பாட்டிகள் மஹாத்மியம் – Part 1 – பென்ஷன் பாட்டி

balu-mama

One can do so many research on Mahaperiyava topic. Sri Varagooran mama has done an interesting analysis of Paatigal mahatmiyam!! – an unique category! Some or most of them are already posted here…it is always a pleasure to read them again…..

Several readers might already know this – Periyava had high regards for paatis who had high level of acharams and anushtanams.. As per Him, these grand parents are the essential pillars in the family that teaches us all the culture, value and importance of our sampradhayam….Thanks to the modern world and customs where grandparents are treated as aliens – God knows how the next generation is going to be.

பாட்டிகள் மஹாத்மியம் – தலைப்பில் பென்ஷன்) பாட்டி, .(1)
(இன்று முதல் 10 நாட்கள் தொடரும்)

நன்றி-Mahaperiava – A Legend
Compiled & penned by gowri sukumar

ஶ்ரீ மஹாஸரஸ்வதியின் தர்பாரில், எல்லா ஸப்த ஸ்வரங்களும் ஸுஸ்வரமாகவே ஒலிக்கும். ஹம்ஸாநந்தி, பாகேஶ்ரீ, ஶுபபந்துவராளி போன்ற ராகங்களில், மனஸு உருகி, கண்கள் கண்ணீரை வர்ஷித்தாலும், உருகும் மனஸில், நிறைவும் தளும்பி வழியும். கல்யாணி, ஹம்ஸநாதம், மோஹனம் போன்ற ராகங்களில் மனஸும் சேர்ந்து ஜிலுஜிலுவென்று இசைபாடும். மொத்தத்தில் இசை என்பது முடிவில் நிறைவான ஆனந்தத்தை மட்டுமே தரும்.

அதே போல், ஶ்ரீ இந்த்ரஸரஸ்வதியான பெரியவாளுடைய தர்பாரில் எல்லா பக்த ஸ்வரங்களும் ஸுஸ்வரமாகவே ஒலிக்கும். மனஸை உருக்கும் ஸம்பவங்களோ, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஸம்பவங்களோ எதுவானாலும், அது மொத்தத்தில் அங்கிருப்பவர்கள் அனைவர்க்கும் முடிவில் ஆனந்தத்தை மட்டுமே தரும்.

ஒருநாள் ஸாயங்காலம். காஞ்சி ஸ்ரீமடத்தில் பெரியவா ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எல்லாருக்கும் தர்ஶனம் தந்து கொண்டிருந்தார். வழக்கமாக வரும் பக்தர்கள்தான். அதிக கூட்டமில்லை. அந்த பக்தர்களில் ஒரு வயஸான நார்மடி பாட்டியும் இருந்தாள்.

அப்போதைய தமிழக அரசு, முதியோர்களுக்கான உதவித்தொகை வழங்க, ஒரு திட்டம் தொடங்கியிருந்தது. பாட்டிக்கு அரசல்-புரசலாக இந்த விஷயம் காதில் விழுந்துவிட்டது.

“பெரியவாகிட்டதான்…. இதப்பத்தி கேக்கணும்”

பாட்டி துடித்துக் கொண்டிருந்தாள். பெரியவா ஸந்நிதியில் பணத்தாசையா? என்று எண்ணவே கூடாது. இந்தப்பாட்டி மூலம், அழகான, எளிமையான வாழ்க்கை என்றால் என்ன? என்பதை நமக்கு பாடம் சொல்லித் தந்திருக்கிறார்.

பாவம், அவளைப் பொறுத்தவரை ‘Under The Sun” அத்தனையும் பெரியவாதானே! பிதற்றினாலும் அவரிடம்தானே பிதற்றுகிறாள்?

பாட்டியின் தவிப்பு தெரியாதவரா என்ன?

“இதுகள் வேற எங்க போகும்? ஒளறிக் கொட்டினாலும், எங்கிட்டதான் ஒளறிக்கொட்டுங்கள்!”

பாட்டியைப் பார்த்தார்…..

“என்ன? ஒனக்கு….?”

“பெரியவாகிட்ட…. ஒண்ணு கேக்கணும்.. ஒரு சின்ன ப்ரச்சனை…”

“ஒனக்குக்கூடவா?…”

“Interesting!..’ என்பது போல் அழகாக சிரித்தார்.

ஆஹா! அது போறுமே!

“இல்ல….. கவர்ன்மென்ட்ல வயஸானவாளுக்கெல்லாம் இருவது ரூவா….. பெஞ்ஜனா [pension] தாராளாமே!..”

“ஆமா…. இப்போ அதுக்கென்ன?..”

“ஆதரவில்லாதவாளுக்கும் தராளாம்…..!! வந்து… மடத்துலேந்து ஶிபாரிஸு பண்ணினா, எனக்கும் அந்தப் பணம் கெடைக்குமேன்னுதான்… பெரியவாகிட்ட……”

சிரித்துக் கொண்டே அவளை இடைமறித்தார்…..

“பேஷா கெடைக்குந்தான்! ஆமா… ஒனக்கு இங்க என்ன கொறைச்சல்? வேளாவேளைக்கு ஸாப்பாடு கெடைக்கறது; மடத்துலேந்து பொடவையும் குடுக்கறா; தங்கிக்கவோ எடமிருக்கு.! அப்றம்… எதுக்கு ஒனக்கு தேவையில்லாம இந்தப் பணம்?…..”

“தேவையில்லதான்! பெரியவா க்ருபைல எல்லாம் இருக்கு…. government-ல சும்மா தராளே-ன்னுதான் கேட்டேன்…”

உலகமறியாத குழந்தை ஒன்றிடம் பேசுவது போல், பாட்டியை முன்னிட்டு, அரசாங்கத்திடமிருந்து மட்டுமில்லை; யாரிடமிருந்தும், தேவையில்லாமல் எந்த ஒரு சின்ன வஸ்துவைக் கூட வாங்கிக்கொள்ளக் கூடாது என்பதை பெரியவா, அழகாக உபதேஸித்தார்……

“இங்க பாரு! நானும் கூட ஆதரவில்லாதவன்தான்! ஏதோ…. இந்த மடத்ல ஒரு மூலேல ஒக்காந்துண்டிருக்கேன்..! பேசாம… ஒண்ணு பண்ணலாம்..! வா!… நாம ரெண்டு பேருமே அந்த பென்ஷன் கெடைக்கறதுக்கு மனுப் போடலாமா?….”

குஸும்பு கொப்பளிக்கும் பெரியவாளின் அழகான சிரிப்பைக் கண்ட பாட்டியும் வெட்கத்துடன் சிரித்தாள்.

குரலில் மேலும் மென்மை கூட…..

“பாரு…. நமக்காவுது, உயிர் வாழறதுக்கு, ஸாப்பாடு கெடைச்சுடறது; மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்கறதுக்கு எடமும், மானத்தை மறைக்க துணியும் இருக்கு. இதெல்லாம் கெடைக்காம, ஒருவேளை ஸாப்பாடும் இல்லாம, ஒதுங்க எடமில்லாம, கட்டிக்க ஸரியான துணி இல்லாம வாஸ்தவத்துலேயே கஷ்டப்படற ஏழை ஜனங்களுக்காகத்தான் கவர்ன்மென்ட்-ல இந்த பென்ஷன் திட்டத்தை கொணுந்திருக்கா! இப்போ…. நீ கேட்டேன்னு, ஒனக்கு நா….. இத வாங்கிக் குடுத்தேன்னா…. வாஸ்தவத்ல, இந்த பென்ஷனுக்கு தகுதியான, நிராதரவா நிக்கற ஒரு வயஸான ஆம்பளைக்கோ, பொம்மனாட்டிக்கோ அந்த chance போய்டுமா… இல்லியா?…. நீயே சொல்லு?..”

“தப்புத்தான்… பெரியவா! …….”

பாட்டி நமஸ்காரம் பண்ணியதும், ப்ரஸாதம் அனுக்ரஹித்தார்.

“நானும் ஆதரவில்லாதவன்தான்! ” என்று கூறி, நிராதரவாக நிற்கும் ஸமஸ்த ஜீவராஸிகளுக்கும், “நானே ஆதரவில்-ஆதவன் [ஸூர்யன்] போல், ஒளியால் வழி காட்டுபவன்” என்று எல்லோருக்கும் மறைமுகமாக பரமானுக்ரஹம் பண்ணிவிட்டார்!

வீட்டில் அம்மா அப்பாவிடமும், ஸ்கூலில் டீச்சரிடமும்தான், குழந்தைகள் ‘அவன் அடிக்கறான்; இவன் கிள்ளறான்..” என்று complaint பண்ணும்.

அதுபோல், ஜகன்மாதா-ஜகத்பிதா-ஜகத்குருவானவருக்கு, நாமெல்லாரும் குழந்தைகள்தானே?

இம்மாதிரி Complaint-களை கேட்டு ஃபைஸல் பண்ணுவதுதான் தன்னுடைய அவதார லக்ஷியமே என்பது போல, நம்முடைய அம்மையப்பனும் கூத்தடிப்பதுண்டு!

ஒருநாள் ஒரு பாட்டி, பெரியவாளிடம், மேற்சொன்ன குழந்தைகள் complaint போல், தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் ஏதோ ஒரு சண்டையைப் பற்றி நொச்சு நொச்சென்று, பெரியவா அவள் பக்கம் திரும்பும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், பெரியவாளுக்கு காது கேட்காததால், பக்கத்திலிருக்கும் பாரிஷதர், பக்தர்கள் சொல்லுவதை அப்படியே இரைந்து பெரியவாளிடம் கூறுவார்.

பாட்டியின் complaint-டோ…. நின்றபாடில்லை!

பாரிஷதரின் battery-ல், பொறுமை லெவல் கம்மியாகிக்கொண்டே வந்தது.

அடுத்த ஒரு பக்தருக்காக கத்திப் பேசியதும், பாட்டி மறுபடி பழைய பல்லவியை ஆரம்பித்தாள்.

“பாட்டீ! ஒங்களுக்கு வேற வேலையே இல்லியா? திரும்பத்திரும்ப எத்தன வாட்டி பெரியவாகிட்ட சொல்றது?….”

லீலாபுருஷன்…… காதில் இது விழுந்தது!

“ஏண்டா கத்தறே?….”

“இந்த பாட்டி….. நொச்சு நொச்சுனு…. சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிண்டே இருக்கா பெரியவா….”

“அப்டியா? என்ன சொல்றா?….. எனக்கு கேக்கலியே? மறுபடியும் நீ கேட்டுச் சொல்லு…”

பெரியவா இப்படி தனக்கு ஸாதகமாகச் சொன்னதைக் கேட்டதும், பாட்டிக்கோ….. படு ஸந்தோஷம் ! பாரிஷதருடைய எரிச்சலை கொஞ்சமும் லக்ஷியம் பண்ணாமல், தன் பல்லவியை “ஆதௌ கீர்த்னாராம்பத்திலே!..” என்று ஸுகமாக ஆரம்பித்தாள்.

இப்படி சில செல்லக் கூத்துக்கள், அம்பலவாணனின் ஸபையில் அரங்கேறும்



Categories: Devotee Experiences

Tags:

6 replies

  1. Who else you can approach for solace. Jaya Jaya sankara. Nice incidents

  2. Prabhu – Thanks for letting me know….In fact it makes it easier for me reblog it here. I did not know his site before….Sri Varagooran mama sends me these emails and I post from there….

  3. Namaskaram Mahesh, this compilation is done by Gowri Sukumar. The author has a blog https://maathre.wordpress.com where there are posts on Mahaperiyava charithram, sankara vijayam etc. Just thought of letting you know. Mahaperiyava charanam!!!

  4. Great man Great thinking … But we are……?

  5. “ஆதரவில்லாதவன்”….ஆதரவு+இல்+ஆதவன்
    இல்=வீடு ….ஆதவன்=சூரியன் …ஆதரவு= உதவுதல்
    வீடுபேறு அடைய உதவும் சூரியன் ….
    (சற்றுமுன்தான் ஒரு பாட்டி என்னைவிட வயசு கம்மி…
    ..தலையில் அடிபட்டதால் சற்று கவன பிசகு…நான் வில்வ கன்றுகள் வளர்த்து வைத்து வருவதை எதிலோ பார்த்து விட்டு …தோணும்போது எல்லாம் போன் பேசுவார்…இப்போ கூட …ஒரே பெரியவா புலம்பல்தான் ..பேசும்போதே அழுவாள்…ஆறுதல் கூறுவேன்…பதிலுக்கு நானும் பெரியவா புராணம் பாடுவேன்..கேட்டபின் அமைதி அடைவாள்…ஜென்ம ஜென்மாந்திரங்களில் எத்துணை கர்மாக்களை சேர்த்து வைத்து இருப்பவர்கள் ஆனாலும் ஒரு எள் முனை அளவு புண்யம் இல்லாமல் போகாது…அதன் பலன் பெரியவாளை தெரியவரும் …அது போதும் …அதை பிடித்து கொண்டே கரை ஏறிவிடலாம்…

  6. Maha Periyava Thiruvadi Charanam

    Loha samastha sukino bavanthu. … ram .. ram … ram

    uma venkat

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading