Periyava Golden Quotes-351

album1_106

 

உறவுக்காரர்கள் என்றால் அபர கார்யம் ஏதோ ஒரு தினுஸில் செய்து விடுகிறோம். செய்வதில் குறையிருக்கலாம். ஆனால் அடியோடு செய்யாமலே விடுவதில்லை அமாவாஸைத் தர்ப்பணம், ச்ராத்தம் முதலியவற்றை நிறுத்திவிட்டவர்களாக இருந்தாலும், ஹிந்துக்களாகப் பிறந்தவர்களில் நாஸ்திகர்களைத் தவிர எவரும் பந்துக்களுக்கு ப்ரேத ஸம்ஸ்காரம் (அவரவர் குலாசாரப்படி தஹனமோ, அடக்கமோ) செய்ய மட்டும் தவறுவதில்லை. ஸரி, உறவுக்காரர்கள் இல்லாமல் நிராதரவாக இருக்கிறவர்களின், இறக்கிறவர்களின் கதி என்ன? அநாதைகள் செத்துப் போகும்போது, அவர்களுடைய சரீரம் என்கிற பகவான் படைத்த மெஷினின் கதி என்னவாகிறது? ஸமூஹமேதான் இவர்களுடைய ப்ரேத ஸம்ஸ்காரத்துக்கு ஏற்பாடு பண்ண வேண்டும் என்பது சாஸ்த்ரம். இவ்விஷயத்தில் நம் ஹிந்து மதத்தின் அவல நிலைமை எனக்கு வேதனையாக இருக்கிறது. இப்போது நான் சொல்லிச் சொல்லிக் கொஞ்சம் வேதனை தணியும்படியான ஏற்பாடுகள் அங்கங்கே நடந்தாலும், இது போதாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

When our relatives leave the mortal coils, we perform their final rites at least perfunctorily. Among Hindus, except for athesits, even those who do not perform the Amavasya Tharpanam and the annual ancestral ceremony – Shraadham, do not fail to perform the final rites of a deceased person, according to their customs, a funeral or a burial. But what happens when a person with no relatives dies? What happens to the body of the person, a great machine that Bhagawan created? The sastras say that the society is responsible for performing his final rites. But the deplorable condition of our Hindu society in this matter pains me. Though some people have listened to my call and are trying to remedy this situation, this is not enough. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Devotee Experiences

Tags:

2 replies

  1. Please one correction. responsible for and not responsible of in the end.

  2. To my knowledge, still so many people think such ‘apara karyam’ as untouchable and keep away from such activities, is the bottom line.

Leave a Reply to C.P.vijayalakshmiCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading