Periyava Golden Quotes-111

Periyava_sitting_smiling_sketch_Jayakumar

ஐந்து வயஸிலேயே உபநயனம் செய்யும் ஒரு வழக்கமும் உண்டு. அது ‘காம்யோபநயனம்’ எனப்படும். ‘காம்யம்’ என்றால் ‘ஒரு இஷ்டத்தை உத்தேசித்தது’ என்று அர்த்தம். குழந்தை விசேஷ அபிவிருத்தி அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டால் இப்படி செய்யலாம். ஆனால் இம்மாதிரி செய்யாததால் தோஷமில்லை. ஏனென்றால் மந்திரங்கள் நன்றாக ஸ்பஷ்டமாக உச்சரிக்க வருகிற காலத்தில், ஸம்ஸ்க்ருத ஞானம் இரண்டு வருஷமாவது ஏற்பட்டானதற்கு பிறகு உபநயனம் பண்ணுவதே சிலாக்யமாகப் படுகிறது. அதனால் ஏழு வயசு பூர்த்தியாகி எட்டாம் வயசில் பண்ணுவதே போதும். இப்போது முப்பது, முப்பத்தைந்து வயசுக்குக் கல்யாணமாகிற போதுதான் பூணூலும் போடுவது என்று வந்திருக்கும் தசையில் நான் ‘ஐந்து வயசில் பண்ண வேண்டுமென்றில்லை, எட்டில் பண்ணினாலே போதும் என்று சொல்வது எனக்கே ஹாஸ்யமாகத்தான் இருக்கிறது! ஹாஸ்யம் என்று சொன்னாலும் வைதிகப் பிரக்ஞை இருந்தால் வயிறு எரியவேண்டும்! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The upanayana is sometimes performed when the boy is only five years old. This is called “Kamyopanayana”, “Kamya” meaning in persuance of desire. Such early upanayana is all right if you want the child to develop inwardly at an early age. But seven years is the proper age for the child to be invested with sacred thread because by now he would have learned enough Sanskrit to chant the mantras clearly. Nowadays, the “thread ceremony” is conducted together with the marriage that is when the “boy” is 30 or 35 years old. So to suggest that the upanayana needs to be performed only when the child is seven years old – and not at five – would be taken as a joke. Though I may sound humorous, the delay in performing the upanayana should make us feel bad and uneasy deep within if you have some concern for the Vedic dharma. – Pujya Sri Kanchi Maha Periyava



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. ” ஹாஸ்யம் என்று சொன்னாலும் வைதிகப் பிரக்ஞை இருந்தால் வயிறு எரியவேண்டும்!” Imagine the amount of pain he must have suffered saying this!

  2. Wish still follow this at least some. Shannkaraaaaaaaaaaa

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading