A thrilling experience of Sri Saanu Puthiran

periyava padam

 

I came to know about Sri Suresh Krishnamoorthy (a.k.a Saanu Puthiran). He writes amazingly in Tamil – his writing style is so professional and the choice of the words are so wise…He claims that he is not a professional writer – hard to believe….

Regardless, he is a very great devotee of thatha ummachi….He has written lots of poems, he has printed lots of photos and distributed to several thousands of people so far.These are his words…

“The Periyava Photo (Packet Calender) was made by me and printed and being distributed by me since Feb 01, my sons upanayanam.  The sloka seerkonda theiveega thirumugamum written by me.  I did not know how that lady got it.  I had gone to several temples during the year and distributed to the devottees.  Likewise Prathyaksha Parameshwara also.  I have written one more “Thuyavan Tharisanam” containing 108 pictures and slokas on Sri Mahaperiyava as Tamil Padal (I really dont know whether the tamil scholars will accept that these are as per tamil grammer).  Whatever comes in my mind, i will write and share the same as my thirumanjanam to my ummachi thaatha.

I feel its his blessings to have the same shared in mahaperiyavaa.wordpress.com.

I have also printed a sanskrit sloka book (Sri Acharya Vandana Mala) containing the sanskrit slokas, mantras and namavali written by scholars, it also includes sri matam paata namavali.  printed as much as i could and handed over to sri jayendra saraswati swamigal, govindapuram sri mettur swamigal and also now distributing to the devottees.  If anyone pays for the book, i am collecting the money to reach it to Thapovanam at Govindapuram.

I am bringing out the Prathyaksha Parameshwara as small banner printed in star flex and planning to fix it in some temples.

May his blessings drive me for ever!”

—————————————————————–

Following is the incident that happened to him recently….Before one reads this, please remember that he has been distributing a pocket photo with his poem on it (as in the picture) prior to this incident..

I dont think this incident can be translated in English unless Suresh himself attempts!!

இன்று அலுவலகத்திலிருந்து வரும் வழியில் வியக்கத்தக்கதொரு நிகழ்வு. வீடு திரும்பியதும் சந்தியா வந்தனம் செய்து ஸ்ரீ மஹாபெரியவாளை வணங்கிவிட்டு முதற்கண் உங்கள் யாவரிடமும் பகிர்கிறேன்.

மவுண்ட் ரோடில் வந்து கொண்டிருந்தவன் காமதேனு கூட்டுறவு கடையினருகே ஒரு கிழவி சாலையினோரமாய் நடைபாதையில் உட்கார்ந்தபடி தனது துணி மூட்டையில் முன்புறமாய் தலைசாய்த்து படுத்திருப்பதைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி – ஒருவேளை பசிமயக்கத்தில் சாய்ந்து விட்டாரா என.

வண்டியை நிறுத்திவிட்டு அருகே சென்று அந்த அம்மாளை எழுப்பி, “இந்தாங்கம்மா! ஏதாச்சும் வாங்கி பசியாறுங்க! எனச் சொல்லி கையில் பணத்தினைத் திணித்தேன். கையில் வாங்கியவர் அதனை வாய்முன்பு எடுத்துச் சென்றுவிட்டு அது பணம் என்பதை உணர்ந்து மௌனமாக என்னை ஏறேடுத்துப் பார்த்தார். எனக்கு கண்கள் பணித்து விட்டது. அவருக்கு பசி மயக்கம் தானென புரிந்து கொண்டேன்.

உடனே அருகில் ஏதேனும் கடையிருக்கிறதா என நோக்கினேன். ஒரு பெட்டிக்கடை. அங்கு போய் ஒரு கப் டீயும், இரண்டு சமோசாவும் வாங்கி வந்து அந்த அம்மாளிடம் தந்தேன். சமோசாவை வாங்கியவுடனேயே கிடுகிடுவென சாப்பிட்ட அவர், பின்பு ஒர் ஆஸ்வாசப்பார்வையுடன் என்னை நோக்கி புன்சிரிப்பொன்றை உதிர்த்தார். எனக்கு மனசுக்கு ரொம்பவும் இனிமையாக தோன்றியது. நானும் ஒரு சிரிப்பினை வரவழைத்துக்கொண்டேன்.

அந்த அம்மாள், டீ கப்பை கையிலெடுத்து, “இந்தா கண்ணு, நீயும் ஒரு வா குடிச்சுட்டு எனக்குந்தாயேன்” என்றார். எனக்கு அழுகையே வந்து விட்டது. என் அம்மாவே திரும்ப என் முன்பாய் வந்து சொல்வது போலுணர்ந்தேன். “சாணு” என்றுமே என்னை விட்டகலவில்லை! சந்தோஷத்துடன் அந்த கப்பை வாங்கி ஒரு வாய் டீயைக் குடித்தேன் – என்னையுமறியாமல். சுடச்சுட வாங்கி வந்த டீ தற்போது மிதமான சூட்டில் இருந்தது. அந்த அம்மாவும் டீயை அருந்திவிட்டு என்னை ஆசிர்வதித்து விட்டு, துணிமூட்டையைப் பிரித்து ஒரு சிறிய படத்தினை கையிலெடுத்து, “இந்தாப்பா, இத உங்கூடவே வச்சுக்க. உன்னய இவரு காப்பாத்துவாரு”நு என் கைகளில் திணித்தார். வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்.

காரணம், அந்த சிறிய படம் நான் சென்ற பிப்ரவரி முதலாக எல்லா இடங்களிலும் பக்தகோடிகளுக்கு வழங்கி வரும் மஹாபெரியவா படம்!

முழுமையாக அதில் எழுதிய பாடலை அந்த அம்மா வாய்விட்டு சொல்ல என்னால் நிற்க முடியாமல் உணர்வுத்தினைப்பின் உச்சியில்!

  •  சீர்கொண்ட தெய்வீகத் திருமுகமும் திருக்கரத்தில்
  • மெய்கொண்ட திருத் தண்டமும் மேனியில்
  • உருகொண்ட சத்சிவமும் கனமாலையும் துளசியும்
  • மெய்கொண்ட திருச்சாந்தும் சங்தனமும் தான்கொண்ட
  • எம்பெருமான் ஆச்சார்யன் திருவடிகள் போற்றி! போற்றி!

என அந்த அம்மாள் கடகடவென மனப்பாடமாக கூறிமுடித்தாள். அவளுக்கு ஒரு அறுவதவயதாவது இருக்கும். குளித்து குறைந்தது பத்து நாட்களாவது ஆகியிருக்கும். சாலை மணலின் வாடை அவளது மேனியினின்று வீச்சம் தந்தாலும், அவளது குரலில் வழிந்த வாசம் என்னைத் திக்குமுக்காடவைத்தது.

என்னையுமறியாமல் நான் முணுமுணுக்க ஆரம்பித்தேன். “எம்பெருமான் ஆச்சார்யன் திருவடிகள் போற்றி! போற்றி!!” கண்ணீருடன் அந்த அம்மாளின் கைகளைத்தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு அந்த படத்தினை எனது சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டு அந்த அம்மாவுக்கு எனது அலுவலகப் பைக்குள்ளிருந்த கட்டிலிருந்து அதே படமொன்றை தந்தேன்.

கண்ணு, வேற யாருக்காச்சும் கொடு! பல நாட்களாக இந்த பாடலைப் படிச்சு மனப்பாடம் ஆகிருச்சு. தா, இப்ப கூட பசி மயக்கத்துல அந்த பாடலைத்தான் சொல்லிக்கினுருந்தேன். பாரேன்! நீ எங்கிருந்தோ வந்து என் வயிற நிறைச்சுபுட்ட” நல்லா இரு கண்ணு!… பீறிட்டு வந்த அழுகைதனை வெளிக்காட்ட தைரியமின்றி, “பிறகு ஒரு நாள் சந்திப்போம் தாயீ”நு சொல்லிட்டு என் மோட்டார்சைக்கிளை நோக்கி நகர்ந்தேன்!

வீடு வரும் வரையிலும் மௌனம் என்னில் கரைபுரண்டோடியது…வீட்டிற்குள் நுழைந்தது ஸ்ரீமஹாபெரியவாள் விக்ரஹத்துக்கு ஒரு நமஸ்காரம் செய்யும் வரை!

ஹே! பரமதாயாளா! அனாத ரக்ஷகா! அம்மாவும் அப்பாவும் இல்லே நேக்கு! தாத்தா, பாட்டி தெரியாது! எல்லாமே நீ தான் நேக்கு. சந்தர்ப்பத்தில் ஒருமுறை எனக்குக் கிடைத்த உந்தன் படத்தினை ஓரிருவருக்கு கொடுக்கையில் அவர்கள் முகத்தில் நான் கண்ட சந்தோஷத்தினைக் கண்டு, எனது மகனின் உபநயனத்தின்போது கலந்துகொண்ட உறவினர்களுக்குக் கொடுக்க முதன்முதலாக இந்தத்திருவுருவைப் ப்ரிண்ட் செய்தேன். அருமை நண்பனொருவனது கட்டளைப் படி காதல் கவிதைகளையும், வாழ்த்துக் கவிதைகளையும் எழுதிக்கொண்டிருந்த நான் அந்தபடத்தில் உன் உருவைக் கண்டு மனதில் தோன்றியதை எழுதினேன் அந்த பாடலுடனேயே படத்தினை நண்பர்களின் அறிவுரைபேரில் ப்ரிண்ட்டும் செய்தேன். என்னை இந்த 2013 வருடம் முழுவதுமாக திரும்பத்திரும்ப ப்ரிண்ட் செய்து அனைவருக்கும் வழங்கச் செய்தாய்! இதுவரை எனது இந்த யக்ஞம் ஒரு லட்சம் பூர்த்தியாகி விட்டது. மீதம் கிடடத்தட்ட 3800 படம் கையில் உள்ள நிலையில்… உந்தன் பிரசாதமாக இன்று ஒரு அம்மா கையால் எனக்கும் கிடைக்கச் செய்துள்ளாயே! மறுக்கவே முடியாது எவராலும்! நீ அனாத ரக்ஷகன் தாம்! கண்களில் பொலபொலவென நீர் பணிக்க மண்டியிட்டு வேண்டினேன்.

அன்பான உறவுகளே! பெரியவா பத்தி எது இருந்தாலும் இன்றுவரை உங்கள் யாவரிடமும் பகிர்ந்துள்ளேன். இதோ! இந்த பகிர்வை எழுகைதுயிலும் அழுதுகொண்டே எழுதுகிறேன – ஆனால் ஆனந்த அழுகையுடன்!

பரமேஸ்வரா! பரந்தாமா! பரப்ரும்ம ஸ்வரூபியே! அம்மையப்பனாச்சார்ய ஸ்வாமீ! இனி என்வாழ் நாளில் என்றென்றும் உந்தன் திருவுருவப் படத்தினைத் தொடர்ந்து அனைவருக்கும் “பெரியவா சரணம், பெரியவா சரணம்”னு உன் னாமத்தை உச்சரித்தவண்ணம் கொடுத்துவரும் பாக்கியமொன்றை மட்டும் என்றென்றும் தா! எனும் எந்தன் ப்ரார்த்தனைக்கு நீங்களும் உங்கள் ப்ரார்த்தனைகள் மூலமாக பலம் தாருங்கள்.

பவதி பிக்ஷாந்தேஹி!

முதற்பதத்திற்கு பாடல் எழுதும்போது நான் சாணு புத்திரன். இப்போது இரண்டாம் படத்திற்கு பாடல் எழுதும் போது என் தாத்தாவின் ஊர்மக்களில் பல பேரையும் என்னை அறியவைத்து உடையாளூர் சாணு புத்திரனாக அவர்களே எனக்கு பேர் சூட்டுமளவு தயை புரிந்த “உம்மாச்சி தாத்தா”வுக்கு ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள்!!

பெரியவா சரணம்!

– உடையாளூர் சாணு புத்திரன்.



Categories: Devotee Experiences

35 replies

  1. yenna perum thavam yaan seidhadhu ariyeaney…. periyavaa

  2. Excellent, no words to praise, you have the complete grace of mahaperiyava. Only very few get such kadaksham, you are blessed. We are proud to be part of your satsang. We strongly believe that being with you, will pull us to higher level of bhakti.
    Periyava charanam.

  3. Any ones Bhakthi to our Maha Periyava will never go waste. This incident has happened in my grand fathers life. He lost his father when he was about 9 years old.His relatives only helped him to done Upanayanam for him.He is doing his fathers Shradham from that very tender age itself.He was working as a road maistry at Chengam Thiruvannamalai area about eighty years back.At that time Our Maha Periyava Visited a place called Kanchi there.There is no brahmin in that particular place,suddenly his man rushed to my thatha and told him “Swami one Sankaracharya swamigal has come to Kanchi ,you may please come there immediately ” Immediately my father,Thatha and Patti reached that place and perform Sastanga Namaskarams,Then he asked my Grand father whether he has the knowledge of Rudram Chamakam etc,my grand father told him,i am not aware of those things,since my father died when i am nine years old,from that day onwards i am regular in the Pitru karya’s and daily performing Sandhya Vandhan’ Since i am working as a Road Maistry ,i have no chance to study all those things,Then Swamigal told my Grand father to learn Vishnu Sahasranama, My grand father study Vishnu Sahasranama writing it in so many note books many number of times and has become an expert chanter of Vishnu Sahasranamam,We saw the great ness of Vishnu Sahasranama in his death bed,he used to say ” Periyava asked me to chant Vishnu Sahasranama,till his last day he was very much regular in that.Since my Grand father was an organiser of Divya Nama Sangeerthanam in our area,ie at Perumbavoor a place very near to the Birth Place of Adi Sankara Bhagavath Padal -Kalady, is very much known as BhajanaPatta ( T.S.Anantha Krishna Iyer) He died Chanting Vishnu Sahasranama only.You can feel and understand the Greatness of Our Paramacharyal’s Vision here. Hara Hara Sankara Jaya Jaya Sankara. Kanchi Sankara Kama Koti Sankara.

  4. Very touching experience. Share periava thiruvilaiyadals to my mail also.

  5. Wonderful experience.Periava acknowledging the great work done with sincerity,utter devotion and bhakthi coming in the form of an old lady and also accepting Bhikshai.Who will get this kind of blessing and experience?

  6. Divinity lives on! What else one can say! As long as people like UdayaLur ChaaNuputhran alias Sri Suresh exist in this world, nothing will be able to shake Sanathana Dharma! Much blessed to read this devotion soaked account.On par with “I lived with God” by Dr. Sundararaman, “that Son of Doraiswamy”! Jaya Jaya Shankara, Hara Hara Shankara! Maha Periyava ThiruvadigaLee CharaNam!

  7. Periyaval is kamakshi and kamakshi is Maha periyaval

    This is a solid proof that he is still with all of us in a different form

    The best way to pay respect. him is to practice what he preached

    • உதறித் தேடிய செல்வமும் துணைவாரா;
      பதறிச் சேர்த்த புகழேதும் தான்வாரா;
      கதறிக் கூவிடும் உறவேதும் பின்வாரா;
      சிதறிப் பூதியாகி இறையடியிற் சேர் நிலையில்!

      உதறித் தானுற்ற பக்தியும் பண்பறமும்
      பதறிச் சீர்பெற்ற புத்தியும் நல்மனமும்
      கதறிக் கைபெற்ற சித்தியும் சீர்பெறவே
      சிதறி ஒன்றாகும் குருவருளின் தன்னொளியில்!

      கணபதி-நு ஒரு கடவுளே நமக்கு ஒரு ஃபார்முலா தந்துட்டாரே! லோகத்தைச் சுத்தனும்னதும் அம்மையப்பனை சுத்திவந்து பழத்தை லாவகமா வாங்கிண்டாரே! அந்தமாதிரி நம் அம்மையப்பனான ஸ்ரீ பரமாச்சார்யாளை சுத்தக்கூட வேணாம்… நினைச்சாலே போதும்! சகலமும் கைகூடும்! நான் மட்டும் இத சொல்லலை… கோடானுகோடி பேர்கள் அனுதினமும் சொல்லிண்டுருக்கா.

      பெரியவா சரணம்.

  8. Tear flowned from my eye and still continues when ever isee periyava photo
    Rajagopalan Dellhi

  9. I am very much blessed to receive this picture from Sri Saanu puthiran few weeks back at nearby temple. I have read few of his writings in FB but didn’t pay much attention. After reading this, I am recollecting the person’s face who gave me this picture along with Srimatam Swasthi vaachakam.

    • பெரியவா சரணம்! அந்த ஸ்வஸ்தி வாசனத்தை நான் சகபக்தாள்கிட்டே பகிர்ந்து கொள்ள ப்ரிண்ட் செய்யக் காரணமும் உம்மாச்சி தாத்தா தான். அற்புதமான அந்த நிகழ்வினை உங்களிடம் பகிராமல் விட்டதற்கு மன்னியுங்கள். விரைவில் அந்த அற்புத சுகத்தினைப் பகிர மஹேஷ் அண்ணா உதவனும்னு பெரியவாளை ப்ரார்த்திக்கிறேன்.

  10. Guruve saranam Guruvadi saranam saranam saranam.

  11. really heart melting.jaya jaya sankara hara hara sankara jaya jaya sankara hara hara sankara jaya jaya sankara hara hara sankara;;

  12. Unbelievable..

    JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA

  13. The laws of divinity and nature are immutable and inviolable at any point of time be it Kali or Kritha. In this confusing time of Kali however such episodes are like light houses for us to cross the great sea of samsara which has no samachram and they serve us to remember such laws.

    Tearfully yours,
    N Subramanian

  14. Highly impressive and highly appreciated.

  15. JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA. SRI MAHA PERIYAVA THIRUVADIGALIL SARANAM.

  16. Endaroe mahaanubhaavalu, anthareeki vandanamu!

  17. I urgently need Mr. Saanu Puthiran`s contact email id. and/or telephone no to reach him. Please send them immediately. This experience, and also the photograph of Maha Periyava is so fulfilling. Knowing Him, this is not surprising. I just told my daughter that we should print His photograph with some sloka on him and distribute on her children`s upanayanam and she agreed to it. I was planning to look at some appropriate snaps of Him, and here it is. What can I say! I am waiting for Mr. Saanu Puthiran`s to give me a picture, and would like to speak to him. Awaiting your mail. Regards. S V Ramakrishnan (ramakrishnansv@ymail.com)

      • மன்னிச்சுடுங்கோ உம்மாச்சி தாத்தா. நமஸ்காரம்…நமஸ்காரம்…நமஸ்காரம்.

        அருட்கூர்ந்து பெரியவாள்ளாம் என்னை மன்னிக்கனும். ஒரு எழுத்துப்பிழை எனவே திருத்திப் பகிர்கிறேன் மறுபடியும்!

        மாதா பிதாகொண்டே பிறப்பிதனைப் பெற்றிடினும்
        நோகா நிலைகொள்ள ஆச்சார்யன் அருள்பெற்றே
        வாடா மருவினைபோல் வாழ்விதனில் இன்பயக்க
        நாடா திருப்போமோ சங்கரர்தம் திருப்பாதம்! பெரியவா சரணம்!!

        – சாணு புத்திரன் | +91 9940199430

  18. Great experience. “இந்தாப்பா, இத உங்கூடவே வச்சுக்க. உன்னய இவரு காப்பாத்துவாரு”. Where else can we go, only to Sri Periyava.

    Please share contact details of Sanu Puthiran to get photo

    Sri Periyava Saranam

  19. KOTI KOTI PRANAMS AT THE HOLY FEET OF maha periyava called umachi thatha.iJUST DO NOT KNOW WHAT TO SAY. pLEASE LET ME KNOW FROM WHERE I CAN HAVE A COPY OF THIS DIVINE PHOTO
    neela ramachandran
    chennai

  20. What do I think? I am crying as I type this-as HE himself said once when a sadhaka puts his faith in the Guru as Guru sakshath Parabrahma the Parabrahma himself swiftly showers his anugraha on him.
    My humble pranams to Sri Saanu puthran.
    Kudos to the website that I look forward to reading articles from everyday.
    Saravanan

  21. Tears interrupted my continuous reading……

  22. Very moving & inspiring. But the mind looks for a sequel….

  23. Adiyarku Adiyaenaga vanungukiraen. Thank you for this blessed poem.

  24. wonderful experience my dear sanu puthiran. jaya jaya sankara hara hara sankara

  25. Kindly translate the incident into English and give other readers like me have the opportunity to know more and more about Sri Kanchi ParamaCharya.

    Many thanks. The photo of HH looks so divine.

  26. one of the excellent poems

    • தங்களது பகிர்வுக்கு நன்றி! ப்ரத்யக்ஷ பரமேஸ்வரன் அவதாரம் செய்த போது நம்மையும் ஈன்ற கர்ப்பக்கிரஹத்துச் சொந்தங்களுக்கு நாம் வாழும் பொழுதுகள் பூராவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். “காசிலே வசிச்சவாளை வணங்கினா புண்ணியம்”நு பெரியவாள்ளாம் சொல்வா. நம் காஞ்சிவாஸியான பரமாச்சார்யாளை நினைச்சவாளை வணங்கினாலே பவஹரம் கிட்டும்கிறது என்னோட நம்பிக்கை! எல்லாம் பெரியவா கடாக்ஷம்! – சாணு புத்திரன்.

Leave a Reply to ramki1941Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading