Periyava Golden Quotes-815


பழம் அழுகிறது; காய்கறிகள் கெட்டுப் போகின்றன என்றால் இவை துர்நாற்றமடிக்கத் தான் செய்யும். கழிநீரைக் கொட்டினால் அதுவும் துர்கந்தம் அடிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இந்த நாற்றமெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற மாதிரி அல்லவா அந்நிய பதார்த்தங்களைச் சமைக்கிறபோது வயிற்றைப் புரட்டி எடுக்கிறது? அதுகள் அழுகி கிழுகிக் கெட்டுப் போனாலோ குடலையே பிடுங்கியெடுக்கிற மாதிரி காத தூரத்துக்குத் துர்வாடை! இங்கே இன்னொன்றும் சொல்லணும். முட்டைகோஸ், பீட்ரூட் மாதிரியான இங்கிலீஷ் வெஜிடபிள்கள் கூடாது என்பதற்கும் இதிலேயே காரணம் தெரிகிறது. அந்தக் காய்கறிகளை வேக வைக்கிற போதும், அந்தக் கழிவு நீரைக் கொட்டிய இடத்திலும் அந்நிய பதார்த்தம் போலவே வாடை வருவதைப் பார்க்கலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

When fruits or vegetables get spoilt, they start stinking. There is a foul smell when we dispose off waste water. These are nothing when compared to the smell that emanates while cooking foreign (non vegetarian) food! If and when some raw non vegetarian item gets spoiled, the stink permeates over a large distance! I have to tell something here. We should avoid English vegetables like Cabbage, Beetroot, etc. for the same reason mentioned above. When we cook these vegetables and dispose the water that is used for cooking, the same foul smell as in foreign foods emanates from these too. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading