173. Maha Periyava on Pasupathi


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Who is Pasupathy and why is he binding us? How to get rid off the bond and what should be our bare minimum and ultimate aim? Sri Periyava explains beautifully.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. Sunitha Madhavan for the translation. Rama Rama

பசுபதி

பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமான ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ அல்ல. பசு என்பது நாம்தான். ஜீவர்களெல்லாம் பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.

தழையைக் கண்ட இடமெல்லாம் ஒடுகிற பசுவைப் போல், இந்திரிய சௌக்கியத்தைத் தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல் பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.

‘எங்கே கட்டியிருக்கிறான், கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே’ என்று தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப்பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம். ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம்; அப்படியும் அது பலிதமாகவில்லை; இச்சமயத்தில், ‘முடிந்ததெல்லாம் செய்தேன்; ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது? காரியம் ஜயிக்கவில்லை’ என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். ‘பந்தம்’ என்பதுதான் ‘கட்டு’. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி.

கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும். ஆனால் கட்டை அவிழ்ந்துவிட்டால் என்ன ஆகிறது? அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது. அவன் அதை வெளுவெளு என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைக்கிறான். அப்போதுதான் பசுவுக்குத் தன்னைக் கட்டிப் போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.

இப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறது. ஈசுவரன் இப்படி ஒரு கட்டைப் போடாவிட்டால் நமக்குத் தோல்வி, துக்கம் இதெல்லாம் ஏற்படாது. தோல்வியும் துக்கமும் வருவதால்தான் நாம் இப்போது ‘நமக்கு இவ்வளவுதான் பொசிப்பு’ என்கிற புத்தியைப் பெற்று, இருக்கிற மட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவது முயல்கிறோம். இவை இல்லாவிட்டால் நம்முடைய ஆசைக்கும், நாம் போடுகிற ‘ப்ளானு’க்கும் முடிவே இராது. இத்தனை பலமான கட்டு இருக்கும்போதே, நம்மில் ஒவ்வொரு தனி மநுஷ்யனின் ஆசைக்கும் இந்த சிருஷ்டி முழுவதையும் ஆஹுதி பண்ணினாலும் போதாமலிருக்கிறது. பூலோகம் போதாதென்று, இப்போதே சந்திர மண்டலம், மார்ஸ் என்று பேசுகிறோம். கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம். இப்போதே இத்தனை போட்டி, பொறாமை, சண்டை என்றால் அப்போது எப்படியிருக்கும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாது. நம் ஆசை அவ்வளவையும் காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறதோ, நாம் பிழைத்தோமோ!

பசுவைக் கட்டிப் போடாவிட்டால் அது பயிரையும் பாழாக்குகிறது; தானும் அடிபடுகிறது. அதுபோல் கர்மாவால் ஈசுவரன் நம்மைக் கட்டிப் போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம் – இப்போதே கெடுக்கிறோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுத்தால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவு கெடுப்போம்; கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு சமயத்திலாவது பசுவுக்குக் கட்டுத் தறியிடம் வந்து படுக்க முடிகிறது. கர்மம் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்று கொண்டு தானிருப்போம்.

நம்முடைய க்ஷேமத்துக்காக, நாமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். ‘எப்பொழுது அவிழ்த்து விடுவீர்?’ என்று அவரைக் கேட்டால், ‘ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்த்து விடுவேன்’ என்கிறார்.

குழந்தை விஷமம் செய்தால், கட்டிப் போடுகிறோம். நம்மிடம் ‘ஆசை’ என்ற விஷமம் இருப்பதால், நம்மைப் பசுபதி கட்டிப் போட்டிருக்கிறார். குழந்தைக்கு விஷம புத்தி போய் விட்டால் அப்புறம் கட்டமாட்டோம். நமக்கு ஆசை போய்விட்டால் ஈசுவரனும் நம்மை அவிழ்த்து விடுவார். ஆசையினால்தான் பலருக்குப் பலவிதக் கஷ்டங்களை உண்டாக்கி, நாமும் கஷ்டப்படுகிறோம். ஆசை போய்விட்டால், யாருக்கும் நம்மால் கஷ்டம் இல்லை. அப்போது கட்டும் இல்லை; அவிழ்த்து விடுவார்.’

கட்டு போய்விட்டது என்பதால் அசலான் தோட்டத்தில் மேயமாட்டோம். ஏனென்றால், அசலான் தோட்டத்தில் மேயாத புத்தி நமக்கு வந்த பிறகுதான் பசுபதி கட்டையே எடுக்கிறார். கட்டு போனபின் நாம் கட்டுப்பட்ட நிலையிலிருந்து உயர்ந்து கட்டியவனின் நிலைக்கே போய்விடுவோம். கட்டு இருக்கிற வரையில் நாம் வேறு, ஸ்வாமி வேறு என்று பூஜிக்கிறோம். கட்டு போய்விட்டால் நாமே அவன் என்று தெரிந்து கொள்வோம். அப்புறம் பூஜைகூட வேண்டாம்.

ஒரு நிலை வரையில் ஜீவன் பசு என்று சுருதியும் சொல்கிறது. அது எந்த நிலை?

தேவதாம் அன்யாம் உபாஸதே

என்று சொல்லியிருக்கிறது. இதற்குப் பொதுவாக, ‘இஷ்ட தேவதையை விட்டுவிட்டு அதற்கு அந்நியமான தேவதையை உபாஸிக்கிறவன் ‘பசு’ என்று பொருள் சொல்வார்கள். அது தவறு. ‘தான் பூஜிக்கிற தேவதை தனக்கு அந்நியமானது என்று நினைத்து எவன் பூஜை செய்கிறானோ அவன் ‘பசு’ என்பதே சரியான அர்த்தம். இப்படி பகவான் வேறு, பக்தன் வேறு என்ற பேத புத்தி இருக்கிற வரையில் கர்மா உண்டு. கர்மா உள்ள வரையில் கட்டும் உண்டு.

அதற்காக, இப்போதே நமக்கு பேத புத்தி போய்விட்டதாக நாம் பிரமை கொள்ளக் கூடாது. பாசாங்கு பண்ணக்கூடாது. உண்மையாகவே பேத புத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அப்படிப் போகாத வரையில் சாஸ்திரோக்தமான கர்மங்களைச் செய்யத்தான் வேண்டும்.

‘ஸ்வாமிகள் என்ன இப்படிச் சொல்கிறார்? இத்தனை நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்று சொன்னார். இப்போது இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிற கர்மத்தைச் செய்யத்தான் வேண்டும் என்கிறாரே? இந்தக் கர்மம் மட்டும் கட்டிப் போடாதா?’ என்று உங்களுக்குத் தோன்றும்.

இதற்குப் பதில் சொல்கிறேன்: ஆசை வாய்ப்பட்டுச் செய்கிற கர்மங்களின் கட்டை அவிழ்ப்பதற்கே சாஸ்திரம் விதிக்கிற தர்ம காரியங்களின் கட்டு உதவி செய்கிறது. அதெப்படி ஒரு கட்டு இன்னொரு கட்டை அவிழ்க்க உதவும் என்று கேட்கலாம். ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்: ஒருத்தன் விறகுகளைக் கட்டிக் கொண்டு வருகிறான். மணி முடிச்சாகக் கட்டிவிட்டான். கயிற்றை அவிழ்க்க முடியவில்லை. அப்போது என்ன செய்வார்கள் தெரியுமா? அந்தப் பழைய கட்டுக்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்கமாக மற்றொரு கயிற்றைச் சுற்றி நெருக்குவார்கள். இந்த இரண்டாவது கயிற்றை முடிச்சுப் போடமாட்டார்கள். அப்படியே கெட்டியாக விறகுகளைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள். இந்த இறுக்கலில் பழைய மணி முடிச்சுக் கட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் ‘தொள தொள’ என்று நெகிழ்ந்து கொடுக்கும். அதை அப்படியே அலாக்காக விறகுச் சுமையிலிருந்து கழற்றி விடுவார்கள். பிறகு புதிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட கயிற்றையும் விட்டுவிடுவார்கள். ஆக, புதிய கட்டு பழைய கட்டை அவிழ்க்க உதவி விட்டது. அப்புறம் இதையும் சுலபமாக எடுத்துப் போட்டு விட முடிந்தது.

சாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டு, இரண்டாவது கயிறு போன்றது. அது முடிச்சுப் போட்டுக் கட்டுவது அல்ல; கட்டுகிற மாதிரி இருக்கும். சாஸ்திர விதிகள் ரொம்பவும் கறாராக, கண்டிப்பாக கட்டுப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும். ஆனால் இந்திரியங்கள் போடுகிற மணி முடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டு, கடைசியில் பூரண நிம்மதி, சௌக்கியம், விடுதலை பெற வேண்டுமானால், இந்தக் கட்டு இருந்தேயாக வேண்டும்.

ஆசைக்கட்டுப் போனபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும். ஆனால் முதலில் அது போவதற்காக இந்த இரண்டாவது கட்டை நாமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். தார்மிகமாக மநுஷ்ய காரியம், தேவகாரியம், பூஜை, யக்ஞம், பரோபகாரம், ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும். ஆசை போனபின் இந்தத் தெய்வ காரியங்கள், வைதிக காரியங்கள், சமூக காரியங்கள் எல்லாம் கூட நின்றுவிடலாம்.

இந்த நிலையை ஒருவன் அடைகிறபோது தேவதைகளுக்கெல்லாம் இப்படிப்பட்ட சாதகனிடம் கோபம் வருமாம். (தேவதைகள் வேறு; தெய்வம் எனறு பொதுவில் சொல்லப்படும் ஸ்வாமி வேறு.) * மனிதன் வைதிக காரியம் செய்தால்தான் தேவதைகளுக்கு ஆஹுதி கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் பட்டினிதான். எனவே இவன் கர்மாவை விட்டு, யக்ஞம், தர்ப்பணம், பூஜை இவற்றை நிறுத்தி விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காது. எனவேதான் கோபம் வரும். மாடு கறவை நின்றுவிட்டால் அப்புறம் அது பிரயோஜனம் இல்லை என்று தீனி போடுவதை நிறுத்தி விடுகிறோம் அல்லவா? மனிதனின் ஆசையெல்லாம் நின்று விட்டால், எந்த தேவதையின் அநுக்கிரகமும் இவனுக்கு வேண்டாம் என்றாகி, அவற்றுக்கு இவன் ஆஹுதி தருவதும் நின்றுவிடும். மனிதனின் கர்மம் நின்றுவிட்டால் அப்புறம் தேவதைகளுக்கு அவனால் பிரயோஜனம் இல்லை. இது காரணமாகத்தான், புராணங்களில் பல ரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையத் தபஸ் செய்த போது தேவதைகள் பிரதிபந்தகம் (இடையூறு) விளைவித்ததாகப் பார்க்கிறோம்.

இதனால்தான் ஸம்ஸ்கிருதத்தில் அசட்டுக்கும் அஞ்ஞானிக்கும், ‘தேவனாம் ப்ரியன்’ என்றே ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. ‘தேவனாம் ப்ரியன்’ என்றால் ‘தேவதைகளுக்கு இஷ்டமானவன்’ என்று அர்த்தம். அது ஏதோ புகழ்ச் சொல் போலத் தோன்றும். ‘தேவனாம் ப்ரிய அசோக்’ என்று அசோகச் சக்கரவர்த்திக்கூடக் கல்வெட்டுகளில், ஸ்தூபிகளில் எல்லாம் தம்மை வர்ணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் எவன் தேவதைகளுக்கு திருப்தி செய்கிற நிலைக்கு மேற்பட்ட ஞானத்தை ஒரு நாளும் தேடிப் போகாமல், கர்மத்திலேயே உழலுகிற அசடோ, அவனே ‘தேவனாம் ப்ரியன்’.

பழைய காலத்தில் ஞானம் வந்தவர்களும்கூட சாஸ்திரக் கர்மாவை விடத் தயங்கினார்கள். மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காக, இவற்றை தங்களுக்கு அவசியமில்லாமலும் கூடத் தொடர்ந்து செய்து வந்தார்கள். நாமோ, சிறிது கூடத் தயக்கமில்லாமல், ஹாய்யாக சகல சாஸ்திர தர்மங்களையும் விட்டுவிட்டோம். ஆனால் ஞானியாகத்தான் ஆகவில்லை.

ஞானியில்லை என்றால், ‘தேவனாம் ப்ரியர்’களாகவாவது இருந்தால், அவர்களுடைய பிரீதியால், நாம் செத்துப்போன பின் தேவலோகத்துக்குப் போகலாம். தேவலோகம் என்பது ஒரு கேளிக்கை லோகம். அது மோக்ஷமல்ல. மோக்ஷம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாத ஆத்மானந்தத்தை சாசுவதமாகத் தருவது. தேவலோகம் என்பது நம் வைதிக கர்மாவினால் கிடைத்த புண்ணியம் தீருகிற காலம் வரைக்கும் மட்டுமே போக போக்கியங்களைத் தருகிற இடம். புண்ணியம் தீர்ந்தபின் பூலோகத்துக்குத் திரும்பத்தான் வேண்டும். மோக்ஷ சுகத்துக்கும், தேவலோகம் என்கிற ஸ்வர்கத்தின் இன்பத்துக்கும், அஜகஜாந்தரம். இருந்தாலும் துக்கமும் கஷ்டமும் நிறைந்த மநுஷ்ய லோகத்திலிருந்து நாம் தேவ லோகத்துக்காவது போனால் விசேஷம்தான். நாம் இதற்காகவே வழி பண்ணிக் கொண்டிருக்கிறோமா? அதுவும் இல்லை. தேவதைகளுக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம்? நாம் ‘நரகவாஸீனாம் ப்ரியர்’களாகவே இருக்கிறோம் – நரகத்திலிருப்பவர்கள், நமக்குத் துணையாக இவர்களும் வரப் போகிறார்கள் என்று நம்மைப் பற்றிப் பிரியமான எண்ணுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம்.

துஷ்டர்களாக இருப்பதைவிட, அசடுகளாக ஆவது சிலாக்கியம். முதலில் நாம் அசடுகளான தேவனாம்பிரியர்களாக ஆகவேண்டும். அப்புறம் பசுபதி கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டை அவிழ்த்து விடுவார். (தேவலோகத்தை விரும்பாமல், பற்றின்றி கர்மா செய்தால், இக்கர்மாவே சித்த சுத்தி தந்து ஞானத்துக்கு வழிகோலும்.) அப்புறம் தேவதைகளின் பிரியத்தையும், அப்பிரியத்தையும் பொருட்படுத்தாத ஞானி ஆகலாம். அப்போது பசு (ஜீவன்) – பாசம் (கயிறு) – பதி (ஈசுவரன்) என்கிற மூன்றில் பசுவும் பாசமும் போய், பதி மட்டுமே இருக்கும். பசுவான நாமே பதியாகி இருப்போம்.

சைவ சித்தாந்தத்தில் பசு – பதி – பாசம் என்று எதைச் சொல்கிறார்களோ, அதுதான் ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தில் ஜீவன் – பிரம்மம் – மாயை என்று சொல்லப்படுகிறது. சங்கரரும் பசு – பாசம் என்ற பதங்களையே ஸெளந்தர்ய லஹரி சுலோகம் ஒன்றில் பிரயோகித்திருக்கிறார்.

சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசு பாச வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜனவான்

(அம்பிகே! உன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசு, பாசம் என்கிறவற்றின் சேர்க்கையால் உண்டாகிற விபரீதத்தைப் போக்கிக் கொண்டு ஸதா காலமும் பரமாநந்தம் என்ற ரஸத்தையே ருசிக்கிறான்.)

* இதற்கு அடுத்த உரையான “தேவர்கள்” என்பதில் இதன் விளக்கம் வெளியாகியிருக்கிறது.

___________________________________________________________________________________

Pasupathi

Pasupathi is the name of Parameswaran.The word ‘Pasu’ does not refer to His mount or guard, Nandhi. We are the ‘Pasu’.
All jivas are pasus. Eswaran is their master.

Just as cows wander where ever greenery is in sight, so do we run seeking sensuous pleasures. Like the owner of cows who keeps them tied, so does Eswaran, to whom we belong, keeps us under control.

“Where has He fastened us, nothing seems visible”, thus it may seem to us. But without realizing it, we in fact do talk about these ties now and then. We make efforts to accomplish a task; but it does not fructify. At that time we console ourselves by saying,” I made all possible attempts, but who can escape the bond of bad karma? That is why the task has not been achieved.” The bond here is the knot. Pasupathi has kept us bound by the bond of our past karma.

The cow that is tied up will get angry with the rope. But what happens when it is let free? It grazes in the garden of another
person. That stranger thrashes it and drags it to a pound where the cow is locked up. That is when the cow comes to understand how safe it was when it was kept tied.

In the same way we also get annoyed about the bond of karma. If Eswaran has not kept us bound by this tie, we will not experience failure or sorrow. It is because we confront such failures and sorrows that we get reconciled and will try to derive comfort from what we have in order to live in peace. If only the bond was not there, no end will be in sight for our desires and plans. In spite of there existing such a strong hold, the extent of our desires are such that, even if the whole creation is offered it may not be sufficient to satisfy a single individual. Finding this planet earth inadequate, already we are taking off to reach the moon and the mars. In the absence of a binding, the situation will be uncontrollable. Already there is competition, envy and fight. What chaos will prevail without any control is simply unimaginable. It is only because karma restrains us from striving for fulfillment of our desires that we are sustaining!

When the cow is not tied to a post, it destroys the crops and also gets beaten up. Similarly if Eswaran had not kept us bound up, we will ruin ourselves and ruin the planet. As it is we do that now. If with limitations we are capable of spoiling this much, what would then be the damage we will cause with complete freedom? It is because of the rope that ties, the cow can rest sometime at least for a while, close to the post. Due to the bond of karma, we also once in a while contemplate on the causal power, Eswaran. Otherwise totally forgetting God, we will be struggling in this Samsara (cycle of birth and death).

It is for our wellbeing, not to create trouble for ourselves that Bhagawan has kept us bound. If we were to ask Him “When will You release us?” He will say “When you get the maturity of mind not to harm anyone and in that process becoming sinful yourself, then I will untie you.”

When a child does mischief, we keep it tied. We have mischief in us; so it is Pasupathy keeps us tied. If the child is free of the mischievous mind, thereafter we will not keep it tied up. If we are free from desires, so will Eswaran let us free? It is because of desires that we create various troubles for several people and also hurt ourselves. If desire is gone, no one will be harmed by us. Then there are no ties. He will untie us.

Now that we are let free, it does not mean we will go astray and trespass into others’ territory. It is because we come to have the wisdom not to covet others’ possessions, Pasupathi   considers us fit to be untied. Once the ties are gone, we rise up from the stage of having to be kept within bounds to the level of the Master who kept us fastened. Till such time we remain bounded. We worship Him with the feeling that we and He are separate entities. When the ties are removed, we realize that we are Him. There after, rituals become redundant.

Sruthi says that up to a level the jiva is cow. What is that level?

It says “Devathaam  Anyam Upaasathe”.

Generally it is interpreted as setting aside Ishta Devatha and worshipping an Anya (different) Devatha. That is wrong. If one worships a Devatha considering it to be different from him, then that person is a cow. This is the correct meaning. Till such time we worship with the misconception that Bhagawan is different and we are different, we remain bound.

But we are not to imagine that we are free from such a misgiving. Do not pretend. We must truthfully overcome the misconception. Till such a level is attained, we necessarily have to do the karmas as ordained by the Sasthras.

We may tend to think, “Why is Swamigal telling like this? So long he had said that if there is karma, there will be ties. Now he says, after realization also we need to perform karma given by the Sasthram. Will not the performance of the karma have a binding effect on us?”

I will give the answer for this: Sasthram lays out the Dharma specifically meant for freeing us from the bonds of desire impelled actions. We may ask, how come one bond will help to untie another bond. I will tell you a real fact: One man comes with logs of wood tied up into a bundle. He has put the knot very tight and is unable to remove it.  At that point what will he do? Close to the original knot he will now bind the logs with another rope making it even tighter. This second binding rope will not be tied. By holding this bundle of wood in a tight grip, the original rope will now get loosened and will sag, thus enabling him to completely remove it apart from the bundle. Then he will let go the new rope untied. In this manner the new binding had helped in untying the original knot. Thereafter this is also easily discarded.

What the Sasthram lays out as Dharma activities are like the second rope. It is not meant for binding. It is apparently so. Sasthram codes will appear to be exacting and strict. But, to become freed from bonds of desires aroused by the senses, we need the firm grip of the Sasthram.

In ancient times even the wise who attained Brahma Gnanam were reluctant to give up the karmas ordained by Sasthras. Even though these are not required for them, in order to lead others on to the spiritual path, they continued to perform them. We on the contrary without any hesitation, jolly well gave up all Sasthra dharmas. But we have not become Gnanis.

Though not a Gnani if we are “Devanam Priyar“ (ones who Devas or Celestial beings are fond of), then through their grace we may go to Devalokam (Heaven) after death. Devalokam is for enjoyment. It is not Moksham.  Moksham bestows permanent, eternal bliss and not sensuous pleasures.

Till such time our Punniyam gained through performance of Vedic rituals are exhausted, we will enjoy in Devalokam. Once we run out of the Punniyam, we return back to Bhulokam.

There is a wide gap between the sublime bliss of immortality/Moksham and sensuous pleasures of Devalokam. Even then it is preferable to go from this world which is full of fluctuating happiness and sorrows to Devalokam where there is only happiness. Are we at least trying for this? That is not happening. When we had abandoned rituals which please the Devathas, how will we become dear to them?  We remain as “Narakavaasi Naam Priyargal” (ones who people in hell are fond of). Those already in hell will consider us with affection as we are in the stage of only joining them in Narakam (Hell).

It is better to be ignorant than wicked. First we should be ignorant and become Deivanam Priyar. Then Pasupathi will slowly loosen the rope tied on to us. (If we do not desire Devalokam and do our karmas with detachment, then that very act will purify our thoughts and pave the way for Brahma Gnanam). Thereafter without hankering after the grace of Devas, one can become true Gnani. At that time of the three, Cow i. e. Jiva, Passion i.e. rope, Pathi i.e. Eswaran, cow and passion will disappear, only Pathi remains. We the Pasu or cows become Pathi.

What is said in Saivism literature, Pasu-Pathi-Pasam, is seen in Adi Sankara’s Adwaitha philosophy as Jivan-Brahman-Maya. Sankara in one of his Soundarya Lahari slokas uses the same Pasu-Pasam phrases.

Chiram jeevanneva kshapitha pashu paasa vyathikarah I
Paraanandaabhikhyam rasayathi rasam tvad bhajanavaan II

(Ambika! One who constantly prays to you gets rid of the perils arising from the entanglement of Pasu with Pasam and is ever experiencing the nectar of sublime bliss).

*Please see the next chapter called ‘Devargal’ for the explanation.



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. What more to tell Shivaya Namaha. Jaya Jaya Shankara Hara Hara Shanakara.

  2. Simple, straightforward and lucid explanation of why there are limitations in anyone’s life. Periyava who is himself the Pasu-pathi… seems to say “I must be cruel only to be kind” (Shakespeare).

    This article has answered a lot of questions in my mind.

    May the Pasu-pathi lead us to himself. Ishwara!

Leave a Reply to R.AnandapadmanabanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading