Periyava Golden Quotes-444

album1_78
Jaya Jaya Sankara Hara Hara Sankara – Starting today we will be seeing golden quotes from Sikaanamum Paropagaramum (Be Thrifty and donate) section in Vol 3. Many Jaya Jaya Sankara to Smt CP Vijayalakshmi, our sathsang seva volunteer for the translations. Ram Ram.

சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால் தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும். அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு மேல்நாடுகளைப் பார்த்து material comfort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது; பிறத்தியாருக்கும் தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைக்கிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறதுபோல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக – கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது? – ஜகத்குரு  ஸ்ரீ   சந்திரசேகரேந்திரசரஸ்வதி  சுவாமிகளின் அருள்மொழிகள்

If only we are thrifty in day to day life, we can materially help the others. If we ape the West and start considering all the luxuries of life as necessities, neither can we be satisfied nor can we practice philanthropy. The need for a car magnifies into the need for a bigger car and then an air conditioned car. Cemented flooring is never enough. It is converted into mosaic and then one hankers after a marble floor. In such a fashion, if our desires multiply in numbers and magnitude, contentment can never be found and comfort is never found. Moreover, what one earns will never be enough. This is the reason many of the rich men today are enmeshed in debt, which is politely called ‘overdraft’. If a person is in debts how can he help the others? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. An advice which everyone of us will have to follow in life. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading