Periyava Golden Quotes-481

album1_120

கதை சொல்வார்கள். பிரதிவாதி கடனைத் திருப்பித் தரவில்லை என்று வாதி பிராது போட்டானாம். பிரதிவாதியின் வக்கீல் தன் கட்சிக்காரர்களிடம், “நீ கோர்ட்டில் பைத்தியக்காரன் மாதிரி நடி; என்ன கேள்வி கேட்டாலும் ‘பெப்பே பெப்பே’ என்று பேத்திக் கொண்டிரு. ‘சித்தப்பிரமம் பிடித்தவன்; இவன் மேல் கேஸ் போட்டது தப்பு’ என்று ஜட்ஜ் தள்ளுபடி பண்ணி விடுவார்” என்று சொல்லிக் கொடுத்தாராம். பிரதிவாதியும் அதே மாதரிப் பண்ணி வியாஜம் தோற்றுப் போகும்படிச் செய்து விட்டானாம். கோர்ட்டுக்கு வெளியிலே வந்தவுடன் வக்கீல் அவனிடம் ஃபீஸ் கேட்டாராம். உடனே அவன் அவரிடமும் அவர் சொல்லிக் கொடுத்த தந்த்ரத்தையே திருப்பினானாம். “பெப்பே பெப்பே” என்றானாம்!” என்ன? என்கிட்டேயுமா இப்படிப் பண்ணுகிறாய்?” என்று வக்கீல் கேட்க, “உன்கிட்டே மட்டுமென்ன? உன் அப்பன், பாட்டன் வந்தாலும் இதேதான் நடக்கும்” என்று அர்த்தம் தொனிக்க “உனக்கும் பெப்பே! உங்க அப்பனுக்கும் பெப்பே!” என்றானாம்.

இப்படித்தான் ரிஃபார்மர்கள் “சாஸ்திரம் சொல்கிற ஒழுங்குகள் வேண்டாம். நாங்கள் சொல்கிற ஒழுங்குகளைக் கடைபிடியுங்கள்” என்றால், ஃபாலோயர்கள் முதலில் பிரதிவாதி வக்கீல் துணையில் கேஸை ஸாதகமாக்கிக் கொண்டதுபோல, இந்த லீடர்களின் ஸஹாயத்தில் தங்களுக்கு ஸமூஹத்தில் அநேக ஆதாயங்களை அடைந்துவிட்டு, கொஞ்ச நாள் ஆன அப்புறம், “சாஸ்த்ர ரூலுக்கும் பெப்பே; உன் ரூலுக்கும் பெப்பே” என்று, எந்த ஒழுங்குமில்லாமல் போக ஆரம்பிக்கின்றார்கள். இம்மாதிரி ஸந்தர்ப்பதில் தன்னளவில் ஓரளவு நன்றாகவே சுத்தராகவுள்ள லீடர்கள் தங்களைச் சேர்ந்தவர்களையே கண்டித்துவிட்டுத் தாங்களும் பட்டினி கிடப்பது போல ஏதாவது பிராயச்சித்தம் பண்ணிக் கொள்கிறார்கள். மற்ற தலைவர்களுக்குத் தங்களைச் சேர்ந்தவர்கள் விட்டு விட்டுப் போகிறார்கள் என்றால் அவமானமாயிருக்கிறது. அதனால் கண்டும் காணாமலும் ஏதோ தட்டிக் கொடுத்துக் கொண்டு போகிறார்கள். ரொம்பவும் மிஞ்சிப் போனால்தான் ‘எக்ஸ்பெல்’ பண்ணுகிறார்கள் [ஸ்தாபனத்திலிருந்து வெளியேற்றி விடுகிறார்கள்] அநேகமாக அந்தத் துணிச்சல் இவர்களுக்கு வருவதற்குள், இவர்களிடம் அபிப்பிராய பேதப்பட்டவர்களே பலமடைந்து தாங்கள் மட்டும் சேர்ந்து இன்னொரு சீர்திருத்த இயக்கம் ஆரம்பிக்கிற ஸ்திதிக்கு வந்துவிடுகிறார்கள். அதனால், “நீங்கள் என்ன ‘எக்ஸ்பெல்’ பண்ணுவது? நாங்களே முழுக்குப் போட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டோம்” என்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

There is this story of a person who filed a petition in the court of law, to recover a loan given by him. The respondent’s lawyer taught him a trick to escape from conviction and ensure dismissal of the case. He advised the respondent to act like a mad man and give incoherent answers to any questions put to him. The respondent followed the advice and the case was duly dismissed. When the lawyer demanded his fees, the respondent acted out the same trick and started talking incoherently to the lawyer and the irate lawyer demanded how the trick he taught could be used against him? The respondent replied that even if the lawyer’s father or grandfather came, his answer would be the same ‘blah blah’!

Similarly when the reformist leaders declare that their own ethical rules should take the place of the traditional rules and regulations, their followers, like the respondent did with the lawyer in the above mentioned case, reap all the benefits initially and then bid a farewell also to the new rules laid down by their leaders and choose to behave in an undisciplined manner. In such cases, leaders who are ethically clean choose to scold their own followers and punish themselves by fasting or some such method to expiate the transgressions of their followers. Other leaders are ashamed of the conduct of their followers. So they tend to ignore it, thus tacitly encouraging their followers. In the worst cases, they expel the guilty. But, generally, by the time the leaders develop the courage to do so, the followers have become bold and strong enough to break away and start their own reformist movement. They declare that they have come out on their own and there is no question of their expulsion from the parent organization. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

3 replies

 1. Before the kids start reading A for Apple… please think about teaching English Alphabets this way…Couldn’t find any for Q and X.

  A for Ambal
  B for Balamurugan
  C for Chandramouleeshwarar
  D for Dhandayuthapani
  E for Eshwara
  F for Falguni Nakshathra
  G for Ganapathy
  H for Hasthamalakacharya
  I for Indrakshi Stotram
  J for Jagadambika
  K for Kanchi Mahaperiyava
  L for Lakshmi Narasimha
  M for Manikavasagar
  N for Namakkal Anjaneya
  O for Opilliappan
  P for Pasupathinath
  Q for
  R for Ranganathar
  S for Sringeri Mutt
  T for Totakacharya
  U for Ulagalandha Perumal
  V for Varaha Perumal
  W for Warangal Bhadrakali Temple
  X for
  Y for Yadava Prakasha (Sri Ramanuja’s Guru)
  Z for Zaheerabad Ayyappa Temple

 2. Language appears crude. Can you confirm if Periyava used the same words?

Leave a Reply

%d bloggers like this: