40.2 Sri Sankara Charitham by Maha Periyava – Why incarnate as a Sannyasi?


Jaya Jaya Sankara Hara Hara Sankara – The second and final part of why did Bhagawathpadhal incarnate as a Sannyasi and not consider other Ashramam’s? What may have happened if the Avataram happened in other Ashramam’s and why only 32 years? Sri Periyava explains.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for churning out another top notch drawing and the audio. Rama Rama


ஏன் ஸந்நியாஸியாக அவதாரம்? – Part 2

க்ருஷ்ணர் க்ருஹஸ்தராக இருந்துகொண்டு ஞானோபதேசம் செய்தாரென்றாலும் ஊர் ஊராகப் போய் தேசத்தின் ஸகல வித்வத் ஸமூஹத்துக்குமா உபதேசித்தார்? ஒரு அர்ஜுனனுக்கும் ஒரு உத்தவருக்கும் மட்டுமே ஓரோரு ஸமயத்தில் மாத்திரம் உபதேசம் பண்ணினார். தாமே ஸ்வாமி என்று உபதேசத்திற்கு நடுவிலேயே அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டி நிச்சயப்படுத்தினார். உத்தவருக்குத் தனக்காகவே தெரியும், இவர் ஸ்வாமி என்று. ஸ்வாமி என்ற பிறகு க்ருஹஸ்தாச்ரமியா, அதுவா இதுவா என்றெல்லாம் பார்க்கமால் அந்த இரண்டு பேரும் உபதேசத்தை பக்தியோடு ஏற்றுக்கொண்டார்கள்.

அப்புறம் அவர் பரமபதம் போய், லோகமெல்லாம் அவர் ஸ்வாமிதான் என்று புரிந்து கொண்ட பிறகு, பரீக்ஷித்து, ஜனமேஜயன் ஆகியவர்களின் காலத்தில் அந்த உபதேசங்கள் வ்யாஸாசார்யாளின் பாகவத, பாரதங்களின் மூலம் லோகத்துக்கு ப்ரசாரமாயின*. ஸாக்ஷாத் பகவதவதாரத்தின் உபதேசம் என்பதால் எந்த ஆச்ரமத்திலிருந்து கொண்டு அவர் உபதேசித்தார் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல் எல்லோரும் உபதேசங்களை ஏற்றுக் கொண்டார்கள். அவதாரமாக லோகத்தில் வாழும்போது, அவதார லக்ஷணப்படி எல்லாருக்கும் எல்லாக் காலத்திலும் தம்மை தெய்வமாகத் தெரிவித்துக் கொள்ளாமல், மாநுஷமாகவே நிறைய வேஷம் போட்டு விட்டு, அப்புறம் ஒரு தலைமுறை, இரண்டு தலைமுறைக்குப் பிற்பாடு லோகம் தம்மை தெய்வமாகத் தெரிந்து கொண்ட பிறகே தம்முடைய ஞானோபதேசம் எல்லாருக்கும் ப்ரகாசிக்கும்படியாக க்ருஷ்ண பரமாத்மா செய்தார்.

இப்போதோ வீடு பற்றி எரிகிறபோது உடனே ஜலத்தைக் கொட்டி அணைக்க வேண்டுமென்பது போன்ற நிலையாக இருந்தது. ஒரு காலத்தில் அவதாரமாகி உபதேசம் செய்வது, ஆனாலும் அந்த உபதேசம் அப்போதே ப்ரசாரமாகாமல், லோகத்தைக் காக்க வைத்து அவதாரத்தை அவதாரமென்று அது புரிந்து கொண்ட அப்புறமே ப்ரசாரமாகச் செய்வது என்று காலஹரணம் செய்ய முடியாத சூழ்நிலையாயிருந்தது. அதர்ம அஞ்ஞான நெருப்புப் பிடித்துக் கொண்டிருந்த லோகத்தில் அப்போதேதான் ஞானோபதேசத்தை வர்ஷித்து அணைக்க வேண்டும் என்றிருந்தது. ஆனால் அவதார காலத்திலேயே ஆச்ரமத்தைப் பார்க்காமல் ஈச்வராவதாரமென்று எல்லாருக்கும் எப்போதும் தெரியும்படி இருப்பதென்றாலோ, ஒரு அவதாரமென்றால் அது மாநுஷமாகவும் இருந்துதானாக வேண்டும் என்று நாம் பல காரணங்களைக் கொண்டு தெரிந்து கொண்டாமே, அந்தப்படி பண்ண முடியாமலாகி, அவதாரத்தின் லக்ஷணங்கள் லக்ஷ்யங்கள் இரண்டிற்குமே பாதகம் ஏற்படும். ஆனபடியால் ஸந்நியாஸாச்ரமத்தில்தான் அவதாரம் இருக்க வேண்டுமென்றும், அவதார புருஷர் லோகத்தில் உள்ள போதே எல்லாருக்கும் ப்ரகாசமாக உபதேசம் செய்துவிட வேண்டுமென்றும் ஆயிற்று.

குறிப்பாக இந்திரியக் கட்டுப்பாடு போதாத இந்தக் கலிகாலத்தில் க்ருஹஸ்தன் ஞானோபதேசம் செய்தால் ஸந்தேஹத்திற்கும் பரிஹாஸத்திற்கும் இடமாகும். ஜனங்களெல்லாம் பலவிதத்தில் ஹிபாக்ரிஸி பண்ணிக் கொண்டிருக்கும்போது, ‘பார்த்தால் க்ருஹஸ்தாச்ரமம், பண்ணுவதோ ஞானோபதேசம் என்று தங்களைப் போலவே அந்த ஆஸாமியும் ஒன்று என்று, ஜனங்கள் பரிஹாஸமாக நினைப்பார்கள். இந்திரியக் கட்டுப்பாடு இந்த யுகத்தில் போதவே போதாது, சபலத்தின் இழுப்பு இப்போது ஜாஸ்தி என்பதால்தான் ஐம்பது வயஸுக்கு மேற்பட்டு பத்னியோடுகூட இருந்து கொண்டே, ஆனாலும் தாம்பத்ய போகம் இல்லாமல், தபோ வ்ரதங்கள் செய்வதான வானப்ரஸ்தம் கலியில் வேண்டியதில்லை என்று சாஸ்த்ராபிப்ராயம் இருக்கிறது. நன்றாகப் பதமாகிறமட்டும் க்ருஹஸ்தாச்ரமத்திலேயே இருந்துவிட்டு நேரே ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளும்படியாக இந்த யுகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

முக்யமாக இந்த அவதாரம், நிவ்ருத்தி மார்க்கத்தில் ஞானம் பெற்றே மோக்ஷமடையமுடியும் என்ற உபநிஷத அபிப்ராயத்தை முடிவாகச் சொல்ல வந்தது. எனவே அது ஸந்நியாஸியாயில்லாமல் வேறெப்படியும் இருக்க முடியாதென்று ஆகிவிட்டது. ப்ரவ்ருத்தியிலிருப்பவர் நிவ்ருத்தியை அந்தரங்க ஸாதனமாகச் சொல்வது பெரிய முரண்பாடல்லவா?

இப்படிப் பல காரணங்களால், கலி பிறந்து ஸுமார் 2500 வருஷத்துக்கப்புறம், ஈச்வரன் குருவாக அவதாரம் பண்ண வேண்டுமென்றும், அப்படி ஞானாவதாரமாக வருபவர் ஸந்நியாஸியாகவே இருக்க வேண்டும், ஆயுஸ் முழுக்க அப்படியிருந்து உபதேசம் பண்ண வேண்டும் என்றும் முடிவாயிற்று. பகல் வேளையில் எப்போதோ ஒரு ஸமயம் மானம் (வானம்) மூடிக் கொண்டு இருட்டிப் போவது போல க்ருஷ்ணர் காலத்தில் ஏற்பட்டதால் அப்போதைக்கு அவர் ஒரு தீபத்தை ஏற்றி வைத்தால் போதுமானதாயிருந்தது. இப்போது ஒரே ராக்காலமாகவே ஆகிவிட்டதால் அவதார புருஷர் ஆயுஸ்காலம் பூராவும் நிறைய விளக்குப் போட்டாக வேண்டும் என்றாயிற்று. மனோ விகாரங்களும், விகல்பமான எண்ணங்களும் ஜனங்களுக்கு ஜாஸ்தியாகி விட்டதால் அவதாரம் தாம்பத்ய வாழ்க்கையே இல்லாமல் இருக்க வேண்டுமென்றும் ஆயிற்று.

ஆசார்யாள் பூர்ணமாக மநுஷாயுஸ் பூலோகத்தில் இருக்கவில்லை, முப்பத்திரண்டே வயஸுதான் இருந்தாரென்று தெரிந்திருக்கும். அதாவது இத்தனை கலி ப்ரவாஹத்தையும் அடக்குவதற்கு அத்தனை ஸ்வல்ப காலமே போதும்படியாக அப்பேர்ப்பட்ட ஞான சக்தியோடும் க்ரியா சக்தியோடும் அவதாரம் ஏற்பட முடிந்தது என்று தெரிகிறது. முப்பத்திரண்டு வருஷமென்ன, சொடக்குப் போடும் நாழியிலேகூட ஈச்வர சக்தியால் ஸாதிக்க முடியாததாக எதுவாவது உண்டா? ஆனால் நரலீலைக்காக அவதாரம் என்று ஆடிக் காட்டுவதில் இப்படி 32 வருஷமென்று ஸங்கல்பம் செய்யப்பட்டது. அதை ரொம்பவுமே லீலா விநோதமாகப் பண்ணினார். எப்படியென்றால், முதலில் தம்முடைய ஸ்வய ஸங்கல்பப்படி எட்டே வயஸு இருக்கிற மாதிரியும், அப்புறம் முதலை வாயிலிருந்து தப்புகிறபோது எட்டைப் பதினாறாக்கிக் கொண்டாற் போலவும், பதினாறு முடிந்தபோது வ்யாஸர், ப்ரம்மா ஆகியவர்களுடைய விருப்பப்படி இன்னும் ஒரு பதினாறு கூட்டிக் கொண்ட மாதிரியும் விளையாட்டுப் பண்ணினார். ஆனால் முதலிலேயே பரமேஸ்வரன் ப்ளான் போட்டதுதான், — தாம் முப்பத்திரண்டு வருஷம் ஸந்நியாஸ குருவாயிருந்தே அத்வைத க்ரந்தங்களை எழுதி அவற்றை தேசம் பூரா ஸஞ்சாரம் பண்ணிப் பிரசாரம் செய்ய வேண்டுமென்பது.

ஸரி. ஆனால் 32 வருஷம் என்பது புருஷாயுஸ் இல்லை. புருஷாயுஸ் (என்பது) நூறு வருஷம். இந்த அவதாரம் அப்படிப் பூர்ணாயுஸ் கொண்டதாகவோ, அல்லது எண்பது தொண்ணூறு வயஸ் ஜீவிப்பதாகவோ இருந்து, அதில் முதலில் மற்ற ஆச்ரமங்களை வஹித்துவிட்டுக் கடைசி 32 வருஷம் மட்டும் ஸந்நியாஸியாயிருக்க முடியுமல்லவா? ‘அப்படியெல்லாம்கூட க்ருஹஸ்தாச்ரமக் கலப்பு இருக்கவே கூடாது. அவதார கார்யத்தைப் பண்ணுவதற்கு 32 வருஷம் போதுமா? அப்படியானால் அந்த 32 வருஷமும் ஸந்நியாஸியாயிருந்துவிடவேண்டும். ஜீவிதம் பூராவும் ஞானோபதேசமே கார்யமாயிருந்துடணும். இந்தக் கலியுகத்தில் அவதாரமாக வரும்போது க்ருஹஸ்தாச்ரம வாடையே காட்டப்படாது’ என்று பரமேஸ்வர ஸங்கல்பமாயிற்று.

* பஞ்ச பாண்டவர்களை அடுத்துப் பட்டமேற்ற பரீக்ஷித்தின் இறுதிக் காலத்தில் வியாசரின் புதல்வரான சுகர் அவனுக்கு உபதேசித்த பாகவதத்தில் ‘உத்தவ கீதை’ இடம் பெறுகிறது. பரீக்ஷித்தை அடுத்துப் பட்டமேற்ற ஜனமேஜயனின் ஸர்ப யாகசாலையில் வியாசரின் சிஷ்யரான வைசம்பாயனர் உபந்நியசித்த மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு உபதேசமான பகவத் கீதை இடம் பெறுகிறது.

_________________________________________________________________________________

Why incarnate as a Sannyasi? – Part 2

Lord Krishna, although enunciated the superior knowledge as a householder, did He go around every village elucidating to all the scholar communities?  He instructed to only one Arjuna and Uddhava, at different points of time.  He established that He is himself the supreme lord, by showing His Viswaroopa, in the middle of His enunciation itself to Arjuna.  Uddhava himself knew that Krishna was the supreme Lord.  When it was known that He was the Bhagawan, both of them accepted the teachings with sincere devotion, without going into whether He was a householder (gruhasthashrami) or anything else.

Later, when He had returned to His heavenly abode and the entire world had understood that He was the Bhagawan, these teachings got propogated through Vyasa’s Bhagawatham and Mahabharatham, during the days of Pareekshith, Janamejayan, etc*.  As they were from the Bhagawan Himself, everybody accepted the teachings without asking from being in which ashrama, He gave the teachings. While living in the world during His incarnation, in accordance with the nature of the incarnation, He acted out as a human being without making it known all the time, to everybody that He was the Bhagawan and only after one or two generations, when the world understood Him as the Bhagawan, Krishna made His teachings shine and known to everyone.

Whereas now, the situation was as though the house was on fire and had to be doused with water immediately.  It was not a situation which could afford wastage of time, where, initially teachings can be given during an incarnation but still not publicized to everybody during that time itself, but make the world wait till it understood the incarnation as an incarnation and then propagate the teachings. The world which was engulfed in the fire of non-righteousness and ignorance, had to be extinguished with the superior knowledge immediately.  As we had learnt (earlier) with so many reasons that it had to be a human incarnation if everyone should realize that the incarnation was indeed god himself during the incarnation itself without getting to the details of which ashrama, etc., but that was not to be as it would affect both the nature and objective of the incarnation itself. Therefore, it was decided that the incarnation had to be in the Sannyashrama only and also the teachings had to be spread to all during the period when the incarnate himself was in the world.

Particularly, in Kaliyuga, when there is not enough control over the senses, if a householder was to impart superior knowledge, it would have been subject to suspicion and ridicule.  When people are indulging in all sorts of hypocrisy, people would have ridiculed saying that he is obviously, a householder but giving lectures on superior knowledge and would have treated him to be like any one of themselves.  Control over the senses is not at all enough in this yuga.  That is why, there is a prescription in the scriptures that due to the fact that the power of temptation is so much in this Kaliyuga, there was no need to follow the lifestyle of a Vanaprastha after the age of 50 and the householder can be practicing celibacy and other austerities, even while living with his wife. It has been prescribed for this yuga that gruhasthasrama can be followed till the mind attained good level of maturity and straight away take to hermitage (Sannyasa).

Importantly, this incarnation took place to convey the sayings of the Upanishads that it was possible to get liberation only if the superior knowledge is attained by following the path of Nivruthi.  Therefore, there was no way but it had to be as an ascetic and not otherwise.  Would it not be a big contradiction if someone following the path of Pravruthi talked about Nivruthi as the essential tool?

Due to such various reasons, it was decided that Bhagawan should incarnate 2500 years after the onset of Kaliyuga and that the person incarnate of knowledge should only be a saint (Sannyasi) and that He had to remain like that throughout his lifetime and give his teachings. The situation during Krishna’s time was like how the day time would rarely get dark due to dark clouds in the horizon and it was enough for Krishna to light a lamp (to dispel the darkness). As the present situation was as though it was night time always, it so happened that the incarnate had to light lamps throughout his lifetime. Since evil minds and various evil thoughts was on the increase among the people, the incarnation had to be without leading the life of a householder.

Aacharya did not live a full life of a human being. You would be knowing that he lived only up to the age of 32. It is clear that the incarnation was so powerful in terms of knowledge and action that it was enough to quell the force of the Kali within that short span of life itself.  Why 32 years? Is there anything that is not possible to be accomplished for the might of Bhagawan, in a time period that takes to only crackle the fingers?  However, since it had to be in the form of a human incarnation, it was decided to do it in this 32 years.  He played that out in a very wonderful manner. You know how, He did it as though He would live for only 8 years as per his own decision, got increased to 16 upon escaping from the clutches of the crocodile and towards the end of the 16 years, added another 16 as per the wishes of Vyasa, Brahma, etc.  But it was a plan hatched already by Parameswara that He would live for 32 years as a Sannyasi guru and write the Adwaitha treatises and spread them across the entire country.

Ok.  But 32 years is not the lifetime of a human being.  A lifetime for a human being is 100 years.  Could not the incarnation lived the full life or 80 or 90 years, living all the other ashramas during the initial years and become an ascetic only during the last 32 years?  But Bhagawan had decided that there shall not be even a trace of household, if 32 years was enough to complete the job of the incarnation, then the entire life period of 32 years shall be as a sannyasi with preaching the supreme knowledge as the only duty during the entire life.

*‘Udhava Geetha’ takes place when Sukar, the son of Vyasa expounds Srimad Bhagawatham to Parikshit, who ascended the throne after the Pancha (five) Pandavas.  Srimad Bhagawad Gita from Mahabharatha is found in the teachings of Vaisampayana, the disciple of Vyasa, to Janamejayan in the Sarpa Yagasala, who became the king after Parikshit.
____________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. ” a lifetime of human being is 100 years”. Now we know why he lived upto 100. That too was per Shastras

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading