Sri Periyava Mahimai Newsletter-Dec 25 2008

Adi_Sankara_Periyava

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Newsletter from Sri Pradosha Mama Gruham. In one of the incidents, Sri Periyava shows he is a Sarvagynan by defining what a computer is, its purpose, and more importantly prophesying how it cannot be equivalent to human brains. Ram Ram

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer for the Tamizh typing and translation. Ram Ram


வாயினால்
உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே!

                                      ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை (25-12-2008)

“அபூர்வ சங்கரர்”

தன் மேன்மையான தவயோகத்தால் சுகபிரம்மரிஷிக்கு நிகரான நேர்த்தியோடு நம்மிடையே எளிமையான திருஉரு கொண்டு அருளும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா சாட்சாத் சங்கர அவதாரமே என்பது பல பக்தர்களின் அனுபவமாகின்றது.

கும்பகோணம் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் இப்படி கூறுகிறார்.

ஆதிசங்கரரின் சீடரான பத்மபாதர் தன் குருவை இன்னார் என்று புரிந்து கொண்டவராக “நாகங்கள், யானைத்தோல், புலித்தோல், சிவகணங்கள் முதலிய பரிவாரங்களுடனும், அஷ்ட ஐஸ்வர்யங்களுடனும், உமைபாகனாகவும் உக்ர ரூபத்துடனும், காலனை காலால் சம்ஹரித்தவரும், விநாயகருடன் கூடியவருமான கைலாயத்தில் இருக்கும் ஸ்ரீ சங்கரரே, மாற்று உருவத்துடன் இவ்வுலகில் சன்யாச கோலத்தோடு, சிஷ்ய பரிவாரங்களுடன், தன் சிவலோக ஐஸ்வர்யங்களை யாவும் துறந்தவராக ஸ்ரீ சங்கர பகவத்பாதாளாக அவதரித்ததினால் இவரே அபூர்வ சங்கரர்” என்று துதி செய்கிறார்.

அந்த அபூர்வ சங்கரரே இன்று பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளெனும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளாய் பரம கருணை பொழிந்தருளிக் கொண்டிருக்கிறார் என்று ஸ்ரீ பெரியவாளை பூர்ணமாக சங்கரராய் அனுபவித்து சொல்கிறார்.

இவர் கண்ட ஒரு சம்பவம்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா சிவாஸ்தானத்தில் அருள் செய்து கொண்டிருந்த சமயம். பன்னிரெண்டு வயது சிறுவன் கருணாமூர்த்தியிடம் அடைக்கலமாக வந்து நின்றான்.

சிறுவன் கண்களில் நீர்மல்கியிருந்தது “பெரியவா! எனக்கு அப்பா இல்லே, என் தாயாரும், தங்கையும் பம்பாயில் ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அந்த வீட்டில் அம்மா சமையல் வேலை செய்கிறாள். என்னை மெட்ராஸில் கிறிஸ்துவ கான்வெண்டில் சேர்த்தார்கள். நான் எட்டாவது படிக்கிறேன். நிறைய மார்க்கு வாங்கறேன். இப்போ என்னை அவா கிறிஸ்துவ மதத்தில் சேருமாரும், எம். ஏ, வரைக்கும் படிக்க வைச்சு வேலை வாங்கி தருவதாயும் சொல்கிறார்கள்.

ஆனா எனக்கென்னவோ மதம் மாற மனசே இல்லை. மதம் மாறமாட்டேன். எனக்கு உபநயனம் நடக்கவேண்டும். எங்கம்மா கிட்டேயிருந்து நாலுமாசமா கடிதமே இல்லே. என் தாயும் தங்கையும் என்ன ஆனார்கள். எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை…”

சிறுவன் அழுதவாறே ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டான். அந்த சிறுவனை சிவாஸ்தானத்திலேயே இருக்கச் சொல்லி ஸ்ரீ பெரியவாளிடமிருந்து உத்தரவாயிற்று. பத்து பதினைந்து நாட்கள் நகர்ந்தன. சிறுவனுக்கு ஸ்ரீ பெரியவா எப்படி அருளப்போகிறார் யாருக்கும் புரியவில்லை.

ஒரு நாள் ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க, நாற்பது பேர்கள் சிவாஸ்தானத்திற்கு வந்தனர். வந்தவர்கள் பம்பாயிலிருந்து வருவதாக கூறினர். ஸ்ரீ பெரியவாளை தரிசித்துவிட்டு திரும்பியும் போய்விட்டனர்.

ஸ்ரீ பெரியவா திரும்பி சென்றவர்களை கூப்பிடுமாறு உத்தரவிட்டார். எல்லோரும் வந்தனர். ஒவ்வொருவரையும் தங்களின் பெயரைச் சொல்லுமாறு ஸ்ரீ பெரியவா கேட்க, வந்திருந்த பக்தர்களுக்கு பெருமகிழ்ச்சியானது. நடமாடும் தெய்வம் தங்கள் பெயரை கேட்டு பிரத்யேகமாக அருள் செய்ததில் எல்லோருக்கும் பரம சந்தோஷம்.

இப்படி ஒன்றன் பின் ஒருவராக ஸ்ரீ பெரியவாளிடம் தங்கள் பெயரை சொல்லி வந்தபோது, ஒரு குறிப்பிட்ட நபர் தன் பெயரை சொன்னபோது, பத்து நாட்கள் தங்கியிருந்த சிறுவனை ஸ்ரீ பெரியவா கூப்பிட்டு வரச்சொன்னார்.

அந்த குறிப்பிட்ட நபரிடம், “பையனை திரும்பவும் குடும்ப நிலைமையை ஸ்ரீ பெரியவா சொல்லச் சொன்னார். அதை கேட்டதும் அந்த பெரிய மனிதர் நெகிழ்ந்து போனார். அப்பையனை முன்பேதும் அவர் பார்த்ததில்லை. ஆனால் பையன் சொன்ன விபரங்களிலிருந்து தன் வீட்டில் வேலை பார்த்து வந்தது அவனுடைய தாயாரும், சகோதரியும்தான் என்று ஊகிக்க முடிந்தது.

உடனே அவர் ஸ்ரீ பெரியவாளிடம் பையனை முன்னே பின்னே பார்த்ததில்லே, இவனோட அம்மா எங்க வீட்லேதான் பெண்ணோட இருந்தா. ஆனா அந்த அம்மாள் காலமாகிவிட்டாள். நாலு மாசமாறது. உடனே இவன் படிக்கிற கான்வென்ட்டிற்கு தகவல் கொடுத்தேன். பதிலே இல்லே…அதனால இவனோட தங்கையை கொண்டே காரியங்களை செய்ய வைச்சேன்.

இப்போ ஸ்ரீ பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு நேரே மெட்றாஸ் போய் கான்வென்ட்டிலே இவனைப் பத்தி கேட்கலாம்னுதான் இருந்தேன்…ஆனா ஸ்ரீ பெரியவா அனுக்ரஹத்தாலே பெரியவா சன்னதியிலேயே இவன் கிடைச்சுட்டான்” என்று மெய்ச்சிலிர்க்க அந்த மனிதர் கூறி முடித்தார்.

உடனே ஸ்ரீ பெரியவா “இந்த பையனை உன் கூட பம்பாய்க்கு அழைச்சுண்டுபோ……அவனோட தாயாரோட சம்ஸ்காரங்களை செய்து வை. அவனையும் உன் பிள்ளைப்போல் பாவிச்சு படிக்க வை. அவனது தங்கைக்கும் விவாஹம் செய்து கொடு. இது உன் கடமை” என்று அன்பே உருவான தெய்வம் சிறுவனின் வாழ்க்கைக்கு பூர்ண வெளிச்சம் காட்டி அவரிடம் உத்தரவிட்டருளியது.

எங்கே, எப்படி, யார் யாருக்கு என்னென்ன தொடர்பென்று ஈஸ்வரரல்லாமல் வேறு யாருக்கு தெரியக் கூடும்?

கேட்டதை கொடுக்கும் பதில்!

ஸ்ரீ ரமா ராஜகோபாலன் புதுமையான பெரியவா அருளை பெற்ற பாக்யத்தை சொல்கிறாள்.

கணவர் நல்ல கம்பெனி வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு அலைந்துக் கொண்டிருந்தார். கணவருக்கும் குடும்பத்திற்கும் எப்படியாவது உதவி செய்ய வேண்டுமென்று ரமாவிற்கு எண்ணம் தலை தூக்கியது.

“அரசாங்கம் வேலை இல்லாதவர்களுக்கு கடனுதவி கொடுக்கிறதை நாமும் பயன்படுதிண்டா என்ன” என்று கணவரிடம் இவள் கேட்க, அவரோ “நீ படிக்காதவள். அரசாங்க கடனுதவி செஞ்சா என்ன வேலையை நீ செய்ய முடியும்?” என்று அலட்சியமாக கூறிவிட்டார். இப்படி சொன்னவர் இரண்டு நாட்களில் பம்பாய்க்கு வேலைதேட சென்றுவிட்டார்.

குடும்பமும் நடந்தாக வேண்டும், பிள்ளைகளும் படிக்க வேண்டும், வருவாய் இல்லாமல் என்ன செய்வதென்று ரமா கவலையுற்றாள்.

தினசரி பேப்பரில் ஏதாவது அரசாங்க உதவி பற்றி தகவல் வருகிறதா என்று படித்துவந்தபோது விவசாயம், தையல்மிஷன், டைப்மிஷன் இப்படி பல சிறு தொழிலுக்கு அரசாங்கம் உதவும் செய்தி கண்ணில்பட்டது.

பளிச்சென்று ஒரு யோசனை. அது கம்ப்யூட்டர் மெதுவாக வந்துக் கொண்டிருந்த காலம். ஏன் கம்ப்யூட்டர் வாங்க உதவி கேட்கக் கூடாது என்று ரமா எண்ணம் கொண்டு வங்கியில் அப்ளிகேஷன் வாங்கி விண்ணப்பித்தாள்.

ஒரு வாரத்தில் இண்டர்வியூக்கு வரும்படி பதிலும் கிடைத்தது.

எந்த காரியம் என்றாலும் ரமா, ஸ்ரீ பெரியவாளை மனதில் நினைத்தே செய்வது வழக்கமாயிருந்தது. அப்ளிகேஷன் போட்டபோது கூட அதை ஸ்ரீ பெரியவாளின் திருஉருவப்படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்துவிட்டுதான் அனுப்பியிருந்தாள்.

இன்டர்வியூக்கு கிளம்பியபோதும் பெரியவா படத்தின் முன் நமஸ்கரித்து, காஞ்சிபுரத்தில் நடக்கும் இன்டர்வியூக்கு ரமா கிளம்பினாள்.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது ரமா மனதில் பெரிய கவலை. கம்ப்யூட்டர் பற்றி நமக்கு என்ன தெரியும்? அவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ…கம்ப்யூட்டர்பற்றிய அடிப்படை விபரங்கள்கூட தெரியாத நிலையில், அதற்கான பெரும் கடனுதவியை கேட்கப் போகிறோமே, எந்த ஆதாரத்தோடு கடன் கொடுப்பார்கள் என்றெல்லாம் நினத்தவருக்கு பெரும் அவநம்பிக்கையை நிலைத்தது.

மனதில் இதைப்பற்றி பெரிய குழப்பம் இருந்தாலும், ஸ்ரீ பெரியவா எப்படியும் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையும் பக்தைக்கு இருந்தது.

இன்டர்வியூக்கு போவதற்குமுன் நேரே காஞ்சிமடத்திற்கு சென்று ஸ்ரீ பெரியவாளை தரிசித்து தான் கம்ப்யூட்டர் வாங்க கடனுதவி கேட்க இன்டர்வியூ செல்வதாக கூறி அனுக்ரஹம் செய்யுமாறு ஸ்ரீ பெரியவாளிடம் வேண்டினாள்.

ஸ்ரீ பெரியவாளின் வதனத்தில் லேசான புன்னகை படர்ந்தது.

“கம்ப்யூட்டர் என்ற விஞ்ஞானம் என்னன்னு தெரியுமோ?” என்று தானே ஒரு கேள்வியை கேட்டு அதற்கான பதிலையும் தானே கீழ்வருமாறு கூறினார் ஸ்ரீ பெரியவா.

“மனிதன் மூளை செய்யும் வேலையை அந்த கம்ப்யூட்டரைக் கொண்டு செய்யப் பார்க்கிறார்கள். மறதி நிறைந்த இந்த காலத்தில் கம்ப்யூட்டர் ஒரு வரப்பிரசாதம். நாம் அதற்கு கொடுக்கும் விஷயங்களை கிரகித்து, சேகரித்து எந்த காலத்திலும் நமக்கு பயன்படும் வகையில் சிரமம் இல்லாமல் விஷயங்களை கொடுத்துவிடும். ஆனால் கம்ப்யூட்டரே மனித மூளைக்கு சமமாகாது” என்று கம்ப்யூட்டர் பற்றி மிக சுருக்கமான விளக்கத்தை ரமாவிடம் ஸ்ரீ பெரியவா கூறியபோதுதான், ரமாவிற்கே கம்ப்யூட்டருக்கான விளக்கம் மனதில் பதிலாயிற்று.

பிறகு ஸ்ரீ பெரியவா “நீ கம்ப்யூட்டர்லே எவ்வளவு படிச்சிருக்கே?” என்று கேட்டதும் ரமாவிற்கு வியர்த்துவிட்டது.

“இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்” என்று மழுப்பலாக ரமா பதில் கூறினார்.

“ஒரு செயலை ஆரம்பிக்கிற முன்பே பலனை எதிர்பார்க்கறயே” என்று புன்னகைத்தபடி கொண்டு சென்ற பைலின்மேல் குங்குமம் கற்கண்டு வைத்து ஆசி வழங்கினார்.

இப்போது ரமாவிற்கு பயம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படலானது தைரியமாக இன்டர்வியூ சென்றாள்.

அங்கே ரமாவை படித்த படிப்பையோ, கம்ப்யூட்டரை வைத்து என்ன தொழில் செய்வாய் என்றோ எதுவும் கேட்கவில்லை.

ஆனால் கம்ப்யூட்டரின் பயன் என்ன என்று மட்டும் கேட்டனர். ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க செல்வதற்கு முன் இந்த கேள்விக்கான பதிலை ரமாவினால் எப்படி சொல்லியிருக்க முடியுமோ தெரியாது. ஆனால் இப்போது ஸ்ரீ பெரியவா கம்ப்யூட்டர் பற்றி சுருக்கமாக அருள்வாக்காய் சொன்னது அப்படியே ரமாவின் மனதில் வர அதையே பதிலாக ரமா சொல்லி முடித்தாள். இந்த கேள்வியைத்தான் கேட்பார்கள். அதற்கு இப்படித்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதை போல் முன் கூட்டியே அறிந்தது போல் ஸ்ரீ பெரியவா தனக்கு அருளியிருப்பது ரமாவிற்கு புரிந்துவிட்டது. கச்சிதமான இந்த பதிலால் அதிகாரிகள் திருப்தி அடைந்திருக்க வேண்டும்.

மேலே கேள்வி ஒன்றும் கேட்காமல், “நீ போகலாம்” என்று அனுப்பிவிட்டார்கள். அனால் முகம் வாடி தோல்வி உணர்வோடு வீடுதிரும்பிய ரமா ஸ்ரீ பெரியவா படத்தை நமஸ்கரித்து “முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுகிறேன்” என்று கண்ணீர் மல்க நின்றாள்.

ரமாவிற்காக, இன்டர்வியூவில் கேட்கப்போகும் கேள்விக்கான பதிலை முன் கூட்டியே சொல்லி அனுப்பி இருந்த ஸ்ரீ பெரியவாளின் அனுக்ரஹம். கடனுதவியான 35,000 ரூபாயையும் ஒரே வாரத்தில் வரச்செய்தும் அனுக்ரஹித்துவிட்டது. ஸ்ரீ பெரியவா அருள் இருந்தால் கொம்பு தேன் தானாகவே முடவன் நாக்கிற்கே வந்து விழுந்து விடுமல்லவா!

இப்படி யார் எதைகேட்பினும், வாரி வழங்கும் பெருங்கருணை பெரியவாளை நாம் பற்றிக் கொண்டால் சகல ஐஸ்வர்யங்களும், சர்வ மங்களங்கும் தாமே நம்மை வந்தடையும்.

– கருணை தொடர்ந்து பெருகும்

(பாடுவர் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமி தேவாரம்)

___________________________________________________________________________ 

              Vaayinaal unnai paravidum adiyen Paduthuyar kalaivaai paashupathaa paranchudare!

                                        Sri Sri Sri Maha Periyava Mahimai! (28-12-2008)

“Apoorva Sankarar”

It is evident through the experiences of many devotees that Sri Sri Sri Maha Periyava, who has the greatness of Sukha Brahmarishi, who is among us and blessing all of us, is none other than the incarnation of sakshat Sankara.

Sri Periyava’s devotee, Kumbakonam Srinivasa Sastrigal, narrates the following incident.

Sri Adi Sankara’s sishya (disciple) Sri Padmapaada, in one of his works, praises Sri Adi Sankara as “He is Apoorva Sankara, who is none other than the incarnation of Sri Parameshwara, one who left out His snakes, elephant-skin, tiger-skin, ashta aishwaryam (wealth), and took sanyasa roopam along with His disciples, as Adi Sankara.”

Now, Sri Srinivasa Sastrigal experiences that Sri Sri Sri Chandrasekharendra Saraswati Swamigal, our Maha Periyava is none other than that Apoorva Sankara.

Sri Sri Sri Maha Periyava was camping in Sivaasthanam. 12-year-old boy came towards Sri Periyava and stood there. He started crying and told, “Sri Periyava! I do not have my father. My mother and sister are living in a house in Bombay. My mother is working as a cook in that house. They put me in a Christian convent in Madras. I am studying in eighth grade. I am scoring good marks. Now, they are asking me to convert to Christianity and told that they will make me study till M.A degree and also get me a job.

But, I do not have any inclination to get converted. I want to get my Upanayanam done. I am not getting any letters or communication from my mother for the past 4 months. I do not know what happened to my mother and sister.”

That boy told everything and kept weeping. Sri Periyava instructed the boy to stay in Sivaasthanam itself. 10 to 15 days rolled over. No one had any clue on how Sri Periyava is going to bless that boy.

One day, for Sri Periyava’s darshan, around 40 people came to Sivaasthanam. They all told that they were coming from Bombay. They returned after having Sri Periyava’s darshan. Sri Periyava instructed to call them back. Everyone came back. As Sri Periyava asked all of them to tell their names and other details, they all became extremely happy.

While everyone was introducing themselves, when one of them told his name, Sri Periyava instructed to bring that boy. Sri Periyava then asked that boy to tell his situation to him. That gentleman was moved by listening to boy’s current situation. He had not seen the boy before. But, he could guess from the details that his mother and sister were in his house only.

He told Sri Periyava that he had not seen the boy before and his mother and sister used to stay in his house. But the lady passed away four months back. He mentioned that he tried to pass the information to that boy through the convent officials. There was no response. So, did all karyams for his mother through his sister. He also told that after Sri Periyava’s darshan he was planning to go to Madras and look out for him. But, because of Sri Periyava’s grace, met the boy in Sri Periyava’s sannidhi itself.

Then, Sri Periyava instructed, “Take this boy with you to Bombay. Get all the samskarams for his mother done through him. Take care of him as if he is your own kid. Also, it is your duty to get his sister married”.

How can one know the connection between unknown people unless He is none other than Iswara?

“Granting all the wishes”

Sri Rama Rajagopalan narrates an incident in which she received Sri Sri Sri Maha Periyava’s grace.

Rama’s husband had quit his job and was looking for a new job. She got a thought that she should somehow help her husband and the family.

“Why should we not use the financial aid given by the government to those who do not have job” she asked her husband. In response, her husband said reluctantly, “You are uneducated. What job can you do by getting the financial aid?” After two days, he went to Bombay to find a job.

Rama was worried about the family situation. Every day, she was looking in the newspapers if there were any information about the financial aid. One day, she found that the government is offering financial aid for farming, sewing machine, Typewriters and other small scale jobs.

She immediately got a thought. That was the time when computers slowly coming into market. She thought of applying a loan to get a computer and filled the application form. Within a week, she got a response from the bank to come and meet them for an interview.

Rama always had the habit of thinking and praying to Sri Periyava before starting any task. Even when she applied, she stood before Sri Periyava’s photo, prayed and then sent it to the bank. Now, before starting for interview, she prostrated before Sri Periyava’s photo and started to Kanchipuram for interview.

While travelling, she was worried that she did not know anything about computers. She was thinking what would she respond if they ask questions about computers, as she did not know even the basics. Her thoughts continued on how would the bank believe her and issue a loan towards buying a computer. But, she also had a strong belief that Sri Periyava would definitely show her a way and save her.

Before going for interview, she went to Kanchipuram Sri Matam and stood before Sri Periyava for darshan. She told everything and asked for Sri Periyava’s blessings. Sri Periyava smiled and asked, “Do you know what science is behind computers?” and continued responding as well.

“They are trying to do all the work that a man does using his brain, through that machine. It is a boon as people have lot of forgetfulness these days. It would collect all the information we feed to it, store it and returns it whenever we want, without any issues. But, computers cannot match human brain.” When Sri Periyava told this, Rama understood the basics of computer and the need for it.

Then, Sri Periyava asked, “What have you read in computer?”. Now, Rama became very tensed.

“Now only I have started learning” told Rama.

“You are expecting a result even before starting a work” said Sri Periyava and with smile, blessed her by placing Kumkumam and rock candy on top her file.

With lot of confidence, Rama went and attended the interview. There, they did not even ask anything about her education and what she would do with computers. But, they asked what is the purpose of a computer. She reproduced all that Sri Periyava told her just before she came to interview. She realized that Sri Periyava told her the purpose of a computer as if He knew it already that they would ask her this question in the interview. All the officials were convinced by the crisp and clear response.

Without asking any more questions, told “you can go”. She came home dejected and stood before Sri Periyava’s photo and cried, “a crippled is eager to get honey (tamil proverb).”

But, because of Sri Periyava’s blessings, she received the loan amount of Rs. 35,000 within a week. If a crippled has Sri Periyava’s blessings, would not he get honey directly in his mouth?

It is evident that our bhakthi and complete surrender to Sri Sri Sri Maha Periyava would grant us all prosperity and happiness!

  • Grace will continue to flow. (paaduvar pasi theerppai paravuvaar pinikalaivaai)
  • Sundaramoorthy Swami Devaram

periyava-mahimai-2008-december-1 periyava-mahimai-2008-december-2 periyava-mahimai-2008-december-3 periyava-mahimai-2008-december-4



Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Sri Maha Periyava Perum Karunai/ Janakiraman. Nagapattinam

  2. Periava is my Deivam.

  3. Once you are with Him all good things will follow you with His blessings. Jaya Jaya Shankar Hara Hara Shankara.

  4. Shankaraaaaaaaa

  5. கேட்காமலே தருபவர்….. கேட்டால் தராமல் இருப்பாரா?

Leave a Reply to MANI Sah.sCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading