the Austrian woman had special blessings from Periyava. After telling the story to Narayanan, the ladies left with satisfaction.

But how will Narayanan believe the story that the Austrian woman had told? Periyava’s divine play was not yet over. Around 3 pm the same day, when Narayanan was waiting for darshan, Periyava asked Narayanan, “Narayana, what did the ladies tell you?”

Narayanan told the entire story that the Austrian woman had narrated to Periyava. Periyava listened to the story as if He did not know anything, but did not say anything.

Next day at 4 am during Viswaroopa darshan, Narayanan was waiting along with the other devotees. Periyava started His divine play to clear Narayanan of his doubts.

Periyava started talking to another sanyasi near Him and He talked in such a way that Narayanan could hear the conversation.

Periyava was explaining a stanza from “Arya Shatakam” in Mooka Pancha Sathi:

Kundali Kumari Kudile Chandi

Sarasara vithra chamunde

Kunini Kuharini Kuhye gurumoorthe

Tvamam namami Kamakshi

Periyava explained these lines: “The one who is Bala Parameshwari, Kundalini, Chandikai, Maya, she is also Guru who removes our ignorance. I pray to that Kamakshi.” Narayanan who was hearing this understood that it was told specifically for him.

Periyava cleared the doubt in Narayana’s mind. Just like the Austrian woman had said, Periyava who was standing in the form of Guru to him, was also in the form of Kamakshi to her. He prayed and bowed his head to Periyava, who had travelled to Austria (without a visa) to appear in the woman’s dream.

Periyava turned and looked at Narayanan. It was as if the divine vision asked if Narayan’s doubt has been cleared.

 

Periyava’s Upadesham

Periyava has blessed us all with a Mantra Upadesham through one of the devotee to pray to the all-powerful sun god to be blessed with good health.  This Upadesham was done to Shri C.R. Pattabiraman who was the son of Dr. C.P. Ramaswami Iyer.

Periyava said, “In the battle between Rama and Ravana, when Rama was disheartened, rishi Agathiyar came there. To remove the Rama’s worry, Agathiyar did an Upadesham of “Aditya Hrudyam” to pray to Sun God. Rama also prayed to Sun God and defeated Ravana in the battle. This comes in the Yuddha Kandam of Ramayana. There are a total of 31 Shlokas and the seven shlokas that begins with “Nakshathra gruha dharanam” and ends with “ravaye loka sakshine” have very special power.”

Another devotee present there felt Periyava’s Upadesham to Pattabiraman as similar to the Agathiyar’s Upadesham to Shri Rama in the Thretha Yuga. When Periyava who is none other than Shri Lord Rama or rishi Agathiyar, does an Upadesham, it is for the benefit of all of us.

It is true that if we surrender at the feet of Periyava we will be blessed with health, wealth, peace and happiness.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)

 

 

 

 

 

 

 Categories: Devotee Experiences

Tags:

2 replies

 1. Sorry. It is “Aditya Hridaya Stotram” and not “Aditya Stotram” as I have written.

 2. I don’t see ‘ரவயே லோகஸாக்ஷிணே’ anywhere in Aditya Storam that I have been chanting ever since I was a child. I wonder if you mean sloka No.21

  “taptacAmIkarABAya vahnaye viSvakarmaNe |
  namastamoBiniGnAya ruchaye lokasAkShiNe || 21 ”
  Even here it is “ruchaye” and not “ravaye”

  I am simply asking out of curiosity and I mean no disrespect to anybody.

  I give here the link to this slokam where we can see for ourself.
  http://www.sanskritweb.net/sansdocs/aditya-hridayam.pdf

  PS: Or could it be “Ravaye” and “Ruchaye” mean the same thing?

Leave a Reply

%d bloggers like this: